புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 செப்., 2012


சட்டப்பேரவை முற்றுகை போராட்டத்தில் பங்கேற்பேன்: திருமாவளவன் பேச்ச

அணு உலையை மூட வலியுறுத்தி இடிந்தகரையில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் (29.09.2012) இதில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:- 

ராஜினாமா வாபசா? டைரக்டர் அமீர் அறிக்கை
டைரக்டர்கள் சங்க செயலாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த அமீர், நேற்று தனது ராஜினாமாவை வாபஸ் பெற்றுக் கொண்டதாக கூறப்பட்டது. ஆனால் அமீர், ராஜினாமாவை வாபஸ் பெறவில்லை என்று தெரிவித்தார்.

சீன சைக்கிள்கள் ஏற்றுமதி! ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையிடம் ஆட்சேபனை?
இலங்கையை மையமாகக்கொண்டு சீனாவின் சைக்கிள்கள் ஏற்றுமதி செய்யப்படுவதற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையிடம் தமது ஆட்சேபனையை வெளியிட்டுள்ளது.


வடக்கில் உள்ள இராணுவ முகாம்களை அகற்றுமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்திய அரசாங்கத்தின் மூலம் கோரிக்கை விடுத்தாலும், அங்குள்ள முகாம்களை அகற்றப்போவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட கூட்டமைப்பின் பிரதிநிதிகள் எதிர்வரும் 10 ம் திகதி இந்தியாவுக்கு சென்று, இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குடன் இது சம்பந்தமாக பேச்சு நடத்த உள்ளனர்.



அகதிகள் முகாம்களில் இருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு மத்திய அரசு, இந்திய குடியுரிமையைக் கட்டாயம் வழங்க வேண்டும். அவர்களுக்கு அனைத்து சுதந்திரமும் வழங்க வேண்டும். இவ்வாறு வாழும் கலை அமைப்பின் நிறுவுநர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் நேற்று இடம்பெற்ற கல்வியின் விழுமியங்களை மேம்படுத்துவது குறித்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கிழக்கு மாகாணசபை முதலாவது அமர்வு நாளை! பாதுகாப்பு இல்லாத போதும் கூட்டமைப்பினர் பங்குபற்ற முடிவு!
கிழக்கு மாகாண சபையின் முதலாவது அமர்வு நாளை திங்கட்கிழமை நடைபெறவிருக்கின்ற போதிலும், தெரிவான மாகாண சபை உறுப்பினர்களுக்கு இதுவரை பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை.
நியூயார்க் செல்கிறார் ஸ்டாலின். டெசோ மாநாட்டு தீர்மானத்தை ஐநா சபையில் கொடுக்கிறார்திமுக தலைவர் கலைஞர் தலைமையில் டெசோ உறுப்பினர்கள் கூட்டம் சென்னையில் அக்டோபர் 3ம் தேதி மீண்டும் நடைபெற உள்ளது.

ஜெ., சொத்துக் குவிப்பு வழக்கு  ஒத்திவைப்பு
தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அக்டோபர் 8ம்தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.
அம்பாறை மாவட்டத்தில், ஒலுவில் பிரதேசத்திலுள்ள கேசன்கேணி கிராம மக்களுக்கு மாற்றுக் காணிகளை வழங்காமல் அவர்களின் காணிகளை இராணுவ முகாம் அமைப்பதற்காக சுவீகரிக்கும் நடவடிக்கையை நிறுத்துமாறு உயர் நீதிமன்றம் அரசாங்கத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
கேசன்கேணி கிராமத்தைச் சேர்ந்த மக்களில் சிலர் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

அமைச்சரவை மாற்றத்தின் போது பிள்ளையான் கிழக்கு அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்படுவார்?
கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் சந்திரகாந்தன் என்ற பிள்ளையான், அடுத்த அமைச்சரவை மாற்றத்தின் போது அமைச்சராக நியமிக்கப்படுவார் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் பௌத்த மதத்தை நுழைக்கும் வகையில் தமிழ் - பௌத்த அறநெறிப்பாடசாலை ஒன்று நாளை யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்படவுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது.
யுத்தத்தின் பின்னர் யாழ். பழம் வீதியில் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் பௌத்த சங்கம், இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்துவதாக கூறிக்கொண்டு, மாணவர்களுக்கு சிங்கள வகுப்புக்களை நடத்திக்
ஜேர்மனியின் எல்லைப்பகுதியில் டென்மார்க் அருகே 28 வயது இளம்பெண் ஒருவர், தனக்கு பிறந்த ஐந்து சிசுக்களையும் பிறந்த உடனே கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் பெண்ணுக்கு ஏற்கெனவே எட்டு வயதிலும், பத்து வயதிலும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். எனவே இவர் இம்முடிவை எடுத்ததாக கூறியுள்ளார்.

