புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 மே, 2011



ஐ.பி.எல்.: பெங்களூர் அணி சென்னையை வீழ்த்தியதுஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பெங்களூரில் நடந்த ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.


முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டோனி 70 ரன்கள் (40 பந்து, 3 பவுண்டரி, 6 சிக்சர்) குவித்தார்.
அடுத்து களம் இறங்கிய பெங்களூர் அணி 18 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கெய்ல் 75 ரன்கள் (50 பந்து, 4 பவுண்டரி, 6 சிக்சர்) குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். கோக்லி 31 ரன்கள், திவாரி 13 ரன்கள் எடுத்தனர்.

ஜெயலலிதா முதலமைச்சரானதில் இலங்கையை விட இந்தியாவுக்கே அதிக அழுத்தம்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
[ ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2011, 11:03.32 AM GMT ]
தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஜெயலலிதா தெரிவு செய்யப்பட்டதன் மூலம் இலங்கையை விட  இந்தியாவுக்கே அழுத்தங்கள் அதிகரித்திருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிக்கின்றார்.
சிங்கள வாராந்தப் பத்திரிகையான சிலுமிண பத்திரிகைக்கு வழங்கியுள்ள பேட்டியிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவைப்  பொறுத்தவரை தமிழ்நாட்டின் அரசியல்வாதிகள் அனைவரும் இலங்கைப் பிரச்சினை குறித்து உணர்வுபூர்வமான கருத்துக்களை வெளியிட்டு தங்கள் அரசியல் செல்வாக்கை வளர்த்துக் கொள்ளவே முனைகின்றனர்.
கடந்த சட்டசபைத் தோ்தலிலும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் இந்நாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோரின் கருத்துக்களை நாம் அந்த வகையில் வைத்துத்தான் பார்க்க வேண்டும்.ஆயினும் அவர்களால் அதற்கு அப்பால் எதுவும் செய்ய முடியாது.
நாம் தனியானதோர் நாடு. நமது பிரச்சினைகளை நாம் தான் தீர்க்க வேண்டும். தமிழ்நாட்டில் எவர் என்ன சொன்னாலும் நம் நாட்டின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை நாம் தான் உருவாக்க வேண்டும்.
இதே ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் தான் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி தமிழ்நாட்டில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டிருந்தார். அந்த வகையில் ஜெயலலிதா தோ்தலுக்கு முன் என்ன சொல்லியிருந்தாலும் இனிவரும் காலங்களில் விடுதலைப் புலி ஆதரவு சக்திகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திலேயே இருப்பதை மறந்து விடக்கூடாது.
அதே போன்று இந்திய அரசியல் சூழ்நிலையைப் பொறுத்தவரை ஜெயலலிதா முதலமைச்சரானது ஒரு அழுத்தத்தைப் பிரயோகிக்கும் விடயமாக இருக்கலாம். ஆனால் நம்நாட்டிற்கு அவரால் எந்தவித அழுத்தத்தையும் பிரயோகிக்க முடியாது என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது பேட்டியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஐ. நா. மனித உரிமைகள் பேரவையினால் கோரிக்கை விடுக்கப்பட்டாலும் யுத்தக் குற்றச் செயல்கள் பற்றி விசாரணை நடத்தலாம்: ஐ.நா. பேச்சாளர் மார்ட்டின் நெசர்கி
[ ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2011, 11:27.40 AM GMT ]
ஐ. நா. மனித உரிமைகள் பேரவையினால் கோரிக்கை விடுக்கப்பட்டாலும் யுத்தக் குற்றச் செயல்கள் பற்றி விசாரணை நடத்தலாம் என ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் மார்ட்டின்  நெசர்கி குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அல்லது ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை ஆகிய கிளை அமைப்புக்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டாலும் யுத்தக் குற்றச் செயல்கள் பற்றி விசாரணை நடத்தலாம் ஐ. நா. செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் மார்ட்டின் நெசர்கி சுட்டிக்காட்டியுள்ளார்.
அவ்வாறில்லாதபோது இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்தால் மட்டுமே இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் முதன்மை அதிகாரம் இலங்கை அராசங்கத்திடம் காணப்படுகின்றது. குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்குதல் மற்றும் விசாரணை நடத்தும் அதிகாரம் உள்நாட்டு அரசாங்கங்களுக்கே வழங்கப்படுகின்றன என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
எதிர்வரும்  30ம் திகதி தொடக்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கவுன்சிலின் அமர்வுகள் ஆரம்பமாகவுள்ளன. அவ்வாறான நிலையில் இலங்கை தொடர்பான பல போர்க்குற்ற ஆதாரங்களை புலம்பெயர் தமிழர் அமைப்புகள் மனித உரிமைக்கவுன்சிலுக்கு சமர்ப்பித்துள்ளன.
அவ்வாறான நிலையில் மனித உரிமைக்கவுன்சில் கோரிக்கை விடுத்தாலும் இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று ஐ.நா. பேச்சாளர் தெரிவித்திருப்பது பெரும் நம்பிக்கைக் கீற்றாக இருப்பதாக அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.

பிரதமர் விருந்து: மத்திய அமைச்சர்கள் புறக்கணிப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2011, 04:10.36 PM GMT +05:30 ]
மன்மோகன்சிங் தலைமையிலான கூட்டணி அரசு 2ம் ஆண்டு நிறைவு விழா இரவு விருந்தில் தி.மு.க.வை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாடி அமைச்சர்கள் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என தெரிகிறது.
நாட்டை மட்டுமின்றி உலகையே உலுக்கிய "2ஜி" ஸ்பெக்ட்ரம் ஊழல், பொருளாதார சீர்திருத்தங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணாதது போன்ற சூழலில் பிரதமர் மன்மோகன் சிங்(79) தலைமையில் இரண்டாவது முறையாக பதவியேற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மூன்றாவது ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கிறது.
கடந்த 2004 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. இதன்பின் 2009 தேர்தலிலும் இந்தக் கூட்டணியே வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. மன்மோகன் சிங் மீண்டும் பிரதமரானார்.
2வது முறையாக ஆட்சி அமைத்த ஐ.மு கூட்டணி அரசு கடந்த எட்டு மாதங்களில் பலவிதமான சர்ச்சைகளில் சிக்கியது. ரூ.1.76 லட்சம் கோடி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல், மகாராஷ்டிரா ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பு ஊழல் உட்பட பல வகையான ஊழல் புகார்கள் மன்மோகன் சிங் அரசு மீது கூறப்பட்டன.
அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றும் போது இடதுசாரிகளின் ஆதரவை இழந்த பிரதமர் அதை விட மிகவும் சிக்கலான நெருக்கடிக்கு உள்ளானது அடுக்கடுக்கான ஊழல் புகார்கள் வெளியான இக்காலகட்டத்தில் தான்.
பொருளாதார மேதைகளான மன்மோகன் சிங், சிதம்பரம், பிரணாப் முகர்ஜி, மாண்டேக் சிங் அலுவாலியா போன்றவர்கள் அதிகாரத்தில் இருந்தும் கூட அடித்தட்டு மக்களால் தாங்க முடியாத அளவிற்கு விலைவாசி விண்ணை முட்டியது.
விலைவாசியைக் குறைக்க இயலாமல் மத்திய அரசு விழிபிதுங்கியது. நாட்டின் பல்வேறு உணவுக் கிடங்குகளில் தானியங்கள் பாழாகிக் கொண்டிருந்த வேளையில் மத்திய விவசாய அமைச்சர் அவற்றை வினியோகிப்பதில் போதுமான அக்கறை காட்டாததை சுப்ரீம் கோர்ட் சுட்டிக் காட்டி கண்டனம் தெரிவித்தது.
இவை எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிடும் வகையில் மும்பையில் நடந்த சில குண்டு வெடிப்புகளுக்குக் காரணமான வாசுர் கமார் கான் என்ற பயங்கரவாதி கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தும் கூட பாகிஸ்தானிடம் மத்திய அரசு அளித்த தேடப்படும் பயங்கரவாதிகள் பட்டியலில் கானின் பெயர் சேர்க்கப்பட்டதும், அரசின் செயல்பாட்டில் பெரும் குளறுபடிகள் நடந்து கொண்டிருப்பதை வெட்டவெளிச்சமாக்கின. ஆனால் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் வழக்கம் போல சாக்குபோக்கு சொல்லி இவ்விவகாரத்தைச் சமாளித்தார்.
ஊழல் புகார் உட்பட பலவிதமான புகார்களால் சர்ச்சைக்கு ஆளாகியிருக்கும் மன்மோகன் சிங் அரசு வரும் ஆண்டுகளில் மேலும் பல சவால்களையும், சிக்கல்களையும் சந்திக்க நேரிடும் என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
சமீபத்தில் ஐந்து மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தல் முடிவுகள் காங்கிரசுக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் பாதியளவுக்கு நிம்மதியைத் தந்ததுள்ளன. அசாமில் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டதும், கேரளாவில் புதிய அரசு அமைத்ததும், மேற்கு வங்கத்தில் மம்தா தலைமையிலும் ஆட்சிப் பொறுப்பேற்றதும் அதற்கு காரணம்.
இந்த திருப்தி நிலை தொடர வேண்டும் எனில் இரண்டாவது முறையாக பதவியேற்று இன்று மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மன்மோகன் சிங் அரசு மக்களின் மனநிலையை உணர்ந்து அதற்கேற்ற வகையில் நல்ல பல பணிகளைச் செய்ய வேண்டும். இதுவே பெரும்பாலானவர்களின் எதிர்பார்ப்பு

