புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 அக்., 2012


கனேடிய அமைச்சரால் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்ட ஈழத் தமிழர்கள்! (பட இணைப்பு)


பிரித்தானிய ராணி இரண்டாம் எலிசபத் பதவி ஏற்று 60 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் விதமாக 60000 கனேடிய மக்களுக்கு Diamond Jubilee விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
இதில் ஒன்ராறியோவைச் சேர்ந்த 14 பேருக்கு கடந்த ஞாயிற்றுக் கிழமை வைர விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.


திருப்பதிக்கு அதிக எண்ணிக்கையில் வருகை தரும் தமிழக பக்தர்களை கெளரவிக்கும் விதமாக திருப்பதி தேவஸ்தானம் அமைப்பு பிரம்மோஸ்தவப் பாடல்களை அழகு தமிழில் வெளியிட்டுள்ளது.திருப்பதியில் பிரம்மோஸ்தவம் வெகுவிமரிசையாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் திரையுலகின் மூத்த கவிஞர் வாலி எழுதிய முத்தான பத்து

காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்

kannadasanகவியரசர் கண்ணதாசன் இன்றைய தமிழக மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் வாழக் கூடிய கவிஞர்கள், எழுத்தாளர்கள், அறிஞர்கள் பெருந்தலைவர்கள் அனைவரும் போற்றி நிற்கும் மாபெரும்  கவிஞர் தனது சொந்த அனுபவங்களை வாழ்க்கையில் தான் அனுபவித்த இன்ப துன்பங்களை திரையிசைப் பாடல்கள் மூலம் வெளிப்படுத்திய மாபெரும் கவிஞர். இன்றும் அவரது திரையிசைப் பாடல்களை வானொலியில், காண் ஒளியில் நாம் கேட்டும் பார்த்தும் மகிழ்கின்றோம். எமது வாழ்வில் சோதனையும் வேதனையும்  வரும் போது கவியரசரின் தத்துவப்

பாலைவனத்தில ஆடை மாற்றிய இலியானா! (வீடியோ இணைப்பு)

அண்மையில் வெளிவந்து சக்கை போடு போட்ட நண்பன் திரைப்படத்தில் நடித்த இலயானாவை முன்பிருந்தே அறியாதவர்கள் இருக்க முடியாது. இவர் திரையுலகின் மெல்லியை அழகி என சிம்ரனிற்கு நிகராகப் பெயர் பெற்றவர்.

18 அக்., 2012


சிங்கப்பூர், ஐரோப்பிய பாணியில் கொழும்பில் அதி நவீன வீதி போக்குவரத்து நடைமுறை

சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகளைப் போன்று அதி நவீன வீதி போக்குவரத்து நடைமுறையை கொழும்பிலும், அதன் அயல் நகரங்களிலும் முன்னெடுக்க இலங்கையின் போக்குவரத்து அமைச்சு பாரிய திட்டங்களை வகுத்துள்ளது.
யுத்தம் முடிவுற்ற பின்னர் கொழும்பு வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதனால் இத்திட்டம் அதிக முக்கியத்துவம் பெறுவதுடன் வாகன நெரிசல் விபத்துக்கள்

துரை தயாநிதியை கைது செய்ய நவம்பர் 2-ம் தேதி வரை தடை: மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு
துரை தயாநிதியை கைது செய்ய நவம்பர் 2-ம் தேதி வரை தடை: மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரையில் ஒலிம்பஸ் கிரானைட் 

கிரானைட் கற்களை வெட்டி எடுத்து கடத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.   
இதையடுத்து துரை தயாநிதி தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதால்,


கலைஞர் நேரில் ஆஜராக செசன்சு கோர்ட் சம்மன்
தமிழக அமைச்சர்கள் தொடர்ந்த அவதூறு வழக்குகளுக்காக, டிசம்பர் 18–ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று திமுக தலைவர் கலைஞருக்கு சம்மன் அனுப்பி சென்னை மாவட்ட செசன்சு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 

மதுரை ஆதீன பொறுப்பில் இருந்து நித்தி ராஜினாமாவா?
நித்தியானந்தா மதுரை ஆதீன மடத்தின் இளைய மடாதிபதியாக நியமிக்கப்பட்டதில் இருந்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.   அவர் அடுத்த மதுரை ஆதீனம் ஆகக்கூடாது என்று பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

மதுரை ஆதீன மடத்தை அரசிடம் ஒப்படைக்கக் கோரிக்கை
இந்து அறநிலையத்துறை ஆணையர் தனபால் சார்பில் மதுரை மாவட்ட முதன்மை சார்பு நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.மதுரை ஆதீன மடத்தின் இளைய பட்டமாக நியமனம் செய்யப்பட்ட நித்தியானந்தாவின் நியமனம் செல்லாது என்று தமிழக

16 ஆண்டாக படுக்கையில் இருக்கும் வாலிபரை காதலித்து மணந்த இளம்பெண் 
தக்கலை மருதூர்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ் உல்லியம். கூலி தொழிலாளி. இவரது மனைவி அன்னம்மாள். இவர்களுக்கு கடந்த 26 ஆண்டுகளுக்கு முன்பு  விஜயகுமார், ஜெயகுமார் என்ற இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர். 10-வது வயதில் விஜயகுமார், ஜெயகுமாரை மர்ம நோய் தாக்கி இருவரும் படுத்த படுக்கையானார்கள்.  


