புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 செப்., 2012

அமீர் அலிக்கு முதலமைச்சர் பதவி வழங்காவிடின் அரசாங்கம் விளைவை எதிர்நோக்கும்: எம்.எஸ்.சுபைர் எச்சரிக்கை
முன்னாள் அமைச்சர் அமீர் அலிக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்படாவிடின் அதன் விளைவை அரசாங்கம் எதிர் நோக்கும் என கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான

சலுகைகளை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கத்துடன் பேசமுடியாது: செல்வம் அடைக்கலநாதன்
நாங்கள் சலுகைகளை அடிப்படையாகக் கொண்டு பேசமுடியாது. தமிழ் மக்களின் உரிமை தொடர்பில் பேசி ஒரு இணக்கப்பாட்டுக்கு வருகின்றபோதுதான் அரசாங்கத்துடன் இணைந்து ஆட்சியமைக்கும் நிலை உருவாகும்

கிழக்கு மாகாண முதலமைச்சராக முன்னாள் அமைச்சர் நஜீப் ஏ. மஜீட் தெரிவு?
கிழக்கு மாகாண முதலமைச்சராக முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளருமான நஜீப் ஏ. மஜீட்டை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த அரச

17 செப்., 2012


மகிந்தவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் ஆட்டோ சாரதி ஒருவர் தீக்குளிப்பு! அவர் வழங்கிய பேட்டி உள்ளே.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தியா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சேலம் போஸ் மைதானத்தில் இன்று காலை ஒருவர் தீக்குளித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ராஜபக்சேவுக்கு எதிராக கோஷமிட்டு சேலத்தில் தீக்குளித்த 
இளைஞர்  விஜயராஜ் நக்கீரனுக்கு  பேட்டி! (வீடியோ)




ராஜபக்சேவுக்கு எதிராக கோஷமிட்டு சேலத்தில் இளைஞர் தீக்குளிப்பு (படங்கள்)

ராஜபக்சவிடம் போர்க்குற்ற விசாரணை நடத்தக் கோரி சர்வதேச நீதிமன்ற நீதிபதியிடம் அதிமுக மனு

இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பாக அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பணியாற்றும் அதிமுக வழக்கறிஞர்கள் குழு டெல்லியில் உள்ள சர்வதேச நீதிமன்ற நீதிபதியான தல்வீர் பண்டாரியிடம் இன்று மனு அளித்துள்ளனர்.
செப்டம்பர் 20-ந் தேதி இந்தியாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்ச வருகை தர உள்ளார்.
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் பணியாற்றும் அதிமுக வழக்கறிஞர்கள் குழு டெல்லியில் உள்ள சர்வதேச நீதிமன்ற நீதிபதியான தல்வீர் பண்டாரியிடம் இன்று மனு அளித்துள்ளனர்.
இந்த மனுவில் இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பாக அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச நீதிமன்ற நீதிபதியிடம் அரசியல் கட்சி ஒன்றில் இத்தகைய மனு கொடுப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.


த.தே.கூட்டமைப்பு - முஸ்லிம் காங்கிரஸ் திடீர் சந்திப்பு
கிழக்கு மாகாணத்தில் ஆட்சியமைப்பது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் இன்று காலை கொழும்பு பாக் வீதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் திடீர் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.


கிழக்கு மாகாணசபையில் யாருக்கு ஆதரவளிப்பது என நாங்கள் இன்னும் முடிவெடுக்கவில்லை. அரசாங்கத்துடன் நடந்த பேச்சின் போதும் அவர்களுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் தெரிவித்துள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் ஸ்ரீலஙகா முஸ்லீம் காங்கிரஷிற்கும் இடையில் இன்று கொழும்பில் உள்ள ஹொட்டல் ஒன்றில் சந்திப்பு இடம்பெற்றது. இந்த சந்திப்பில் தமிழ் தேசியக்



பெரியார் வேடம் அணிந்து 1000 பேர் பங்கேற்ற பேரணி
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் 16.09.2012 அன்று மாலை பெரியார் வேடம் அணிந்து 1000 பேர் பங்கேற்ற பேரணி சென்னை மெரினா கடற்கரை சாலை பாரதிதாசன் சிலையில் இருந்து 4 மணிக்கு புறப்பட்டது. இந்தப் பேரணி ராயப்பேட்டை வி.எம்.தெருவில் முடிவடைந்தது. 

போர்குற்ற விசாரணை: இலங்கை வலையில் இந்தியா விழக்கூடாது: ராமதாஸ்
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரானப் போரின் போது சிங்களப் படையினர் நடத்திய போர்க்குற்றங்கள் தொடர்பான காலமுறை மதிப்பீட்டாய்வு விசாரணையில் இலங்கை விரிக்கும் வலையில் இந்தியா விழக்கூடாது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

16 செப்., 2012


 
கிழக்கில் தமிழர்கள் முஸ்லிம்களை ஆள்கிறார்களா, முஸ்லிம்கள் தமிழர்களை ஆள்கிறார்களா என்பதல்ல இப்போதுள்ள பிரச்சினை. பிரிந்து நிற்கின்ற கிழக்கில் இணக்கப்பாட்டுடனான ஆட்சியே முக்கியம்.
கிழக்கின் பக்கம் சர்வதேசத்தின் பார்வை என்கிறார் அமைச்சர் ஹக்கீம்

தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகளுக்கும், தமிழ் பேசும் உறவுகளுக்கும் குந்தகம் விளைவிக்காமல் அரசியல் நேர்மையுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முடிவுகளை எடுக்குமெனத்
இன்று சுவிஸ் தலைநகர சிவன் கோவிலில் சைவத்  தமிழ் மாநாடு 
இன்று பகல் தீர்த்தத் திருவிழா முடிய ஆலய  முன்றலில் உலக சைவதமிழ் பேரவையின் ஏற்பாட்டில் இந்த மாநாடும் அதன்  பின்னர் சைவ தமிழ் வழிபாட்டுத் தீர்மானமும் நிறைவேற்றப்படும் -இடம் பேர்ன் ஞான லிங்கேஸ்வரர் ஆலயம் சுவிஸ் 
பெருகி வரும் எமது அமெரிக்க  கத்தார் ரஷ்ய நேயர்களுக்கு நன்றி 

நகைச்சு‌வை நடிகர் லூஸ்மோகன் காலமானர்

பழம்பெரும் நகைச்சுவை நடிகர் லூஸ்மோகன் உடல்நலக்குறைவால் இன்று (16.09.2012) காலமானார். தமிழ் சினிமாவில் 1000-த்திற்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்தவர் லூஸ்மோகன். இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால்
தமிழ் தேசியக் கூட்டமைப்பை சந்திக்க வேண்டுமென நேரம் ஒதுக்கிக் கேட்ட முஸ்லிம் காங்கிரஸ் காக்க வைத்து காலைவாரி விட்டதாக கூட்டமைப்பு வன்னி மாவட்ட ௭ம்.பி. செல்வம் அடைக்கலநாதன் குற்றஞ்சாட்டினார். 
கிழக்கு மாகாணசபையின் ஆட்சி அமைப்பது குறித்து பேச்சு வார்த்தை நடத்துவதற்காக கூட்டமைப்பைச் சந்தித்துக் பேச்சுவார்த்தை நடத்த நேரம் ஒதுக்கித் தரும்படி முஸ்லிம் காங்கிரஸ் தரப்பில்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கிழக்கில் தெரிவான பதினொரு உறுப்பினர்களில் ஐவரை விலைக்கு வாங்கும் முயற்சியில் அரசாங்கம் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரை நேரடியாக ஈடுபடுத்தியிருப்பதாக கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நேற்றுகுற்றச்சாட்டொன்றை முன்வைத்தார். இதேவேளை, அரசாங்கத்தில் இணைந்து கொள்ளுமாறு தனக்கும் உயர்மட்டத்திலிந்து இரகசிய அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிவித்த சம்பந்தன் அழைப்பு விடுத்தவரின் பெயரைக் கூறத் தயாரில்லை

புலித் தலைவர்களுக்கும் முன்னாள் அமைச்சருக்கும் இடையில் இரகசிய பேச்சுவார்த்தை
தமிழீழ விடுதலைப் புலித் தலைவர்களுக்கும், முன்னாள் அமைச்சர் ஒருவருக்கும் இடையில் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக மௌபிம சிங்களப் பத்திரிகை பிரதான செய்தியாக வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 500 பேரை வரும் புதன்கிழமை இலங்கைக்கு அனுப்புகிறது பிரித்தானியா!
பிரித்தானியாவில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 300 பேர் அடுத்த வாரம் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு அல்லது மூன்று சிறப்பு விமானங்களில் 500 புலம்பெயர் தமிழர்களை எதிர்வரும் புதன்கிழமை இங்கிலாந்திலிருந்து

மு.காங்கிரஸ் அரசுக்கு அதரவளிப்பதாகக் கூறிவிட்டது!- ரிஷாத் பதியுதீன்
கிழக்கு மாகாணத் தேர்தலுக்கு பின்னர் ஆளும் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றபோது அதில் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கிழக்கில் ஆட்சி அமைப்பதற்கு அரசுக்கு ஆதரவு வழங்குவதாகத் தெரிவித்ததாக அமைச்சர் ரிஷாத்

அமெரிக்காவில் இடம்பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் 'உங்களுக்காகத் துடிக்கும் எங்களின் இதயம்' நிகழ்வு!
அமெரிக்காவில் நியூயோர்க், நியூ ஜெர்சி, பென்சில்வானியா மாநிலத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுதுணையாளர்களின் ஆதரவுடன் 'உங்களுக்காகத் துடிக்கும் எங்களின் இதயம்' எனும் நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.

கைதடியிலிருந்து மாணவர்கள் சுற்றுலா சென்ற பஸ் பளையில் விபத்து: 19 பேர் காயம்
யாழ். கைதடியிலிருந்து சுற்றுலா மேற்கொண்டு முல்லைத்தீவு நோக்கி 52 பேருடன் சென்ற பஸ் பளையில் விபத்துக்குள்ளானதில் 19 பேர் காயமடைந்து கிளிநொச்சி மற்றும் யாழ். போதனா வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முதலமைச்சர் தெரிவுகளிலிருந்து ஜனாதிபதி விலகினார்! கிழக்கின் ஆட்சி குறித்து நாளை சம்பந்தனுடன் மகிந்த பேச்சு!
முதலமைச்சர் மற்றும் அமைச்சர் தெரிவுகளிலிருந்து ஜனாதிபதி விலகிக் கொண்டுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

புலித் தலைவர்களுக்கும் முன்னாள் அமைச்சருக்கும் இடையில் இரகசிய பேச்சுவார்த்தை
தமிழீழ விடுதலைப் புலித் தலைவர்களுக்கும், முன்னாள் அமைச்சர் ஒருவருக்கும் இடையில் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக மௌபிம சிங்களப் பத்திரிகை பிரதான செய்தியாக வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தேர்தல் பிரசார மேடைகளில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அரசுக்கெதிராக பேசிய பேச்சுக்கள்!
மூன்று மாகாணங்களுக்கான தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் கிழக்கு மாகாணத்தில் யார் ஆட்சியமைப்பது? யாருடன் இணைந்து ஆட்சியமைப்பது போன்ற வினாக்கள் தொடர்கின்றன.