ஊழல் குற்றம் புரிந்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்: சோனியா
[ ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2011, 04:56.55 PM GMT +05:30 ]
ஊழல் குற்றம் புரிந்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று உறுதிபடத் தெரிவித்தார் சோனியா காந்தி.
இன்று மாலை ஐ.மு கூட்டணி அரசு இரண்டாவது முறையாகப் பதவிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவு அடைந்ததை ஒட்டி நடைபெற்ற புதுடெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் "ஐ.மு கூட்டணி அரசு: நாட்டு மக்களுக்கான அறிக்கை" என்பதை வெளியிட்டுப் பேசும் போது சோனியா இதைத் தெரிவித்தார்.
ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் வெறும் பேச்சளவில் மட்டும் இல்லாமல் செயலளவிலும் கண்டிப்புடன் எடுக்கப்படும் என்றார் அவர். மேலும் அவர் கூறியதாவது:
1. நேர்மை, நாணயம், வெளிப்படைத்தன்மை, கடமை, பொறுப்பு - இவையே எங்கள் அரசாட்சியின் முக்கிய அம்சங்கள்.
2. பொறுப்புள்ள, செயல்தன்மையுள்ள அரசையே மக்கள் விரும்புகிறார்கள் என்பதை தேர்தல் முடிவுகள் காட்டின.
3. மாபெரும் பொருளாதார வளர்ச்சி, வாங்கும் சக்திக்கேற்ப அத்தியாவசியப் பொருள்களின் விலை கட்டுக்குள் இருத்தல் இவற்றுக்கே ஐ.மு கூட்டணி அரசு முன்னுரிமை அளிக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது: ஐ.மு.கூட்டணி அரசு 7 வருடங்கள் நிலையான ஆட்சியைக் கொடுத்துள்ளது. சமூக முன்னேற்றம், மத நல்லிணக்கம், பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றைக் கொடுத்துள்ளது.
உணவு பெறும் உரிமைச் சட்டம் பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பயங்கரவாதம் மிகப் பெரிய சவால. பயங்கரவாதத்துக்கும் வன்முறைக்கும் எதிராகப் போராட அனைவரும் ஒருங்கிணைவது அவசியம் என்று கருத்து தெரிவித்தார்.

22 மே, 2011










கனிமொழி கைதுடன் அம்மணமாக்கப்பட்டுள்ள தி.மு.க!

என்னதான் செய்யும் திமுக!

First Published : 22 May 20
இந்த அளவுக்கு மோசமான ஒரு சோதனையை திமுக இதுவரை சந்தித்ததே இல்லை என்கிற அளவுக்குக் கனிமொழியின் கைது அந்தக் கட்சியை அனைத்து மட்டங்களிலும் புரட்டிப் போட்டுவிட்டிருக்கிறது. ஆ. ராசாவின் கைது, கலைஞர் தொலைக்காட்சியில் சோதனை, முதல்வரின் மனைவி தயாளு அம்மாள் விசாரிக்கப்பட்டது, என்று ஒன்றன் பின் ஒன்றாக சோதனைகள் வந்தபோதுகூடத் தனது நெஞ்சுரத்தையும், எதையும் சந்தித்துக் கொள்ள முடியும் என்கிற நம்பிக்கையையும் இழக்காத திமுக தலைவர் கருணாநிதி, கனிமொழியின் கைது செய்திக்குப் பிறகு ஆடிப் போயிருக்கிறார் என்பதை விட இடிந்து போயிருக்கிறார் என்பதுதான் உண்மை.
÷முந்தைய நிகழ்வுகளின்போது பதவி பலம் துணிவைக் கொடுத்தது. தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டால், காங்கிரஸ் தனக்குத் துணை நிற்கும் என்றும், நீதித்துறைகூடத் தனது குடும்பத்தினருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கத் தயங்கும் என்றும் கருணாநிதி கருதினார் என்றுகூட அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். அவர் நம்பினார் என்பதைவிட அவரைச் சுற்றி இருந்தவர்கள் அவரை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டனர் என்பதுதான் உண்மை.
÷""தலைவரே, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை பணம் முறையாகப் பட்டுவாடா செய்யப்பட்டிருக்கிறது. நமது ஐந்தாண்டு ஆட்சியில் ஏதாவது ஒரு இலவசத்தால் பயனடையாத குடும்பமே தமிழகத்தில் கிடையாது. குறைந்தபட்சம் திமுக 80 இடங்களிலும், கூட்டணிக் கட்சிகள் 50 இடங்களிலும் வெற்றி பெற்று விடும்'' என்று அவரை நம்ப வைத்தவர்கள் அமைச்சர்களும் கட்சிக்காரர்களும் மட்டுமல்ல, அவருக்கு நெருக்கமானவர்கள் என்று கருதப்பட்ட மாநில புலனாய்வுத் துறை அதிகாரிகளும், பத்திரிகையாளர்களும்கூட.
÷""நீதிபதி சைனியின் உறவினர்களை நன்றாகத் தெரியும். அவர்கள் மூலம் அவரைச் சரிக்கட்டியாகிவிட்டது. சந்தேகம் ஏற்படாத வகையில் கனிமொழிக்கு ஜாமீன் வழங்க அவர் சம்மதித்துவிட்டார்'' என்றுகூட ஒரு மாநிலங்களவை உறுப்பினர் உறுதி அளித்திருந்தாராம். மூத்த வழக்கறிஞர் ஜேட்மலானியை கனிமொழிக்காக வாதாட ஒப்பந்தம் செய்ததிலேயேகூட ஊழல் நடந்ததாகவும், ஜேட்மலானி வாதிட்டதாலேயே வழக்கு ஜெயிக்கவில்லை என்றும்கூட கூறப்படுகிறது.
÷1977-ல் எம்.ஜி.ஆரின் அதிமுகவிடம் தோற்றுப் போய் ஆட்சி இழந்தபோதும், 1991-ல் ராஜீவ் காந்தி படுகொலையைத் தொடர்ந்து மிகப்பெரிய தேர்தல் தோல்வியைச் சந்தித்தபோதும் கருணாநிதியால் கட்சியை நிலைகுலையாமல் காப்பாற்ற முடிந்தது. அதற்குக் காரணம், அவருக்கு வயதும் துணிவும் சாதகமாக இருந்தன. இப்போது முதுமை ஒரு புறமும், முன்பு போலப் பம்பரமாய்ச் சுற்றிச் சுழன்று செயல்பட முடியாமல் உடல்நலக் குறைவு இன்னொரு புறமும் கருணாநிதியை முடக்கிப் போட்டிருக்கிறது. போதாக் குறைக்குக் குடும்பப் பிரச்னைகள் வேறு.
÷""தலைவரைப் பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது. குடும்பத்தை கவனிக்க வேண்டிய நேரத்தில், தனது மனைவி மக்களைப் பற்றிக் கவலையே படாமல் கட்சியைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தார். இப்போது கட்சியைக் காப்பாற்ற வேண்டிய நேரத்தில் அவர் குடும்பத்தைப் பற்றிய கவலையில் மூழ்கி இருக்கிறார். 2001 தேர்தலில் "இதுதான் எனது கடைசித் தேர்தல்' என்று அறிவித்தது போல, அவர் தேர்தல் தோல்விக்குப் பிறகு அரசியலிருந்து விலகி இருந்தால் இன்று அவருக்கு இப்படி ஒரு நிலைமை வந்திருக்காது'' என்று சிஐடி காலனி வீட்டில், கனிமொழியின் கைது செய்திக்குப் பிறகு கூடியிருந்த முன்னாள் அமைச்சர்களில் ஒருவர் கூறியதைத் தொண்டர்கள் பலரும் பேசத் தொடங்கிவிட்டனர்.
÷2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடில் நடந்த முறைகேடுகள் பற்றிய விசாரணை ஒருபுறம் தீவிரமடைந்து வருவதால் ஆ. ராசாவின் நிலைமை மேலும் தர்மசங்கடமாகிறது. கலைஞர் தொலைக்காட்சிப் பிரச்னை, கனிமொழி கைதுக்குப் பிறகு என்னவாகும் என்பதை உடனடியாகச் சொல்ல முடியவில்லை.  அதிகாரத்தை எல்லாம் நிர்வாக இயக்குநர் சரத்குமாருக்கு தான் அளித்துவிட்டதாகக் கூறி தயாளு அம்மாள் தப்பித்துக் கொள்ள முடியுமா என்பதும் சந்தேகமாக இருக்கிறது. 60% பங்குகளை வைத்திருக்கும் ஒருவர் தனக்குத் தொடர்பே இல்லை என்று பிரச்னையிலிருந்து நழுவ முடியுமா என்று கேள்வி எழுப்புகிறது சி.பி.ஐ.
