புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 அக்., 2012


சூப்பர் சிங்கர் ஆஜீத் வெற்றீ முன்னரே தீர்மானிக்கப்பட்டதா…?? ஏமாற்றப்பட்ட பிரகதி!

சூப்பர் சிங்கர் ஜூனியர் 3 போட்டியில் ஆஜீத் வெற்றி பெற்றுள்ளார்.அவருக்கு வாழ்த்துகள்.. ஆனால்…இந்த முடிவு ஏற்கனவே எடுக்கப்பட்டதா? என்ற கேள்வி பரவலாய் இருக்கிறது.முந்தைய ஜூனியர் 2
நவம்பர் மாதம் இசைநிகழ்ச்சி நடத்தக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவிப்பவர்களை சுப. வீரபாண்டியன் சாடியுள்ளார்
கனடாவில் நவம்பர் மாதம் இசைநிகழ்ச்சி நடத்தக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவிப்பவர்களை திராவிட இயக்க தமிழர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் சாடியுள்ளார்.
இசைஞானி இளையராஜாவைத் தமிழினத் துரோகியாகக் காட்டும் முயற்சியில்
கேரளா நட்சத்திர ஓட்டலில் மரடோனா தங்கிய அறைக்கு திடீர் மவுசு

கடந்த வாரம் மரடோனா இந்தியாவுக்கு வந்தார். கேரளாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்தார். கேரளாவில் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 
கட்டாரில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் திருகோணமலை மூதூர் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

விபத்தில் மூதூர் நடுத்தீவைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான சம்மூன் மஹீப் (வயது 42) என்பவரே பலியாகியுள்ளார். காயமடைந்தவர் கட்டாரிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இறந்தவரின் ஜனாஸா நல்லடக்கம் கட்டாரில் இடம்பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பலர் வங்கிகளில் லட்சக்கணக்கான சுவிஸ் பிறங்குகளை, ஈரோக்களை கடனாக பெற்றுக்கொடுத்தனர். மே 17, 18ஆம் திகதிகளில் கூட ஆயுதம் வாங்குவதற்கென சுவிஸ், ஜேர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளில் நிதி சேகரிக்கப்பட்டது. அந்த நிதிகள் யாருக்கு ஆயுதம் வாங்குவதற்கு எங்கு சென்றது என்ற விபரம் யாருக்கும் தெரியாது. இந்த கேள்விகளை கேட்பவர்கள் துரோகியாக்கப்பட்டு விடுவார்கள்.
தலைவர் வந்து மீண்டும் போரை ஆரம்பித்தால் பணத்தை கொடுக்க தயாராக இருக்கிறேன் என கூறுபவர்களும் இருக்கிறார்கள். இதேவேளை ஐரோப்பிய நாடு ஒன்றில் விடுதலைப்புலிகளின் நிதிக்கு பொறுப்பாக இருந்த ஒருவரிடம் கணக்கு விபரத்தை கேட்ட போது அவர் சொன்ன பதில் தலைவர் வந்து கணக்கை கேட்டால் அவரிடம் விபரத்தை கொடுப்பேனே தவிர வேறு ஒருவரிடமும் கொடுக்க மாட்டேன் என்றாராம். அந்த நிதிப்பொறுப்பாளரிடம் போரின் இறுதிக்காலத்தில் சேர்க்கப்பட்ட கோடிக்கணக்கான நிதி இருப்பதாக கூறப்படுகிறது. தலைவர் இனி வரமாட்டார், எனவே கணக்கு விபரத்தை காட்டு என கேட்கும் துணிவு யாருக்கும் இல்லை. ஏனென்றால் தலைவர் இனி வரமாட்டார் என சொன்னால் கணக்கு விபரத்தை கேட்கும் தகுதியை இழந்து துரோகி ஆக்கப்பட்டு விடுவார்

புலம்பெயர் தமிழர்கள் வடகிழக்கு தமிழர்களின் பிரதிநிதிகள் அல்ல- இரா.துரைரத்தினம-Thanks-THINAKATHIR

