புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஏப்., 2020

புங்குடுதீவில் பிரித்தானிய புங்குடுதீவு நலன்புரி சங்கமும் பாரிஸ் ராசன், பாபுஆகியோரும் இணைந்த 28லட்டசம் ரூபாய் பெறுமதியான மாபெரும்நிவாரணப்பணி
28லட்டசம் ரூபாய் பெறுமதியான உணவுப்பொருட்களை புங்குடுதீவில் வாழும் சகல மக்களுக்கும் பகிர்ந்தளிக்கும் உயிர்நேயப்பணியில் புங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தினரின் இடர்கால உதவிக்குழுவினருடன்இணைந்து பாரிஸ் ராசன், பாபுஆகியோரும் ஈடுபட்டுள்ளனர் யாரும் எதிர்பாராத புங்குடுதீவு மக்களை நன்றிக்கரம் கூப்ப
வைத்துள்ள இந்த அரிய பணி நலன்புரிச்சங்க பொறுப்பாளர்கள் ,மற்றும் உலகமைய சார்பில் சதீஸ் ஒருங்கிணைப்பில் கிராமசேவகர்கள் சுகாதார உத்தியோகத்தர்கள் காவல்துறையினர் ஒத்துழைப்போடு செவ்வனே நடைபெறுகிறது புங்குடுதீவு கொம்மாபிட்டி வைகுந்தன் என அறியப்படும்(ராசா)சதாசிவம் வைகுந்தராசன்,(4ம்வட்டாரம்,புங்குடுதீவு-பிரான்ஸ் )பாபு என அறியப்படும்தர்மலிங்கம் பாஸ்கரன்(1ம் வட்டாரம் புங்குடுதீவு-பிரான்ஸ்)ஆகியோர்
அண்மையில் சிவபதமடைந்த தனது தாயார் சதாசிவம் சிவகாமிப்பிள்ளை அம்மா அவர்களின் நினைவாக அவரது மகன் சதாசிவம் வைகுந்தராசன்(ராசா)அவர்களும்,
திருமதி சாயாஜினி பாஸ்கரன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவாக சகோதரி சாயாஜினி அவர்களின் அன்புக்கணவர் பாஸ்கரன்(பாபு)அவர்களும் உலகப்பேரிடரால் தமது தாய்மண்ணில் சிரமங்களை எதிர்நோக்கியுள்ள மக்கள் அனைவருக்கும் எவ்வித பாரபட்சமும் இன்றி பகிர்ந்தளிக்க புங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தினருடன் இணைந்துள்ளார்கள் இவர்களின் உயரிய பணிக்கு புங்குடுதீவு நலன்புரிச்சங்கம் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து மகிழ்கிழும் அதேவேளை சிவகாமிப்பிள்ளை அம்மா மற்றும் சகோதரி சாயாஜினி ஆகியோரின் ஆத்மா ஈடேற்றத்திற்கும் பிரார்த்தித்து அவர்களின் நினைவினை சுமந்திருப்போம்.

J/32,J/33 பிரிவுகளைச்சேர்ந்த 113 குடும்பங்களுக்கான உலருணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. நேற்றையதினம் பெய்த மழையையும் பொருட்படுத்தாமல் வீடுவீடாக பொருட்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.தொடர்ந்தும் அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் வகையில் கிராம அலுவலர்பிரிவுகள் ரீதியாக வழங்கி வைக்கப்படும் என்பதனையும் அறியத்தருகின்றனர்
.10kg அரிசி
5kg மா 3kg சீனி 1kg உப்பு 1/4 g செத்தல் 1kg பருப்பு மேற்படி பொருட்களில் பருப்பு வழங்கப்படவில்லை 4 மற்றும் அதற்கு குறைவான அங்கத்தவர்களை கொண்ட குடும்பத்தினருக்கு 5கிலொ அரிசியும் வழங்கப்பட்டது அரசி மற்றும் பருப்பு தட்டுப்பாடு காரணமாக கொள்வனவு செய்யும் முயற்சியில் உள்ளோம் கிடைத்ததும் 5கிலோ அரிசியும் பருப்பும் வழங்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்

ad

ad