÷இனி அடுத்த கட்டமாகக் கலைஞர் தொலைக்காட்சி முடக்கப்படக் கூடும். முன்பு ஜெ.ஜெ. டிவியை முடக்குவதற்காகக் கூறப்பட்ட எல்லா காரணங்களும் இப்போது கலைஞர் தொலைக்காட்சிக்கும் பொருந்தும் என்று கூறுகிறார்கள்.
÷மிகவும் மோசமான நிலையில் இருப்பது கருணாநிதி குடும்பத்தில் காணப்படும் குழப்பம்தான். "கனிமொழிக்காகக் கட்சியை ஏன் காவு கொடுக்க வேண்டும்?' என்கிற கேள்வியுடன் மு.க. அழகிரியும், மு.க. ஸ்டாலினும் இருக்கிறார்கள் என்றும், "20% பங்கு வைத்துக் கொண்டிருக்கும் எனது மகள் சிறையிலும், 60% பங்கு வைத்திருக்கும் தயாளு அம்மாளும் குடும்பமும் ஸ்பெக்ட்ரம் பணத்தை அனுபவிப்பது என்ன நியாயம்?' என்று ராஜாத்தி அம்மாள் தரப்பும் கருணாநிதியைத் தொந்தரவு செய்வதாகக் கூறப்படுகிறது.
÷""இத்தனை பிரச்னைக்கும் காரணமே தயாநிதி மாறன்தான்'' என்று கட்சியினர் மத்தியில் பரவலாக அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது. மாறன் சகோதரர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்பும், தயாநிதி மாறன் எப்படியாவது ஆ. ராசாவை அகற்றிவிட்டுத் தான் மீண்டும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராவதற்குச் செய்த பின்னணி வேலைகளும்தான் இத்தனைக்கும் காரணம் என்று கூறி வருத்தப்படாத கட்சிக்காரர்களே கிடையாது.
÷""ஆ. ராசா பலிகடா ஆக்கப்பட்டிருக்கிறார்'' என்று தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார், முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சருக்கு நெருக்கமான வழக்கறிஞர் ஒருவர். ""2009 மக்களவைத் தேர்தலுக்கு ஆ. ராசா கொடுத்த பெரும் பணம்தான் திமுக கூட்டணி தமிழகம் (27), புதுவை (1) இடங்களில் வெற்றி பெறக் கை கொடுத்தது. கலைஞர் தொலைக்காட்சி தொடங்குவதற்கும் ஆ. ராசாவிடமிருந்துதான் பணம் பெற்றுக் கொண்டார்கள். அது ஏன்? இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இவர்கள் செலவழித்த பணம் எங்கிருந்து வந்தது?' ராசா கைதானபோது கவலைப்படாதவர்கள், அவருக்கு ஜேட்மலானி போன்ற மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதாட வேண்டும் என்று நினைக்காதவர்கள் இப்போது கனிமொழிக்கு ஒன்று என்றால் மட்டும் துடிதுடித்துப் போகிறார்களே, அது என்ன நியாயம்?'' என்று கேள்வி எழுப்பினார் அந்த ராசாவின் நண்பர்.
÷""ராசா ஒரு "தலித்' என்பதால் பழிவாங்கப்படுகிறார் என்று தலைவர் சொன்னபோது அதை நாங்கள் நம்பினோம். இப்போதுதான் தெரிகிறது, ராசா ஒரு தலித் என்பதால்தான் தலைவர் அவரைப் பலிகடா ஆக்கப் பார்த்திருக்கிறார். தனது மனைவியும் மகளும் நிரபராதிகள், ஒன்றும் தெரியாதவர்கள் என்றும், ஆ. ராசாதான் அத்தனை தவறுகளுக்கும் காரணம் என்றும் நீதிமன்றத்தில் வாதாட எப்படி மனம் வந்தது?'' தன்னை வெளிக்காட்டிக் கொள்ள விரும்பாத, கடந்த திமுக ஆட்சியில் பொறுப்பான பதவி வகித்த "தலித்' ஒருவரின் குமுறல் இது.
÷""தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் மீது கருணாநிதிக்கு எப்போதுமே உதட்டளவுப் பாசம்தான் இருந்திருக்கிறது. இதற்கு நேர் எதிராக முதல்வர் ஜெயலலிதாவைப் பாருங்கள்.  சீனியர்கள் பலர் இருந்தும்கூட, தாற்காலிக பேரவைத் தலைவராக குடியரசுக் கட்சித் தலைவர் செ.கு. தமிழரசனைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். முதல்வர் ஜெயலலிதாவிலிருந்து அத்தனை சட்டப்பேரவை உறுப்பினர்களையும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த செ.கு. தமிழரசன் மூலம் பதவிப் பிரமாணம் செய்ய வைத்து நிஜமாகவே ஒரு புரட்சியைச் செய்து காட்டி இருக்கிறார் முதல்வர். இதை கருணாநிதி நிச்சயமாகச் செய்திருக்க மாட்டார்'' என்று கருத்துத் தெரிவித்த இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்தின் கணிப்பின்படி, ஆ. ராசா அப்ரூவராகக் கூடும்.
÷இன்றைய நிலையில் திமுக மத்திய அமைச்சரவையில் தொடருமா என்கிற கேள்வி எழுப்பப்படுகிறது. காங்கிரஸ் திமுகவைக் கழற்றி விடுமா என்கிற கேள்வியும் எழுப்பப்படுகிறது. இரண்டுமே நடக்காது என்கிறார்கள் தில்லியிலுள்ள அரசியல் நோக்கர்கள்.
÷""ஆட்சியையும் இழந்துவிட்ட நிலையில் திமுகவுக்கு இருக்கும் கொஞ்சநஞ்சப் பாதுகாப்பு மத்திய அரசில் அங்கம் வகிப்பதுதான். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து வெளியேறுவதால் திமுகவுக்கு என்ன லாபம் ஏற்பட்டுவிடப் போகிறது. நிலைமை மேலும் மோசமாகக் கூடும். அந்தத் தவறைக் கருணாநிதி ஒருநாளும் செய்யமாட்டார்'' என்பதுதான் பரவலான கருத்து.
÷காங்கிரஸýம் சரி, திமுகவைத் தனது கூட்டணியிலிருந்து விலக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டுவதாகத் தெரியவில்லை. ஆதர்ஷ் அடுக்குமாடிக் குடியிருப்பு, காமன்வெல்த் போன்ற ஊழல்களில் சிக்கி இருக்கும் நிலையில் திமுகவை ஊழல் என்று காங்கிரஸ் கூறுவது "ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை' என்ற கதையாகத்தான் இருக்கும்.
÷""தமிழகத்தில் அதிமுக ஆட்சியுடன் சுமுகமான உறவை வைத்துக் கொள்ள நிச்சயமாகக் காங்கிரஸ் தலைமை விரும்பும். அதற்காக, திமுகவை வெளியே அனுப்பிவிட்டு அதிமுகவுடன் உடனடியாகக் கைகோர்க்குமா என்பது சந்தேகம்தான். பலவீனமான திமுகவின் தோழமையும், வலிய நேசக்கரம் நீட்டும் அதிமுகவின் ஆதரவும் கிடைத்தால் காங்கிரஸýக்குக் கசக்கவா செய்யும்? அடுத்த மக்களவைத் தேர்தலுக்கு மூன்று ஆண்டுகள் இருப்பதால், இப்போதைக்கு உறவில் மாற்றம் இருக்காது. ஆனால், திமுகவுக்கு அதனால் எந்தவித லாபமும் இருக்காது. இதுதான் நிலைமை'' என்று கணிக்கிறார்கள் தில்லி அரசியல் பார்வையாளர்கள்.
÷திமுகவின் நிலைதான் என்ன? என்ன செய்வது என்று சிந்திக்கக்கூட முடியாத நிலையில் இருக்கிறது திமுக. எந்தக் கருணாநிதியால் பல சோதனைகளைக் கடந்து திராவிட முன்னேற்றக் கழகம் காப்பாற்றப்பட்டதோ, அதே கருணாநிதியின் குடும்பப் பாசத்தால் திமுக இப்போது நிலைகுலைந்து போயிருக்கிறது.
 கருணாநிதியை விலக்கி நிறுத்திவிட்டுக் கட்சித் தலைமையிடத்து திமுகவை வழிநடத்தக் கூடிய திறமை யாருக்குமே இல்லை என்பதுதான் எதார்த்த உண்மை.
திமுக சார்பாக ஆங்கிலத் தொலைக்காட்சிச் சேனல் விவாதங்களில் பங்கேற்க நடிகை குஷ்பு அனுப்பப்படுகிறார் என்றால், பார்த்துக் கொள்ளுங்கள். சுயமரியாதை, பகுத்தறிவு என்றெல்லாம் பேசி ஆட்சியைப் பிடித்த கட்சி இப்போது சுயமரியாதையை முற்றிலுமாக இழந்து
, "விதிவிட்ட வழி' என்கிற பகுத்தறிவுடன் செயல்பட வேண்டிய நிலைமை.
÷இதையெல்லாம் முன்கூட்டியே எதிர்பார்த்து இருந்ததால்தானோ என்னவோ, அறிஞர் அண்ணா தனது தம்பிகளிடம் "எதையும் தாங்கும் இதயம் வேண்டும்' என்று வலியுறுத்தினார்? என்னே அண்ணாவின் தீர்க்க தரிசனம்!



