புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஏப்., 2020

எனக்கு வேண்டாம்…அவர்களை காப்பாற்ற பயன்படுத்துங்க! கொரோனாவால் இறந்த 90 வயது மூதாட்டியின் முடிவு

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த 90 வயது மூதாட்டி ஒருவர் வெண்டிலேட்டர் தனக்கு வேண்டாம், இதை ஒரு இளைய நோயாளிகளுக்கு வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறி இறந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் முதியவர்களை அதிகம் பாதிப்பதாக கூறப்படுகிறது. அதே சமயம் குழந்தைகள் முதல் இளையவர்களையும் இந்த நோய் விட்டு வைக்கவில்லை.

இந்நிலையில் பெல்ஜியமின் Lubbeek அருகில் இருக்கும் Binkom-ஐ சேர்ந்தவர் Suzanne Hoylaerts. 90 வயதான இவர் கடந்த 20-ஆம் திகதி உடல்நிலை சரியில்லாமல், அதாவது பசியின்மை மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது அவருக்கு கொரோனா வைரஸிற்கான சோதனை நடத்தப்பட்டது, இதனால் தனிமையில் வைக்கப்பட்ட அவரை மகளால் கூட வந்து பார்க்க முடியவில்லை.

அவரின் உடல் நிலை மோசமடைய உடனே மருத்துவர்கள் செயற்கை சுவாசத்திற்கு பயன்படுத்தப்படும் வெண்டிலேட்டரை பயன்படுத்தியுள்ளனர். அப்போது அவர், நான் செயற்கை சுவாசத்தைப்(வெண்டிலேட்டரைப்) பயன்படுத்த விரும்பவில்லை. இது இளைய நோயாளிகளின் உயிரை சேமிக்க உதவும், நான் ஏற்கனவே நல்ல வாழ்க்கை வாழ்ந்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு நாட்களில், அதாவது கடந்த 22-ஆம் திகதி உயிரிழந்தார்.

மேலும் அவரின் மகள் Judith செய்தித்தாள் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், என்னால் அவரின் இறுதிச்சடங்கில் கூட கலந்து கொள்ள முடியவில்லை, அந்த வாய்ப்பு கூட கிடைக்கவில்லை என்று வேதனையடைந்தார்.

அதே சமயம், அவர் என்னுடைய தாய் வீட்டிற்குள்ளே தான் இருப்பார், அவருக்கு எப்படி இந்த வைரஸ் பாதிப்பு வந்திருக்க முடியும் என்ற குழப்பத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற வெண்டிலேட்டரின் தேவை மருத்துவமனைகளில் அதிகமாகியுள்ளது. ஆனால் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்வதால்,வெண்டிலேட்டரின் பற்றாக் குறை தற்போது பல்வேறு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

ad

ad