புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 மே, 2011


ஐநாவில் அதிர்ந்த ஒருவரின் பேச்சு ..-காணொளி உள்


தமிழீழ விடியலை நோக்கி நகரும் மக்களால் தெரிவு  செய்ய பட்ட நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதி நிதிகள்
ஐநா முன்றலில் கூடி தமிழீழ தேசிய துக்க நாளை நினைவு கூர்ந்து அங்கு
சிங்கள இனவெறி அரசினால் அழிக்க பட்ட போது மக்கள் .மற்றும் போராளிகளை நினிவு கூர்ந்தனர் .
இவ்வேளையில் அங்குபல்துறை  அமைச்சு பொறுப்பில் உள்ளவர்களின்
பேச்சுக்கள் அவர் தம் செயல் பட்டு நகர்வுகள் அந்த அரசின் கொள்கை விளக்கங்கள் என்பன
இடபெற்றன .
இதன் போது நாடு கடந்த அரசில்  இருந்து பிரிந்த அணி குழப்பவாதிகளும் அவர்களிற்கு சார்பனா சுவிஸ் விடுதலை புலிகளின்
கிளையினரும் இணைந்து நாடு கடந்த தமிழீழ அரசின் உள்துறை அமைச்சர் மீது காட்டு மிராண்டி தாக்குதலை நடத்தினர் .
கருத்தை கருத்தால் வெல்ல முடியாத இவர்கள் மனித நாகரிகமற்ற இந்த செயலை மனித நாகரிகமுள்ள மக்கள் கண்டிக்கின்றனர் .
மக்களால்  தெரிவு செய்ய பட்ட பிரதி நிதிகளை இவ்விதம்  தமிழ் தேசிய விடுலை மற்றும் தமிழ் தேசிய விடுதலை அரசியல் பேசும்
புலிகளின் சுவிஸ் கிளையின் செயல் பாடு கண்டிக்க பட வேண்டியது .
இதை மறுத்துரைத்தால்  எம்முடன் நேரடி விவாதத்திற்கு வருமாறு சுவிஸ் கிளையினரை வேண்டி கொள்கின்றோம் .
இது தனி நபர் தாக்குதலோ அல்லது ஒரு அமைப்பின் மீதான தாக்குதலோ அல்ல என்பதும்
மக்களின் பிரதி நிதி தாக்க பட்டது தவறு என்ற வகையிலுமே இந்த கண்டனத்தினையும் செய்திகளையும் பிரசுரிக்கின்றோம் .
உங்கள் கருத்துகளையும் நாம்உள்வாங்கி  பிரசுரிக்க தயாராகவுள்ளோம் என்பதனை திட்டவட்டமாக தெரிவித்து கொள்கின்றோம் .



நெதர்லாந்தில் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் ராமச்சந்திரன் கைது - கேபி உள்ளிட்ட 13 முன்னாள் போராளிகளிடம் நெதர்லாந்து அதிகாரிகள் விசாரணை
[ புதன்கிழமை, 25 மே 2011, 05:10.46 AM GMT ]
நெதர்லாந்தில் செயற்பட்டு வந்த விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் எஸ்.ராமச்சந்திரன் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளின் பிரிவொன்றின் தலைவராகவும், முக்கிய தளபதிகளில் ஒருவராகவும் செயற்பட்டு வந்த நெடியவன் எனப்படும் சிவரூபன் நோர்வேயில் கைது செய்யப்பட்டதன் பின் நெதர்லாந்தில் ராமச்சந்திரனின் கைது சம்பவம் நடைபெற்றுள்ளது.
ராமச்சந்திரனின் வீட்டை சோதனையிட்ட பொலிசார் பென் டிரைவ் (யு.எஸ்.பி) யில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 136 மில்லியன் பணம் தொடர்பான விபரங்களையும் கைப்பற்றியுள்ளனர். அப்பணம் விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் ஆயுதக் கொள்வனவுக்காக ஐரோப்பிய வங்கிகளில் வைப்பிலிடப்பட்டுள்ளது.
நெதர்லாந்தில் விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்களைக் கைது செய்யும் ஒபரேசன் கொன்னிக் நடவடிக்கையின் ஒரு கட்டமாகவே ராமச்சந்திரன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருடைய நெதர்லாந்து அலுவலகத்தில் பிரதானியாக செயற்பட்ட ஞானம் என்பவரும் நெதர்லாந்தின் இரகசியப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் இவர்களுடன் தொடர்பைக் கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் ஹேக், ட்ராசெய்ஸ்ட், அம்ஸ்டர்டாம், ரல்டே மற்றும் அமசோடம் ஆகிய நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளையடுத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புலிகளின் நிதி விவகாரம் – கேபி உள்ளிட்ட 13 முன்னாள் போராளிகளிடம் நெதர்லாந்து அதிகாரிகள் விசாரணை