ஐ.நா.மனித உரிமைகள் சபையில் இலங்கை கடும் விமர்சனங்களுக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கும்
[ ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2011, 06:24.50 AM GMT ]
எதிர்வரும் 30 ஆம் திகதி; ஜெனீவாவில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபை கூட்டத்தில் எவ்வித முன் ஆயத்தங்களும் இன்றி இலங்கை பிரசாரத்தை மேற்கொள்ளவுள்ளது
இலங்கையில் இடம்பெற்ற போரின்போது மனித உரிமைமீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் என்பன நிகழ்ந்தாக ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்;கையிட்டுள்ளது
இந்தநிலையில் இலங்கையின் அமைச்சர்களான மஹிந்த சமரசிங்க நிமல் சிறிபால டி சில்வா மற்றும் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் ஆகியோர் ஜெனீவா செல்லவுள்ளனர்
ஜூன் 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த அமர்வுகளின்போது இலங்கைப்படையினர் கைதுசெய்யபட்ட தமிழீழ விடுதலைப்புலிகளை இலங்கைப்படையினர் சுட்டுக்கொல்லும் செனல் 4 தொலைக்காட்சியின் காணொளி தொடர்பில் பதில் வழங்கவுள்ளனர்
இலங்கையின் அமைச்சர்கள் இந்த காணொளிகள் உயர் தொழில்நுட்பத்தை வைத்து தயாரிக்கப்பட்டவையாகும் என்பதை அமர்வின்போது சுட்டிக்காட்டவுள்ளது
எனினும் செனல் 4 இந்த காட்சி. களத்தில் இருந்து படைவீரர் ஒருவரின் கையடக்க தொலைபேசியின் மூலம் இந்த காட்சி படமாக்கப்பட்டதாக தெரிவித்து வருகிறது
இதனைதவிர பான் கீ மூனின் நிபுணர் குழு அறிக்கை ஆதாரமற்றது என்றும் அது ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்கம் அல்ல என்ற வாதத்தையும் இலங்கை அமைச்சர்கள் வலியுறுத்தவுள்ளனர்
எனினும் இந்த அறிக்கையின் பரிந்துரைகளுக்கு ஏற்ப இலங்கையின் போர்க்குற்றங்களை விசாரணை செய்ய சர்வதேச பொறிமுறை ஒன்று அமைக்கப்படவேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது                                       இலங்கையில் மூன்று தசாப்தங்களின் பின்னர் அவசரகால சட்டம் நீக்கப்படப் போகிறது?
[ ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2011, 06:32.56 AM GMT ]
இலங்கை அரசாங்கம் அவசரகால சட்டத்தை முழுமையாக அகற்றுவதற்கான ஆலோசனையை மேற்கொண்டு வருகின்றது.
அரசாங்கத்தின் உயர் அமைச்சர் ஒருவரை கோடிட்டு இந்த செய்தி வெளியாகியுள்ளது.
மூன்று தசாப்தங்களாக நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த அவசரக்கால சட்டம் தொடர்பில் கேள்வி எழுப்பட்டு வந்தது.
இந்தநிலையில் அவசரகாலச் சட்டத்தை நீக்கினால் அது அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ள மரியாதைக்குறைவை காப்பாற்றக்கூடியதாக இருக்கும் என்று சிரேஸ்ட அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் வலியுறுத்தல் இதற்கு முக்கியமான காரணமாகும்.
இலங்கையில் அவசரகால சட்டம் ஜே.வி.பியின் இளைஞர்கள் 1971 ம் ஆண்டு மேற்கொண்ட கிளர்ச்சியின் போது அறிமுகப்படுத்தப்பட்டது.
அதன் பின்னர் இரண்டு தடவைகளை தவிர தொடர்ந்தும் அந்த சட்டம் நாட்டில் அமுல் செய்யப்பட்டது.
முல்லைத்தீவு மக்களின் அவலங்களை நேரில் கண்டறிந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்கள்
[ ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2011, 04:00.56 AM GMT ]
சொந்த மண்ணிலிருந்து வாழ்விடங்கள் பறிக்கப்பட்டு, தொழில்துறைகள் பறிக்கப்பட்டு ஏதிலிகளாக முல்லைத்தீவு மாவட்ட தமிழ் மக்கள் விரைவில் துரத்தப்படுவார்கள் என சுட்டிக்காட்டியுள்ள மாவட்ட மக்கள், ஆக்கிரமிப்பிற்கு எதிரா கூட்டமைப்பு குரல்கொடுக்கவேண்டும் எனவும் கேட்டுள்ளனர்.
யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தாமல் வேறிடங்களில் குடியமர்த்த ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றமை மேலும் கடந்த 35 வருடங்களுக்கும் மேலாக கரைவலைப் பாடுகளை வைத்து தொழில் செய்து வந்த மக்களிடமிருந்து அதிகார வர்க்கத்தினரால் அந்தப்பாடுகள் பிடுங்கப்பட்டு தென்னிலங்கை சிங்கள வியாபாரிகளிடம் கொடுக்கப்பட்டுள்ளது,
இவ்வாறான பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்கென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சி.சிறிதரன் ஆகியோர் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு நேற்று விஜயம் செய்திருந்தனர். இதன்போதே மக்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
இந்த சந்திப்பின்போது மக்கள் மேலும் தெரிவிக்கையில்.
மீள்குடியேற்றம் தொடர்பாக,
கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் அம்பலவன் பொக்கணை, முள்ளிவாய்க்கால் மேற்கு, முள்ளிவாய்க்கால் கிழக்கு, ஆகிய கிராமசேவகர் பிரிவுகளில் அம்பலவன் பொக்கணை, புதுமாத்தளன், பழமாத்தளன், செம்மண்குன்று, தீபாபிட்டி, பட்டிக்கரை, சாலை, பேப்பாரப்பிட்டி, வலைஞர்மடம், சாளம்பன், முள்ளிவாய்க்கால் மேற்கு, முள்ளிவாய்க்கால் கிழக்கு, வெட்டுவாய்க்கால் ஆகிய கிராமங்களில் மக்கள் மீளக்குடியமர்த்தப்படாத நிலையில் இந்த பகுதிகளைச் சேர்ந்த சுமார் 7ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் தொடர்ந்தும் முகாம்களிலும் வெளியிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
இவர்களைத் தற்போது அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்தாமல் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவின்கிளுள்ள திருப்பிலி என்ற இடத்தில் அரை ஏக்கர் வீதம் காணிகள் வழங்கப்பட்டு அங்கே மீளக்குடியமர்த்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
ஆனால் மேற்கூறப்பட்ட இடங்களைச் சேர்ந்த மக்கள் பாரம்பரியமாக கடற்றொழிலையும் விவசாயத்தையும் நம்பி வாழ்ந்த மக்கள். எனவே இவர்களை புதுக்குடியிருப்பில் மீளக்குடியமர்ந்தால் மக்கள் தங்களில் அடிப்படை வாழ்வாதாரத் தொழிலை இழந்துவிடுவர். ஆனால் இது எதனையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளாத வகையில் திட்டமிடப்பட்ட வகையில் மாற்றிடத்தில் மீள்குடியேற்றத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக மக்கள் சுட்டிக்காட்டினர்.
இதற்குப் பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தனதுரையில்,
மாற்றிடமொன்றில் மீள்குடியேற்றம் செய்வதற்கு ஏதுவாக மக்களே சம்மதம் என்று எழுத்து மூலம் உறுதியளிப்பதாக கையெழுத்துப் பெறும் நடவடிக்கையையும் சிலர் மேற்கொள்வர். அதற்கு மக்கள் எந்த விதத்திலும் ஒத்துழைக்கவேண்டாம் எனக் கேட்டுக் கொண்டதுடன் மாற்றிடம் ஒன்றில் சென்று வாழ்வது தொடர்பாக கவனம் செலுத்த வேண்டாம் எனவும் சட்டரீதியான நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்தார்.
கரைவலைப் பாடுகள் தொடர்பாக,
கடந்த 35 வருடங்களுக்கும் மேலாக எமது மக்கள் இந்த இடங்களில் பாரம்பரியமாக தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர். ஆனால் தற்போது அமைச்சரினதும் அதிகாரிகளினதும் அனுமதிக் கடிதங்களுடன் வந்துள்ள சிங்கள வர்த்தகர்கள் தங்களுக்கான பாடுகள் எனவும் அவற்றில் தாங்கள் தொழிலில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்து தொழில் செய்கின்றனர். இதற்கு இராணுவத்தினரும் உடந்தையாகவுள்ளனர். எங்களை இராணுவத்தினர் பகிரங்கமாகவே கடற்கரைகளை விட்டு வெளியே செல்லுமாறு வற்புறுத்தி வருகின்றனர். இதனால் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மக்களை விடவும் அதிகளவான சிங்கள தொழிலாளிகள் மாவட்டத்திற்கு வந்துள்ளனர்.
தற்போது எந்த கரைவலைப் பாடுகளும் தமிழர்களுக்குக் கிடையாது. இதனால் சுமார் 44 தொழிலாளர்களும் அவர்களுடன் இணைந்து தொழில் செய்த ஒரு பாட்டிற்கு சுமார் 25பேர் வீதம் தொழிலாளர்களும் தமது தொழிலை இழந்துள்ளனர்.
மேலும் இலங்கையில் தடைசெய்யப்பட்ட திருக்கை வலை பயன்பாடு மற்றும் சங்கு பிடித்தல் போன்றனவும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதில் சங்கு பிடிக்கும் தொழிலை இராணுவ அதிகாரியொருவர் மேற்கொண்டு வருகின்றார். இவருக்கு இந்தப்பகுதியில் தங்குமிடம் ஒன்றையும் இராணுவத்தினர் ஏற்பாடு செய்துள்ளனராம்.
அந்தக் கட்டிடம் புரைமைப்புக்கு பணம் வந்தபோதும் இந்த இராணுவ அதிகாரி தங்கியிருப்பதால் இந்த அரசாங்க கட்டிடத்தின் புனரமைப்புப் பணிகளும் தள்ளிப்போடப்பட்டுக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்டுகின்றது.
ஆனால் எமது மக்கள் கடலுக்குச் செல்வதற்கும் படகை கரைக்குக் கொண்டுவருவதற்கும் கூட இராணுவத்தினரின் அனுமதியைப் பெறவேண்டியிருக்கின்றது.
சிங்களக் குடியேற்றம்.
கோம்பாவில் பிரதேசத்தில் திட்டமிடப்பட்ட வகையில் வெளியில் பாதுகாப்பாக காடுகள் வளர்ந்து நிற்க உள்ளே காடுகள் வெட்டப்பட்டு பெரியளவில் மாடிக் கட்டிடங்களும் தொடர் கட்டிடங்களும் கட்டப்பட்டு வருகின்றது. இவை இராணுவத்தினருக்கானது என இராணுவத்தினர் பலர் அங்கு சென்று வந்த மக்கள் பலருக்குத் தெரிவித்துள்ளனராம்.
தற்போது மேற்படிப்பிரதேசத்தில் புதுக்குடியிருப்புப் பிரதேசத்தை அண்டி மிகக் குறுகிய அளவில் மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர். ஆனால் சிங்களக் குடியேற்றம் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
யுத்தகாலத்தில் கைவிடப்பட்ட வாகனங்கள் தொடர்பாக,
யுத்தகாலத்தில் கைவிடப்பட்ட வாகனங்கள் பல இன்னமும் மீட்கப்படாத நிலையில் காணப்படுகின்றது. அவற்றை மீட்பது தொடர்பில் எடுக்கப்பட்ட முயற்சிகள் யாவும் தோற்றுப்போயுள்ளன. அது தொடர்பாகவும் கவனமெடுக்கவேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.
இது குறித்து பராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தனதுரையில் தெரிவிக்கையில்,
ஐ.நா அறிக்கை வந்தவுடன் அது இலங்கையில் இரண்டு இனங்களுக்கிடையில் நல்லுறவை பாதிக்கும் என தெரிவித்த அரசாங்கம் இன்று என்ன செய்து கொண்டிருக்கின்றது? எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரிடமும் தெரிவித்திருக்கின்றோம்.  உங்கள் மாவட்டங்களில் நடைபெறும் இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்பில் தெரியப்படுத்துமாறு. அதற்கிணங்க நாம் தொடர்ந்து குரல் கொடுப்போம் என்றார்.
தொடர்ந்து சிறிதரன் கருத்துத் தெரிவிக்கையில்,
முள்ளிவாய்க்கால் இன அழிப்புடன் தமிழ் மக்கள் மீதான அடக்கு முறைகள் தடுக்கப்பட்டு விட்டதாகக் கூறுபவர்களுக்கு இது சிறந்த எடுத்துக் காட்டாக அமைகின்றது. இங்கே மிகவும் வலிமையான மக்கள் கூட்டம் வாழ்ந்திருந்தது. அதனால் மிகவும் மகிழ்ச்சியான வாழ்வை அந்த சமூகம் வாழ்ந்து வந்தது. ஆனால் இன்று நிலத்தை ஒருவரும் கடலை வேறொருவரும் அனுபவிக்கிறார்கள். தன்னுடைய சொந்த வளத்தை பறிகொடுத்து விட்டு நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.
இன்று நீங்கள் எடுத்துக் கூறிய விடயங்கள் எமக்கு மட்டும் கூறியிருக்கவில்லை உலகத்திற்கே கூறியிருக்கின்றீர்கள். இந்த மாதிரியான படை ஆதிக்கச் செயற்பாடுகளிற்கு எதிராக நிச்சயமாக பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியேயும் குரல் கொடுப்போம் என்றார்.