15 செப்., 2012


விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு புதிய தொலைக்காட்சி சேனல்!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மதுரை மாநகர், புறநகர் மாவட்டம் சார்பாக, அந்த கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி.யின் பொன்விழா. மதுரை தமுக்கம் மைதானத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. 
கூடங்குளம் அணு உலையை மூட வலியுறுத்தி நெல்லையில் இன்று தீக்குளிக்க முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கூடங்குளம் அணு உலையில் எரிபொருள் நிரப்புவதை உடனே ரத்து செய்ய வேண்டும், 144 தடை உத்தரவை வாபஸ் பெற வேண்டும், கூடங்குளம் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள


கிழக்கு மாகாண சபையின் ஆட்சி அதிகாரத்தை ௭த்தரப்புக்கு வழங்குவது ௭ன்பது தொடர்பாக இன்று சனிக்கிழமை அம்பாறை மாவட்டத்தில் உள்ள கட்சியின் முக்கிய ஆதரவாளர்களுடன் கலந்துரையாடலொன்று மேற்கொள்ள இருப்பதாக முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் மு.கா.வின் தலைவர் ரவூப்ஹக்கீம், பாராளுமன்ற உறுப்பினர்கள்,மாகாண சபை உறுப்பினர் உயர்பீட உறுப்பினர்கள் ௭ன்போர் கலந்து கொள்ள இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

நவநீதம்பிள்ளையின் குழுவினரை இலங்கைக்கு வருவதற்கு அரசாங்கம் அனுமதித்தமையை கடுமையாக ௭திர்ப்பதாகவும், கண்டிப்பதாகவும் தெரிவிக்கும் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய இதன் பின்னணியில் சில ஆலோசகர்களும், நாட்டுக்கு ௭திரான துரோகிகளும் இருப்பதாகக் குற்றம் சாட்டியது. 

இவர்களது வருகையால் ௭திர்காலத்தில் ஈராக், லிபியாவுக்கு ஏற்பட்ட நிலை இலங்கைக்கும் ஏற்படுமென்றும் ஹெல உறுமய ௭ச்சரிக்கை விடுத்தது. கொழும்பு பௌத்தாலோக மாவத்தையிலுள்ள
ரத்மலானையில் அமைந்துள்ள விமானநிலையத்தின் பெயர் 'கொழும்பு சிற்றி' விமானநிலையம் எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது.
குறித்த விமானநிலையமானது இன்று முதல் கொழும்பு சிற்றி விமான நிலையம் என அழைக்கப்படும் என விமானநிலைய முகாமையாளர் சரத் டி சில்வா தெரிவித்தார்.
பேலியகொட பகுதியில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தினால் ஐந்து வீடுகள் எரிந்து சாம்பலாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதியிலுள்ள பலகைகளினால் அமைக்கப்பட்ட வீடுகளே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளதாகப் பேலியகொட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்று வெள்ளிக்கிழமை இரவு இத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக உடனடியாக தீயணைப்புப் படையினருக்குத் தெரியப்படுத்தியதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புப் படையினர் தீயைக்

 முஸ்லீம் காங்கிரஷஇன்றுஅம்பாறையில் கூடுகிறது- மந்திரி பதவிகளை பங்கு போடுவதில் குடும்பிச்சண்டை
மத்திய அரசியல் இரண்டு முழு மந்திரி பதவியும் மூன்று அரைமந்திரி பதவிகளும், மாகாண முதல்மந்திரி பதவியும் மாகாண பிரதான இரு மந்திரிகளும் தமக்கு தர வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ் மகிந்த ராசபக்சவிடம் கோரியதற்கு அவர்

நீதியமைச்சில் வருவாய் இல்லை- கப்பல் துறைமுகங்கள் அமைச்சு வேண்டும்- ஹக்கீம் அடம்பிடிப்பு

தனக்கு நீதியமைச்சு தேவையில்லை என்றும் கப்பல் துறைமுகங்கள் அமைச்சு தரவேண்டும் என அலரி மாளிகையில் மகிந்த ராசபக்சவை சந்தித்த ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ் கட்சி தலைவர் ரவூப் ஹக்கீம் கோரியுள்ளார்.

என் அழகே எனக்கு ஆபத்தை ஏற்படுத்தியது: 4 வயது மகளுடன் தீக்குளித்த இளம்பெண் கடிதம்
நாகர்கோவில் அருகே உள்ள வில்லுக்குறி, திருவிடைக்கோட்டையைச் சேர்ந்தவர் தாணப்பன். இவரது மகள் ஷீபா (வயது 28). இவர் தனது 4 வயது மகளுடன் தற்கொலை செய்து கொண்டார்.

யாழ். போதனா வைத்தியசாலையில் ஒரே நாளில் ஒரு லட்சத்திற்கும் அதிகம் பெறுமதியான நகை, பணம் திருட்டு
யாழ். போதனா வைத்தியசாலையின் 24ம் விடுதியில் இன்று ஒரு லட்சத்திற்கும் அதிகமான பணம் மற்றும் நகை என்பன திருடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

மாந்தை மேற்கில் உருக்குலைந்த நிலையில் விடுதலைப் புலிகளின் இரு சடலங்கள்
மன்னார் மாவட்டத்தின், மாந்தை மேற்கு பகுதியில்  உருக்குலைந்த இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

யாழ்ப்பாணத்திலிருந்து வேலணை நோக்கிச் சென்ற கார் விபத்தில் மூவர் படுகாயம்
யாழ்ப்பாணத்திலிருந்து வேலணை நோக்கிச் சென்ற கார் ஒன்று வேகக்காட்டுப்பாட்டை இழந்து ரொலிக்கொம் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

