புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 செப்., 2012


ஈராக்: பிரான்சு தூதரகம் உள்பட 10 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்
ஈராக் நாட்டில் அல்கொய்தா தீவிரவாத இயக்கம் மற்றும் சில தீவிரவாத அமைப்பினர் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். 

கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை தீர்மானிக்கும் நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்! சிரேஷ்ட உறுப்பினர்களுடன் பேசி முடி
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கிழக்கு மாகாண சபையில் யார் ஆட்சி அமைப்பது என்ற இழுபறி நிலை தோன்றியுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசே கிழக்கு மாகாண சபையில் ஆட்சி அமைப்பதை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது.

யாழில் சினிமா பாணியில் இரு குழுக்களுக்கிடையே வாள் வெட்டு: ஒருவர் பலி! இருவர் படுகாயம்
யாழ். திருநெல்வேலி சிவன் - அம்மன் ஆலயத்தை அண்டிய மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் இரு இளைஞர் குழுக்கள் பரஸ்பரம் வாளால் வெட்டிக் கொண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

பெண்ணொருவருடன் சேஷ்டையில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தருக்கு தருமஅடி: யாழில் சம்பவம்
பெண்ணொருவருடன் தவறான முறையில் நடந்துகொள்ள முயன்ற பொலிஸார் ஒருவர் பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.

கிழக்கில் தலையாட்டி பொம்மையாக மாறுவதா? கூட்டமைப்புடன் இணைவதா? முஸ்லீம் காங்கிரஸ் நாளை முடிவு!
கிழக்கு மாகாணத்தின் ஆட்சியை ஐ. ம.சு. கூட்டமைப்புக்கு கொடுத்துவிட்டு, தலையாட்டி பொம்மையாக முஸ்லீம் காங்கிரஸ் இருக்கப் போகின்றதா? அல்லது காணி, பொலிஸ் அதிகாரங்களுடன் கூடிய மாகாணசபையை அமைப்பதற்கான உரிமையை த. தே. கூட்டமைப்புடன் இணைந்து

9 செப்., 2012


தனது மனைவியின் 14 வயது தங்கையை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நபரைக் கைதுசெய்ய அதுருகிரிய காவல்துறையினர் தேடுதல் நடத்த ஆரம்பித்துள்ளனர்.
ஹினிதும பிரதேசத்தில் வசித்துவரும் இந்தச் சிறுமியை, மாலபே பிட்டுகல பிரதேசத்திற்கு அழைத்துச் சென்று வேன் ஒன்றில் வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்தபோது அத்துருகிரிய காவல்துறையினர், வேனை முற்றுகையிட்டு சாரதியைக் கைதுசெய்துள்ளனர். அத்துடன், சிறுமியையும் கைதுசெய்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வேட்பாளர்கள் பெற்ற விருப்பு வாக்குகளின் விபரம் வருமாறு:


இலங்கை தமிழரசுக் கட்சி

துரைரெட்ணம்-29,141
துரைராஜசிங்கம்-27,717
வெள்ளிமலை-20,200
பிரசன்னா-17,304
நடராசா-16,681
கருணாகரம்-16,536

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு

சந்திரகாந்தன்-22,338
அமீர் அலி-21,271
சிப்லி பாரூக்-20,407
சுபைர்-17,903


 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

நசீர் அஹமட்-11,401
 

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் தேர்தல் வாக்கெண்ணும் நிலையத்தில் இருந்து வருகை தருவதனைப் படங்களில் காணலாம்.