 விடுதலைப் புலிகளின் நிதி வலையமைப்புத் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நெதர்லாந்து அதிகாரிகள் சிறிலங்காவில் உள்ள விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகளிடம் விசாரணை நடத்த அனுமதி கோரியுள்ளனர்.

 இதுதொடர்பாக நெதர்லாந்து வானொலி வெளியிட்டுள்ள தகவலில், குமரன் பத்மநாதன் உள்ளிட்ட 13 பேரை அடுத்த மாதம் விசாரிக்க சிறிலங்காவிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதுதொடர்பாக சிறிலங்கா சட்டமா அதிபர் மொகான் பீரிசுடன் நெதர்லாந்து அதிகாரிகள் பேச்சு நடத்தி வருகின்றனர்.

 அதேவேளை, இந்த விவகாரம் பற்றிய சாட்சியங்களைப் பெறுவதற்காக நெதர்லாந்து நீதிவான்களும், சட்டவாளர்களும் அமெரிக்காவுக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.

 அமெரிக்காவில் இவர்கள் புலிகளின் ஆயுதக்கொள்வனவு நடவடிக்கைகளில் தொடர்புடைய பிரதீபன் தவராசாவிடம் விசாரணை நடத்தவுள்ளனர்.

 இவர் அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளிலும் விடுதலைப் புலிகளுக்கு வெடிபொருட்கள், இயந்திரத் துப்பாக்கிகள், ஏவுகணைகள், ஆட்டிலறிகள், ரேடர்கள் போன்ற ஆயுதங்களை கொள்வனவு செய்திருந்தார்.

 இவரது மடிக்கணினியில், 20மில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்கான முன்னுரிமைப் பட்டியல் ஒன்றை அமெரிக்காவின் சமஸ்டி புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்திருந்தனர்.

 அந்தப் பட்டியலில் ஒவ்வொன்றும் 160,000 டொலர் பெறுமதியான 25மி.மீ விமான எதிர்ப்புப் பீரங்கிகள் ஆறு, ஒவ்வொன்றும் 30,000 டொலர் பெறுமதியான ரைப்- 69 ரகத்தைச் சேர்ந்த இரட்டைக்குழல் 30மி.மீ கடற்படைப் பீரங்கிகள் ஆறு, ஆயிரக்கணக்கான தன்னியக்கத் துப்பாக்கிகள், மில்லியன் கணக்கான ரவைகள்., கிரனேட் செலுத்திகள், 50 தொன் சி-4 வெடிமருந்து, 5 தொன் ஆர்டிஎக்ஸ் வெடிபொருள், 50 தொன் ரிஎன்ரி சீன வெடிபொருள், விமானக் குண்டுகளுக்குப் பயன்படுத்தப்படும் 50 தொன் ட்ரைரோனல் வெடிபொருள் ஆகியவை இருந்ததாக அமெரிக்காவின் சமஸ்டிப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 நெதர்லாந்தில் உள்ள இராமச்சந்திரன் என்பவர் இந்த ஆயுதக்கொள்வனவுகளுடன் தொடர்புபட்டிருந்ததாக பிரதீபனின் மடிக்கணினியில் இருந்த தகவல்களின் மூலம் தெரியவந்துள்ளது.

 இதையடுத்தே நெதர்லாந்து விசாரணைக் குழுவொன்று இன்று ஒஸ்லோவுக்கு செல்லவுள்ளது.

 சந்தேகநபர்களின் சட்டவாளர்களை உள்ளடக்கிய இந்தக் குழுவினர் நெடியவனினிடம் விசாரணை நடத்தவே ஒஸ்லோ செல்லவுள்ளனர்.

 இவர் விடுதலைப் புலிகளுக்கு மில்லியன் கணக்கான டொலர் பணத்தை வழங்கியதாக நெதர்லாந்து அதிகாரிகள் நம்புகின்றனர்.

