புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 செப்., 2012



வடக்கில் உள்ள இராணுவ முகாம்களை அகற்றுமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்திய அரசாங்கத்தின் மூலம் கோரிக்கை விடுத்தாலும், அங்குள்ள முகாம்களை அகற்றப்போவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட கூட்டமைப்பின் பிரதிநிதிகள் எதிர்வரும் 10 ம் திகதி இந்தியாவுக்கு சென்று, இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குடன் இது சம்பந்தமாக பேச்சு நடத்த உள்ளனர்.



அகதிகள் முகாம்களில் இருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு மத்திய அரசு, இந்திய குடியுரிமையைக் கட்டாயம் வழங்க வேண்டும். அவர்களுக்கு அனைத்து சுதந்திரமும் வழங்க வேண்டும். இவ்வாறு வாழும் கலை அமைப்பின் நிறுவுநர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் நேற்று இடம்பெற்ற கல்வியின் விழுமியங்களை மேம்படுத்துவது குறித்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கிழக்கு மாகாணசபை முதலாவது அமர்வு நாளை! பாதுகாப்பு இல்லாத போதும் கூட்டமைப்பினர் பங்குபற்ற முடிவு!
கிழக்கு மாகாண சபையின் முதலாவது அமர்வு நாளை திங்கட்கிழமை நடைபெறவிருக்கின்ற போதிலும், தெரிவான மாகாண சபை உறுப்பினர்களுக்கு இதுவரை பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை.
நியூயார்க் செல்கிறார் ஸ்டாலின். டெசோ மாநாட்டு தீர்மானத்தை ஐநா சபையில் கொடுக்கிறார்திமுக தலைவர் கலைஞர் தலைமையில் டெசோ உறுப்பினர்கள் கூட்டம் சென்னையில் அக்டோபர் 3ம் தேதி மீண்டும் நடைபெற உள்ளது.

ஜெ., சொத்துக் குவிப்பு வழக்கு  ஒத்திவைப்பு
தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அக்டோபர் 8ம்தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.
அம்பாறை மாவட்டத்தில், ஒலுவில் பிரதேசத்திலுள்ள கேசன்கேணி கிராம மக்களுக்கு மாற்றுக் காணிகளை வழங்காமல் அவர்களின் காணிகளை இராணுவ முகாம் அமைப்பதற்காக சுவீகரிக்கும் நடவடிக்கையை நிறுத்துமாறு உயர் நீதிமன்றம் அரசாங்கத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
கேசன்கேணி கிராமத்தைச் சேர்ந்த மக்களில் சிலர் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

அமைச்சரவை மாற்றத்தின் போது பிள்ளையான் கிழக்கு அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்படுவார்?
கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் சந்திரகாந்தன் என்ற பிள்ளையான், அடுத்த அமைச்சரவை மாற்றத்தின் போது அமைச்சராக நியமிக்கப்படுவார் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் பௌத்த மதத்தை நுழைக்கும் வகையில் தமிழ் - பௌத்த அறநெறிப்பாடசாலை ஒன்று நாளை யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்படவுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது.
யுத்தத்தின் பின்னர் யாழ். பழம் வீதியில் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் பௌத்த சங்கம், இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்துவதாக கூறிக்கொண்டு, மாணவர்களுக்கு சிங்கள வகுப்புக்களை நடத்திக்
ஜேர்மனியின் எல்லைப்பகுதியில் டென்மார்க் அருகே 28 வயது இளம்பெண் ஒருவர், தனக்கு பிறந்த ஐந்து சிசுக்களையும் பிறந்த உடனே கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் பெண்ணுக்கு ஏற்கெனவே எட்டு வயதிலும், பத்து வயதிலும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். எனவே இவர் இம்முடிவை எடுத்ததாக கூறியுள்ளார்.

தமிழீழத்தை கைவிடுங்கள்: நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு சில நாடுகள் அழுத்தம்!
ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாசையாகவுள்ள தமிழீழத்தினை கைவிடுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு சில சர்வதேச நாடுகள் கொடுக்கப்பட்ட அழுத்தம் தோல்வியில் முடிந்துள்ளது.

