புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 டிச., 2012




            மாவீரர் தினம் கொண்டாடிய யாழ் பல்கலைக்கழக மாணவர்களை கைது செய்து சித்ரவதை செய்து கொண்டி ருக்கிறது இலங்கை ராணுவம். 



           26-ந் தேதியின் பிற்பகல் பொழுது. 

நெல்லை 2-வது கூடுதல் மாவட்ட செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி நந்தகுமார், குற்றவாளிக் கூண்டில் நின்ற காட்டுராஜாவையும் வெட்டும்பெருமாளையும் ஒருமுறை பார்வையால் அளந்தார்.
 இந்தக் கொடுமை விழுப்புரம் மாவட்டம் திருநாவலூரில் நடந்தது.

மனநலமற்ற 22 வயது மகள் தேவகியை வீட்டில் வைத்துவிட்டு வயல் வேலைக் குப் போய்விட்டார் தாய் பஞ்சவர்ணம். இரவு 7 மணிக்கு வீடு திரும்பினார் தாய். வீடு திறந்து கிடந்தது. அறைக்குள் இருந்து மகளின் அழுகைக் குரல் வந்தது. ஓடிப்போய் பார்த்த தாயை, தள்ளிவிட்டு ஓடினான் எதிர்வீட்டு முனியம்மாவின் தம்பி குமரேசன். அறைக்குள் பாலியல் வல்லுறவால் அதிர்ச்சியடைந்து கதறிக்கொண்டி ருந்த தேவகியை உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். பதுங்கியிருந்த குமரேசனை 27.12.12 மாலையில் கைது செய்தது போலீஸ்.


           ட்டுத் தடுமாறி, பஸ் ஸ்டாண்ட்டை நெருங்கிவிட்டார் அந்த இளம்பெண். ஆனால் அதற்குமேல் நடக்கவும் முடியவில்லை; நிற்கவும் முடியவில்லை. தரையில் சாய்ந்தார். 

சிறுமி புனிதா பாலியல் துன்பத்திற்குள்ளாகி கொல்லப்பட்டதைக் கண்டித்து தூத்துக்குடியில் கனிமொழி பங்கேற்ற தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் திரளான கூட்டம். 
ஆர்ப் பாட்ட இடத்தை காவல்துறையினர் இரண்டு முறை மாற்றியும் கூட ஆர்ப்பாட்டத்தின் எழுச்சி குறையவில்லை. அத்துடன், கொலையான புனிதாவின் தாயை சந்தித்து தி.முக.



          ""ஹலோ தலைவரே... 2013ஆம் வருடத்தை தமிழக மக்கள் ரொம்ப நம்பிக்கையோடு எதிர்பார்த்துக்கிட்டி ருக்காங்க. ஏன்னா, 2012 ரொம்ப சோதனையா அமைஞ்சிடிச்சி.''

முழு எதிர்ப்பில் கமல்! ஜாம்பாவான்களின் ஆதரவு!


கமல்ஹாசனின் விஸ்வரூபம் ஜனவரி 11-ஆம் தேதி ரிலீசாக முழு வீச்சில் தயாராகிக்கொண்டு வருகிறது. விஸ்வரூபம் படத்தின் மீதான எதிர்பார்ப்புகளும், எதிர்ப்புகளும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.  சமீபத்தில் தொலைக்காட்சி

நான் அரசியலுக்கு வந்தால்... கலைஞர் மேடையில் ரஜினி கொளுத்திய வெடி! 

        சமீபகாலமாகவே தான் அரசியலுக்கு வருவது பற்றியும், இதுவரைக்கும் அரசியலுக்கு வராதது பற்றியும் ரஜினி பொது விழாக்களில் பேசி பரபரப்பைக் கிளப்பி வருகிறார். தன் பிறந்தநாள் அன்று ரசிகர்களை நேரில் அவர் சந்தித்தது முதல் இந்த பரபரப்பு பற்றிக் கொண்டது. 
ஒருவேளை உணவுக்காக ஏங்கி நிற்போர் பிரான்சில் அதிகரிப்பு
பசிக்கு உணவளிக்கும் பிரெஞ்சு பொதுநல அமைப்பு ஒன்று பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அரசும் பொதுமக்களும் தங்களுக்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது.