விருப்பு வாக்குகள்: திருகோணமலை மாவட்டம்
திருகோணமலை மாவட்டத்தில் வேட்பாளர்கள் பெற்ற விருப்பு வாக்குகளின் எண்ணிக்கை வருமாறு,
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 
ஆரியவதி கலபதி 14,224 
பிரியந்த பத்திரன 12,393 
நஜீப் அப்துல் மஜீட் 11,726

திருகோணமலை மாவட்ட விருப்பு வாக்குகள்

கிழக்கு மாகாண சபை தேர்தலின் திருகோணமலை மாவட்ட விருப்பு வாக்குகள் இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் கிழக்கு மாகாண முன்னாள் கல்வி பணிப்பாளரான எஸ். தண்டாயுதபாணி, பல்கலைக்கழக மாணவரான ஜஹதீஸன்

மட்டு. தமிழரசுக்கட்சி விருப்பு வாக்கில் ரட்ணம் முதலாம் இடம்! பிள்ளையானும் வெற்றி!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுக்கட்சி 6 ஆசனங்களை பெற்றிருக்கின்ற நிலையில் அந்த ஆறு உறுப்பினர்களும் யார் என்பதை அறிந்து கொள்ளும் விருப்பு வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.  இதன்படி தமிழரசுக்கட்சி சார்பில் இராசையா துரைரத்தினம், கே.துரைராசசிங்கம், ஞா.கிருஷ்ணபிள்ளை,

மூன்று மாகாணசபைகளுக்குமான தேர்தல்! தொகுதி ரீதியான முடிவுகள்! ஒரே பார்வையில்....
கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கான தேர்தல் முடிவுகளின்படி தொகுதி ரீதியாக போட்டியிட்ட கட்சிகள் பெற்ற வாக்குளின் விபரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. 

கிழக்கு மாகாணசபையில் ஆட்சியமைப்பதற்கு, 19 ஆசனங்கள் தேவைப்படுகின்றது, யாருக்கும் பெரும்பான்மை பலம் இல்லை
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காத இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.
நேற்று நடந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 14 ஆசனங்களும், அதன் கூட்டணிக் கட்சியான தேசிய சுதந்திர முன்னணிக்கு 1 ஆசனமும் கிடைத்துள்ளது.
ஆட்சியமைக்கும் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தயார்! சம்பந்தன்
கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் தொடர்பிலும் ஆட்சியமைப்பது குறித்தும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருடன் பேசுவதற்கு முயற்சித்துக்கொண்டிருக்கின்றோம். ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சு நடத்தியுள்ளோம். அவர் எமக்கு ஆதரவு வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார் என   தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சற்று முன்னர் தெரிவித்தார்.  
 
அடுத்தகட்ட  நகர்வு குறித்து எமது பிரதிநிதிகளுடனும் கூட்டுச் சேர்ந்து ஆட்சியமைக்க வலுவாக உள்ள தரப்பிடமும் தொடர்ந்து பேசி ஒரு முடிவு எட்டப்படும் எனவும் அவர் கூறினார். 
 
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு 2 போனஸ் ஆசனங்கள் உட்பட 14 ஆசனங்களும் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு 11 ஆசனங்களும் கிடைத்துள்ளன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு 07 ஆசனங்களும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 4 ஆசனங்களும் கிடைத்துள்ளன. 
கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான உத்தியோகப் பூர்வ முடிவுகள்

நேற்று நடைபெற்ற கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலின் உத்தியோகப் பூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி த.தே.கூ 11 ஆசனங்களையும் ஐ.ம.சு.மு 14 ஆசனங்களையும், மு.கா 7 ஆசனங்களையும், ஐ.தே.க 4 ஆசனங்களையும் ஏனையவை 1 ஆசனத்தையும் பெற்றுள்ளன.
பிரதான கட்சிகள் பெற்ற வாக்கு விபரங்கள்

இலங்கைத் தமிழரசுக் கட்சி  1 இலட்சத்து 93 ஆயிரத்து 827 (30.59 %) வாக்குகள் பெற்று 11 ஆசனங்களையும்,

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி   2 இலட்சத்து 44 (31.58 %) வாக்குகள் பெற்று இரண்டு மேலதிக ஆசனங்களுடன் 14 ஆசனங்களையும்,

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்    1 இலட்சத்து 32 ஆயிரத்து 917 (20.98 %) வாக்குகள் பெற்று 7 ஆசனங்களையும்,
   
ஐக்கிய தேசியக் கட்சி     74 ஆயிரத்து 901 (11.82 %) வாக்குகள் பெற்று 4 ஆசனங்களையும்,

தேசிய சுதந்திர முன்னணி    9 ஆயிரத்து 522 (1.5 %) வாக்குகள் பெற்று 1 ஆசனத்தையும் பெற்றுள்ளன.
  