தமிழீழத்தை கைவிடுங்கள்: நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு சில நாடுகள் அழுத்தம்!
ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாசையாகவுள்ள தமிழீழத்தினை கைவிடுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு சில சர்வதேச நாடுகள் கொடுக்கப்பட்ட அழுத்தம் தோல்வியில் முடிந்துள்ளது.

29 செப்., 2012


விஜய் நடித்த 'காவலன்' படத்தின் வெளியீட்டிற்கு தான் பிரச்னை எழுந்தது. ஆனால் 'துப்பாக்கி' படத்திற்கு தலைப்பே பெரும் பிரச்னையை ஏற்படுத்தி இருக்கிறது. 
'துப்பாக்கி' தலைப்பு பிரச்னையை ஒன்பதாவது முறையாக ஒத்திவைத்து இருக்கிறது சென்னை நீதிமன்றம். மும்பையில் அனைத்து படப்பிடிப்புகளையும் முடித்து விட்டு சென்னை திரும்பி இருக்கிறது 'துப்பாக்கி' படக்குழு.


சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் பயனுள்ள வகையில் கவனிக்கப்படவில்லை: ஐ.நா சபையில் கரன் பார்கர் அம்மையார்
இலங்கைத்தீவில் தமிழ் மக்களுக்கும் விடுதலை புலிகளுக்கும் எதிராக சிங்கள அரசினால் மேற்கொள்ளப்பட்ட பாரியளவிலான மனித உரிமைச் சட்ட மீறல்கள் பயனுள்ள முறையில் இன்னமும் கவனிக்கப்படாமல் உள்ளதென்பதனை ஐ.நா மனித உரிமைச்சபையோருக்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்

தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் கற்றுக் கொள்ளுங்கள்!
இன்றைய அரசியலில் பணம் , பதவி, மற்றும் இதர வாய்ப்புளுக்கு சோடை போகாத அரசியல் கட்சிகளையும் அரசியல்வாதிகளையும் காணுவது அரிதாகவே உள்ளது. இந்த வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சற்று எதிர் மறையாகவே உள்ளது எனலாம்.

ஆடையில் தீப்பற்றியதால் பரிதாபகரமாக உயிரிழந்த கர்ப்பிணித் தாய்: மன்னாரில் சம்பவம்
மன்னார், வெள்ளாங்குளம் பிரதேசத்தில் எட்டு மாத கர்ப்பிணித்தாய் ஒருவர் ஆடையில் தீப்பற்றியதால் பரிதாபகரமாக இன்று உயிரிழந்துள்ளார்.


விகடன்
டக்ளஸ்... பொலிஸ் கண்ணாமூச்சி! பொலிஸ் பதில் சொல்லுமா?

இந்தியாவில் 'குற்றவாளி’. இலங்கையில் 'அமைச்சர்’. அத்தகைய 'பெருமை’ டக்ளஸ் தேவானந்தாவுக்கு உண்டு!  டக்ளஸ் தேவானந்தா இப்போது, இலங்கை அமைச்சராக இருந்தாலும் தமிழகத்தில் 18 ஆண்டுகளாக தேடப்படும் குற்றவாளி.

தமிழக சட்டப்பேரவை சபாநாகயர் பதவியை ராஜினாமா செய்தார் டி.ஜெயக்குமார்!


தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் பதவியில் இருந்து டி.ஜெயக்குமார் ராஜினாமா செய்தார். பேரவைத் தலைவர் பணிகளை துணைத் தலைவர் தனபால் கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தம்புள்ள பள்ளிவாசலைச் சுற்றியுள்ள வீடுகள் மற்றும் கடைகளை அகற்றுமாறு உத்தரவு
தம்புள்ள பள்ளிவாசலைச் சுற்றியுள்ள சகல வீடுகளினதும் கடைகளினதும் உரிமையாளர்கள் அடுத்த மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் வெளியேற வேண்டுமென நகர அபிவிருத்தி அதிகார சபை உத்தரவிட்டுள்ளது.