30 டிச., 2012


தஞ்சாவூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்ற மதுரை ஆதினம் அருணகிரிநாதர், தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்கள் சமீப காலமாக ஆபாச உடை அணிகிறார்கள். அதனை தவிர்க்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

ஒட்டுமொத்த பெண்களை மதுரை ஆதினம் கொச்சைப் படுத்தியுள்ளார் என்று இந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இன்று (30.12.2012) மதுரை ஆதினத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அகில இந்திய மாதர் சங்க பொதுச் செயலாளர் சுகந்தி தலைமையில், 100 பெண்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இவர்களை அனைவரையும் போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபம் ஒன்றில் அடைத்தனர். இந்த நிலையில் மதுரை ஆதினம் அருணகிரிநாதர் கூறியுள்ளதாவது,

நான் ஒன்றும் தமிழ்நாட்டு பெண்களுக்கு எதிராக பேசவில்லை. தமிழ்நாட்டில் நடக்கும் பாலியல் வன்முறைக்கு பெண்கள் அணியும் அறைகுறை உடையும் ஒரு காரணமாக உள்ளது. அதனை பெற்றோர்களும், பெண்களும் உணர்ந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டு பெண்கள் மீதான அக்கறை மீதுதான் சொன்னேன். எத்தனை போராட்டங்கள் வேண்டுமானாலும் நடத்திவிட்டு போகட்டும். நான் மன்னிப்பு கேட்கமாட்டேன் என்று கூறியுள்ளார்.
ஒட்டுமொத்த பெண்களை மதுரை ஆதினம் கொச்சைப் படுத்தியுள்ளார் என்று இந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இன்று (30.12.2012) மதுரை ஆதினத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆதினம் அருணகிரிநாதர், தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்கள் சமீப காலமாக ஆபாச உடை அணிகிறார்கள். அதனை தவிர்க்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி சிகிச்சை பலனளிக்காமல் சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிரிழந்த மாணவியின் உடல் இன்று அதிகாலை டெல்லி கொண்டு வரப்பட்டு, இறுதிச்சடங்குகளுக்கு பின்னர் தகனம் செய்யப்பட்டது.

பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி சிகிச்சை பலனளிக்காமல் சிங்கப்பூர் மருத்துவமனையில் நேற்று காலை உயிரிழந்த மாணவியின் உடல், இன்று அதிகாலை 3.15 மணிக்கு டெல்லி கொண்டு வரப்பட்டது,

டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தில் மாணவியின் உடல் வந்து இறங்கியபோது அங்கு வந்த பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் காங்கிரச் தலைவர் சோனியா காந்தி ஆகியோர், மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினர்.

இதனையடுத்து அம்மாணவியின் உடல் டெல்லியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.அங்கு நடைபெற்ற மதச்சடங்குகளுக்கு பின்னர் மாணவியின் உடல், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் துவாராகா செக்டார் 24 ல் உள்ள மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

இறுதிச்சடங்கில் மத்திய உள்துறை இணையமைச்சர் கே.பி. என்.சிங்,மேற்கு டெல்லி எம்.பி. மஹாபால் மிஸ்ரா,டெல்லி பா.ஜனதா தலைவர் விஜேந்தர் குப்தா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

இறுதிச்சடங்கு நடைபெற்ற பத்திரிகையாளர்கள், புகைப்படக்காரகள் அனுமதிக்கப்படவில்லை.

இதனிடயே மாணவியின் மறைவுக்கு நாடு முழுவதும் பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.டெல்லியில் மாணவ, மாணவிகளின் போராட்டம் மீண்டும் வெடிக்குமோ என்ற காரணத்தினால் நகர் முழுவதும் சிறப்பு அதிரடி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.முக்கிய ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி சிகிச்சை பலனளிக்காமல் சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிரிழந்த மாணவியின் உடல் இன்று அதிகாலை டெல்லி கொண்டு வரப்பட்டு, இறுதிச்சடங்குகளுக்கு பின்னர் தகனம் செய்யப்பட்டது.

பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி சிகிச்சை பலனளிக்காமல் சிங்கப்பூர் மருத்துவமனையில் நேற்று காலை உயிரிழந்த மாணவியின் உடல், இன்று அதிகாலை 3.15 மணிக்கு டெல்லி கொண்டு வரப்பட்டது,

  
India 227/6 (50 ov)
Pakistan 228/4 (48.1 ov)
Pakistan won by 6 wickets (with 11 balls remaining)

பாகிஸ்தானுடன் முதல் ஒருநாள் போட்டி: டோணி அபார சதம்! இந்தியா-227/ 6(வி)!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்கள் 4 பேர் 20 ரன்களுக்குள் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்த நிலையில் ரெய்னா, டோணி, அஸ்வின்

ஓடும் பஸ்சில் கல்லூரி மாணவியை கற்பழித்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளில் பலர் புதுடெல்லி ஆர்.கே.புரம் ரவிதாஸ் கேம்ப் பகுதியை சேர்ந்தவர்கள். இச்சம்பவத்தில் ஈடுபட்ட டிரைவர் உள்பட 6 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து வைத்துள்ளனர்.
 
