புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 செப்., 2013

இணையதளத்தில் சல்மான்கானுடன் நெருக்கமாக இருப்பதுபோல் காட்சி: ஐஸ்வர்யா அதிர்ச்சி: அபிஷேக் அப்செட்
ஐஸ்வர்யாராய்- சல்மான்கான் நெருக்கமாக இருப்பது போன்ற படங்கள் இன்டர்நெட்டில் திடீர் என்று பரவியுள்ளன. இவற்றை வெளியிட்டது யார்



               ""ஹலோ தலைவரே...… சொத் துக் குவிப்பு வழக்கில் ஏற்படுற திருப்பங்களால் ஜெ. உக்கிரம்னு நம்ம நக்கீரனில் தெளிவா எழுதியிருந்தாங்க. அந்த உக்கிரத்தோட விளைவுதான் அந்த அரெஸ்ட்டாம்


           நாடாளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க.வை தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வந்துவிட வேண்டுமென தேசிய கட்சிகளான காங்கிரஸும் பா.ஜ.க.வும் வலை வீசி வரும் நிலையில், கட்சியின் மாநில செயற்குழுவைக் கூட்டி விவாதித்தார் விஜயகாந்த். பரபரப்பாகவும் காரசார விவாதங்களுட னும் நடந்து முடிந்திருக்கிறது செயற்குழு



               பெண் பிள்ளைகள் மீதான வல்லுறவுக் கொடுமை வரிசையில், இன்னுமொரு சம்பவம்! அசராம் பாப்பு என்கிற 72 வயது சாமியார், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது பள்ளிப் பிள்ளையைப் பாலியல் வல்லுறவு செய்திருக்கிறார் என்பது குற்றச்சாட்டு.  நக்கீரன் 

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் முதலில் ஆசிரமம் ஒன்றைத் தொடங்கிய அசராம், இப்போது 200-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆசிரமங்களைக் கொண்ட, உலகப் பிரபலமான சாமியாராக வலம்வருகிறார். தன் ஆசிரமங் களுடன், பழங்காலத்தைப் போன்ற குருகுலங்கள், மருந்து நிறுவனங்கள் என பலவற்றையும் நடத்து கிறார்.  இதில், மத்தியப்பிரதேச மாநிலம் சிந்த்வாராவில் உள்ள குருகுலமும் அடக்கம். இந்த குரு குலத்தில் 12வது படிக்கும் உத்தரப் பிரதேச மாணவி ஒருவரைத்தான், அசராம் பலாத்காரம் செய்துள்ளார். 

கடந்த மாதம் இரண்டாவது வாரத்தில், அந்த மாணவிக்கு தொடர்ந்து சில நாள்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட, அவர்கள் குருகுலத்துக்கு விரைந்தனர்.  அவர்களிடம், வீட்டுக்குக் கூட்டிச் செல்லுமாறு மாணவி கூறியிருக்கிறார். ஆனால், சாமியாரிடம் அழைத்துச் சென்றால் சரியாகிவிடும் என ஆசிரமத்தில் உள்ளவர்கள் கூற, பெற்றவர்களும் பக்தி சிரத்தையோடு, தலையாட்டி உள்ளனர். 
""மாணவியிடம் சில கெட்ட ஆவிகள் புகுந்துள்ளதாகவும் பேயோட்டி, சிறப்புப் பூஜை செய்தால் சரியாகிவிடும் எனவும் ஆசிரம சேவாதார் கள் சொல்லியிருக்கிறார்கள். அந்த சமயம், ராஜஸ் தான் மாநிலம் ஜோத்பூரில் தங்கியிருந்த இருந்த சாமியார், அங்கு வருமாறு கூறியுள்ளார்.  அதைக் கேட்டு ஜோத்பூர், மனாய் ஆசிரமத்துக்குப் போனார் கள்.  ஆக.15-ம் தேதியன்று,  அங்குவைத்துதான் அந்தச் சிறுமியிடம் முறைகேடாக நடந்துள்ளார்'' என்கிறார்கள் ஜோத்பூர் போலீஸார். 