14 செப்., 2012

பிரச்சனையில் தவிக்கும் இரவு விடுதிகளின் சொர்க்க பூமியான லாசேன் நகரம்(Lausanne)
கடந்த பத்தாண்டுகளில் லாசேன் இரவு விடுதிகளின் சொர்க்கமாக மாறியதில் சில பிரச்னைகளும் உருவாகியுள்ளன. இந்தப் பிரச்னைகளுக்கு விடுதி உரிமையாளர்களும் அதிகாரிகளும் தீர்வு தேடிவருகின்றனர்.
புகைபிடிக்கும் கூடங்களை அகற்ற வேண்டாம்: தேசிய வாக்கெடுப்பில் முடிவு
சுவிட்சர்லாந்தில் மதுபானக்கூடம் அலுவலகம், மனமகிழ் மன்றம், உணவு விடுதி போன்ற இடங்களில் புகைபிடிப்பதற்கென அமைக்கப்பட்டுள்ள கூடங்களை நீக்க வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணசபையில் ஆட்சியமைப்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையில் இன்றிரவு நடைபெறவிருந்த முக்கிய பேச்சுவார்த்தை இறுதி நேரத்தில் கைவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை 7.00  மணியளவில் நடைபெறவிருந்த குறித்த பேச்சுவார்த்தை, முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரான அமைச்சர் ஹக்கீம், அலரி மாளிகையில் அரசதரப்புடன் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கூட்டம்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனிடம் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று வியாழக்கிழமை நான்காம் மாடியில் வைத்து விசாரணை நடத்தியுள்ளனர்.
புலம்பெயர் தமிழர்களினால் இயக்கப்படும் தமிழ் இணையத்தளங்கள் சிலவற்றில் வெளியாகியிருந்த ‘சமகால அரசியல் நிலைமைகள்’ குறித்த செவ்வியொன்று தொடர்பிலேயே இந்த விசாரணை நடத்தப்பட்டதாக சிறிதரன் எம்.பி. தெரிவித்தார்.

இலங்கையின் வடபகுதியான யாழ்ப்பாணத்தில் வைத்து கடத்திச் செல்லப்பட்ட லலித், குகன் ஆகிய இருவரும் இராணுவ முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன என முன்னிலை சோசலிசக்கட்சி தெரிவித்துள்ளது.
இது சம்பந்தமாக இராணுவ அதிகாரிகள் இரகசியமான பேச்சுவார்த்தைக் கூட நடத்தியிருப்பதாக அந்த கட்சியின் பிரசார செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.

பிரபாகரன் சொன்னதை உடனடியாக செயல்படுத்துங்கள்!- நடேசனின் கடைசி கடிதம் அம்பலம்

புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு.பா.நடேசன் அவர்கள் இறுதியாக எழுதிய கடிதம் ஒன்று வெளியாகியுள்ளது. புலிகள் பாரிய பின்னடைவைச் சந்தித்து முள்ளிவாய்க்காலில் நின்றவேளை, கடற்படைத் தளபதி சூசை அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் ஒலிவடிவில் வெளியாகியது யாவரும் அறிந்ததே.

குளிப்பதை படம் எடுத்து மிரட்டி பலமுறை உல்லாசம்: தற்கொலைக்கு முன் மாணவி கடிதம்!


திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த மண்மலை கிராமத்தைச் சேர்ந்த 22 வயதான சினேகா. (பெயர் மாற்றப்பட்டுள்ளது).இவர் நாச்சிப்பட்டில் உள்ள ஓம்சத்தி பா-டெக்னிக்கில் 2ம் ஆண்டு படித்து வந்தார். இந்த மாணவி 23.07.2012 அன்று மாலை தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.


நடுக்கடலில் 22 நாட்களாக தத்தளித்த 61 இலங்கை தமிழர்களை மீட்ட தமிழக மீனவர்கள்

இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு தஞ்சம் அடைய சென்ற படகு பழுதானதால் ஒரு சிறுவர், 3 பெண்கள் என இலங்கை தமிழர்கள் 61 பேரும், 4 சிங்களவர்களும் 22 நாட்களாக நடுக்கடலில் தத்தளித்தனர்.


தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசிய தலைவர் வே. பிரபாகரன் தங்கியிருந்ததாக கூறப்படும் மற்றுமொரு வீட்டை படையினர் ஆனந்தபுரம் கிராமத்திற்குள் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கிராமத்திற்குள் முற்றாக இடிந்த நிலையிலுள்ள குறித்த வீட்டின் பின்புறத்திலிருந்து ஆரம்பிக்கும் பதுங்கு குழி சுமார் 300மீற்றர் தொடக்கம் 400மீற்றர் வரையில் நிலத்திற்குக் கீழ் கொங்கிறீற்றால்
 18-ந் தேதி கூடங்குளம் அணு உலை நிலைய எதிர்ப்புப் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் வள்ளியூர் கோர்ட்டில் ஆஜராகி, விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தினங்களுக்கு முன் உதயகுமார் போலீசில் சரணடைவதாக அறிவித்தார். ஆனால், அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்த கெஜ்ரிவால் மற்றும் ஊர் மக்களின் வேண்டுகோளை
ஈமுகோழிப் பண்ணை மோசடியில் கைதாகியுள்ள சுசி ஈமு கோழிப்பண்ணை அதிபர் குருசாமி போலீஸில் இன்று வாக்குமூலம் அளிக்கையில் 7 கள்ளக்காதலிகள் மற்றும் நடிகைகளுடன் உல்லாசமாக இருந்ததாகவும், கல்லூரி காதலி ஏமாற்றியதால் பணத்தின் மீது மோகம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டதால் வருத்தப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த 2001ஆம் ஆண்டு சுசி ஈமு கோழிப்பண்ணை ஆரம்பித்த குரு தமிழ்நாடு முழுதும் 30 கிளைகளைத்