கலைஞர் நாளை டெல்லி பயணம்
திமுக தலைவர் கலைஞர் நாளை (திங்கட்கிழமை) டெல்லி புறப்பட்டு செல்கிறார். இதுகுறித்து அவர் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில்,


ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பொறுப்பேற்று 3வது ஆண்டு தொடங்குவதையொட்டி டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் அளிக்கும் விருந்தில் தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு கலந்து கொள்வார் என்றும், நாளை தான் டெல்லி செல்ல இருப்பதாகவும் தெரிவித்தார். அப்போது, காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்து பேசுவீர்களா? என்ற கேள்விக்கு, சோனியா காந்தியை சந்திக்கும் வாய்ப்பு இல்லை என்றார். 








அதிமுக அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம்: கோட்டையில் இன்று நடைபெறுகிறது

First Published : 22 May 2011 01:48:22 AM IST

சென்னை, மே 21: அதிமுக அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம் கோட்டை தலைமைச் செயலகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் சில முக்கியத் திட்டங்களுக்கான அனுமதி கோரப்படும் எனத் தெரிகிறது.
    14-வது சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. 33 அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவை பொறுப்பேற்றுள்ளது. முதல்வர் ஜெயலலிதா, தான் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே ஏழு திட்டங்களுக்கான உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.
    பட்டதாரி ஏழை பெண்களுக்கான திருமண நிதியுதவியை ரூ.50 ஆயிரமாக உயர்த்தவும், அரை சவரன் தங்கம் இலவசமாக வழங்கவும் உத்தரவிட்டார். 20 கிலோ இலவச அரிசி உள்ளிட்ட திட்டங்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். இலவச அரிசி திட்டம் ஜூன் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அரசு அறிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள கூட்டத்தில் பல முக்கியத் திட்டங்களுக்கு அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்படும் எனத் தெரிகிறது. சில திட்டங்கள் அடுத்த 10 நாள்களுக்குள் அமல்படுத்தப்பட இருப்பதால் அமைச்சரவைக் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டிய அவசியம் இருப்பதாக தலைமைச் செயலக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
    முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்ட இரண்டாவது நாளிலேயே அமைச்சர்கள் அனைவருடனும் ஆலோசனை நடத்தினார் ஜெயலலிதா. சுமார் இரண்டரை மணி நேரத்துக்கும் மேலாக அந்தக் கூட்டம் நடைபெற்றது. இதேபோன்று, மூன்றாவது நாளும் அமைச்சர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அமைச்சர்களுக்கான துறைகள் என்ன, அதன் தன்மைகள், கோப்புகளை எவ்வாறு கையாள்வது என்பன உள்ளிட்ட விஷயங்களை அமைச்சர்களுக்கு எடுத்துக் கூறினார் ஜெயலலிதா.
   புதியவர்களுக்கு முதல் கூட்டம்: தமிழக அமைச்சரவையில் 24 பேர் புதியவர்கள். அவர்களுக்கு இது முதல் அமைச்சரவைக் கூட்டமாகும். ஞாயிற்றுக்கிழமை அமைச்சரவைக் கூட்டம் என்பதால் சனிக்கிழமை பணி இல்லாவிட்டாலும் பல அமைச்சர்கள் தலைமைச் செயலகத்திலேயே முகாமிட்டு இருந்தனர். துறைகள் பற்றிய விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டுத் தெரிந்த அவர்கள், அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வர் கேள்விகளைக் கேட்டால் அதற்கு தங்களை தயார் செய்யும் வகையில் பணியாற்றியதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

21 மே, 2011






கைதான போது கணவர், மகனிடம் கண்ணீர் விட்டு அழுத கனிமொழி!

தி.மு.க. அரசியல் பாரம்பரியத்தில் வளர்ந்து தந்தையின் இலக்கிய புலமையையும் கற்று தேர்ந்து கொண்டவர் கனிமொழி. 

பொழுது விடிந்தது முதல் இரவில் துயில் கொள்ளும் நேரம் வரை கட்சி நிர்வாகிகளுடன் அரசியல் பேச்சுகள், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது, எழுதுவது என்று எத்தனையோ பணிகளுடன் எப்போதும் சுறு சுறுப்பாக இயங்கி கொண்டிருப்பார். 

2 ஜி ஸ்பெக்ட்ரம் அலையின் தாக்கம் கடந்த சில மாதங்களாக அவரை தடுமாற வைத்தன. நேற்று கைது செய்யப்பட்டதும் அவரை நிலைகுலைய வைத்து விட்டது. மிகப்பெரிய வக்கீல், அரசியல் பின்புலம் ஆகியவற்றால் வழக்குகளை சந்திக்கலாம். 

ஜெயிலுக்கு போகாமல் இருக்க முன் ஜாமீன் கிடைத்துவிடும் என்ற துளியளவு நம்பிக்கையுடன் டெல்லி பிரம்மபுத்திரா இல்லத்தில் நேற்று காலையில் துயிலெழுந்தார். 

தி.மு.க. எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, டி.கே.எஸ்.இளங்கோவன், ஏ.கே.எஸ்.விஜயன், சுகவனம், ஜெயதுரை, ஆதிசங்கர், ஹெலன்டேவிட்சன், ரித்தீஷ், கே.பி.ராமலிங்கம், செல்வகணபதி, வசந்தி ஸ்டான்லி, தங்கவேலு, முன்னாள் அமைச்சர் பூங்கோதை, இவர்களை தவிர விசுவாசமிக்க கட்சி நிர்வாகிகள் பலரும் அவரது இல்லத்தில் குவிந்து இருந்தனர். 

கோர்ட்டு முடிவு எப்படி இருக்குமோ என்ற பதட்டத்தில் இருந்த கனிமொழிக்கு அனைவரும் தைரியம் கொடுத்தனர். காலை 10 மணிக்கு சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டுக்கு கனிமொழி சென்றார். தி.மு.க. எம்.பி.க்களும் கோர்ட்டிற்கு வந்து இருந்தனர். 

ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி, சரத்குமாரின் மனைவி ஆகியோரும் கோர்ட்டுக்கு வந்திருந்தனர். காலை 11 மணி, 12.30 மணி என்று தீர்ப்பு சொல்லும் நேரம் அடிக்கடி தள்ளிகொண்டே போனதால் திக்...திக் மனதோடு ஒவ்வொரு நிமிடத்தையும் ஒரு மணித்துளியாக நகர்த்தி கொண்டிருந்தார்கள். 

பிற்பகல் 2.30 மணிக்கு நீதிபதி சைனி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து தனது உத்தரவை படித்ததும் கனிமொழி மிகவும் அதிர்ச்சி அடைந்தார். கண்கள் கலங்கி கண்ணீர் பெருகியது.அருகில் இருந்த முன்னாள் அமைச்சர் பூங்கோதை, ஹெலன் டேவிட்சன் ஆகியோர் ஆறுதல் படுத்தினார்கள். 

ஜெயிலுக்கு அழைத்து செல்லுமாறு நீதிபதி உத்தரவிட்டதும் சென்னை மாநகராட்சி 95-வது வார்டு கவுன்சிலர் துரை கோர்ட்டு அறையிலேயே ஒ வென்று கதறி அழுது விட்டார். அதைப்பார்த்ததும் மற்றவர்கள் கண்களிலும் கண்ணீர் வடிந்தது. 

துயரத்தில் ஆழ்ந்து இருந்த கனிமொழி அதை அடக்கி கொண்டு துக்கம் தாளாமல் அழுத துரையை தேற்றினார். மாலை 3 மணியளவில் கனிமொழியை நீதிமன்ற வளாகத்தில் உள்ள “லாக்-அப்” அறைக்கு அழைத்து செல்வதற்காக சுற்றியிருந்த பார்வையாளர்கள் வெளியேற்றப்பட்டனர். 

பெண் போலீசார் கனி மொழியை லாக்-அப் அறைக்கு அழைத்து சென்றனர். கையை தட்டினால் ஏவலுக்கு எத்தனையோ போலீசார் வந்து நிற்பதையும் பாதுகாப்பு அரணாக சுற்றி நிற்பதையும் சிறுவயது முதல் பார்த்து பழக்கப்பட்ட கனிமொழியின் கைகளை பிடித்து பெண் போலீசார் அழைத்து சென்றதை பார்த்து அவரால் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியவில்லை. 

கலங்கியப் கண்களுடன் லாக்-அப்புக்கு நடந்தார். அவரை தொடர்ந்து கணவர் அரவிந்தனும் வந்தார். எத்தனையோ அரசியல் களங்களுக்கு மனைவியை அனுப்பி வைத்து மகிழும் அரவிந்தனும் மனைவி ஜெயிலுக்கு செல்வதை பார்த்து நொறுங்கி போனார். 

லாக்-அப் அறைக்குள் செல்வதற்கு முன்பு கனிமொழி கணவரை கட்டித் தழுவினார். உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் இருவரும் கண்ணீர் விட்டனர். 

கனிமொழியின் தோளில் தட்டி அரவிந்தன் தேற்றினார். லாக்-அப் அறைக்குள் சென்றதும் அவரால் துயரத்தை அடக்க முடியவில்லை. பெருகிவந்த கண்ணீரை துடைத்தபடியே சிலநிமிடங்களை கழித்தார். 

