புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஜன., 2013


பிரபல பாப் இசை பாடகியான ஷகீராவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையின் தந்தை என்று கால் பந்தாட்ட வீரர் ஜெர்ராடு பிக்கை சுட்டிக்காட்டியுள்ளார்.
கொலம்பியா நாட்டைச் சேர்ந்தவர் ஷகீரா இஸபெல் மிபாரக் ரிபோல். பிரபல பாப் இசை பாடகியான இவர் நடனம், இசை கருவிகளை இசைப்பது என்று பன்முக கலைஞராக இருந்து வருகிறார்.

ஜெனிவா மாநாட்டை இலக்காகக் கொண்டதே இராணுவ விசாரணை அறிக்கை!- மூத்த செய்தியாளர்
எதிர்வரும் மார்ச் மாதத்தில் நடக்கவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஜெனிவா மாநாட்டை மனதில் வைத்து இன்று இராணுவ விசாரணை அறிக்கை வந்திருப்பதாக இலங்கையின் மூத்த செய்தியாளரான அனந்த் பாலகிட்ணர் தெரிவித்துள்ளார்.

காணாமல் போனோர் தொடர்பாக இந்தியாவும், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமுமே பொறுப்பு கூறவேண்டும்: கோத்தபாய
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது காணாமல் போனோர் தொடர்பாக இந்தியாவும், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமுமே பொறுப்புக்கூற வேண்டும் என்று பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார்.

கெமரூனில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்படும் இளம் பெண்கள்!பெண்களின் பாலுறுப்புகள், கண்கள், மார்பங்கள் ஆகியன வெட்டி எடுக்கப்பட்டுள்ளன.

கெமரூன் நாட்டில் மர்மமான முறையில் இளம் பெண்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றமையானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



இஸ்ரேலிய தேர்தலில் நேதன்யாகு வெற்றி!

இஸ்ரேலில் நேற்று இடம்பெற்ற பொதுத் தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தலைமையிலான வலதுசாரி  லிகுட் கட்சி மீண்டும் வெற்றிபெற்றுள்ளது.

  • Likud-Yisrael Beiteinu: 31
    Yesh Atid: 19
    Labor: 15
    Shas: 11
    Habayit Hayehudi: 11
    United Torah Judaism: 7
    Hatnua: 6
    Meretz: 6
    United Arab List-Taal: 5
    Hadash: 4
    Balad: 3
    Kadima: 2



சி.ஏ. தேர்வில் முதலிடம் பிடித்த தமிழக மாணவிக்கு 10 லட்சம்: ஜெ., அறிவிப்பு
முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’'வெற்றி பெறுவதே கடினம்', 'படித்தால் உடனடி வேலை' என்று அனைவராலும் சொல்லக் கூடிய கல்வியாக பட்டயக் கணக்கர் என்கிற சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் கல்வி விளங்குகிறது. 


வேலூர் :   2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலைவேலூர் அருகே ஊளைபள்ளத்தூரை சேர்ந்தவர் சடங்காநாதன், 30. கூலி செய்து வந்த இவருக்கு குணா (22) என்ற மனைவியும், யுவஸ்ரீ (3), விஷ்ணு (1) என்ற இரண்டு குழந்தைகளும் இருந்த னர்.

தேனி : அண்ணனை கொன்று ஆற்றில் வீசிய தங்கை 
தேனி மாவட்டம், கூடலூரை சேர்ந்தவர் கருப்பையா(வயது 62) . ஜனவரி 8 ல் காணாமல் போன இவர், ஜனவரி 20 ல், சின்னமனூர் அருகே சீலையம்பட்டி பெரியாற்றில், உடலில் வெட்டு காயத்துடன் இறந்து கிடந்தார். 

பாமக வக்கீல் நடிகை திரிஷா மீது போலீசில் புகார்

'சமர்'படத்தில் திரிஷா மது அருந்துவது போல் காட்சிகள் உள்ளன. இதுபற்றி அவரிடம் கேட்டபோது நான் மது அருந்துவது போல் சீன்கள் இடம் பெற்ற படங்கள் ஹிட்டாகியுள்ளன. எனவே 'சமர்' படத்திலும் அக்காட்சி இருக்க வேண்டும்

1000 கோடி ஊழல் புகார் : உரத்துறை அமைச்சகம் விளக்கம் 
உரத் துறையில் நடைபெற்ற முறைகேடுகள் காரணமாக அரசுக்கு ரூ.1000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டி ருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்த குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று உரத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

24 ஜன., 2013


தமிழில் பேசுவதற்கும் எழுதுவதற்கும் நாம் நிறைய சிந்தித்துக்கொண்டிருக்கிறோம். அந்த அளவுக்கு தமிழ் பேச்சும் எழுத்தும் நம்மை அவமானப்படுத்துவதாக நினைத்துக்கொண்டிருக்கிறோம்
.ஆனால் தமிழுக்குத் தொடர்பே இல்லாத உருசிய நாடு தமிழைக் கொண்டாடுகிறது. அங்கிருக்கும் அதிபர் மாளிகையான கிரெம்ளின் மாளிகையின் பெயரை அவர்கள் அழகு தமிழில் எழுதியுள்ளார்