கிழக்கு மாகாண சபையின் மாவட்ட ரீதியான வாக்குகள் விபரம் :

மட்டக்களப்பு மாவட்டம்

இலங்கைத் தமிழரசுக் கட்சி : 1,04,364 (50.83%)  வாக்குகள்  பெற்று 06 ஆசனங்களையும்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி : 64,190 (31.17%) வாக்குகள் பெற்று 04 ஆசனங்களையும்

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் : 23,083 (11.21%) வாக்குகள்  பெற்று 01 ஆசனத்தையும்

சுயேட்சைக் குழு 8  : 5,355 (5.38%) வாக்குகளையும்,  ஐக்கிய தேசியக் கட்சி : 1026 (1.03%) வாக்குகளையும் பெற்று



திருகோணமலை மாவட்டம்

இலங்கை தமிழரசு கட்சி - 44,396 (29.088%) வாக்குகள் பெற்று 3 ஆசனங்களையும்

ஐக்கி மக்கள் சுதந்திர முன்னணி - 43,324 (28.38%) வாக்குகள்  பெற்று 3 ஆசனங்களையும்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 26,176 (17.15%) வாக்குகள் பெற்று 2 ஆசனங்களையும்

ஐக்கிய தேசியக் கட்சி - 24,439 (16.01%) வாக்குகள்  பெற்று ஒரு ஆசனத்தையும்

தேசிய சுதந்திர முன்னணி - 9,522 (6.24%) வாக்குகள்  பெற்று ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளன.



அம்பாறை மாவட்டம்

ஐக்கி மக்கள் சுதந்திர முன்னணி - 92,530 (33.66%) வாக்குகள்  பெற்று  5 ஆசனங்களையும்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 83,658 (30.43%) வாக்குகள் பெற்று 4 ஆசனங்களையும்

ஐக்கிய தேசியக் கட்சி - 48,028 (17.47%) வாக்குகள்  பெற்று  3 ஆசனங்களையும்

இலங்கை தமிழரசு கட்சி - 44749 (16.28%) வாக்குகள்  பெற்று  2 ஆசனங்களையும் பெற்றுள்ளன.


கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் ஆளும் கட்சிக்கு வாக்களித்ததாலும், பெருந்தொகையான மக்கள் வாக்களிக்காமல் இருந்தாலும் தமிழர்கள் கிழக்கு மாகாணத்தில் ஆட்சியை கைப்பற்ற முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுக்கட்சி 6 ஆசனங்களையும், திருகோணமலையில் 3 ஆசனங்களும் அம்பாறையில் 2 ஆசனங்களுமான 11 ஆசனங்களை பெற்றுள்ளது. தமிழர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வாக்களித்தால் மட்டக்களப்பில் இரண்டு ஆசனங்களையும்,
சப்ரகமுவவில் 2  தமிழ்ப் பிரதிநிதித்துவம் கிடைக்கும் சாத்தியம்

சப்ரகமுவ மாகாணத்தில் தமிழ்ப் பிரதிநிதித்துவம் கிடைக்கக் கூடிய சாத்தியம் உள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.
திருகோணமலை தேர்தல் தொகுதி : இ.த.க வெற்றி
கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்ட திருகோணமலை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன் பிரகாரம் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை,

இலங்கை தமிழரசுக் கட்சி - 28,067
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 8,642
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 7,940
கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்ட கல்குடா தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன் பிரகாரம் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை,

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 22,965
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 21,876
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 8,604
ஐக்கிய தேசிய கட்சி - 1,014

ad

ad