அடுத்த 10 நிமிடத்தில் கணவர் அரவிந்தனை சந்திக்க வேண்டும் என்று கனிமொழி முறையிட்டார். அவரது செல்போன் நம்பரையும் போலீசாரிடம் கொடுத்தார். 

அவரது தவிப்பை புரிந்த போலீசார் உதவ முயன்றனர். ஆனால் நீதிபதியின் உத்தரவால் எல்லோரும் வெளியே சென்று விட்டனர். போலீசாரால் அரவிந்தனை தொடர்பு கொள்ள முடியவில்லை. 

தமிழக பத்திரிகையாளர்களும் அரவிந்தனை தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் அவர்களாலும் முடிய வில்லை. இறுதியில் தி.மு.க. பிரமுகர் பாலகுரு என்பவர் மூலம் அரவிந்தனை தொடர்பு கொண்டனர். 

அவர் உடனடியாக விரைந்து வந்தார். கனிமொழியுடன் லாக்-அப் அறையில் சுமார் 20 நிமிடங்கள் பேசி கொண்டிருந்தார். அப்போது மகன் ஆதித்யாவை பார்க்க ஆசைப்படுவதாக கூறினார். 

உடனே ஆதித்யாவை அழைத்து வந்தனர். மகன் ஆதித்யாவின் கைகளை பிடித்து வருடியபடி அவரிடம் சுமார் 15 நிமிடங்கள் பேசினார். 

தனது உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொண்டு ஆதித்யாவை தைரியமாக இருக்கும்படி வாஞ்சையுடன் தடவிகொடுத்தார். 

மாலை 4.30 மணிக்கு போலீசார் ஒரு வேனில் ராசாவையும், சரத்குமாரையும் திகார் ஜெயிலுக்கு அழைத்து சென்றனர். அதன்பிறகு பெண் போலீசார் மற்றொரு வேனில் கனிமொழியை திகார் ஜெயிலுக்கு அழைத்து சென்றனர். 

இது நான் எதிர்பார்த்தது தான் என்று கனிமொழி ஜெயிலுக்கு செல்வதற்கு முன்பு கூறினார். ஆனால் ஜெயிலுக்குள் நுழைந்ததும் அவரது முகமே மாறிவிட்டது. இறுகிய முகத்துடன் ஜெயிலுக்குள் சென்றா

காங்கிரஸ்- திமுக உறவில் முறிவா?

First Published : 21 May 2011 03:39:56 AM IST

Last Updated : 21 May 2011 05:27:14 AM IST
சென்னை, மே 20: காங்கிரஸ் கட்சியுடனான உறவு பற்றி பொதுக்குழு கூடித்தான் முடிவு எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
 2 ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் திமுக மாநிலங்களவை உறுப்பினரும், கருணாநிதியின் மகளுமான கனிமொழி தில்லியில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
 இந்த நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கருணாநிதியின் சி.ஐ.டி.நகர் வீட்டில் திமுக நிர்வாகிகள் ஆலோசித்தனர். பொதுச்செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், தலைமை முதன்மைச் செயலாளர் ஆர்க்காடு வீராசாமி, முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, தங்கம் தென்னரசு உள்பட பலர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களுக்கு திமுக தலைவர் கருணாநிதி அளித்த பேட்டி: கனிமொழியின் ஜாமீன் மனுவை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது நீதிமன்ற விவகாரமாகும். அதில் நான் ஒன்றும் கருத்துச் சொல்ல விரும்பவில்லை.
 தில்லி உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு: இது குறித்து சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவெடுப்பேன். அது என்ன முடிவு என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள்.
 காங்கிரஸýடன் திமுக உறவு: எல்லோருடனும் நல்ல உறவு இருக்கிறது. திமுக என்பது ஒரு ஜனநாயக இயக்கம். நான் மாத்திரம் எந்த முடிவும் எடுக்க முடியாது. எங்கள் கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூடித்தான் எந்த முடிவையும் எடுக்க வேண்டும். நானாக ஒரு முடிவும் எடுக்க முடியாது. செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தைத் தேவைப்படும்போது கூட்டுவோம் என்றார் கருணாநிதி.
 உங்கள் மனம் என்ன பாடுபடும்? "கனிமொழி ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் உங்கள் மனநிலை எப்படி பாதிக்கப்பட்டிருக்கிறது?' என்று நிருபர் கேட்டார். "உங்களுக்கு ஒரு மகள் இருந்து - அவர் செய்யாத குற்றத்திற்காக - இதுபோன்ற ஒரு தண்டனை கிடைத்தால், உங்கள் மனம் அப்போது என்ன பாடுபடுமோ அந்த மனநிலையில்தான் என் மனம் இருக்கிறது' என்றார் கருணாநிதி.
 தில்லிக்கு போகவில்லை: இப்போதைக்கு தில்லிக்கு நான் போகவில்லை என்றும் கருணாநிதி கூறினார்.உணவு  உண்டு குடும்பத்தாரோடு
ரஜினி மகிழ்ச்சியாக இருக்கிறார்

நடிகர் ரஜினிகாந்துக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு,  கடந்த 13-ந்தேதி போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

/TD>
அங்கு தீவிர சிகிச்சை பிரிவுவில் ரஜினிக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்நிலையில்,  ஜினியின் உடலநிலை  இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டது என்று ராமச்சந்திரா மருத்துவவமனை  நிர்வாகம் அறிவித்துள்ளது. 

 உணவு உண்டு குடும்பத்தாரோடு ரஜினி மகிழ்ச்சியாக இருப்பதாவகவும்,   மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

                                                                                       நிர்வாணமாக    டிக்கிறார் ஐஸ்வர்யா ராய்!

முன்னாள் உலக அழகியும், பாலிவுட் பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா ராய் புதிய படமொன்றில் நிர்வாணமாக நடிக்க உள்ளார். ஹீரோயின் என்ற பெயரில் பிரபல இயக்குநர் மதுர் பந்தர்கர் இயக்கும் படத்தில்தான் அம்மணியை முழுமையாக தரிசிக்க ரசிகர்களுக்கு வாய்ப்பு கிடைக்கப் போகிறது.

முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கு வயது சற்று தெரிந்தாலும் அழகும், நளினமும் குறையவில்லை. இருந்தாலும் ஏஜ் பேக்டர் பயம் ஐஸ்வர்யாவை தொற்றிக் கொண்டதாகவே தெரிகிறது. கரீனா, கத்ரீனா, தீபிகா, பிரியங்கா, சோனம் கபூர், சோனாக்ஷி என நீண்டு செல்கிறது பாலிவுட்டின் சின்ன சிட்டுகளின் பட்டியல். இவர்களுடன் போட்டாப் போட்டி போட மாஜி உலக அழகி அந்தஸ்து மட்டும் போதாது, அதுவும் வயது ஏறிக் கொண்டே போகும் போது…! எனவே தான் தனது புதிய படத்தில் ஐஸ்வர்யா அதிரடியாக நிர்வாணமாக தோன்ற சம்மதித்திருப்பதாக பாலிவுட் வட்டாரம் சலசலக்கிறது.
முன்னதாக இந்தப் படத்திற்கு தேசிய விருது புகழ் இயக்குநர் மதுர் பந்தர்கர் கரீனா கபூரைத்தான் ஒப்பந்தம் செய்ய இருந்தார். ஆனால் நிர்வாண காட்சியா… அய்யய்யோ என்னால முடியாது… என கரீனா கபூர் ஓட்டம் பிடித்ததால், ஐஸ்வர்யாவை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம். முதலில் நிர்வாண காட்சியில் நடிக்க தயங்கிய ஐஸ், பின்னர் படத்தின் கதையை முழுமையாக கேட்ட பிறகு, கணவரின் சம்மதத்துடன் நடிக்க சம்மதித்துள்ளார்.
அப்படியென்ன கதை? அங்கேதான் விவகாரமே இருக்கிறது. ஹீரோயின் என்ற தலைப்பு கொண்ட இந்த படம் முழுக்க முழுக்க ஒரு நடிகை சினிமா உலகில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள எப்படி எல்லாம், யார் யாரையெல்லாம் அனுசரித்து போக வேண்டி இருக்கிறது என்பது பற்றிதான்.  ஏற்கனவே இதுபோன்ற கதையம்சங்களுடன் ஒருசில படங்கள் வெளியான போதிலும், அவற்றிலெல்லாம் இலைமறை காயாகத்தான் இதுபோன்ற அந்தரங்க காட்சிகள் படமாக்கப்பட்டிருந்தன. ஆனால் முதன் முதலாக இந்த படத்தில்தான் திரையுலகின் மறுமுகம் தெரியப் போகிறது என்பது கூடுதல் தகவல்.
கதைக்கு பொருத்தமாகத்தான் நிர்வாண காட்சிகள் இருக்கும்; எதையும் மிகைப்படுத்தி காட்ட மாட்டேன் என்று கூறியிருக்கும் டைரக்டர் மதுர் பந்தர்கருக்கு கண்டிப்பாக திரைத்துறையில் இருந்தே எதிர்ப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. யார் எதிர்த்தால் என்ன… ரசிகர்கள் சிவப்பு கம்பள வரவேற்பு கொடுப்பார்களே… கலையுலகின் அழகுச்சிலையை நிர்வாணமாக காட்டுவதற்கு!!