மு.கா.முடிவில்தான் கூட்டமைப்பின் ஆட்சி; ஆளும் தரப்புக்கு இடமளிக்கக்கூடாது என்கிறார் சம்பந்தன் எம்.பி.
 ஆளும்தரப்புக்கு இடமளிக்கக்கூடாது என்கிறார் சம்பந்தன் எம்.பி.நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணிக்கு தனது இல்லத்தில் கிழக்கு மாகாண சபைக்கு மட்டக்களப்பு,
அமைச்சர் டக்ளசை எரிச்சலூட்டியுள்ள பாடகர் உன்னி கிருஷ்ணனின் மன்னிப்பு
புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களிடம் நற்பெயரைப் பெறும் நோக்குடனே தென்னிந்திய பாடகர் உன்னி கிருஷ்ணன் மன்னிப்பு கோரியுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைமையில் இன்று காலை 10 மணியளவில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக 1008 தேங்காய் உடைத்து சிறப்புப்பிரார்த்தனையொன்று வவுனியா குறுமண்காடு காளி கோயிலில் இடம் பெற்றது.
குறித்த சிறப்புப்பிரார்த்தனையின் போது தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும்,காணாமல் போனவர்களைப் பத்திரமாக மீட்டுத்தரும்படியும் வவுனியா குறுமண் காட்டில் அமைந்துள்ள காளி


ஆட்சி அமைக்க கிழக்கில் தயார்! ஆளுநருக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கடிதம்
கிழக்கு மாகாண சபையில் ஆட்சியை அமைப்பதற்கான தயார் நிலையில் தாங்கள் இருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நேற்று கிழக்கு மாகாண ஆளுநருக்கு அதிரடியாக அறிவித்திருக்கிறது.

இடிந்தகரையில் கடலில் இறங்கி போராட்டம்: தலைக்கு மேல் விமானம் ( படங்கள் )
 
கூடங்குளம் அணுஉலையில் எரிபொருள் நிரப்ப எதிர்ப்பு தெரிவித்து இடிந்தகரையில் போராட்டக்காரர்கள் காலை (13.09.2012) 11 மணி அளவில் கடலுக்குள் இறங்கி போராட்டம் நடத்தினர். இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 6 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

12 செப்., 2012


நடைபெற்று முடிந்திருக்கும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் கிடைத்திருக்கும் 4 ஆசனங்கள் தொடர்பிலும், முன்னாள் கிழக்கு முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாம் இடத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருப்பதிலும் தற்போது பல்வேறு விமர்சனங்களும் சந்தேகங்களும் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
வாக்களிப்புத் தினமான செப்டம்பர் 08ம் திகதி மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் கல்லூரி மற்றும் மத்திய கல்லூரி ஆகிய இரண்டு வாக்கெண்ணும் நிலையங்களில் வாக்கெண்ணும் நிலையங்களுக்கான முகவர்களும், அதிகாரிகளும், போட்டியிட்ட கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் பிரதிநிதிகளும் நிறைந்து காணப்பட்டனர்.

புதிதாக அமையப்போகும் மாகாண சபையின் முதலமைச்சாராக இரண்டாவது தடவையாகவும் பிள்ளையான் எனப்படுகின்ற சிவநேசதுரை சந்திரகாந்தனே நியமிக்கப்படவுள்ளதாக நம்பத்தகுந்த வாட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.
கிழக்கின் முதலமைச்சராக தமிழர் ஒருவரே இருக்கவேண்டும் என்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தனிவிருப்பின்பேரில் பிள்ளையான எவ்வித தடங்கலும் இன்றி நியமிக்கப்படுகின்றார் என அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றது. 
லிபியாவுக்கான அமெரிக்கத் தூதர் கொல்லப்பட்டுள்ளார்
இஸ்லாம் மதத்தையும், முகம்மது நபியையும் கீழ்த்தரமாக சித்தரிக்கும் அமெரிக்கத் திரைப்படத்துக்குக் கண்டனம் தெரிவித்து லிபியா மற்றும் எகிப்து நாடுகளில் அமெரிக்கத் தூதரங்கள் மீது பயங்கர தாக்குதல்கள் நடந்தன.  இதில் லிபியாவுக்கான அமெரிக்கத் தூதர் கொல்லப்பட்டுள்ளார்.


ஸ்ரீலங்கா  முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாணத்தில் யாருடன் சேர்ந்து ஆட்சி அமைப்பது என்ற தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பு அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் வழங்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் ஐக்கிய மக்கள் சுதுந்திர முன்னணியுடனா அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனா இணைந்து ஆட்சி அமைப்பது என்பது பற்றி   ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நேற்றும் இன்றும் கூடி ஆராய்ந்து

ஆனந்தன் என்ற டக்ளஸ் தேவாநந்தா நீதிமன்றில் நேரடியாக ஆஜராக வேண்டும்: தமிழக அரசாங்கம் கடும் நிலைப்பாடு
கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள இலங்கையின் அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா, சென்னை மேல்நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராக வேண்டும் என்று தமிழக அரசு கோரியுள்ளது.

சர்வதேச நாடுகளின் அழுத்தம்! கிழக்கில் தேசிய அரசு அமைப்பதற்கு மகிந்த அரசு முயற்சி!
கிழக்கில் நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அங்கு தேசிய அரசு ஒன்றை அமைக்கும் முயற்சியில் இலங்கை அரசு தீவிரமாக இறங்கி உள்ளமை கொழும்பு அரசியல் வட்டாரங்களில் இருந்து நம்பகமாகத் தெரிய வந்துள்ளது.