29 செப்., 2012


விஜய் நடித்த 'காவலன்' படத்தின் வெளியீட்டிற்கு தான் பிரச்னை எழுந்தது. ஆனால் 'துப்பாக்கி' படத்திற்கு தலைப்பே பெரும் பிரச்னையை ஏற்படுத்தி இருக்கிறது. 
'துப்பாக்கி' தலைப்பு பிரச்னையை ஒன்பதாவது முறையாக ஒத்திவைத்து இருக்கிறது சென்னை நீதிமன்றம். மும்பையில் அனைத்து படப்பிடிப்புகளையும் முடித்து விட்டு சென்னை திரும்பி இருக்கிறது 'துப்பாக்கி' படக்குழு.


சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் பயனுள்ள வகையில் கவனிக்கப்படவில்லை: ஐ.நா சபையில் கரன் பார்கர் அம்மையார்
இலங்கைத்தீவில் தமிழ் மக்களுக்கும் விடுதலை புலிகளுக்கும் எதிராக சிங்கள அரசினால் மேற்கொள்ளப்பட்ட பாரியளவிலான மனித உரிமைச் சட்ட மீறல்கள் பயனுள்ள முறையில் இன்னமும் கவனிக்கப்படாமல் உள்ளதென்பதனை ஐ.நா மனித உரிமைச்சபையோருக்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்

தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் கற்றுக் கொள்ளுங்கள்!
இன்றைய அரசியலில் பணம் , பதவி, மற்றும் இதர வாய்ப்புளுக்கு சோடை போகாத அரசியல் கட்சிகளையும் அரசியல்வாதிகளையும் காணுவது அரிதாகவே உள்ளது. இந்த வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சற்று எதிர் மறையாகவே உள்ளது எனலாம்.

ஆடையில் தீப்பற்றியதால் பரிதாபகரமாக உயிரிழந்த கர்ப்பிணித் தாய்: மன்னாரில் சம்பவம்
மன்னார், வெள்ளாங்குளம் பிரதேசத்தில் எட்டு மாத கர்ப்பிணித்தாய் ஒருவர் ஆடையில் தீப்பற்றியதால் பரிதாபகரமாக இன்று உயிரிழந்துள்ளார்.


விகடன்
டக்ளஸ்... பொலிஸ் கண்ணாமூச்சி! பொலிஸ் பதில் சொல்லுமா?

இந்தியாவில் 'குற்றவாளி’. இலங்கையில் 'அமைச்சர்’. அத்தகைய 'பெருமை’ டக்ளஸ் தேவானந்தாவுக்கு உண்டு!  டக்ளஸ் தேவானந்தா இப்போது, இலங்கை அமைச்சராக இருந்தாலும் தமிழகத்தில் 18 ஆண்டுகளாக தேடப்படும் குற்றவாளி.

தமிழக சட்டப்பேரவை சபாநாகயர் பதவியை ராஜினாமா செய்தார் டி.ஜெயக்குமார்!


தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் பதவியில் இருந்து டி.ஜெயக்குமார் ராஜினாமா செய்தார். பேரவைத் தலைவர் பணிகளை துணைத் தலைவர் தனபால் கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தம்புள்ள பள்ளிவாசலைச் சுற்றியுள்ள வீடுகள் மற்றும் கடைகளை அகற்றுமாறு உத்தரவு
தம்புள்ள பள்ளிவாசலைச் சுற்றியுள்ள சகல வீடுகளினதும் கடைகளினதும் உரிமையாளர்கள் அடுத்த மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் வெளியேற வேண்டுமென நகர அபிவிருத்தி அதிகார சபை உத்தரவிட்டுள்ளது.

வாழ்வாதாரத்திற்கு வழிதேடிச் சென்ற யாழ். திருவடிநிலை மக்களுக்கு ஒற்றுமையை சொல்லிக் கொடுத்த ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர்!
யாழ். மாதகல், திருவடிநிலை பகுதியில் படையினரால் கரையோரம் முழுவதும் விழுக்கப்பட்டுள்ள நிலையில் நீதி கேட்ட மக்களுக்கு நீதி சொல்லச் சென்ற ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அயல் கிராமத்து
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து, கடந்த சில தினங்களில் வடக்கில் பெருமளவும் போர் ஆயுதங்கள் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டிருப்பதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே பொலிஸார் மேற்படி விடயத்தை தெரியப்படுத்தியிருக்கின்றனர்.

பாலியல் தொழிலை இலங்கையில் சட்ட ரீதியாக்குமாறு கொழும்பு மாநகரசபை ஐதேக உறுப்பினர் கோரிக்கை!
இலங்கையில் நாட்டில் பாலியல் தொழிலை சட்ட ரீதியாக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாநகரசபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் நதில் மாலகொடவே இக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

ad

ad