வாழ்வாதாரத்திற்கு வழிதேடிச் சென்ற யாழ். திருவடிநிலை மக்களுக்கு ஒற்றுமையை சொல்லிக் கொடுத்த ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர்!
யாழ். மாதகல், திருவடிநிலை பகுதியில் படையினரால் கரையோரம் முழுவதும் விழுக்கப்பட்டுள்ள நிலையில் நீதி கேட்ட மக்களுக்கு நீதி சொல்லச் சென்ற ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அயல் கிராமத்து
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து, கடந்த சில தினங்களில் வடக்கில் பெருமளவும் போர் ஆயுதங்கள் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டிருப்பதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே பொலிஸார் மேற்படி விடயத்தை தெரியப்படுத்தியிருக்கின்றனர்.

பாலியல் தொழிலை இலங்கையில் சட்ட ரீதியாக்குமாறு கொழும்பு மாநகரசபை ஐதேக உறுப்பினர் கோரிக்கை!
இலங்கையில் நாட்டில் பாலியல் தொழிலை சட்ட ரீதியாக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாநகரசபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் நதில் மாலகொடவே இக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது அவுஸ்திரேலியா
டி20 உலக கிண்ண தொடரின் சூப்பர்-8 பிரிவில் இன்றைய போட்டியில், இந்திய அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது அவுஸ்திரேலியா.

இலங்கை இந்திய நாடுகளில் இருந்து விபச்சாரத்துக்காக டுபாய்க்கு பெண்கள் கடத்தல்
இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து பெண்களை துபாய்க்கு அனுப்பி அங்கு மேற்கொள்ளப்பட்டு வந்த விபச்சார வர்த்தக செயற்பாடு ஒன்று குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

28 செப்., 2012


கூட்டமைப்பை ஆதரிக்காமை மு.கா. செய்த பெரும் துரோகம்; கொழும்பு மேயர் முஸம்மில் குற்றச்சாட்டு
 கிழக்கில் முதலமைச்சர் பதவியுடன் ஏனைய அமைச்சுப் பதவிகளையும் நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் என எதுவித நிபந்தனைகளும் இன்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் தரப்பினருக்கு அழைப்பு விடுத்தது.
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றால், என் ஆடைகளை துறக்க தயார் என்று பிரபல பொப் பாடகி மடோனா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வாஷிங்டனில் கடந்த 24ஆம் திகதி இரவு பொப் பாடகி மடோனாவின் இசை நிகழ்ச்சி

விடுதலைப் புலிகளின் தடை மீதான தீர்ப்பாய விசாரணையில் வைகோ பங்கேற்பார்!
விடுதலைப் புலிகளின் தடை மீதான சட்டத் தீர்ப்பாயத்தின் விசாரணையில் வைகோ பங்கேற்பார் என்று மதிமுக செய்தி வெளியிட்டுள்ளது.

பசில் ராஜபக்சவை கல்வி அமைச்சராக நியமிக்க ஜனாதிபதி தீர்மானம்?
கல்வி அமைச்சுப் பொறுப்பை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது சகோதரரும், தற்போதைய பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஸில் ராஜபக்சவுக்கு வழங்கத் தீர்மானித்துள்ளதாக நம்பகரமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கும் ஜனாதிபதிக்குமிடையில் முரண்பாடு
அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்குமிடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஜனாதிபதி அழைப்பு
தமிழ் தேசிய கூட்டமைப்பை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து கொள்ளுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.

பிள்ளையான் ஆறாயிரத்துக்கும் குறைவான வாக்குகளையே பெற்றதாக கருணா குற்றச்சாட்டு!
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு ஆறாயிரத்துக்கும் குறைவான வாக்குகளை

விருப்பு வாக்கு முறைமையில் திருத்தம் கொண்டு வரும் சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்: ஜனாதிபதி
விருப்பு வாக்கு முறைமையில் திருத்தம் கொண்டு வரும் சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

“எமது கிராமங்களில் இருந்து இராணுவமே வெளியேறு”: கிளிநொச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்
பொதுமக்களுடைய நிலத்தை ஆக்கிரமித்திருக்கும் படையினரை அங்கிருந்து வெளியேறுமாறு வலியுறுத்தியும், வடக்கில் மக்களுடைய நிலங்களில் ஆக்கிரமித்திருக்கும் படையினர்

 Points Srilanka 2  Newzealand 0
Match tied (Sri Lanka won the one-over eliminator)
டில்சான் அதிரடி: பரபரப்பான போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தியது இலங்கை
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான பரபரப்பான போட்டி சமநிலையில் முடிவடைந்ததையடுத்து சுப்பர் ஓவர் முறையில் இலங்கை அணி திரில் வெற்றி பெற்றது.