6 பேர் கொண்ட கும்பல் என்னை இணையதளத்தில் அசிங்கப்படுத்துகிறது : பாடகி சின்மயி பரபரப்பு புகார்


’சர சர சார காத்து’ பாடல் இன்னனும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.   வாகைச்சூடவா படத்தில் வரும் இந்தப்பாடலை பாடியவர் பாடகி சின்மயி.   'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில் வரும் 'ஒரு தெய்வம் தந்த பூவே' பாடல் மூலம் சினிமாவில் பாடகியாக அறிமுகமானவர் சின்மயி. தொடர்ந்து 7 மொழிகளில் 600-க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடி முன்னணி பாடகியாக இருக்கிறார்.
தமிழ் சொந்தங்கள் செத்து விழுந்த போது இளையராஜா குரல் கொடுக்கவில்லை; சீமான் குற்றச்சாட்டு
தமிழ் சொந்தங்கள் செத்து விழுந்த போது உணவுக்கோ, மருந்துக்கோ, துணிக்கோ இந்த இளையராஜா கச்சேரி நடத்தி உதவி செய்ய முன்வரவில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
முள்ளிவாய்க்காலில் கடைசி நேரத்தில் நடேசன் வெள்ளைக் கொடியுடன் போன போது அவரை சுட்டு கொன்றார்கள். இதை பார்த்து சிங்களப் பெண் நடேசன் மனைவி சிங்களத்தில் அவர்களிடம் நியாயம் கேட்டார்.
திருகோணமலை மாணவர்கள் படுகொலை வழக்கு; நீதிமன்ற நடவடிக்கை குறித்து ஆராய்வு
திருகோணமலையில் 2006ஆம் ஆண்டு  5 மாணவர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட வழக்குத் தொடர்பாக சுருக்க முறையற்ற நீதிமன்ற நடவடிக்கையை ஆரம்பிப்பதற்கான சாத்தியம் பற்றி சட்டமா அதிபர் திணைக்களம் ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 
பெர்த் ஸ்கோர்சர்ஸ்- கொல்கத்தா போட்டி மழையால் ரத்து: தொடரிலிருந்து வெளியேறியது கொல்கத்தா
சாம்பியன் லீக் தொடரில் முதல் அணியாக வெளியேறிது கொல்கத்தா அணி.
சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் நேற்றிரவு டர்பனில் நடந்த ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் ஐ.பி.எல். சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், அவுஸ்திரேலியாவை சேர்ந்த பெர்த் ஸ்கோர்சர்ஸ் அணியும் மோதின. 

பாகிஸ்தானில் வெள்ளத்தால் 455 பேர் பலி; 5 மில்லியன் பேர் இடம்பெயர்வு
பாகிஸ்தானில் கடந்த 5 வாரங்களாக அடை மழை வெள்ளத்தால் 455 பேர் பலியாகியுள்ளதாகவும் 5 மில்லியனுக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அனர்த்த நிவாரண முகவர் நிலையம் தெரிவித்துள்ளது.
 
காத்தான்குடி கடற்கரையில் மீண்டும் அதிசயம் :பல வகையான கடல்வாழ் உயிரினங்கள் கரையொதுங்கின
மட்டக்களப்பு காத்தான்குடி வங்காள விரிகுடா கடற்கரையில்  இரண்டாவது நாளாகவும் பல வகையான சிறிய , பெரிய மீன்களும் ஒரு வகையான பாம்பு இனங்களும்  பெரிய ரக ஆமையொன்றும் உயிரற்ற நிலையில் கரையொதுங்கியுள்ளன.

தேசிய இனப்பிரச்சினை தீர்வில் முஸ்லிம்களின் பரிமாணமும் சரிவர உள்வாங்கப்பட பாராளுமன்ற தெரிவுக்குழு வாய்ப்பாக அமையும் : ஹக்கீம்
தேசிய இனப்பிரச்சினை தீர்வில் முஸ்லிம்களின் பரிமாணமும் சரிவர உள்வாங்கப்பட பாராளுமன்றத் தெரிவுக்குழுவும் சிறந்ததொரு வாய்ப்பாக அமையுமென எதிர்பார்ப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் இலங்கைக்கான நோர்வே தூதுவர் கிறீட் லொச்செனிடம் தெரிவித்தார்.


இராணுவத்தளங்களை அமைக்க சீனா உதவி : த.தே.கூ.கவலை
வடபகுதியில் நிரந்தரமாக இராணுவத்தளங்களை நிறுவுவதற்கு சீனா உதவிகளை வழங்கி வருகின்றமை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொழும்பில் உள்ள சீனத் தூதரக அதிகாரிகளிடம் கவலை தெரிவித்துள்ளது.
மீன்கள் கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்கியதற்கு காரணம் கூறும் விலங்கியல் துறைத் தலைவர்
மட்டக்களப்பு காத்தான்குடி மற்றும் அதனை அண்மித்த கடலில் மீன்கள் கூட்டம் கூட்டமாக கரையை நோக்கி ஒதுங்கிய சம்பவமானது காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்ட நிகழ்வு என கிழக்கு பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறைத்தலைவர் கலாநிதி பெ.வினோபாவா தெரிவிக்கின்றார். 

பிரித்தானியா, கனடா நாடுகளில் இருந்து செல்லும் தொலைபேசி அழைப்புக்களை ஒட்டுக்கேட்கும் இலங்கை உளவுத்துறை
பிரித்தானியா மற்றும் கனடாவில் இருந்து இலங்கைக்கு தமது அழைப்புக்களை மேற்கொள்ளும் நபர்களின் தொலைபேசி உரையாடல்களை இலங்கை அரச புலனாய்வு துறை ஒட்டுக்கேட்கிறதாக தகவல்கள் கசிந்துள்ளன.
புலிகளுடன் நெருங்கிய தொடர்புகளை பேணுபவர்கள் மற்றும் வர்த்தக ரீதியில் உரையாடுபவர்கள் தொடர்பாக இந்த நகர்வினை அது முடுக்கி விட்டுள்ளது.

ad

ad