 ‘ஒப்பரேசன் கொனின்க்‘ என்ற பெயரில் நெதர்லாந்து அதிகாரிகள் விடுதலைப் புலிகளின் இந்த நிதி வலையமைப்பு மீதான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

 இந்த நடவடிக்கையில் நெதர்லாந்தில் 90 பேரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

 டசின் கணக்காக வீடுகளில் நடத்தப்பட்ட தேடுதல்களில் கணினிகள், இறுவட்டுகள், ஆவணங்கள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் நெதர்லாந்து வானொலி தகவல் வெளியிட்டுள்ளது.







விளம்பர பதாகைகளுக்கு அனுமதி வழங்கியதில் யாழ்.மாநகர மேயர் பெரும் மோசடி
[ புதன்கிழமை, 25 மே 2011, 02:12.15 AM GMT ]
யாழ். மாநகர சபை எல்லைக்குள் விளம்பரப் பதாகைகளுக்கு அனுமதி வழங்கியதில் பெரும் மோசடி இடம்பெற்றுள்ளது. இதனால் 2010 ம் ஆண்டில் மாநகரசபைக்கு 50 லட்சத்து 09 ஆயிரத்து 833 ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.
இந்த ஊழல் தொடர்பாக உயர் மட்ட விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இந்த மோசடி தொடர்பாக யாழ்.மாநகர முதல்வருக்கும் ஆணையாளருக்கும் விளக்கம் கேட்டு 13.10.2010 ல் கணக்காய்வாளர் திணைக்களத்தால் அனுப்பப்பட்ட கடிதத்துக்கு இன்று வரை மாநகரசபையிடம் இருந்து எந்தவிதமான பதிலும் கிடைக்கவில்லை என கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் யாழ்.கிளையின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
கணக்காய்வாளர் திணைக்களத்தின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கமுடியாமல் தடுமாறும் மாநகர முதல்வர், தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி மோசடியைக் கண்டு பிடித்து வெளிப்படுத்திய அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்றும் கூறப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:
மாநகர சபை எல்லைக்குள் நல்லூர் கோயில் பின் பக்கவீதியில் ஒன்பது பதாகைகள் எந்த விதமான கட்டணமோ அனுமதியோ இன்றிக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் மாநகர சபைக்கு வரவேண்டிய 50 லட்சத்து 09 ஆயிரத்து 833 ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது.
மாநகர சபையின் அங்கீகாரம் இன்றி விளம்பரப் பதாகைகளுக்கான கட்டணம் இரண்டு மடங்காக அறவிடப்பட்டுள்ளது. கட்டண அதிகரிப்புத் தொடர்பாக பகிரங்க அறிவிப்போ அன்றி அரச வர்த்தமானி அறிவித்தலோ விடப்படவில்லை.
அத்துடன் அங்கீகாரம் இன்றிக் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாகைகளில் தனிப்பட்ட தொலைபேசி இலக்கம் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.


நிபுணர்குழு அறிக்கை தொடர்பில் இலங்கைக்குச் சீனா முழுமையாக ஆதரவு!
[ புதன்கிழமை, 25 மே 2011, 03:08.24 AM GMT ]
ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளரின் நிபுணர் குழு வெளியிட்ட அறிக்கை தொடர்பில் இலங்கைக்கு முழு ஆதரவும் வழங்கப்படுவதை சீனா உறுதிப்படுத்தியுள்ளது.
தங்களுடைய பிரச்சினைகளைத் தாங்களே தீர்த்துக் கொள்ளும் தகுதியும் வல்லமையும் இலங்கை அரசுக்கும் மக்களுக்கும் இருக்கின்றது என்று சீனா முழுமையாக நம்புகின்றது என அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஜங்ஜிச்சி தெரிவித்தார்.
இரண்டு நாள் பயணமாக நேற்று முன்தினம் திங்கட்கிழமை பீஜ்ஜிங் சென்ற வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், சீன வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இக் கலந்துரையாடலின்போது ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை குறித்தும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குறித்தும் பீரிஸ் சீன வெளிவிவகார அமைச்சருக்கு விளக்கினார் என்று கொழும்பில் வெளிவிவகார அமைச்சுஅதிகாரிகள் தெரிவித்தனர்.
இத்தகைய சூழலில் எல்லாப் பிரச்சினைகளையும் இலங்கை அரசும் மக்களும் தமக்குள்ளேயே தீர்த்துக் கொள்ளும் ஆற்றலும் வலுவும் கொண்டிருக்கிறார்கள் என்று சீனா முழுமையாக நம்புவதாக அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஜங் ஜிச்சி தெரிவித்துள்ளார் என்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.
தேசிய நல்லிணக்கம் மற்றும் மீள்கட்டுமானம் என்ற இலக்குகளை இலங்கை அடைவதற்கு சீனா என்றும் துணை நிற்கும் என்றும் ஜங் ஜிச்சி தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சீனாவுக்கு வருகை தருவதற்கான அழைப்பு ஒன்றையும் அமைச்சர் பீரிஸிடம் அவர் விடுத்தார்.
நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் இந்தியாவுக்கு அமைச்சர் பீரிஸ் மேற்கொண்ட பயணம் வெற்றியளிக்காத நிலையில், அவரது சீனப் பயணம் சாதகமாக அமைந்துள்ளது என்று சுட்டிக்காட்டப்படுகிறது.