27 செப்., 2012


மாற்றான் திரைப்படத்தின் ரிலிஸ் தேதி தற்போது உறுதி படுத்தப்பட்டுள்ளது. இத்திரைப்படம் அக்டோபர் 12ம் தேதி ரிலிஸ் செய்யப்படுகிறது. 
சூர்யா நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் மாற்றான். இப்படத்தில் சூர்யா ஒட்டிப்பிறந்த இரட்டையர்

திமுகவுக்கு மேலும் மத்திய அமைச்சர் பதவி : கருணாநிதி மறுப்பு

: மத்திய அமைச்சரவையில் இருந்து திரிணமூல் காங்கிரஸ் விலகியதை அடுத்து மத்தியில் அமைச்சரவை மாற்றம் நடைபெற உள்ள நிலையில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 2 அமைச்சர் பதவிகள் வழங்கப்படும் என்ற பிரதமரின் அழைப்புக்கு கருணாநிதி
சூப்பர் 8 சுற்று நாளை தொடக்கம்: இலங்கை அணியை நியூசிலாந்து சமாளிக்குமா
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற்று வருகிறது. நேற்றுடன் லீக் ஆட்டம் முடிந்தது. லீக் முடிவில் இங்கிலாந்து, இந்தியா (ஏபிரிவு),
நடிகை ரோகிணி டைரக்டராகிறார். 
இவர் தமிழில் மகளிர் மட்டும், ஆசை, '3' விருமாண்டி, 'ஐயா', 'வாமணன்' போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளார். 

தா.பாண்டியன் இல்லத்திற்கு சென்று ஜெ. நேரில் வாழ்த்து!



கொல்கத்தாவில்  
அரசியல்வாதி கண்முன் 
நடிகை ஆடைகளை அவிழ்த்து பலாத்கார முயற்சி


சந்தர்நாகூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பிரபல நடிகையும், மாடல் அழகியுமான அரிதி பட்டாச்சார்யா வசித்து வரு கிறார். இவர் 2002ம் ஆண்டு நடந்த மிஸ் இந்தியா
வீட்டில் எடுத்த 12 ஆயிரம் ரூபாவுடன் திருமலை செல்லத் தயாரான 3 சிறுவர் வியாழன் இரவு பஸ் நிலையத்தில் மாட்டினர் சம்பவம் தொடர்பாக யாழ். பொலிஸார் விசாரணை
 வீட்டில் இருந்த 12 ஆயிரம் ரூபா பணத்தை எடுத்துக் கொண்டு திருகோணமலை செல்லும் பஸ்ஸில் பயணிக்க முயன்ற 10, 11 வயதை உடைய சிறுவர்கள் மூவர் அங்கிருந்தவர்களால் பிடிக்கப்பட்டு யாழ்.பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
அடேலையும் போர்க்குற்ற விசாரணை செய்யுங்கள்; பிரிட்டனுக்கு இலங்கை கோரிக்கை
அடேல் பாலசிங்கத்திற்கு எதிராக பேர் குற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரித்தானியாவிடம் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கேப்பாபிலவு மக்களுக்கு உடனடி தீர்வு வழங்குக; இலங்கை அரசிடம் வலியுறுத்தியது ஐ.நா.
சொந்த இடங்களுக்கு செல்ல முடியாமல் நிர்க்கதியாகி உள்ள கேப்பாபிலவு மக்கள் குறித்து உடன் கவனம் செலுத்தி அவர்களுக்கான தீர்வை வழங்குமாறு அரசிடம் கோரியிருக்கிறது ஐ.நா.

520 பக்கற் ஹொரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் டெகிவளையில் கைது

ஹெரோயின் போதைப்பொருள் அடங்கிய 520 பக்கற்றுகளுடன் பெண்ணொருவர் டெகிவளையில் கைது செய்யப்பட்டுள்ளார். அண்மைக்காலத்தில் ஒரே தடவையில் பெருந்தொகையான போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவங்களில் இதுவும் ஒன்றாகும் என

முல்லைத்தீவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மீட்பு
முல்லைத்தீவு வெள்ளாம்முள்ளிவாய்க்கால் பகுதியில் ஒரு தொகை ஆயுதங்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளதாக லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது.