சுவிட்சர்லாந்து வாழ் புங்குடுதீவு ஏழாம் ,எட்டாம் வட்டார மக்களின் 

                                         விருந்துபசார வைபவம்


காலம்;- 03.02.2013 ஞாயிறு மாலை 3 மணி
இடம்  :- .Mädergutstr, 3018 Bern .kleefeld Zentrum (நிமலன் வீட்டுக்கு அருகில்)


எமது மடத்துவெளி ஊரதீவு மக்களை ஒருங்கிணைத்து உறவாடி நட்பார்ந்த நல்வழியில் நமக்குள்ளே அன்பால் உறவால் ஊர்ப்பற்றால் கட்டுண்டு கிடக்க வழி சமைப்போம் . ஏழாம் , எட்டாம் வட்டார  மடத்துவெளி ஊரதீவு மக்கள் யாராகிலும் இந்த வைபவத்தில் குடும்பமாக கலந்து சிறப்பிக்கலாம் .  முடிந்தவரை நாம்  தொலைபேசி ஊடாகவும் அழைப்பை உண்டுபண்ணுவோம்,தொடர்பு கிடைக்காதவர்களும் ஊர் மீதான பற்றை மனதில்  எண்ணி நீங்களாகவே  இந்த அழைப்பை ஏற்று  கலந்து சிறப்பிக்குமாறு  கேட்டுக் கொள்கிறோம் . எமக்குள்ளே எமது கிராமங்களின் பண்பை உறவை பற்றை வளர்த்தெடுப்பதற்கான ஒரு பாரிய முயற்சியே இது.
உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும்  பங்கு கொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றோம் . தேநீர் ,சிற்றுண்டிகள், மாலை உணவு, குளிர்பானங்கள் வழங்கப்படும்


முக்கிய குறிப்பு ;- இந்த வைபவத்தில் எவ்விதமான நிதி சேகரிப்போ அன்றி அன்பளிப்பு சம்பந்தமான அறிவிப்புக்களோ இருக்க மாட்டாது.

                                                                             தங்கள் வரவை நாடும் அமைப்பாளர்கள்

தொடர்புகள்

                           இ.ரவீந்திரன்                         079 218 70 75
                           சு.சண்முகநாதன்                044  451 80 22
                           நா.ஜெயக்குமார் (பாபு )     031 862 18 03 

விஸ்வரூபம் மீதான தடை நீக்கம்

தமிழக அரசினால் நேற்று விஸ்வரூபம் திரைப்படம் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் சற்றுமுன்னர் தீர்ப்பளித்துள்ளதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



செய்மதி தொலைபேசி வைத்திருந்த ராமச்சந்திரன் இந்தியாவில் கைது


சிங்கள அரசின் இணையத்தளங்கள் மீது தொடர் தாக்குதல் !
சிங்கள அரசின் அதிகாரபூர்வ இணையத்தளங்கள் மீது இணையவழி தாக்குதலாளிகளால் தொடர் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. சமீபத்தில் தான் தேசிய பாதுகாப்பு மையத்தின் இணையம் தாக்குதலுக்கு உள்ளாகியது. இந் நிலையில் இலங்கை அரசின் அதிகாரபூர்வமான தொலைக்காட்ச்சியின் இணையமும் நேற்று முன் தினம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. தற்சமயம் வழமைக்கு திரும்பியுள்ள இவ்விணையம், தனது வழமையான செயல்பாடுகளுக்கு இன்னும் திரும்பவில்லை என்றும் அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. 

ஆனந்தசங்கரியுடன் பேசாது சென்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளரும் மூத்த அரசியல்வாதியுமான வி. ஆனந்தசங்கரியை வைபவம் ஒன்றில் சந்தித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவருடன் பேசாது சென்ற நிகழ்வு கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

இணையத்தளங்களுக்குள் ஊடுருவி தரவுகளில் மாற்றம் ஏற்படுத்தும் நபர்கள்.
இணையத்தளங்களுக்குள் ஊடுருவி தரவுகளில் மாற்றம் ஏற்படுத்தியமை தொடர்பில் சில முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணனி பாதுகாப்பு அவசர அழைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

கமலஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்துக்கு இலங்கையில் தற்காலிக தடை! கெஹலிய அறிவிப்பு
கமலஹாசன் தயாரித்து நடித்த ‘விஸ்வரூபம்’ திரைப்படத்துக்கு இலங்கையில் தற்காலிக தடைவிதிக்கப்பட்டுள்ளது.  அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வல இதனை அறிவித்துள்ளார்.

தமது மகளை கொலை செய்ய சொன்ன சவூதி பெற்றோரை மன்னித்தோம்: ரிசானாவின் தாயார்
தமது மகளுக்கு மரண தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்று கூறியோருக்கு ஷரி-ஆ சட்டத்தின்படி தாம் மன்னிப்பை வழங்குவதாக சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட மூதூர் ரிசானாவின் தாயார் தெரிவித்துள்ளார்.

ad

ad