ஆளும்தரப்பு குட்டுக்களை அம்பலப்படுத்தும் கிழக்கு தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ் கூட்டமைப்பு உறுப்பினர்கள்!
கிழக்கு மாகாண சபைக்கு மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களின் ஆதரவை அரசாங்கத்திற்கு பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள ஒரு சில நபர்கள் குறித்த உறுப்பினர்களைச் சந்தித்த போதிலும் அவர்களது முயற்சி பயனளிக்கவில்லையென தெரியவருகிறது.


கூடங்குளத்தில் போராட்டக்காரர்கள் போலீசார் மோதல்


ஜவுளி ஆலையில் தீ விபத்து: 100 பேர் கருகி பலி

பாகிஸ்தானில் கராச்சியில் உள்ள பால்டியா பகுதியில் ஆடை தயாரிப்பு (ஜவுளி) தொழிற்சாலை உள்ளது.   அங்கு ஏராளமானவர்கள் பணிபுரிகின்றனர். இந்த நிலையில் நேற்று மாலை அங்குள்ள 2-வது மாடியில் திடீரென தீப்பிடித்தது. 

அந்த நெகிழ்ச்சியான தருணங்கள்...............

நான் விடைபெருகிறேன், என்னால் தான் உங்களுக்கு இத்தனை இடையூறுகள், நிமிடங்கள்,நாட்கள், மாதங்கள், வருடங்கள் என கடந்து போராட்டம் தொடருகிறது...................

சராசரி மக்களின் அன்றாட வாழ்க்கை அத்தனையும் தொலைத்து ஆதரவற்று இங்கே கிடக்கிறீர்கள்..........நான் விடை பெருகிறேன்.....


கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறமுடியாத அரசாங்கம், வெற்றிபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதற்கு முயற்சிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகளின் வீடுகளுக்குச் சென்ற இலங்கை அரசின் உயர்மட்ட பாதுகாப்பு புலனாய்வு பிரிவினர், அரசாங்க கட்சிக்கு ஆதரவு வழங்கினால் பல கோடி ரூபா பணமும் கொழும்பில் வீடும் தருவதுடன் மாவட்டத்தின் அபிவிருத்திக்கு

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடும் வரை போராட்டம் தொடரும்: வைகூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடும் வரை போராட்டம் என்றார் மதிமுக பொதுச் செயலர் வைகோ.


கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து, கரூரில் மதிமுக சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
டக்ளஸ் தேவானந்தா போர்த்திய பொன்னாடை தனது இசைப் பயணத்தில் கரும்புள்ளி; பின்னணிப் பாடகர் உன்னி கிருஷ்ணன
டக்ளஸ் தேவானந்தா போர்த்திய பொன்னாடை தனது இசைப் பயணத்தில் கரும்புள்ளி; பின்னணிப் பாடகர் உன்னி கிருஷ்ணன்
யாழில் தனக்கு டக்ளஸ் தேவானந்தா பொன்னாடை போர்த்திய சம்பவம் தனது இசைப் பயணத்தில் கரும்புள்ளியாக விழுந்துவிட்டது என தமிழகத்தின் பிரபல பின்னணிப்
கருணாவின் சகோதரி வரலாறு காணாத படுதோல்வி
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சார்பில் நிறுத்தப்பட்ட 11 வேட்பாளர்களில் முன்னாள்

கூடங்குளம் சம்பவம்: தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர் மறியல்



கோவை காந்திபுரத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மதிமுகவினர்.

கூடங்குளம்: சரணடைய வந்த உதயகுமாரை திருப்பி அனுப்பிய ஆதரவாளர்கள்
எரிபொருள் நிரப்புவதற்கு எதிராக நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் ஏராளமானோர் காயமடைந்தனர்.இது தொடர்பாக 30 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தடியடியை கண்டித்து பொதுமக்கள் தொடர்ந்து

சென்னையில் பட்டப்பகலில் இளம்பெண் கத்தியால் குத்தி கொலை!
 வெறிச்செயலில் ஈடுபட்ட இளைஞரும் தற்கொலை!
சென்னையில் பட்டப்பகலில் கல்லூரி மாணவி கத்தியால் குத்தி கொல்லப்பட்டார். அவரை குத்திக்கொன்ற காதலனும் தன் வயிற்றில் கத்தியால் குத்திக்கொண்டதால் அவரும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

உதயகுமார் சரணடைய மறுப்பு
கூடன்குளம் அணுமின்நிலைய எதிர்ப்பு போராட்டக்குழு அமைப்பாளர் உதயகுமார் சரணடைய மறுப்பு தெரிவித்துள்ளார்.

எங்கள் போராட்டம் அறவழியில் தொடரும் : உதயகுமார்
கூடன்குளத்தில் நேற்றைய தினம் அணு உலை எதிர்ப்பாளர்களுக்கும், காவல்துறையினருக்கும் நடந்த வாக்குவாதத்திற்கு பின்பு, காவல்துறையினர் அந்த மக்கள் மீது கண்ணீர் புகைகுண்டுகள் வீசியும், தடியடி நடத்தியும் களைத்தனர்.


உலக தமிழர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்!
 பாடகர் உன்னி கிருஷ்ணன் பேட்டி!
இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் கொழும்பில் நடைபெற்றமுஸ்லிம் காங்கிரஸ்  கூட்டம் எந்த இறுதி முடிவும் எடுக்க முடியாத நிலையில் மீண்டும் நாளை கூடுவதென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணசபையில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் கொழும்பில் நடைபெற்ற கூட்டம் எந்த இறுதி முடிவும் எடுக்க முடியாத நிலையில்

கிழக்கு மாகாண சபைக்கு அண்மையில் தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாகாணசபை உறுப்பினர்களின் வீடுகளுக்கு நேற்றிரவு சென்ற சிலர் ஆளும் கட்சிக்கு ஆதரவளிக்க வேண்டும் என அச்சுறுத்தியுள்ளனர்.  

மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் தெரிவு செய்யப்பட்டவர்களின் வீடுகளுக்கு கொழும்பிலிருந்து ஜனாதிபதி செயலகத்திலிருந்து வந்திருக்கிறோம் என கூறிக்கொண்டு சிலர் சென்றுள்ளனர்.

தெரிவு செய்யப்பட்ட மாகாணசபை உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி செயலகத்திலிருந்து வந்தவர்களால் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்களை அடுத்து கிழக்கு மாகாணசபைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தெரிவுசெய்யப்பட்ட 11 உறுப்பினர்களும் திருகோணமலைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான அவசர கூட்டம் இன்று இரவு திருகோணமலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது. ஆர்.சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ்

மோசடிகள் இடம்பெறாவிட்டால் த.தே.கூ. 12 ஆசனங்களை பெற்றிருப்போம்- சம்பந்தன்

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் மக்கள் பலம் வாய்ந்த ஆணையை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தந்துள்ளனர். தமிழ் மக்கள் வழங்கிய ஜனாநாயகத் தீர்ப்புக்கு போதுமான மதிப்பு கொடுக்கப்பட வேண்டும். தவறினால் அதிகாரப்பகிர்வு மற்றும் ஜனநாயக நடைமுறையில்
அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முற்பட்ட மேலும் 53 பேர் திருகோணமலையில் கைது
அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாகச் செல்ல முற்பட்ட 53 பேர் இன்று அதிகாலை 1.45 மணியளவில் திருகோணமலை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை விவகாரம் தொடர்பிலான பிரேரணை ஒன்று ஐக்கிய அமெரிக்க பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த பிரேரணையின்படி இலங்கையின் தற்போதைய நிலை குறித்து அமெரிக்க பாராளுமன்றில் விவாதம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழீழ விடுதலைப் புலிகளினால் வவுனியா பிரதேசத்தில் புதைத்து வைக்கப்பட்ட பணம் 20 கோடி ரூபா பணம்  மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
பணத்தையும் ஆயுதங்களையும் தமிழீழ விடுதலைப் புலிகள் மிகவும் நுட்பமான முறையில் மறைத்து வைத்திருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

கொழும்பு, ஹவலொக் டவுனில் நிறுத்தி வைக்கப்பட்ட காரொன்றிலிருந்து சடலமொன்றை கண்டெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று மாலை 5 மணியளவில் எமக்கும் கிடைத்த தகவலொன்றின்படி கொழும்பு, ஹவலொக் டவுனில் அமைந்துள்ள தனியார் சுப்பர் மார்க்கெட் ஒன்றிற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிவப்பு நிற காரொன்றிலிருந்து ஆணொருவரின் சடலத்தை கண்டெடுத்தோம்.


தொழில் பறிபோனாலும் தொழிற்சங்கப் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது. 
முடிந்தால் தம்மை பணி நீக்கம் செய்து பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சவால் விடுத்துள்ளனர்
கடைசி டி20: ஒரு ஓட்டம் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்தது நியூசிலாந்து
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டியில், நியூசிலாந்து அணி 1 ஓட்டம் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஜனாதிபதி மகிந்த, பிரணாப் முகர்ஜி, மன்மோகன் சிங் ஆகியோரை எதிர்வரும் 20ம் திகதி சந்திப்பார்: பீரிஸ்
இந்தியாவுக்கான விஜயத்தினை மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, இந்திய புதிய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட பலரை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

11 செப்., 2012

அரசாங்கத்துடன் இணைந்து மு.கா. கிழக்கில்ஆட்சியமைத்தால் அது முஸ்லிம் சமூகத்துக்கு செய்யும் துரோகம்: அசாத்சாலி
அரசாங்கத்தோடு இணைந்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கில் ஆட்சி அமைக்குமென்றால் அது முஸ்லிம் சமூகத்திற்கு செய்யும் துரோகமாகும் ௭ன முன்னாள் கொழும்பு மாநகரசபை பிரதி மேயரும், கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிட்ட வேட்பாளருமான
கிழக்கில் மு.கா.வுடன் இணைந்து ஆட்சி: அரசாங்கம் அறிவிப்பு
கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிஸ் உடன் இணைந்து ஆளும் கட்சி ஆட்சி அமைக்கும். முதலமைச்சர் யார் என்பதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாற இறுதியில் அறிவிப்பார் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

தமிழோசையின் முன்னாள் துறைப் பொறுப்பாளரும் பிரபல ஒலிபரப்பாளருமான ஷங்கரன் சங்கரமூர்த்தி ஞாயிற்றுக்கிழமை லண்டன் மருத்துவமனை ஒன்றில் காலமானார்.
அந்தக் கம்பீரமான குரலை தமிழோசையின் நீண்ட நாள் நேயர்கள் மறந்திருக்க முடியாது.
சுமார் இரண்டரை தசாப்தங்கள் தமிழோசை மூலமாக வானலைகளில் உலகின் பல்வேறு மூலை முடுக்குகளிலிருந்தும் தமிழோசையைக் கேட்டு வந்த அந்தக்கால நேயர்களை மயக்கிய அந்தக் குரலுக்குச் சொந்தக்காரரான ஷங்கரன் சங்கரமூர்த்தி மறைந்துவிட்டார்.