கிளிநொச்சியில் புலமைப்பரிசில் பரீட்சையில் மூவர் முதலிடம் - பா.உ.சிறிதரன் வாழ்த்து
கிளிநொச்சி மாவட்ட மட்டத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் முதலிடம் பெற்ற மூன்று மாணவர்களுக்கும் பா.உறுப்பினர் சி.சிறீதரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 தொழிற்சங்கப் போராட்டத்தை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய தொழிற்சங்க மத்திய நிலையம் எச்சரிக்கை.
எதிர்வரும் வரவு செலவு திட்டத்திற்கு முன்பதாக அரச ஊழியர்களின் சம்பளம் ரூபா 13,442.50 சதத்தால் அதிகரிக்கப்படாவிட்டõல் தொழிற்சங்கப் போராட்டத்தை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக
தலவாக்கலை - லிந்துலை பிரதான பாதையில் பெயார்வெல் தோட்டத்துக்கு அருகில் பாதையோரத்தில் தென்பட்ட சுரங்கம் போன்ற பகுதியைப் பொதுமக்கள் பார்வையிடுவதில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

பத்தடி உயரமான இந்தச்சுரங்கம் போன்ற பகுதி இயற்கையின் தோற்றமெனத் தொல்பொருளியல் ஆய்வாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

27 பைக்கற் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைதான இலங்கையைச் சேர்ந்த விமானப் பணிப்பெண்
27 பைக்கற் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைதான இலங்கையைச் சேர்ந்த விமானப் பணிப்பெண்ணொருவரை அடுத்த மாதம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் இன்று உத்தரவிட்டார். 

26 செப்., 2012



புதிய இசைச் சாதனை படைத்த பவதாரனியின் பாரதி கலைக் கோயில் குழுவினருக்கு கனடிய மக்கள் மகுடம்
 பெருந்
திரளான மக்களின் பாட்டொலிகளுடனும் , ஆடலுடனும் நேற்று நண்பகல் 1 மணியளவில் பவதாரனியின் பாரதி கலைக் கோயில் குழுவினரின் 48 மணி நேர இடைவிடாத

25 செப்., 2012


அழகிரி வேறு, ஸ்டாலின் வேறு அல்ல! மதுரை திமுக நிர்வாகிகள் மத்தியில் கலைஞர் பேச்சு!
24.09.2012 அன்று அண்ணா அறிவாலயத்தில் மதுரை மாநகர் மாவட்டக் கழகத் தோழர்கள் மத்தியில் திமுக தலைவர் கலைஞர் பேசுகையில், 
5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை: காலி ரிச்சமன்ட் கல்லூரி, தலாத்துஓயா கனிஷ்ட வித்தியாலய மாணவர்கள் முதலிடம5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை: காலி ரிச்சமன்ட் கல்லூரி, தலாத்துஓயா கனிஷ்ட வித்தியாலய மாணவர்கள் முதலிடம்கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்று வெளியான நிலையில் பெறுபேறுகளின் அடிப்படையில் காலி ரிச்மன்ட் கல்லூரி மாணவனான கே.எஸ்.

புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ்.இந்துக் கல்லூரி மாணவன் முதலிடம்!
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ். இந்து கல்லூரி ஆரம்ப பாடசாலை மாணவன் பாலேந்திரன் அபிராம் யாழ். மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.

பிள்ளையானுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படக் கூடிய சாத்தியம்
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

யாழ். கொக்குவிலைச் சேர்ந்த இளம்பெண்ணைக் காணவில்லை: பொலிஸில் முறைப்பாடு
யாழ். கொக்குவில் பிரதேசத்தைச் சேர்ந்த இளம் பெண்ணொருவர் காணாமற் போயுள்ளதாக இன்று யாழ்.பொலிஸ் நிலையத்தில் அவரது உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளதாக யாழ்.பொலிஸார்

பிரிட்டனிலிருந்து மேலும் 600 இலங்கையர் திருப்பி அனுப்பப்படவுள்ளனர்!
பிரித்தானியாவில் தஞ்சமடைந்து புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 600  இலங்கையரை திருப்பி அனுப்ப  அந்நாட்டு அரசாங்கம்  தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

திமுக தலைவர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது?
திமுக தலைவரான கருணாநிதிக்கு இந்திய நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும் என்று கோரிக்கை திமுக தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசும் இது குறித்து பரிசீலிக்க