கொழும்பு அரசியல் மட்டத்தில் புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றிய பேச்சு அதிகமாக அடிபட ஆரம்பித்திருக்கிறது. கடந்த காலத்தில் மேற்குலக நாடுகளில் இருக்கும் தமிழர்கள் மீது கடுமையான கோபங்களை வெளிப்படுத்தி வந்த சிறிலங்கா அரசாங்கம் இப்போது இவர்கள் தொடர்பாக புதிய தந்திரோபாயத்தை கையாள ஆரம்பித்திருக்கிறது.
13 ஆவது திருத்த சட்டத்தை இரத்துச் செய்ய ஆதரவு கோருகிறார் அமைச்சர் விமல

13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை ரத்துச் செய்ய ஒத்துழைப்பு வழங்கும்படி அமைச்சர் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி ஐ.தே. கட்சி உட்பட அனைத்துக்கட்சிகளுக்கும் பதிவுத்தபாலில் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளது.
13 ஆவது திருத்தத்தை இரத்து செய்ய அணி திரளும் அரச கட்சிகள்
13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை ரத்துச் செய்வதற்கு அரசியல் அங்கம் வகிக்கும் கட்சிகள் அணி திரளுகின்றன. தேசிய சுதந்திர முன்னணி இந்த நடவடிக்கைக்கு தலைமை தாங்கி களத்தில் இறங்கியுள்ளது. 

என்னை கவுரவப்படுத்தவே மந்திரி பதவி : நடிகர் சிரஞ்சீவி 
ஆந்திர மாநிலத்தில் நடிகர் சிரஞ்சீவி உள்பட 5 பேருக்கு மந்திரி பதவி கிடைத்துள்ளது. பதவி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சிரஞ்சீவி தனது குடும்பத்தினருடன் நேற்று ஐதராபாத்தில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார். 

மத்திய அமைச்சரவை மாற்றம்: 8 பேர் பதவியேற்பு
மத்திய அமைச்சரவை இன்று மாற்றி அமைக்கப்படுகிறது. இதில் இளைஞர்கள் பலருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் இன்று காலை 11.30 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் புதிய அமைச்சர்கள்

ஜெனீவா மனித உரிமைகள் அமர்வில் இலங்கைக்கு முன் பல கேள்விகள் காத்திருக்கின்றன
எதிர்வரும் வியாழக்கிழமை ஐக்கிய நாடுகளின் ஜெனீவா மனித உரிமைகள் அமர்வில் இலங்கை தொடர்பான உலகளாவிய காலக்கிரம மீளாய்வு இடம்பெறும் போது இலங்கையிடம் கேட்பதற்காக பல நாடுகள் கேள்விகளை முன்கூட்டியே சமர்ப்பித்துள்ளன.

ஈரானுக்கு இலங்கையால் அனுப்பப்பட்ட கப்பல்களை அமெரிக்கா தடுத்தது
ஈரானில் இருந்து மசகு எண்ணெய்யை தருவிப்பதற்காக இலங்கையால் அனுப்பப்பட்ட கப்பல்கள் ஈரானின் கடல் எல்லையில் வைத்து அமெரிக்க கப்பல்களால் தடுக்கப்பட்டுள்ளதாகவும், அதனையடுத்து அந்தக் கப்பல்கள் சவூதி அரேபியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பெற்றோலியத்துறை அமைச்சர் சுசில்
இந்தியாவின் விடுதலைப்புலிகளின் தடையை நீக்குமாறு கோரி, இந்திய தீர்ப்பாயத்தில், அவ்வமைப்பின் சுவிட்ஸர்லாந்து இணைப்பாளர் சத்தியக்கடதாசியை சமர்ப்பித்துள்ளார்
இந்த சத்தியக்கடதாசி, சென்னையில் உள்ள சட்டத்தரணி, ராதாகிருஸ்ணன் மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதில், விடுதலைப்புலிகளின் சுவிட்ஸர்லாந்து இணைப்பாளரான பி.சிவநேசன், இந்தியாவில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான தடையை எதிர்த்து வாதங்களை முன் வைத்துள்ளார்.