முதலில், இந்தப் புகாரை போலீசார் நம்பவில்லை. மாணவியின் பெற்றோர்கள் அசராம் பாப்பு ஆசிரமத்தின் தீவிர பக்தர்கள் என்பதை அறிந்தபின் தான், போலீசின் விசாரணை சரியான திசைக்கு நகர்ந்தது. 

ஏற்கனவே, சாமியார் மீது ரூ.700 கோடி நிலப்பறிப்பு, 2 ஆசிரம சிறுவர்கள் கொலை என பல வழக்குகள், தாந்திரீக மோசடி என பல பிரச்சினைகள் உள்ளன. 

"ஜோத்பூரில் இருந்து ஆக.11-ம் தேதியே, சாமியார் கிளம்பிவிட்டார்' என்று ஆசிரமத்தின் செய்தித் தொடர்பாளர் வாங்கடே என்பவர் சொல்ல... ஆசிரமம் அமைந்துள்ள இடத்தின் உரிமையாளர் ரஞ்சித் தேவ் ராவோ, "10, 11 தேதிகளில் நடந்த- தீட்சை அளிக்கும் சத்சங் நிகழ்ச்சிக்காக, ஆக.9-ம் தேதியே வந்துவிட்டார். சத்சங் நிகழ்ச்சி முடிந்தபிறகு, பெரும்பாலும் தனியாகவே இருந்தார்.  தீவிரமான பக்தர் களைக்கூட அவருடைய முக்கிய அறைக்கு அனுமதிக்கவில்லை. அதேநேரம், குறிப் பிட்ட சில பக்தர்களுக்கு மட்டும் அனுமதி அளித்தார். 16-ம் தேதி காலையில்தான் இங்கிருந்து கிளம்பினார்'’என்று போட்டு டைத்தார். 

ஆனால், "72 வயதான எனக்கு, ஆண்மையே போய்விட்டது...  அந்தச் சிறுமி என் மகளைப் போன்றவள்.. தயவு செய்து, அவளை வல்லுறவுக்குள்ளாக்கப் பட்ட சிறுமி எனக் கூறாதீர்கள்.. தூய்மை யானவள்' எனப் பலவாறாக விரிவுரை செய்தார். பத்தாயிரக்கணக்கான பக்தர் களைக் கட்டிப்போட்ட அவரது பிரசங்கம், எடுபடாமல் போனது. 

30-ம் தேதிக்குள் விசாரணைக்கு வருமாறு, அசராம் பாப்புவுக்கு ஜோத்பூர் நகர போலீசார் உத்தரவிட, பாப்பு, எஸ்கேப். 14 பேரைக் கொண்ட ராஜஸ்தான் போலீஸ் தனிப்படை, பாப்பு சேஸிங்கை முடுக்கிவிட்டது. இந்தூரில் உள்ள ஆசிரமத்துக்குள்தான் சாமியார் ஒளிந்திருக்கிறார் என்பதைக் கண்டுபிடித்து, அங்கு ஆஜரானது, தனிப்படை. 

வேறு வழியின்றி, பாப்புவின் மகனான சின்ன சாமியார், நாராயண் சாய், "பாப்புஜிக்கு உடல்நலம் சரியில்லை. அவர் சரியானதும், ராஜஸ்தான் போலீசார், எப்போது வேண்டுமானாலும் இங்கு வந்து விசாரிக்கலாம்' என்று சொல்லிப் பார்த்தார். 

கடந்த 31-ம் தேதி சனிக்கிழமை மாலையில், போலீஸை உள்ளே போகவிடாமல் தடுப்பு அரண் அமைத்தார்கள். சிறிது நேரத்தில் அவர்களைக் கடந்து உள்ளே சென்றது, ஜோத்பூர் போலீஸ் தனிப்படை. 

விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு கேட்ட போலீசாரிடம், "இப்போதைக்கு நான் ஓய்வெடுக்க வேண்டும்' என தனி அறைக்குள் போய்விட்டார்.  சிறிது நேரத்தில் அவராகவே வெளிவந்த போது, பிடிக்குள் கொண்டுவந்தனர், ஜோத்பூர் போலீசார். 