நெதர்லாந்தில் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களைக் கைது செய்வதற்கு இலங்கை இராணுவத்தினரின் தகவல்களே உதவின: நெதர்லாந்து ஊடகங்கள்
[ புதன்கிழமை, 25 மே 2011, 06:16.44 AM GMT ]
நெதர்லாந்தில் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களைக் கைது செய்வதற்கு இலங்கை இராணுவத்தினரின் தகவல்களே உதவியதாக நெதர்லாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்களில் இருந்து விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்புத் தொடர்பாகக் கிடைத்த தகவல்களைக் கொண்டே இலங்கை இராணுவத்தினர் நெதர்லாந்தில் செயற்பட்ட விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் தொடர்பான தகவல்களை வழங்கியிருந்தனர்.
அதனை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலமாகவே விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்கள் நெதர்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.
இலங்கை இராணுவத்தினரின் தகவல்களைக் கொண்டே நெதர்லாந்தில் செயற்பட்ட விடுதலைப் புலிகளின் வலையமைப்பைக் கண்டறிந்து அதன் முக்கியஸ்தர்களைக் கைது செய்ய முடிந்துள்ளதாக நெதர்லாந்தின் அரச வானொலியும் செய்தியொன்றை ஒலிபரப்பியுள்ளது.
அண்மையில் நோர்வேயில் கைது செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர் நெடியவன் கைது செய்யப்பட்டதன் பின்னணியிலும் இலங்கை இராணுவ உளவுப் பிரிவின் தகவல்களே முக்கிய பங்கு வகித்திருந்ததாகவும் சில தகவல்கள் கசிந்துள்ளன.

போலிக்கடவுச்சீட்டுடன் சென்னையில் கைதான இலங்கைப் பெண்!

E-mailஅச்சிடுகPDF
இந்தியாவிலிருந்து போலிக் கடவுச் சீட்டினை பயன்படுத்தி இலங்கை வரமுற்பட்ட இலங்கைப் பெண்ணொருவர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 

வசந்தி என்ற 42 வயதுடைய பெண்ணே இந்தியக்கடவுச்சீட்டை பயன்படுத்தி நேற்று காலை இலங்கை வரமுற்படும்போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த பெண் இதற்கு முன்னர் இரு தடவை இந்தியக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இலங்கைக்கு வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. 

இந்திய பிரஜையான சிறிரமாலு என்பரை திருமணம் செய்து கொண்ட வசந்தி கடந்த 20 வருடங்களாக கிரிஸ்ணகிரி பிரதேசத்தில் வசித்து வந்துள்ளார். 

1994ஆம் ஆண்டு முகவர் ஒருவர் மூலம் இந்தியக் கடவுச்சீட்டினை பெற்றுக்கொண்ட வசந்தி 2004ஆம் ஆண்டு அதனை புதுப்பித்துள்ளார். 

இந்தியாவில் தான் பதிவுத் திருமணம் செய்து கொண்டுள்ளதாக வசந்தி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். 

எனினும் மேலதிக விசாரணைகளுக்காக குடிவரவு அதிகாரிகள் குறித்த பெண்ணை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்

ராஜபக்சே போர்க் குற்றவாளி என்பதை சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும்: டைரக்டர் சீமான் பேட்டி
 
ராஜபக்சே போர்க் குற்றவாளி என்பதை சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும்: டைரக்டர் சீமான் பேட்டி
சென்னை, மே. 24-
 
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் நினைவு தினத்தையொட்டி நாம் தமிழர் கட்சியினர் பேரணியாக வந்து டைரக்டர் சீமான் தலைமையில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்றனர்.
 