10 செப்., 2012


கிழக்கு தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆசனங்கள் திட்டமிட்டு குறைக்கப்பட்டதாக கசிந்துள்ள தகவல்!
நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாண சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பே 15 ஆசனத்தை பெற்று அதிகப்படியாக திகழ இருந்தது. இதனை தடுத்து நிறுத்தும் நோக்குடன் ஜனாதிபதியின் அறிவித்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாக்குகள் குறைக்கப்பட்டது.

கிராமம் முன்னேற சன சமூக நிலையங்கள் தேவை: புங்குடுதீவில் துரை கணேசலிங்கம் தெரிவிப்பு
 புங்குடுதீவு அனைத்துலக ஒன்றியங்களின் ஒருங்கிணைப்பாளரும், உலகத் தமிழ்ப் பண்பாட்டியக்கத்தின் செயலாளர் நாயகமுமான துரை கணேசலிங்கம் அவர்கள் புங்குடுதீவு ஐங்கரன் சனசமூக நிலையத்தை திறந்து வைத்தார்.

கிழக்கில் ஆட்சி அதிகாரத்தை தருக!-தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை
இதற்கான உத்தியோகபூர்வ கடிதத்தை இரண்டு கட்சிகளும் நேற்று மாலை கிழக்கு மாகாண ஆளுநரிடம் கையளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை தமது தருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஐக்கிய தேசியக் கட்சியும் உத்தியோகபூர்வமாக கோரியுள்ளன.

கிழக்கில் ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோரும் கடிதம் ஆளுனரிடம் கையளிக்கப்படும்: மாவை சேனாதிராசா
கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோரும் கடிதத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று கிழக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்து நேரில் கையளிக்கவிருக்கின்றது.

கிழக்கில் ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோரும் கடிதம் ஆளுனரிடம் கையளிக்கப்படும்: மாவை சேனாதிராசா
கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோரும் கடிதத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று கிழக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்து நேரில் கையளிக்கவிருக்கின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சியமைக்குமாறு முஸ்லிம் புத்திஜீவிகள் பலரும் முஸ்லிம் காங்கிரசின் தலைமைக்கு வேண்டுகோள்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து ஆட்சியமைக்குமாறும் முஸ்லிம் காங்கிரஸ் முதலமைச்சர் பதவியை பெறுமாறும் கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் புத்திஜீவிகள் பலரும் முஸ்லிம் காங்கிரசின் தலைமைக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.


போலீஸ் துப்பாக்கிச் சூடு! திருச்செந்தூர் அருகே மீனவர் உயிரிழப்பு!

கிழக்கில் முஸ்லிம் கட்சிகள் கூட்டமைப்பாக போட்டியிட்டிருந்தால் கிழக்கில் முஸ்லிம்களே பெரும்பான்மையினர
கிழக்கு மாகாண தேர்தலில் பாரிய வெற்றியை எதிர்பார்த்த முஸ்லிம் காங்கிரஸ் தோல்வியையே அடைந்துள்ளதுடன் எமது கோரிக்கையை ஏற்று முஸ்லிம் கட்சிகள் கூட்டமைப்பாக போட்டியிட்டிருந்தால் கிழக்கில் முஸ்லிம்களே பெரும்பான்மையினர் என்பதை உலகுக்கு
மு. கா.முதலமைச்சருடன் கூட்டமைப்பு-முகா-ஐதேக ஆட்சி அமைய வேண்டும் : மனோ கணேசன்
கிழக்கு மாகாணத்தில் எதிரணிக்கு பெரும்பான்மை கிடைத்துள்ளது. இதை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆட்சியை வீழ்த்தும் பயணம் ஆரம்பிக்கப்பட வேண்டும். அதற்குப் பெருந்தன்மையுடன் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸுக்கு முதலமைச்சர் பதவியை வழங்க வேண்டும். இது கடந்த கால வரலாற்றுத்
வெற்றிபெற்றமாவட்டஉறுப்பினர்களைக்கலந்துரையாட கொழும்பு வருமாறு அழைப்பு
கிழக்கு மாகாண சபை ஆட்சியை அமைப்பது தொடர்பில் அரசாங்கமும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவத்துடன் தொடர்புகளை ஏற்படுத்தி ஆராய்ந்து வரும் நிலையில், கட்சியின் வெற்றிபெற்ற அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்ட உறுப்பினர்களை

மாகாணசபைத் தேர்தல்: மட். மாவட்டத்தில் மு.பா. உறுப்பினர்கள் உட்பட 10 பேர் தோல்வி
மட். மாவட்டத்தில் மாகாணசபைக்குத் தெரிவான 8 உறுப்பினர்கள் மற்றும் இரண்டு முன்னாள் பா. உறுப்பினர்கள் உட்பட 10 பேர் இம்முறை தோல்வியடைந்துள்ளனர்.
நடந்துமுடிந்த கிழக்கு மாகாணசபை தேர்தலில் கடந்த முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து
தியத்தலாவை இராணுவ முகாமில் மண் திட்டொன்று வீழந்து ஆறு இராணுவ வீரர்கள் பலி

தியத்தலாவை இராணுவ முகாமில் மண் திட்டொன்று இடிந்து வீழந்ததில் ஆறு இராணுவ வீரர்கள் பலியாகியுள்ளதுடன் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண வீரகேசரி இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
என்னை வீழ்த்த நினைத்த த.தே.கூ. க்கு மக்கள் தகுந்த பாடம்: சந்திரகாந்தன
பிள்ளையானை வீழ்த்த நினைத்த தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு மட்டக்களப்பு மக்கள் தகுந்த பாடம் கற்பித்துள்ளனர் என முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண சபையின் தலைமை வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளவருமான சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்துள்ளார்.

ad

ad