புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 டிச., 2012


கர்நாடக இசைப் பாடகி நித்யஸ்ரீயின் கணவர் மகாதேவன் தற்கொலை (படங்கள்)

thx nakeeran

England 157/6 (20/20 ov)
India 158/5 (17.5/20 ov)
India won by 5 wickets (with 13 balls remaining)

வடமராட்சி கிழக்கு பகுதியில் 14 வயதுடைய சிறுமி ஒருவர் கர்ப்பமடைந்துள்ள நிலையில் சந்தேகத்தின் பேரில் 42 வயதுடைய நபர் ஒருவர் பருத்தித்துறைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆறு மாதங்களுக்கு முன்னர் வீட்டில் யாரும் இல்லாத சமயம் பார்த்து குறித்த சிறுமி குறித்த சந்தேக நபரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். பின்னர் சம்பவம் தொடர்பில் தமது பெற்றோருக்கு சிறுமி அறிவிக்கவில்லை.


தமிழகத்தில் மின்சாரம் தாக்கி இலங்கை தமிழர் ஒருவர் பரிதாபமாக பலி
மின்விளக்கை அணைப்பதற்காக முயன்ற இலங்கைத் தமிழர் ஒருவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் தமிழகத்தில் நேற்றிரவு நடைபெற்றுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். பல்கலை. மாணவர்களை விடுதலை செய்யுமாறு மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள்!
பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரையும்  விரைவில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம்  இலங்கை அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது..
கணவர் மகாதேவன் தற்கொலை செய்தது குறித்து தகவல் அறிந்ததும் நித்யஸ்ரீயும் தற்கொலைக்கு முயன்றார். விஷம் குடித்த அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார் எனத் தகவல் வெளியானது. ஆனால் இதை அவரது குடும்பத்தினர் மறுத்துள்ளனர். 

குஜராத் சட்டமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. நரேந்திர மோடி தொடர்ந்து 3-வது முறையாக முதல்-மந்திரியாகிறார். அகமதாபாத்தின் புறநகர் பகுதியான மணிநகர் தொகுதியில் போட்டியிட்ட குஜராத் முதல்- மந்திரி மோ
குஜராத் மாநிலத்தில் பெரும்பான்மை இடங்களை பாரதீய ஜனதா கைப்பற்றி மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள
குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. து. பா.ஜனதாவின் இந்த வெற்றிக்காக வாக்களித்த மக்களுக்கு அக்கட்சியின் தேசிய தலைவர் கட்காரி நன்றி தெரிவித்துள்ளார்.


கர்நாடக இசைப் பாடகி நித்யஸ்ரீயின் கணவர் மகாதேவன் தற்கொலை!
சென்னை கோட்டூர்புரம் அடையாறு பாலத்திற்கு விலை உயர்ந்த ஆடம்பரமான கார் ஒன்று இன்று (20.12.2012) மதியம் 12.45 மணி அளவில் வந்தது. அந்த கார் திடீரென அடையாறு பாலத்தில் நின்றது. 


மூன்றாம் முறையாக ஆட்சியை பிடிக்கிறார் நரேந்திர மோடி
குஜராத் சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்த-ன் வாக்கு எண்ணிக்கை இன்று (20.12.2012) காலை தொடங்கியது. இதில் காலை முதலே பாஜக முன்னிலை பெற்றிருந்தது.

பாஜக 109 தொகுதியில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 66 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. மற்ற கட்சிகள் 5 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதனால் மூன்றாம் முறையாக ஆட்சியை பிடிக்கிறார் நரேந்திர மோடி என்று பாஜகவினர் கூறுகின்றனர்.

வெள்ளத்தில் அள்ளுண்டு செல்லப்பட்டவர்களை காப்பாற்றிய பெண்மணி

வெள்ளத்தில் அள்ளுண்டு செல்லப்பட்ட ஐவரை பெண்மணி ஒருவர் காப்பாற்றிய சம்பவம் கெக்கிராவ ஆண்டியாகல பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கெக்கிராவ பலாகல பிரதேச செயலாளர் காரியாலயத்தில் பணிபுரியும் அதிகாரிகள் சென்ற ஜீப் வண்டி நீரில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இதன்போது ஆர்.எம். நிலந்தி ரத்நாயக்க (35 வயது) என்ற ஒரு குழந்தையின் தாய் குறித்த நபர்களை காப்பாற்றியுள்ளார்.
மேற்படி அதிகாரிகள் நிவாரணப் பணிகளுக்காகச் சென்ற போதே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
.



