புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஏப்., 2020

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்து திணறும் இத்தாலி! உதவ முன் வந்த ரஷ்யா

கொரோனாவால் இத்தாலி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு கட்டிடம் கட்டிடமாக கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ரஷ்ய ராணுவத்தினர் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

இத்தாலியில் கொரோனாவால் 132,547 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 16,523 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இத்தாலிக்கு உதவும் பொருட்டு ரஷ்யா தனது இராணுவத்தை அனுப்பியுள்ளது.


இந்த நிலையில், கோர்லாகோ (gorlago) நகரில் மருத்துவமனைகள், முதியோர் வசிக்கும் கட்டிடங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கும் பணியை ரஷ்ய இராணுவத்தினர் மேற்கொண்டுள்ளனர்.

அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்த கோர்லாகோ மேயர் எலெனா கிரெனா (ELENA GRENA), கடினமான காலங்களில் உதவுதன் மதிப்பை உணர்ந்து கொண்டதாக நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்

ad

ad