கனிமொழி, ராசா நீதிமன்றத்தில் ஆஜர்; ராசாத்தி அம்மாள் கண்ணீர்

First Published : 21 May 2011 01:21:04 PM IST

புதுதில்லி, மே.21: தொலைத்தொடர்பு முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்பி கனிமொழி, கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் உள்ளிட்டோர் தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.
கனிமொழியின் தாயார் ராசாத்தி அம்மாளும், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவும் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர்.
நீதிமன்றத்துக்கு வந்த ராசாத்தி அம்மாள், கனிமொழியைப் பார்த்து கண்கலங்கினார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கனிமொழி நேற்று கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவருடன் கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குநர் சரத்குமார் கைது செய்யப்பட்டார்.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் 'கூட்டு சதியாளர்' என துணை குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்ட கனிமொழியின் ஜாமீன் மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி நேற்று நிராகரித்து உத்தரவிட்டார். அவரை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பியும் உத்தரவு பிறப்பித்தார்.
2ஜி அலைக்கற்றை முறைகேடாக ஒதுக்கீடு செய்ததில் மத்திய அரசுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி வருமான இழப்பு ஏற்பட்டிருப்பதாக சிஏஜி தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது. இதனடிப்படையில் உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் சிபிஐ இந்த முறைகேடு குறித்து விரிவான விசாரணையை மேற்கொண்டது.
விசாரணையை அடுத்து முதல் குற்றப்பத்திரிகையில் மத்திய தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ஆ. ராசா உள்ளிட்ட 8 பேர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து சமீபத்தில் சிபிஐ தனது துணை குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது.
அதில் 2ஜி அலைக்கற்றையை விதிமுறைகளுக்கு மாறாக ஒதுக்கீடு செய்ததில் பயனடைந்ததாகக் கூறப்படும் ஷாகித் பல்வாவுக்குச் சொந்தமான டிபி ரியாலிட்டி நிறுவனம், குசேகாவ்ன் மற்றும் சினியுக் பிலிம்ஸ் ஆகியவை மூலமாக கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ.214 கோடி நிதி அளித்தது தெரியவந்தது.
இதனடிப்படையில் கலைஞர் தொலைக்காட்சியின் 60 சதவீத பங்குதாரரான தயாளு அம்மாள், 20 சதவீத பங்குதாரரான கனிமொழி, 20 சதவீத பங்குதாரரான கலைஞர் டி.வி. மேலாண்மை இயக்குநர் சரத்குமார் ஆகிய மூவரிடம் சிபிஐ விசாரணை நடத்தியது.
ஊழல் குற்றச்சாட்டை கவனத்தில் கொள்ளும்போதும் குற்றம்சாட்டப்பட்ட இருவருக்கும் ஜாமீன் அளித்தால், கலைஞர் தொலைக்காட்சியின் ஊழியர்களின் சாட்சியங்களைக் கலைக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே இவர்கள் இருவருக்கும் ஜாமீன் அளிக்க முடியாது என நீதிபதி தெரிவித்தார். தொடர்ந்து கனிமொழி, சரத்குமார் ஆகிய இருவரையும் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி உத்தரவு பிறப்பித்தார்.
திகார் சிறையில் 150 சதுர அடி (15-க்கு 10) அறையில் கனிமொழி அடைக்கப்பட்டுள்ளார்.
அந்த அறையில் ஏ.சி. உள்ளிட்ட வசதிகள் கிடையாது. தொலைக்காட்சி, மின்விசிறி உள்ளிட்ட வசதி அவருக்கு அளிக்கப்படும். செய்தித்தாள்களும் அவருக்கு வழங்கப்படும் . இஸ்லாமாபாதில் உள்ள இந்திய தூதரகத்தில் பணி புரிந்து, பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாகக் கைது செய்யப்பட்ட மாதுரி குப்தா, தில்லியில் விபசார வழக்கில் கைது செய்யப்பட்ட சோனு பஞ்சாபன், தில்லியில் கவுன்சிலர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள சாரதா ஜெயின் ஆகியோர் கனிமொழி அடைக்கப்பட்டுள்ள சிறை எண் 6-ல் ஏற்கெனவே உள்ளனர்.
கனிமொழியுடன் கைது செய்யப்பட்ட கலைஞர் டி.வி. மேலாண்மை இயக்குநர் சரத் குமார், சிறை எண் 4-ல் அடைக்கப்பட்டுள்ளார். காமன்வெல்த் விளையாட்டு ஊழலில் சிக்கியுள்ள சுரேஷ் கல்மாடி, நால்கோ முன்னாள் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் அபய் குமார் ஆகியோரும் சிறை எண் 4-ல் தான் உள்ளனர்.

