புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 டிச., 2012

 யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தலைவர் வி.பவானந்தன்ஒன்றியச் செயலாளர்.தர்சானந்த்கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர்.ஜெனமேஜெயந்த்விஞ்ஞானபீட மாணவன்எஸ்.சொலமன் ஆகிய நால்வரும் வெலிக்கந்தை தடுப்புமுகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர்
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் சிறிலங்காகாவல்துறையினரால் கைதுசெய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள்,
ஏழுபேர் நேற்றுவிடுவிக்கப்பட்டுள்ளநிலையில்ஏனையநான்குமாணவர்களும்வெலிக்கந்தைக்குகொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
ஏழு மாணவர்கள் நேற்று விடுவிக்கப்பட்டுள்ள போதிலும்,அனைவரும் விடுவிக்கப்பட்டால் தான் தாம் பணிக்குத்திரும்புவோம் என்று யாழ்.பல்கலைக்கழ ஆசிரியர்கள்தெரிவித்துள்ளனர்.
சிறிலங்கா காவல்துறையின் பயங்கரவாத தடுப்புபிரிவினால்கைதுசெய்யப்பட்டு வவுனியாவில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 11 மாணவர்களில் 7 பேர் நேற்றுவிடுதலை செய்யப்பட்டனர்.
மருத்துவபீட மாணவர்களான .சஞ்சீவன்.பிரசன்னா,சி.சசிகாந்த்செ.ஜனகன்ரி.அபராஜிதன் மற்றும்,முகாமைத்துவபீட மாணவர் .சபேஸ்குமார்,விஞ்ஞானபீட மாணவர் செ.ரேணுராஜ் ஆகியோரேவிடுவிக்கப்பட்டனர்.
அதேவேளையாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தலைவர் வி.பவானந்தன்ஒன்றியச் செயலாளர்.தர்சானந்த்கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர்.ஜெனமேஜெயந்த்விஞ்ஞானபீட மாணவன்எஸ்.சொலமன் ஆகிய நால்வரும் வெலிக்கந்தை தடுப்புமுகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
நேற்றுக்காலை வவுனியாவுக்குச் சென்ற உறவினர்களிடம்,இவர்கள் அங்கு இல்லை என்றும் வெலிக்கந்தைக்குகொண்டு செல்லப்பட்டுவிட்டதாகவும் சிறிலங்காகாவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதற்கிடையே மாணவர்கள் அனைவரும்விடுவிக்கப்பட்டால் தான் தாம் பணிக்குத் திரும்புவோம்என்று யாழ்.பல்கலைக்கழ ஆசிரியர்கள் சங்கம்தெரிவித்துள்ளது.
மாணவர்கள் கைதுசெய்யப்பட்ட பின்னர்யாழ்பல்கலைக்கழக செயற்பாடுகள் முடங்கிப்போயுள்ளன.அனைத்து மாணவர்களும் விடுதலை செய்யப்படாத வரைஇந்தநிலை தொடரக்கூடும்.” என்று ஆசிரியர் சங்கதலைவர் ஆர்விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.




கொழும்பு நகரில், 79,468 சிங்களவர்களும், 106,325 தமிழர்களும், 126,345 முஸ்லிம்களும்வசிப்பதாகவும் பிந்திய புள்ளிவிபரங்கள் தெரிவிப்பதாககொழும்பு நாளிதழ் தெரிவித்துள்ளது.
கொழும்பு நகரில் சிங்களவர்களின் சனத்தொகை 24வீதமாக குறைந்து போயுள்ளதாக, 2012ம் ஆண்டுசனத்தொகைக் கணக்கெடுப்பின்
முதற்கட்டபுள்ளிவிபரங்கள்கூறுவதாக,கொழும்புஆங்கில நாளிதழ்ஒன்று செய்திவெளியிட்டுள்ளது.
1971ம் ஆண்டு கொழும்பு நகரில், 50 வீதமாக இருந்தசிங்களவர்களின் சனத்தொகை, 2012இல் 24 வீதமாககுறைந்துள்ளது.
ரஜினி பிறந்த நாள் : 63 கிலோ கேக்
பயபுள்ள” படத்தின் பாடல் டிரைலர் வெளியீட்டு விழா 12.12.2012  காலை வடபழனி கமலா திரையரங்கில் நடக்கிறது. 
கே.பாலசந்தர் இதில் பங்கேற்று ரஜினி பிறந்த நாளையொட்டி 63 கிலோ எடையுள்ள கேக் வெட்டுகிறார். ரஜினியை இயக்கிய டைரக்டர்கள் எஸ்.பி. முத்துராமன், சுரேஷ் கிருஷ்ணா, கே.எஸ். ரவிக்குமார்,ஷங்கர் ஆகியோர் பங்கேற்று வாழ்த்துகிறார்கள்.

