புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஏப்., 2020

ரஷ்யாவில் வீட்டுக்கு வெளியே நின்ற 5 பொதுமக்கள் சுட்டுக்கொல

ரஷ்யாவில் வீட்டுக்கு வெளியே நின்று சத்தமாகப் பேசிக்கொண்டிருந்து ஐந்து பொதுமக்கள் நேற்று சனிக்கிழமை இரவு 10 மணியளவில்
சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவிலிருந்து தென்கிழக்கில் 200 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள ஜெலட்மா (Yelatma) என்ற கிராமம் உள்ளது. அக்கிரமாம் கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் நடமாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் பொதுமக்கள் சிலர் வீட்டுக்கு வெளியே கூடி நின்று சத்தமாகக் கதைத்துக்கொண்டிருந்த போது வீட்டுக்கு அருகில் வசித்து வந்தவர் தனது வீட்டின் பல்கணி வழியாக சந்தமாக உரையாட வேண்டாம் என புகார் அளித்துள்ளார்.



எனினும் புகார் விடுத்த குறித்த நபருக்கும் வீட்டிற்கு வெளியே உரையாடிக்கொண்டிருந்தவர்களுக்கும் தொடச்சியாக வாய்த் தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றவே குறித்த நபர் தனது வேட்டைத் துப்பாக்கியை எடுத்துவந்து உரையாடிக்கொண்டிருந்த மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டார்.

அந்த இடத்தில் இருந்த நான்கு ஆண்களும் ஒரு பெண்ணுமாக ஐவர் அந்த இடத்தில் காயங்களுடன் இறந்துள்ளனர்.

தாக்குதலாளி கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வீடு முற்று முழுதாக சல்லடை போட்டு தேடப்பட்டது. அவரிடம் இருந்த துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.



இத்தகவலை ரஷ்யக் காவல்துறையினரும் புலனாய்வாளர்களும் உறுதி செய்துள்ளனர்.

ad

ad