பின்னர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-
 
போற்றுதலுக்கும் வணக்கத்துக்கும் உரிய தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 30-வது நினைவு தினத்தில் அவரது திருஉருவ சிலைக்கு மரியாதை செலுத்தி உள்ளோம். தமிழ் தாழ்ந்துவிட கூடாது. தமிழன் வீழ்ந்துவிட கூடாது என்று போராடியவர் சி.பா.ஆதித்தனார்.
 
பாமரனுக்கும் தமிழ் மொழி போய் சேரவேண்டும் என்று “தினத்தந்தி”யை தொடங்கி இன்றளவும் வெற்றி நடைபோடுகிறது. அவர் தொடங்கிய நாம் தமிழர் இயக்கத்தை, அவர் எந்த லட்சியத்துக்காக தொடங்கினாரோ அந்த லட்சியத்துடன் பிள்ளைகளான நாங்கள் முன்னெடுத்து செல்கிறோம்.
 
அவரது கனவு நனவாகும்வரை, லட்சிய நோக்கத்தை அடையும் வரை அயராது உழைப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
 
பின்னர் அவரிடம் கேட்ட கேள்விகளுக்கு அவர் கூறியதாவது:-
 
கேள்வி:  ராஜபக்சேவை போர்க்குற்றவாளி என்பதை அறிவிக்க உங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?
 
பதில்: உலக நாடுகளின் ஆதரவை பெற தலைவர்களை சந்திக்கும் உள்ளரசியல் நடந்து வருகிறது. பல்வேறு தளங்களில் ஆதரவு திரட்டப்படுகிறது. இந்தியாவை பொறுத்த வரை இலங்கைக்கு ஆதரவா? எதிர்ப்பா? என்று இன்னும் தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.
 
இந்தியாவின் மவுனத்தை பார்க்கும்போது இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறதோ என்று எண்ண தோன்றுகிறது. ராஜபக்சே போர்க்குற்றவாளி என்பதற்கான மேலும் பல ஆவணங்கள் விரைவில் வெளிவர உள்ளது. அதில் மேலும் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் இருக்கும் என்று நினைக்கிறோம்.
 
கேள்வி: இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க கோரி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற கோருவீர்களா?
 
பதில்: பொருளாதார தடை மட்டுமல்ல. இலங்கை அதிபர் ராஜபக்சே இனப்படு கொலை செய்த போர்க்குற்ற வாளி. ராஜபக்சே போர்க்குற்ற வாளி என்பதை அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையிலே தெரிவித்துள்ளார். மக்கள் மாபெரும் வெற்றியை கொடுத்துள்ளார்கள். எனவே அந்த அறிக்கையை சட்ட மன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். நிறைவேற்றுவார்கள் என்று நம்புகிறோம்.
 
இவ்வாறு அவர் கூறினார்.

கே.பியை விசாரிக்க இலங்கை வரும் நெதர்லாந்து நீதிபதிகள்!

கே.பியை விசாரிக்க இலங்கை வரும் நெதர்லாந்து நீதிபதிகள்!

E-mailஅச்சிடுகPDF
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களின் நிதி சேகரிப்பு நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்த நெதர்லாந்து நாட்டு நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் கொண்ட குழு ஒன்று அடுத்த மாதம் இலங்கை வர உத்தேசித்து உள்ளது.

இக்குழுவினர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய பிரமுகர்களில் ஒருவராக இருந்த குமரன் பத்மநாதன் உட்பட முன்னாள் புலி முக்கியஸ்தர்கள் 13 பேரை இலங்கையில் விசாரிக்கின்றமைக்கு எண்ணி உள்ளார்கள்.

இதற்கான அனுமதியைப் பெறுகின்றமை தொடர்பாக இலங்கையின் சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸுடன் பேசி வருகின்றார்கள்.

இதே போல அமெரிக்கா சென்று விசாரணை நடத்துகின்றமைக்கும் யோசித்து உள்ளார்கள்.