ஐ. நா என்கிற கொத்தனக்காரன்.
"இலங்கையில் ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை குறித்த அறிக்கையை ஐநா மறைக்கிறதா?!-இன்னர் சிற்றி பிரஸ்"

இலங்கையில் இறுதிப் போரில் அரச படையினரால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்ட போது, ஐ.நாவின் செயற்பாடுகள் தொடர்பாக, ஆராய நியமிக்கப்பட்ட தனி நப
ர் விசாரணைக் குழுவின் அறிக்கை, ஐ.நாவினால் மறைக்கப்பட்டு விட்டதாக இன்னர் சிற்றி பிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

கருணா எப்படி பாதுகாக்கப்படுகிறார் விக்கி லீக்ஸ் தகவல் !ATHIRVU
இலங்கையில் இருந்து வெளியாகும் சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர்களில் ஒருவரான பிரற்றிக்கா சமீபத்தில், அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்ற செய்தி பலராலும் அறியப்பட்ட விடையம். கோத்தபாயவின் மனைவிக்கு நாய் குட்டி ஒன்றை சுவிஸ் நாட்டில் இருந்து இறக்குமதிசெய்ய கோத்தபாய ஆடிய நாடகத்தை பிரற்றிக்கா

கே.பியின் திரைமறைவுக் கும்பல்.... பெயர்கள் அம்பலம் [KP's cabal group] -athirvu webs

இரகசிய ஈமெயில் ஒன்று அம்பலமானதால், பல விடையங்கள் வெளியாகியுள்ளதாக ஆங்கிலப் ஊடகமான கார்டியன் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. சமீபத்தில் சில புலம்பெயர் தமிழர்களை அழைத்து தாம் சமரசம் பேசவிருப்பதாக இலங்கை அரசு அறிவித்தது.

27 அக்., 2012

தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் அ.தி.மு.க.வுக்கு போகவில்லை: விஜயகாந்த்
தமிழகத்தில் மின் உற்பத்தி திட்டங்களுக்காக முதல்வர் ஜெயலலிதா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார். மதுரையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது விஜயகாந்த் இவ்வாறு
அரையிறுதிக்கு முன்னேறினார் சாய்னா-பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டனில்
பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் : அரையிறுதிக்கு முன்னேறினார் சாய்னா

பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான ஒற்றையர் காலிறுதி ஆட்டத்தில், இந்திய வீராங்கனை சாய்னா நேவால், தாய்லாந்து வீராங்கனை ரட்சனோக்கை எதிர்கொண்டார். துவக்க்ததில் இருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய்னா, 11-7 முன்னிலையில் இருந்தார். அதன்பின்னர்  ரட்சனோக் ஆக்ரோஷமாக ஆடி புள்ளிகளை பெற்றார்.

கனடாவில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் அவமதிப்பு
கனடாவில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் அவமதிப்புபாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் தற்போது இவர் தெக்ரிக் - இ- இன்சாப் என்ற அரசியல் கட்சியை நடத்தி வருகிறார். அக்கட்சியின் தலைவராகவும் இருக்கிறார். இவர் கனடா தலைநகர் டொரண்டோவில் இருந்து நியூயார்க் நகருக்கு விமானத்தில் புறப்பட்டார் தனது கட்சி வளர்ச்சி நிதி திரட்ட லாங் ஐலேண்ட்சிட்டி
அரை இறுதியில் வெற்றி பெற்ற லயன்ஸ் அணியும் சிட்னி சிக்சர்ஸ் அணியும் இறுதிப் போட்டியில் மோதுகின்றன.
தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டி விட்டது. அரை இறுதி போட்டிகள் முடிவடைந்த நிலையில் இறுதிப் போட்டியில் மோதும் அணிகள் எது என்பது தெரிந்து விட்டது. 
நான் தனி ஆளாக நின்று சமாளிப்பேன் :28 பேரும் ஓடினாலும் பரவாயில்லை; விஜயகாந்த் பரபரப்பு பேச்சு
மதுரை கோரிப்பாளையத்தில் இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் பக்ரீத் நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் இலவசமாக ஆயிரம் பேருக்கு ஆட்டுக்கறி  வழங்கப்பட்டது.

ad

ad