மாணவியின் உடல்நிலை மோசமடைந்தபோது, சிறையில் உள்ள குற்றவாளிகளை இதர கைதிகள் தாக்கியதால் அவர்களை தனியாக அடைத்து வைத்திருந்தனர்.
 
இந்நிலையில், மாணவி நேற்று உயிரிழந்த செய்தி சிறையில் பரவியது. மதிய உணவு வாங்க சென்ற குற்றவாளிகள் 6 பேரையும் இதர கைதிகள் சூழ்ந்துகொண்டு தாக்க முயன்றனர். சிறைக்காவலர்கள், அரண்போல் சுற்றி நின்று அவர்களை காப்பாற்றி அனுப்பி வைத்தார்.
 
 டெல்லி மாணவியின் மரணத்துக்கு காரணமான 6 பேரும் ஜாமீனில் விடுதலையாகி வெளியே வந்தால் அவர்களை எங்கள் வீட்டுக்குள் சேர்க்கமாட்டோம் என்று அவர்களது குடும்பத்தினர் கூறி உள்ளனர். அவர்களை தூக்கி போட்டாலும், அவர்களின் பிணத்தைக் கூட இந்த பகுதிக்குள் அனுமதிக்கமாட்டோம் என்று அப்பகுதி மக்கள் ஆவேசமாக கூறினார்கள்.
இன்று காலை, மாணவியின் உடல் தகனம் செய்யப்பட்ட நிலையில் டெல்லி மாணவியின் மரணத்துக்கு காரணமான 6 பேரும் ஜாமீனில் விடுதலையாகி வெளியே வந்தால் அவர்களை எங்கள் வீட்டுக்குள் சேர்க்கமாட்டோம்

இந்தியா- பாகிஸ்தான் ஒருநாள் போட்டியை காண சர்தாரி இந்தியா வருகை
இந்தியா- பாகிஸ்தான் நாடுகளுக்கிடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வருகிறது.

ஏ.ஆர்.ரஹ்மானின் பிரமாண்ட இசை நிகழ்ச்சி: ரசிகர்கள் ஆரவாரம்

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி கல்லூரி மைதானத்தில் இசை நாயகன் ஏ.ஆர்.ரகுமானின் ‘தாய் மண்ணே வணக்கம்’ என்ற பிரமாண்ட இசைநிகழ்ச்சி  நேற்று நடைபெற்றது. 

வேட்டி கட்டிய தமிழனா? சேலை கட்டிய தமிழரா? என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்! கலைஞர் பேச்சு!

நான் தியேட்டர் கட்டப்போகிறேன்: கமல் அதிரடி

92 கோடி செலவில் கமல் தயாரித்து, இயக்கி நடித்திருக்கும் ‘விஸ்வரூபம்’ படம் ஜனவரி 10-ந் தேதி டி.டி.எச்.சில் வெளியிடப்படுகிறது. ஏர்டெல், டிஷ் டிவி, வீடியோகான், ரிலையன்ஸ், சன் டைரக்ட் ஆகிய டி.டி.எச்.களில் வெளியிடப்படுவதாக கமல் ஏற்கெனவே அறிவித்திருந்தார். 

பாசையூரில் இடம் பெற்ற குழு மோதலில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் படுகாய மடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்றிரவு 9 மணியளவில் இடம்பெற்றது.
சம்பவத்தில் பாசையூரைச் சேர்ந்த அல்பேர்ட் பீரிஸ் கலிஸ் தயான் (வயது23) என்ற இளைஞர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். மற்றுமொருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அனுராதபுரத்தில் சுகாதார வைத்திய அதிகாரியாகக் கடமையாற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மருத்துவர் இ.சிவசங்கர் நேற்றுக் கைது செய்யப்பட்டு கொக்காவில் இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்த முடியாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் பற்றித் தெரியவருவதாவது:
இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட கிளிநொச்சி உருத்திரபுரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சாதாரண தரப்பரீட்சை எழுதுவதற்காக வீடு வந்துள்ளார். பரீட்சை முடிந்ததும் அவரை

ad

ad