நடிகை மனீஷா கொய்ராலாவுக்கு அறுவை சிகிச்சை முடிந்தது
நடிகை மனீஷா கொய்ராலாவுக்கு அமெரிக்காவில் நேற்று கருப்பை புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் திருச்சி மாவட்டத்தில் இலங்கைத் தமிழர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
திருச்சி, சாஸ்தா நகரை ( திருச்சி கே.கே.நகர் அய்யப்ப நகரையொட்டிய சாஸ்தா நகர்) சேர்ந்த இலங்கைத் தமிழரான சிவசுப்பிரமணியன் (வயது 53) என்பவர் தனது மகனுடன் வசித்து வந்துள்ளார். 

மூன்றுமுறை சொகுசு வாகனம் வாங்கிய யாழ். மாநகர மேயர்?- பொதுமக்களின் பல லட்சம் ரூபாய் நாசம்
யாழ். மாநகர சபையின் மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா, தனது கணவரால் இடித்து சேதமாக்கப்பட்ட தனது சொகுசு வாகனச் செலவிற்காக யாழ். மாநகர சபையிடமிருந்து 40 லட்சம் ரூபா பணத்தை எடுத்து செலவு செய்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.

யாழ். மாநகர சபையின் ஆளும் கட்சியான ஈ.பி.டி.பி யினரால் ஆறு கோடிக்கும் அதிகமான நிதியானது கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ். மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் தொடர்பில் இன்று நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர்கள் இதனைத் தெரிவித்தனர்.


யாழ். மாவட்டத்தில் நவம்பர் கடந்த 26ம் திகதியின் பின்னர் கைதுசெய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களினதும், பொதுமக்களினதும் விடுதலையினை வலியுறுத்தி தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் 21ம் திகதி உண்ணாவிரதப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.
இன்று மாலை மாட்டின் வீதியிலுள்ள தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மேற்படி அறிவிப்பை

11 டிச., 2012

பார்பனனைவிட சாதி இந்துக்கள் கொடியர்வர்கள்
என்று இந்தியா தொடர்ந்து நிருபித்துவருகிறது .. 


ஆசாமில்
ஆதிவாசிகளின் உரிமைகளுக்காக 

போராடிய லக்ஷ்மி ஓரான் என்கிற
பெண்ணை அம்மணமாக்கி
அடித்து உதைத்து
விரட்டி அடித்தனர் சாதி இந்துக்கள் ..!!"

"அடித்து உதைத்து"
இது வெறும் வார்த்தை அல்ல 
"பார்பனனைவிட சாதி இந்துக்கள் கொடியர்வர்கள் 
என்று இந்தியா தொடர்ந்து நிருபித்துவருகிறது .. 

ஆசாமில்
ஆதிவாசிகளின் உரிமைகளுக்காக 
போராடிய லக்ஷ்மி ஓரான் என்கிற
பெண்ணை அம்மணமாக்கி 
அடித்து உதைத்து
விரட்டி அடித்தனர் சாதி இந்துக்கள் ..!!"

"அடித்து உதைத்து"
இது வெறும் வார்த்தை அல்ல 
"வலி" ..!!
‎"

சூடானில் உளவு பார்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டகழுகொன்றை அந்நாட்டு அதிகாரிகள் பிடித்துள்ளனர்.
குறித்த கழுகானதுஇஸ்ரேல் நாட்டைச்சேர்ந்ததென சூடான்நாட்டு அதிகாரிகள்குற்றஞ்சாட்டியுள்ளனர்சூடானின் டாபூர் பிராந்தியத்தின்கிரிநெக் நகரில் வைத்தே இக் கழுகு பிடிபட்டுள்ளது

ad

ad