புலிகள் இயக்கத்துக்காக அமெரிக்காவில் ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்டார் என்கிற வழக்கில் குற்றத்தை ஒப்புக் கொண்டு இருக்கும் பிரதீபன் என்பவரிடம் விசாரணை நடத்துகின்றமைக்கும் உத்தேசித்து உள்ளார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிதி சேகரிப்பு நடவடிக்கைக்கு எதிராக நெதர்லாந்து புலனாய்வுப் பிரிவினர் ஒபரேசன் கொனிங்க் என்கிற பெயரில் அதிரடி நடவடிக்கை ஒன்றை இரு வருடங்களுக்கு முன் ஆரம்பித்தனர்.

நெதர்லாந்தில் 38 பேர் புலிகளுக்கு நிதி சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர் என அடையாளம் கண்டு உள்ளார்கள்.

இவர்களில் மிக முக்கிய புள்ளிகளான இராமச்சந்திரன், சிறிரங்கம் ஆகியோரை கடந்த 13 மாதமாக தடுத்து வைத்து உள்ளார்கள்.

நெதர்லாந்தில் புலிகளின் நிதிச் செயல்பாடுகள் தொடர்பாக ஏராளமான ஆவணங்கள், ஆதாரங்கள் சோதனை நடவடிக்கைகளின்போது இப்புலனாய்வாளர்களுக்கு கிடைக்கப் பெற்று உள்ளன.

இந்த ஆதாரங்கள், ஆவணங்கள் அடிப்படையில் நெதர்லாந்து நாட்டு நீதிபதிகள் குழு வழக்கு நடவடிக்கைகளை முடுக்கி விட்டு உள்ளது.

கடந்த வாரம் நோர்வேக்கு சென்று விசாரணைகளில் ஈடுபட்டது. நோர்வேயில் புலிகளின் தலைவராக செயல்பட்டு வந்த நெடியவனை பிடித்து விசாரித்தனர்.

                        ராஜிவ் கொலைக்குப் பின்னால் திராவிட முன்னேற்ற கழகம்! தமிழக முதல்வர் குற்றச்சாட்டு
E-mailஅச்சிடுகPDF
இந்தியாவின் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி படுகொலையில் மு.கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்ற கழகம் மறைமுகமாக தொடர்புபட்டு உள்ளது என்று இந்தியாவின் தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று குற்றம் சாட்டினார்.

இவர் ஊடகவியலாளர்களை சந்தித்துப் பேசியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவர் மேலும் கூறியபோது இக்குற்றச்சாட்டை அண்ணா திரவிட முன்னேற்ற கழகம் மிக நீண்ட காலமாக முன்வைத்து வந்திருக்கின்றது. ராஜிவ் காந்தி படுகொலைக்குப் பின்னால் திராவிட முன்னேற்ற கழகம் இருந்தது என நாம் கூறி வந்திருக்கின்றோம் என்றார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர்களின் ஒருவரான கே.பி இந்திய ஊடகம் ஒன்றுக்கு அண்மையில் வழங்கி இருந்த பேட்டியில் திராவிட முன்னேற்ற கழகத்தின் பிராமணிய எதிர்ப்பு கொள்கை காரணமாகவே ராஜிவ் காந்தியை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் வே.பிரபாகரன் வெறுத்தார் என்றும் படுகொலை செய்ய நேரடியாக உத்தரவு பிறப்பித்தார் என்றும் கூறி இருந்தார். 
இது தொடர்காகவே ஜெயலலிதா ஊடகவியலாளர்களுக்கு கருத்துச் சொல்லி இருந்தார்.                                                                                                                                                                                                                                                                                                                                                               


பாரிய குற்றம் சு


மத்தப்பட்டோர் அரியணையில் அப்பாவிகள் சிறையறையில்: மாவை.எம்.பி

E-mailஅச்சிடுகPDF
அரசினால் பாரிய குற்றம் சாட்டப்பட்டோர் இன்று அரசினால் செல்லப் பிள்ளைகளாகவும் முக்கிய பதிவியிலும்  தேர்தல் பட்டியலிலும் சேர்த்து வைத்திருக்கும் போது அப்பாவிக் கைதிகளை தொடர்ந்தும் விடுதலை செய்யாமல் வைத்திருப்பது அரசின் வஞ்சம் தீர்க்கும் நடவடிக்கையாகவே உள்ளது.