வெள்ளவத்தையில் நடத்தப்பட்டு வந்த விபசாரவிடுதிக்கும் மேர்வின் சில்வாவுக்கும் தொடர்பு

அமைச்சர் மேர்வின் சில்வாவின் இணைப்பாளரால் வெள்ளவத்தையில் நடத்தப்பட்டு வந்திருக்கின்ற விபச்சார விடுதியே ஊழல்கள் மற்றும் இலஞ்சங்கள் ஆகியவற்றுக்கு எதிரான விசேட பொலிஸ் குழுவால் கடந்த

நுவரெலியாவில் குழந்தையை பெற்று காணில் வீசிய 18 வயது பாடசாலை மாணவி

தெரணியகல – உடபாகே தோட்ட மத்திய பகுதி லயன் ஒன்றின் காணில் இருந்து சிசுவொன்று தெரணியகல பொலிஸாரால் நேற்று காலை மீட்கப்பட்டுள்ளது.

TWENTY WORLD CUP POINTS TABLE

Group A
TeamsMatWonLostTiedN/RPtsNet RRForAgainst
India220004+2.825329/40.0216/40.0
England211002+0.650276/40.0250/40.0
Afghanistan202000-3.475216/40.0355/40.0

நடப்புச் சம்பியனை வீழ்த்திய இந்தியா 90 ஓட்டங்களால் அபார வெற்றி
இந்திய அணி நிர்ணயித்த 171 என்ற ஓட்ட இலக்கை அடைய முடியாத நடப்புச் சம்பியனான இங்கிலாந்து அணியை இந்திய அணி 90 ஓட்டங்களால் வெற்றிகொண்டது.
 


இருபது-20 உலகக் கிண்ண தொடரில் ஏ பிரிவில் இன்று இடம்பெற்ற லீக் போட்டியில் முன்னாள் சம்பியன் இந்தியாவும், நடப்புச் சம்பியன் அணி இங்கிலாந்தும் கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின.

அயர்லாந்து மேற்கிந்திய போட்டி மழையால் பாதிப்பு: சுப்பர்8 சுற்றுக்குள் நுழைந்தது மேற்கிந்திய அணி
 




மேற்கிந்திய தீவுகள் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி மழை காரணமாக முடிவு எட்டப்படாது கைவிடப்பட்டது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் தலா ஒவ்வொரு புள்ளிகள் வழங்கப்பட தனது குழுவில் ஓட்ட சராசரி விகிதத்தில் அயர்லாந்தை விட முன்னிலை பெற்ற மேற்கிந்திய தீவுகள்
வடமத்திய, சப்ரகமுவ மாகாணங்களின் முதலமைச்சர்கள் பதவியேற்பு
வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கான முதலமைச்சர்கள் இன்று காலை ஜனாதிபதி மஹிந்த ரஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.
வடமத்திய மாகாண முதலமைச்சராக எஸ்.எம்.ரஞ்சித்தும், சப்ரகமுவ மாகாண முதலமைச்சராக மஹிபால ஹேரத்தும் பதவியேற்றுள்ளனர்.
 
மாலினி பொன்சேகாவின் ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்க மறுப்பு
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாலினி பொன்சேகாவின் ராஜினாமாக் கடிதத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்க மறுத்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் ஒக்டோபர் மாத முதல் வாரத்தின் இறுதிப்பகுதியில் டில்லிக்கு விஜயம் செய்யவுள்ளது. 
இவ் விஜயமானது இந்திய மத்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே இடம்பெறவுள்ளதாக கூட்டமைப்பு வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது .

இக்குழுவினர் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை அங்கு சந்தித்து சமகால அரசியல் நிலைமை,அரசியல் தீர்வு மற்றும் வடக்கில் இராணுவப் பிரசன்னம் உட்பட பல முக்கிய விடயங்கள்; குறித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளனர்
இலங்கையின் 18ஆவது கடற்படைத்தளபதியாக ரியர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே ஜனாதிபதி மகிந்த ராஜபக்~வினால் நியமிக்கப்பட்டுள்ளார். 

இதேவேளை,இதுவரை காலமும் கடற்படைத் தளபதியாக பதவிவகித்த வைஸ் அட்மிரல் சோமதிலக திசாநாயக அட்மிரல் நிலைக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக கடற்படைத் தலைமையகம் அறிவித்துள்ளது.