குஜராத்: 107 தொகுதிகளில் பாஜக முன்னிலை
பாஜக ஆட்சி நடைபெறும் குஜராத்தில் கடந்த 13 மற்றும் 17ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று (19.12.2012) காலை தொடங்கியது.
பாஜக 107 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கூட்டணி 60 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. முன்னாள் முதல்வர் கோசுபாய் பட்டேல் தொடங்கிய குஜராத் பரிவர்த்தன் கட்சி 3 இடங்களில் முன்னிலையில் உள்ளது. 



இமாச்சலப் பிரதேசத்தில் 37 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை
முதல்வர் பிரேம்குமார் துமல் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறும் இமாச்சலப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 68 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த நவம்பர் 4ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்த-ல் 74.6 சதவீத வாக்குகள் பதிவாகின.

வாக்கு எண்ணிக்கை இன்று (20.12.2012) காலை தொடங்கியது. காங்கிரஸ் கட்சி 37 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பாஜக 22 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதர கட்சிகள் 5 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. 
இலங்கை கஅரசின் உயரிய விருதான கலாபூஷணம்  பட்டமளிப்பின் பின்னர் மயில்வாகனத்துடன் (எழுத்தாளர் ஒலிபரப்பாளர் ஊடகவியலாளர் ) என் இனிய நண்பர் தம்பியையா தேவதாஸ் -சிவ-சந்திரபாலன் 

லண்டனில் சிங்கக் கொடியை பள்ளிக்கூடத்தில் இருந்து அகற்றிய 14 வயது மாணவன் !


தேசிய அவசர நிலைமையை பிரகடனப்படுத்தக் கோரிக்கை
இயற்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக நாட்டில் பல பாகங்களிலும் பெய்து வரும் அடைமழையை அடுத்து ஏற்பட்டுள்ள மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கால்  மக்கள் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்துவருகின்றனர்.இதனைக் கருத்தில் கொண்டு தேசிய அவசர நிலைமையை பிரகடனப்படுத்துமாறு ஐ.தே.க வலியுறுத்தியுள்ளது.ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதித்தலைவர் சஜித் பிரேமதாஸ, அரசிடம் இந்தக் கோரிக்கைவிடுத்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 23 பேர் உயிரிழந்துள்ளதுடன் 36 பேர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, 15 பேர் காணாமல் போயுள்ள நிலையில், 68 ஆயிரத்து 904 குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சத்து 66 ஆயிரத்து 740 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 5 ஆயிரத்து 231 குடும்பங்களைச் சேர்ந்த 18 ஆயிரத்து 753 பேர் 102 தற்காலிக நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.இந்நிலையில், 358 வீடுகள் முழுமையாகவும் ஆயிரத்து 907 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அந் நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

சீரற்ற காலநிலை : புத்தளம் மாவட்டத்தில் 10 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் இடம்பெயர்வு

தற்போது நாட்டிலேற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தையடுத்து ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் புத்தளம் மாவட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய பணிப்பாளர் கேர்ணல் ரணவீர தெரிவித்தார்.

இலங்கை வந்துள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிக்ரம் சிங் நாளை ஜனாதிபதி மகிந்த ராஜ பக்ஷ மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரை சந்திக்கவுள்ளார்.இதேவேளை, மூன்று நாட்கள் இலங்கையில் தங்கியிருக்கும் இந்திய இராணுவத் தளபதி வட பகுதி உட்பட நாட்டிலுள்ள பிரதான இராணுவத் தளங்களுக்கு விஜயம் செய்யவுள்ளார்.இந்நிலையில் வெள்ளிக்கிழமை வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமுக்கு விஜயத்தை மேற்கொள்ளும் ஜெனரல் பிக்ரம்சிங், அங்கு புனர்வாழ்வு பெறும் முன்னாள் புலிப்போராளியான தமிழினி உட்பட ஏனைய முன்னாள் புலிப் போராளிகளையும் சந்தித்து உரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிலாபம் முன்னேஸ்வரம் குளம் உடைப்பெடுத்ததால் அப்பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதேவேளை பொலிஸார் மற்றும் கடற்படையினரின் உதவியுடன் வள்ளங்கள் மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுத்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

ad

ad