அங்கிருந்து அசராமைக் கொண்டு வருவதற்குள், தனிப்படை போலீசார் தவித்துப் போனார்கள்.  இந்தூரில் இருந்து கிளம்பும் முன்பே, அவருக்கு நெஞ்சுவலி (அந்த ஊர்லயுமா) வந்துவிட்டது.  உடனே, இந்தூர் மருத்துவக் கல்லூரி  நிபுணர் குழுவினர் வந்து, நார்மல்தான் என உறுதிப்படுத்தி, அங்கிருந்து  விமானம் கிளம்ப, மறுநாள் காலை ஆகிவிட்டது. 

டெல்லியில், கடந்த நவம்பரில் மருத்துவ மாணவி வல்லுறவுக் கொடுமையைக் கண் டித்து எந்த இடம் போர்க்களமாக்கப் பட்டதோ, அதே ஜந்தர்மந்தர் பகுதியில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு, அசராமுக்கு ஆதரவாக கோஷம் போட்டனர்! 

ஆனால், ஜோத்பூரில் அசராம் தரையிறங்கியபோது, காட்சி வேறு மாதிரியாக இருந்தது. பெண்ணுரிமையாளர் கள் ஒரு பக்கம் கருப்புக் கொடிகளுடன் ஆவேசத்துடன் போராட, பக்தகோடிகள் ஒதுங்க வேண்டியதாயிற்று. 

விறுவிறுப்பாக முடிந் தவைகளைத் தொடர்ந்து, பாப்புவுக்கு ஜோத்பூரில் ஆண்மை பரிசோதனை செய்யப்பட்டது.  அவருடைய ஸ்டேட்மெண்ட்டுக்கு அப்படியே திருப்பிப் போட்டதுபோல, வந்தது, பரி சோதனை முடிவு. 

அகில இந்திய அளவில் இது ஒரு பக்கம் நடக்க, பாலியல் சாமியார் நித்யானந்தாவுக்கும் பாப்புஜிக்கும் இடையிலான நட்புதான், இதில் மேட்டரே என்கிறது, ஆசிரமத் தரப்புகள். முன்பு, நித்தி கையும் களவுமாக மாட்டிக் கொண்டபோது, ஆதரவுக் குரல் கொடுத்து, வடக்கில் உள்ள சாமியார்களைக் கிளப்பி விட்டதில், பாப்புவுக்கு முக்கியப் பங்கு இருந்துள்ளது. அதேபோல, இப்போது பாப்பு மாட்டிக்கொண்டதும், இந்த வகையறா சாமியார்களைத் திரட்டி, போலீஸ் நட வடிக்கைகளை எதிர்கொள்ள உதவுவதில் இறங்கியுள்ளதாம், நித்தி தரப்பு. 
 பறிக்கப்பட்ட காணிகளை மீண்டும் மக்களுக்குப் பெற்றுத் தர முடியுமா? இணக்க அரசியல் வாதிகளுக்கு சவால் விடுகிறார் சம்பந்தன் 
தமிழ் மக்கள் தமது தாயக மண்ணில் இருந்து விரட்டப்படு வதையும் அத்துமீறி சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்வதையும் தடுத்து, தமிழ் மக்களிடமிருந்து பலாத்காரமாகப் பறிக்கப்பட்டுள்ள
முஸ்லிம்களும் ஏற்கக்கூடிய சமஸ்டியே வேண்டும் தீர்வாக; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிப்பு 
முஸ்லிம் மக்களும் ஏற்கக் கூடிய சமஷ்டித் தீர்வே தமிழர்களுக்குத் தேவை என்று நேற்று வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சோனியாவுக்கு அமெரிக்க கோர்ட் சம்மன்
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. 1984ல் சீக்கியர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டோரை சோனியா பாதுகாப்பதாக,
பவானி சிங் நீக்கப்பட்டதை எதிர்த்து ஜெயலலிதா வழக்கு: பதில் அளிக்குமாறு கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
சொத்து குவிப்பு வழக்கில், கர்நாடக அரசு வழக்கறிஞர் பவானி சிங் நீக்கப்பட்டதை எதிர்த்து ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில்
நாங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்ட இனம்! இதற்கு ஐ.நாவும் உடந்தையாக இருந்ததுதான் வேதனைக்குரிய விடயம்: அனந்தி
நாம் திட்டமிட்டு அழிக்கப்பட்ட வேளை ஐ.நா பார்வையாளராய் பார்த்ததை எம்மால் ஏற்கமுடியாது என அனந்தி லங்காசிறி FMக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்