யாழ். நெடுந்தீவிற்கு பா.உ சி.சிறீதரன் விஜயம்: மக்களின் நிலைமைகள் குறித்து ஆராய்வ
யாழ்.நெடுந்தீவிற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் விஜயம் செய்து, பொதுமக்கள், திணைக்கள அதிகாரிகள்  மற்றும் வர்த்தகர்களை சந்தித்து நெடுந்தீவின் நிலைமை

24 செப்., 2012


கண்டி, பல்லேகல விளையாட்டு மைதானத்துக்கு சூட்டப்பட்டிருந்த மலையகத்தின் புகழ் பெற்ற சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் பெயர் தற்போது பாவனையில் இல்லாதிருப்பதாக மத்திய மாகாண சபை உறுப்பினர் எஸ்.ராஜரட்ணம் விசனம் தெரிவித்துள்ளார்.
மத்திய மாகாண சபை அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு விசனம் தெரிவித்துள்ளார். 


ஆயுதங்களும், போர்களும் அபாயம் மிகுந்தது : ஐ.நா.சபையில் ஐஸ்வர்யாராய் பேச்சு 

 உலக அமைதிக்காக பாடுபட்ட தலைவர்களின் நினைவாக ஐ.நா.சபையில் விழா நடந்தது. அதில் முன்னாள் உலக அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய் கலந்து கொண்டார். இதற்காக

200 விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.சென்னையில் 200 விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.
பிரமாண்டமான, 200 விநாயகர் சிலைகள், போலீஸ் பாதுகாப்புடன் கடலில் கரைக்கப்பட்டன.விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, வைக்கப்பட்டிருந்த சிலைகளை கடலில் கரைப்பதற்காக, காசிமேடு மீன்பிடித் துறைமுகம், திருவொற்றியூர் பாப்புல

சென்னை கலவரம் : 500 பெண்கள் சாலை மறியலால் பதட்டம்
சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகர் கலவரத்தால் கத்திவாக்கம் நெடுஞ்சாலையில்  500 பெண்கள் குவிந்தனர்.  சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

விநாயகர் ஊர்வலத்தில் இரு பிரிவினரால் கலவரம் :இந்து முன்னணி பிரமுகர் மண்டை உடைப்பு
சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகரில் கலவரம் வெடித்தது.  தொண்டர் மண்டை உடைந்தது. 

புரளிகளை நம்ப வேண்டாம்: நடிகர் கமல்ஹாசன் அறிக்கை
விஸ்வரூபம் படம் திரைக்கு வருவது தொடர்பான புரளிகளை நம்ப வேண்டாம்'' என்று நடிகர் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

தமிழனின் ரத்தக்கறை படிந்த ராஜபக்சே பாழ்க்கரங்களால் அடிக்கல் நாட்டப்பட்டது, புத்தருக்கே அவமானம்: தமிழக பாஜக
புத்தர் பெயரில் அமைந்த பல்கலைக்கழகத்திற்கு இலங்கை அதிபர் ராஜபக்சே அடிக்கல் நாட்டியிருப்பது புத்தருக்கே அவமானம் என்று தமிழக பாரதீய ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

தனித்தமிழ் ஈழம் அமைவதை எவராலும்தடுக்க முடியாது :அப்துல் கலாமின் ஆலோசகர் 
 முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் ஆலோசகர் வி.பொன்ராஜ்,  இந்தியா- அமெரிக்காவில் உள்ளது போல் ஜனநாயக முறையை இலங்கை கொண்டுவரவில்லை என்றால், தனித்தமிழ் ஈழம் அமைவதை எவராலும் தடுக்க முடியாது. அந்த தனி ஈழ நாடு இந்தியாவின் உண்மையான நட்பு நாடாக திகழும் என்றுகூறியுள்ளார்.

காங்.கூட்டணி 300 எம்.பி.க்களின் ஆதரவு உள்ளது: குலாம் நபி ஆசாத்
குலாம்நபி ஆசாத்,  ஜம்மு நகரில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர்,   ‘’தேசத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்த ஒவ்வொரு நாடும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம் ஆகிறது. 