யாழ். சிறைச்சாலையில் விடுதலைக்கான தீர்ப்பு வழங்கப்பட்டும் அவர்களை இதுவரை விடுதலை செய்யாமல் சுமார் ஆறுமாதங்களுக்கு மேலாக அடைத்து வைத்திருக்கும் கைதிகள் இரண்டு நாட்களாக யாழ்.சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இக்கைதிகளை மாவை சேனாதிராசா எம்.பி இன்று பார்வையிட்ட பின்னர் தமிழ்.சி.என்.என்னுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.



அவர் மேலும் தெரிவிக்கையில்..

நீதிமன்றத்தினால் விடுதலை செய்வதற்கான தீர்ப்பு வழங்கப்பட்டும்  சட்டமா அதிபரின் அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறிக்கொண்டு அவர்களை இதுவரை விடுதலை செய்யப்படாமல் இருப்பது  ஏற்றுக்கொள்ளமுடியாத விடயமாகும்.

அரசுடனான பேச்சிலும் நாங்கள் கைதிகளின் விடுதலை தொடர்பாக பேசியிருந்தும் இதுவரை அதற்கான நடவடிக்கை எடுக்காதது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல.

மீண்டுமொருமுறை இக்கைதிகளின் விடுதலை தொடர்பாக நீதி அமைச்சுடனும் சட்டமா அதிபர் திணைக்களத்துடனும் பேசவுள்ளோம்.

யாழ். சிறைச்சாலையில் இவ்வாறு 28 கைதிகள் விசாரணை எதுவமின்றி தடுத்து வைத்திருப்பது போன்று பல ஆயிரக்கணக்கான இளைஞர்களும் பெண்களும் இதுவரை விசாரணை எதுவுமின்றியும் தீர்ப்பு வழங்கப்பட்டும் விடுதலை செய்யப்படாமலும் உள்ளனர்.

இதே வேளை வவுனியா தடுப்பு முகாம்களில் உள்ளவர்களின்  பெயர் விபரங்களை வெளியிடுவதாக அரசு கூறிவிட்டு அதனை தராமல்  ஏமாற்றுவது காணாமல் போனவர்களின் பெயர்பட்டியல் இன்னும் நீளமாக உள்ளதோ என்ற சந்தேகத்தையே ஏற்படுத்துகிறது.

இப்பெயர்  விபரங்ளை தருவதாக மீண்டும் வாக்குறுதி அளித்துள்ளார்கள் அவ்வாறு தராவிடத்து  காணாமல் போனோர் கைதுசெய்யப்பட்டோர் விபரங்களை திறட்டி  மனித உரிமை ஆணைக்குழு . மன்னிப்புச்சபை என்பவற்றில் முறைப்பாடு செய்யவுள்ளோம் என்றார்.

மாவை.  சேனாதிராசா நாடாளுமன்ற உறுப்பினாருமான நேர்காணல் ..

யாழ். சிறைச்சாலையில் இரண்டு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தீர்ப்பு வழங்கியும் விடுதலை செய்யப்படாதவர்களின் பெயர் விபரங்கள் வருமாறு.

பெயா                                            கைதுசெய்யப்பட்ட திகதி

ராயுசுரேஸ் கிருஸ்ரினா                        2006- 01-06
சுப்ரமணியம் செல்வநாயகம்                 2008-5-21
பிரியந்த நிமால் குணரத்ண                   2007-02-03
பத்மநாதன் தனபாலசிங்கம்                   2007-07-10
புவனேந்திரன் சதிஸ்வரன்                     2007-08-10
இராமையா கஜமோகன்                        2008-03-01
தங்கராசா விவேகானந்தராஜ்                2009-06-16
இராஜரட்ணம் பத்மநாதன்                     2009-08-19

இவர்களுடன் நடராஜா இராஜேஸ்வரி (26.12.2008) ஆகிய இரு பெண்களடங்களாக இன்னும் பலர் விசாரணைகளின்றியும் வருடக்கணக்காக இச்சிறைச்சாலைகளில் வாடுகின்றனர்.

அரசும் கூட்டமைப்பும் ஆரம்பத்தில் பேசிக்கொண்டதன் அடிப்படையிலான இவ்விடயங்களையே இந்த அரசால் நிறைவேற்றாமல் காலம் கடத்தும் போது தமிழருக்கான நியாயமான தீர்வை தருவதென்பது குதிரைக் கொம்புதான் என்பதே இன்று பலரின் கருத்தாகும்

ad

ad