இதே வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்டோரும் திகார் சிறையில்தான் உள்ளனர்.
                                                       நெடியவனை இலங்கையிடம் ஒப்படைக்குமாறு அரசாங்கம் கோரிக்கை
[ சனிக்கிழமை, 21 மே 2011, 01:41.01 AM GMT ]
கைது செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் தற்போதைய தலைவர்   நெடியவனை  இலங்கையிடம் ஒப்படைக்க வேண்டும் என நோர்வேயிடம் அரசாங்கம் கோரிக்கைவிடுத்துள்ளது.
விடுதலைப் புலிகள் இயக்கப் பிரமுகர் நெடியவன் கடந்த இருபதாம் திகதி நோர்வேயில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார். விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்தது தொடர்பான விசாரணைகள் தற்போது அவரிடம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அவ்வாறான நிலையில் அவரைத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என நோர்வேயிடம் இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது.
பயங்கரவாத செயல்பாடுகளில் ஈடுபட்டமைக்காக நெடியவன் எனப்படும் சிவபரன் பேரின்பநாயகம் இலங்கையால் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருப்பவர் என்று  அரசாங்கம் தனது கோரிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டியுள்ளது.
மேலும் நெடியவன் கைது செய்யப்பட்டிருக்கின்றமை தொடர்பான அனைத்து விபரங்களையும் தங்களிடம் சமர்ப்பிக்குமாறும் அரசாங்கம் நோர்வேயிடம் வேண்டிக்கொண்டுள்ளது. வெளிநாட்டு அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு அமைய நோர்வேயிலுள்ள இலங்கைத் தூதரகம் நெடியவன் சம்பந்தப்பட்ட விடயங்களைக் கையாளுகின்றது.கருணாநிதியைக் கிண்டலடிக்கும் வைகோ.. காரியம் முடிந்ததும் கதவைச் சாத்திய சோனியா!
[ சனிக்கிழமை, 21 மே 2011, 03:40.05 AM GMT ]
ஈழத் தமிழினம் இனப் படுகொலை செய்யப்பட்ட இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை, கடந்த 18-ம் தேதி பேரெழுச்சியுடன் சென்னையில் நினைவுகூர்ந்தனர் தமிழின உணர்வாளர்கள். எம்.ஜி.ஆர். நகர் சந்தை அருகே, பெரியார் தி.க. நடத்திய பொதுக் கூட்டத்துக்கு 5,000-க்கும் அதிகமான இன உணர்வாளர்கள் திரண்டு வந்திருந்தனர்.
கூட்டத்துக்குத் தலைமை வகித்த பெரியார் தி.க. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், சிங்கள அரசின் மீது இனப் படுகொலைக் குற்றச்சாட்டு வலுத்​துள்ளதை அடுத்து, இரத்தக் கறை படிந்த அந்தக் கொடும் கரங்களைக் காப்பாற்றுவதற்கு இந்திய அரசு முயல்கிறது. ஈழத் தமிழர்களுக்கு அரசியல் உரிமை கிடைக்க உதவி செய்வதாக, கண் துடைப்பு நாடகம் ஆடுகிறது.
தமிழ் மக்களுக்கான பட்ஜெட் போட முடியாத, தமிழர்​களின் நிலத்தை சிங்களர்கள் பறிப்பதைத் தடுக்க முடியாத, பொலிஸ் அதிகாரம் இல்லாத, உலகத்திலேயே விசித்திர​மான ஒரு மாகாண அரசு முறையை ஈழத் தமிழர்கள் மீது இலங்கை திணிக்க இருக்கிறது. அதற்கு உதவியாக இப்போதும் இந்தியா துணை நிற்கிறது.
இதைத் தடுக்க இந்தியக் குடிமகன் எனும் முறையில், நமக்கு உரிமை உண்டு. நம்முடைய உரிமையை ஏற்க மறுத்தால், 'நாங்கள் ஏன் இந்த நாட்டின் குடிமகனாக இருக்க வேண்டும்?  எனக் கேட்கும் நிலை வரும்! என்றார் ஆவேசமாக.
பெரியார் தி.க. தலைவர் கொளத்தூர் மணி, திம்பு பேச்சுவார்த்தையில் விடுதலைப்புலிகள் இயக்கம்​போலவே, அனைத்துப் போராளி இயக்கங்களும், ஈழ தேசிய இனம், தமிழீழத் தாயகம், தன்னாட்சி என்​பதை வலியுறுத்தின. அதற்குக் காரணம், அப்போது தமிழகத்தில் இருந்த ஆன்டன் பாலசிங்கம், சத்தியேந்திரா, சந்திரஹாசன் ஆகியோர்தான் என நினைத்து, அவர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் இறங்கியது இந்திய அரசு.
தமிழகமே திரண்டெழுந்து எதிர்த்தவுடன், அப்படியே பின்வாங்கியது டெல்லி. ஈழத் தமிழர்களுக்கு மீண்டும் மீன்டும் இழைக்கப்படும் துரோகத்தை எதிர்த்து, தமிழகத்தில் அதே எழுச்சி வர வேண்டும். வட நாட்டில் இனத்தின் உரிமைக்காகக்கூட இல்லை, கௌரவம் பாதிக்கப்பட்டதற்காக ரயிலை எரிக்கிறார்கள். நாம் எரிக்க வேண்டியது இல்லை, மறித்தாலே போதும்'' என்றார் சீறலாக!
கடைசியாக மைக் பிடித்த வைகோ, 2009 மே மாதம் மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில், சாத்தூர் அருகே ஒரு கிராமத்தில் கூட்டத்தில் பேசிக்கொண்டு இருந்தபோது, ஈழத்தில் இருந்து கடல் புலிகளின் தளபதி சூசை என்னுடன் தொடர்புகொண்டு பேசினார்.
நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நான் சொன்னதும் கோபப்பட்டார். 'அண்ணா, இங்க எங்கட சனம் செத்துக்கிடக்கு. எங்கு பாத்தாலும் பிணக் குவியல்கள். பிஞ்சுப் பிள்ளையள், பெண்கள், வயோதிகர்கள்னு ஆயிரம் ஆயிரமாய் ரத்தக் காயங்களுடன் கிடக்கிறாங்கள். அவங்கட காயத்தில புழுக்கள் நெளியுதண்ணே. இந்தியா​விலிருந்து எம்.பி-க்களை அனுப்பி இதை வந்து பார்க்கச் சொல்லுங்கண்ணே..என சூசை சொன்னதை மேற்கொண்டு என்னால் கேட்க முடியவில்லை.
ஈழத் தமிழர்களை அழிக்க யுத்தம் நடத்தத் திட்டமிட்டுக் கொடுத்தது, சோனியா உத்தரவின் பேரில் இந்திய அரசுதானே!  எல்லாவற்றையும் செய்துவிட்டு, இன்று இனப் படுகொலைக் குற்றத்தைச் செய்த ராஜபக்ஷேவுக்கு ஆதரவாக கூட்டறிக்கை விடுகிறார்களே டெல்லியில்!
தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்வது நின்றுவிட்டதாக அப்பட்டமாகப் பொய்யை அவிழ்த்து​ விடுகிறார்கள். தங்கச்சிமடத்தைச் சேர்ந்த நான்கு மீனவ சகோதரிகள் தாலி அறுத்த சோகம் முடிந்து 16 நாள்கூட ஆகவில்லை. என்ன தைரியம் வேண்டும் இப்படிச் சொல்வதற்கு?
கொல்லப்பட்ட தங்கச்சிமடம் மீனவன் அந்தோனிராஜ், கடைசியாக அவன் மனைவியிடம் விடைபெறும்போது, நான் உயிரோடு திரும்ப வேண்டுமானால், இன்று நடக்கும் கிரிக்கெட் போட்டியில் இலங்கை ஜெயிக்க வேண்டும் என்று கர்த்தரிடம் வேண்டிக்கொள் எனச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறான். அந்த மீனவ சகோதரி இந்த வார்த்தைகளைச் சொன்னபோது, நான் ஆடிப்போனேன்.
சில பதவிகளுக்காக, முன்னாள் முதல்வர் நாடகம் ஆடினார். திட்டமிட்டே, கருணாநிதிக்கு சில துண்டுகளைப் போட்டார்கள். சில மந்திரி பதவிகளுக்காக தீராப் பழியை, தீராத துன்பத்தைத் தேடித் தந்துவிட்டீர்கள். இதனால், அவமானப்பட்டு கூனிக் குறுகி நிற்கிறீர்கள்.
டெல்லி ஏகாதிபத்தியத்தை எதிர்த்து சூளுரைத்த கருணாநிதியின் போர்க் குரல் எங்கே? ஜனநாயகத்தை நிலைநாட்ட, முழங்கிய அந்த வீரம் எங்கே? தி.மு.க-வின் அந்த உணர்ச்சி எங்கே? சில பதவிகளுக்காக, நான் -  என் குடும்பம் நல்லா இருந்தாப் போதும் என்று நினைத்தீர்களே! இன்று நடப்பது என்ன?
போயஸ் கார்டனுக்கு சோனியாவின் வாழ்த்துச் செய்தி உடனே போகிறது. முதலமைச்சருக்கு, பிரதமர் வாழ்த்துச் சொல்லலாம். சோனியா எதற்கு வாழ்த்து சொல்கிறார்? காரியம் முடிந்ததும் கருணாநிதியைப் பிடித்து வெளியே தள்ளுகிறார்கள். ஜெயலலிதாவை உள்ளே இழுக்கிறார்கள்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம், கொலைபாதகச் செயலைச் செய்த ராஜபக்ஷேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவது பற்றி கேட்​கிறார்கள்.
செய்தியாளரின் கேள்வியிலும் தன்னுடைய பதிலிலும் இந்தப் பிரச்னை அடங்கிவிடாது. அது சர்வதேசப் பிரச்னை! என கருணாநிதி சொல்கிறார்.
ஈழப் பிரச்னையில் மத்திய சர்க்கார்தான் தலையிட வேண்டும் என கீறல் விழுந்த ரெக்கார்டைப்போல கருணாநிதி சொல்லி வந்ததை, இன்றைய முதலமைச்சரும் சொல்ல ஆரம்பித்து இருக்கிறார். இதே நிலை நீடித்தால், தமிழ்நாட்டு விவகாரமும் வெளிநாட்டு விவகாரம் ஆகிவிடக் கூடாது என்று எச்சரிக்கிறேன் என்று முடித்தார் கோபமாக!
நன்றி - ஜூனியர் விகடன்
சர்வதேச இலக்காகும் புலிகளின் வலைப்பின்னலும் ஐ.நா. அறிக்கையும்!
[ சனிக்கிழமை, 21 மே 2011, 02:12.15 AM GMT ]
நெடியவன் எனப்படுகின்ற பேரின்பநாயகம் சிவபரன் நோர்வேயில் உத்தியோகபூர்வமாக பிறிதொரு நாட்டால் விசாரிக்கப்பட்டதன் பின்னர் பல தகவல்கள் புலிகளின் புலம்பெயர்ந்த வலையமைப்புக்கள் சிக்கலிற்குள் கொண்டு வரப்படுகின்றன என்று தெரிவித்து வெளிவர ஆரம்பித்திருக்கின்றன.
இந்த இடத்தில் தான் ஐக்கிய நாடுகள் சபையின் யுத்தக்குற்ற அறிக்கையில் புலம்பெயர்ந்த நாடுகளிலுள்ள புலிகள் தொடர்பாக இடம்பெற்ற “வேண்டத்தகாத” நான்கு குறிப்புக்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய தேவை ஏற்படுகிறது.
ஏனென்றால் புலிகள் மீது நடவடிக்கை எடுக்க முனைப்புக் காட்டும் கனடா, சுவிற்சலாந்து போன்றவற்றின் அதிகாரிகள் மட்டத்திலானவர்கள் கூட இப்போது “ஐ.நா.வின் அறிக்கையை” வரவேற்கிறோம் என்ற சொன்னதில் மேற்குறிப்பிட்ட நான்கு பரிந்துரைகளுமே முக்கிய பங்காற்றியிருக்கின்றன.
அந்த நான்கு குறிப்புக்களும் புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புக்களை எழுந்தமானத்திற்கு கண்டித்திருப்பதோடு மேற்குலக நாடுகளை புலிகளின் விடயத்தில் அவதானமானச் செயற்படச் சொல்லியும் பரிந்துரைத்திருக்கிறது.
விடுதலைப்புலிகள் தற்போது புலம்பெயர்ந்த நாடுகளில் இப்போது தங்களின் நோக்கத்திற்காகப் பணம் சேர்ப்பதற்காக “மாபியா” பாணியிலான பதாள உலகக் கோஷ்டியின் நடவடிக்கைகளை ஒத்த நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்கள் என்று ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது புலிகளை ஒரு குற்றவலைப் பின்னல் அமைப்பாக அது பரிந்துரைத்துரைத்துள்ளதைக் காட்டுகிறது.
மேலும் இந்த மேற்கு நாடுகளில் வியாபார நிறுவனங்களை நடத்துதல், அமைப்புக்கள், ஆலயங்கள் மூலம் வருமாணத்தைப் பெறுதல் என்பனவும் நடைபெறுகிறது என்பதையும் பகிரங்கப்படுத்தி, அந்த நாடுகள் இதனைக் கவணித்து தற்போது நடைபெற்றுவரும் மேற்படி நிதி சேகரிப்பையும், விடுதலைப்புலிகளின் சொத்துக்களையும் போரினால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழ்ச் சமுகத்திற்குப் போய் சேரும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
ஐ.நா.வின் அறிக்கைக்கு வலுச் சேர்ப்பதாக விடுதலைப்புலிகள் தடைசெய்யப்பட்ட அமைப்பாக உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் காவற்துறையும் விடுதலைப்புலிகள் தற்போது பணச்சேகரிப்பிற்காக சட்டவிரோதமாக ஆட்களை வெளிநாடுகளிற்கு அனுப்புதல், கடணட்டை மோசடி செய்தல், பயமுறுத்திப் பணம் சேர்த்தல் போன்றவற்றைச் செய்கிறார்கள் எனவும், தங்களது ஊடகங்களை இந்தப் பணச் சேர்ப்பிற்குப் பயன்படுத்துகிறார்கள் என்றும் அதே காலத்தில் அறிவித்தது.
இதில் கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் ஐரோப்பாவில் தமிழர்கள் வாழும் நாடுகள் ஏறத்தாள அனைத்துமே இந்த ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் அடங்குகின்றன. எனவே இந்த இரண்டு அறிக்கைகளும் மிகவும் சூட்சுமமானவை.
இலங்கையில் இடம்பெற்ற நிகழ்வுகளை விசாரிக்க நியமித்த குழு புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புக்களை குறிவைத்து எந்தவித தயக்கமுன்றி “பாதள உலகக்குழுகள்” பாணியில் அவர்களை குற்றவாளிக் கூண்டில் ஏற்றியது ஐ.நா.வின் குழுவிற்கு தேவையான தகவல்களை நாடுகள் பரிமாறியிருக்கின்றன என்பதைக் காட்டுகிறது.
இந்த நிலையில் இப்போதைய நெதர்லாந்து விசாரணையும், நோர்வே சென்று நெடியவனை விசாரிக்குமளவிற்கு நீளும் கரங்களும் ஒரு உண்மையை வெளிக் கொண்டு வந்துள்ளன.
அதாவது இந்த விவகாரத்தில் பல நாடுகளின் காவல்துறையும், உளவுப்படைகளும் ஒன்றாகப் பணியாற்றுகின்றன. அதன் மூலம் பிரிட்டன், நோர்வே, நெதர்லாந்து, ஜேர்மனி, கனடா, சுவிஸ், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் புலிகளின் வலையமைப்புக்கள் கண்டறியப்பட்டுள்ளன.
ஐக்கிய நாடுகளின் முக்கியமான பரிந்துரையான “மீதமுள்ள புலிகளின் சொத்துக்களை ஈழத் தமிழர்களிற்கு சேர்க்கவும்” என்பது திட்டமிட்ட ரீதியில் புலிகளின் வலைப்பின்னல்கள் முடக்கப்படுகின்றன என்பதைக் காட்டுகிறது. இதனைத் தான் முள்ளிவாய்க்கால் இரண்டாம் நினைவுநாளில் நோர்வேயில் இடம்பெற்ற விசாரணையும் எடுத்துக் காட்டுகிறது.

ad

ad