அமெரிக்காவின் புதிய நகர்வு! தப்பாகிப்போன இலங்கை அரசின் கணிப்பு!
இலங்கையின் அரசியல் போக்கு அமெரிக்காவுக்குத் திருப்தியைக் கொடுக்கவில்லை ௭ன்பதை, அந்த நாட்டின் அண்மைய நகர்வுகளில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது. கிழக்கு மாகாணசபைக்கான தேர்தல் முடிந்தவுடன், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச்செயலர் றொபேட்

கிழக்கில் மு.காங்கிரஸின் முதலமைச்சர் இரண்டரை வருடம் பதவி வகிப்பார்! மீறினால் பாரதூர விளைவுகள் ஏற்படும்: ஹசன் அலி
கிழக்கு மாகாணசபையில் இரண்டாவது பகுதி பதவிக்காலத்துக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவரே முதலமைச்சராக பதவி வகிப்பார். இவ் உடன்பாடு மீறப்படுமாயின் பாரதூரமான

இலங்கை தொடர்பான அறிக்கை ஐ.நாவில் சமர்ப்பிக்கப்பட்டால் பீரிஸ் பதவி விலகவேண்டும்: தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பிரதிநிதிகள் குழு, இலங்கை தொடர்பான அறிக்கையை எதிர்வரும் ஐக்கிய நாடுகள் சபையின் பொது சபைக்கூட்டத்தில் சமர்ப்பிக்குமாக இருந்தால், வெளியுறவுத்துறை



கருவறையில் செந்தமிழ் : சுவிட்சர்லாந்து உலக சைவத் தமிழ் மாநாட்டில் தீர்மானம்
சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக சைவத் தமிழ் மாநாட்டில் உலகம் முழுவதிலும் இருந்து சைவப் பெரியோர்களும், ஆன்மீக அறிஞர்களும் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் சைவத்தமிழ்த் திருக்கோவில்களில் கருவறையில் செந்தமிழ்த் திருமறை

23 செப்., 2012



ஜெனீவாவில் பொங்கியெழுந்த ஐரோப்பா வாழ் தமிழர்களின் பேரெழுச்சியும் மீளெழுச்சியும்
ஜெனீவா ஐ.நா சபை முன்பாக முருகதாசன் திடலில் இடம்பெற்ற பொங்குதமிழ் 2012 நிகழ்வில் ஐரோப்பிய தேசமெங்குமிருந்தும் வருகை தந்த பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் பேரெழுச்சியுடன் கலந்து

யாழ். மாவட்டத்தில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 150 பேர் கைது
யாழ். மாவட்டத்தில் கடந்த வாரம் பல்வேறு குற்றச் செயல்களுடனும் தொடர்புடையவர்கள் என்று கருதப்பட்ட நூற்றைம்பதுக்கும் மேற்பட்டவர்கள் பொலிஸாரால் பிடிக்கப்பட்டு நீதிமன்றங்களில்

மு.கா.சுயதேவைகளைப் பூர்த்தி செய்யமக்கள் ஆணையைத் துச்சமென மதித்து விட்டது: சம்பந்தன்
துணிச்சலாகவும், சுதந்திரமாகவும் செயல்படுவதற்கான ஜனநாயக ரீதியான பலமான ஒரு நிலையை கிழக்கு தேர்தலில் மக்கள் ஏற்படுத்தி தந்திருந்த போதிலும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சுய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக மக்களின் ஆணையை துச்சமாக மதித்து அரசுடன்
KOODANKULAM PHOTOS
மக்கள் தமது மறுக்கப்பட்ட உரிமைகளுக்காக ஜனநாயக வழியில் கூட போராட முடியாத ஓர் நிலையையே இந்த அரசாங்கம் தோற்றுவித்திருக்கின்றது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்திருக்கின்றார்.
அதேவேளை நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை கண்டித்து முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை குழப்பும் முகமாக கழிவுப்பொருட்களை வீசியிருக்கின்றமையானது மனித


அவுஸ்திரேலியாவுக்கு படகில் சென்ற 180 பேர் கடற்படையிரால் மீட்பு! கிறிஸ்மஸ் தீவுக்கு அனுப்பி வைப்பு
அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக சென்ற 180 பேர் இன்று சனிக்கிழமை இந்தோனேசிய கடல் எல்லையில் வைத்து அவுஸ்திரேலிய கடற்படை மற்றும் ஏனைய கப்பல்களால் மீட்கப்பட்டனர்

வடபகுதியில் பாதிக்கப்பட்ட இளைஞர் மற்றும் யுவதிகளுடன் கலந்துரையாடிய அமெரிக்க தூதுவர் சிசன்
உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான புதிய அமெரிக்க தூதுவர் மைக்கல் சிஸன் வடமாகாணத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர் யுவதிகள் மற்றும்

ad

ad