நவநீதம்பிள்ளைக்கு பாராட்டு தெரிவித்த ஆளும் கட்சி அமைச்சர்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்த 6 விடயங்கள் தொடர்பில் அவருக்கு பாராட்டு கூறுவதாக அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
நல்லூரில் மலர் சொரிந்த ஹெலிகொப்டர் காற்றாடி பட்டு மரக்கிளை முறிந்து வீழ்ந்து பக்தர் படுகாயம்
யாழ். நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த் திருவிழாவில் மலர் சொரிந்த ஹெலியின் காற்றாடி பட்டு மரக்கிளை ஒன்று முறிந்து விழுந்ததில் பக்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ள நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இரட்டைக் குடியுரிமையாளர்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு விமானநிலைய புலனாய்வாளர்களிடம் அரசாங்கம் வேண்டுகோள்!முக்கியமாக சுவிஸ் , கனடா ,பிரிட்டிஷ் கடவுசீட்டை  பெற்றுள்ள தமிழர்கள் மீது சந்தேகம் 
வடக்கைச் சேர்ந்த இரட்டைக் குடியுரிமையாளர்களை கண்காணிக்குமாறு பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் கடமை புரியும் புலனாய்வு (The State Intelligence Service (SIS) officers at the BIA)  அலுவலர்களுக்கு பாதுகாப்பு அமைச்சினூடாக ஒரு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கையின வடக்கைச் சேர்ந்த இரட்டைக் குடியுரிமையாளர்கள் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது சுங்க அதிகாரிகளிடம் கையளிக்கும் தங்குமிட முகவரி கொழும்பு முகவரியாக வழங்கப்படுவதாகவும், எனினும் அவர்கள் வேறு முகவரியில் தங்கியிருப்பதாகவும் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் விமான நிலையத்தில் தரையிறங்கும் வடக்கைச் சேர்ந்த இரட்டைக் குடியுரிமையாளர்கள் சமர்ப்பிக்கும் விமான நிலைய வருகைக்கான (immigration arrival card)  அட்டையில் பதியப்படும் விபரங்கள் சேகரிக்கப்பட்டு புலனாய்வுப்பிரிவின் ஊடாக பாதுகாப்பு அமைச்சுக்கு வழங்கப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக நாட்டுக்குள் பிரவேசிக்கும் இரட்டைக் குடியுரிமையாளர்கள் விமான நிலையத்தில் கொடுக்கும் முகவரியிலா தங்கியிருக்கிறார்கள் என ஒப்பிட்டு பரிசோதிக்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் புலம்பெயர் தமிழர்கள் அதிகளவில் வாக்களிக்கலாம் என அரசாங்கம் எதிர்பார்ப்பதும், இரட்டைக் குடியுரிமையாளர்கள் அரசாங்கத்திற்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனரா? என கண்காணிப்பதற்குமே இந்த புதிய நடைமுறை என தெரிய வருகிறது.
நவி.பிள்ளையைச் சந்தித்தவர்கள் சித்திவதைக்கு உள்ளாக்கப்படுவது குறித்து விசாரணை தேவை: மனித உரிமைகள் கண்காணிப்பகம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்தபோது சந்தித்த மக்களை இலங்கைப் படையினர் சித்திரவதைகளுக்கு உள்ளாக்குவதாக வெளியான குற்றச்சாட்டு
'இலங்கை படுகொலைகளின் மண்’ தீர்வைத் தேடி தருவேன்! நம்பிக்கை தந்த நவநீதம்பிள்ளை-விகடன் 
குற்றங்கள் நடக்கவில்லை... சொர்க்க பூமி இது என்றார் மகிந்த ராஜபக்ச. ஆனால், நவநீதம்பிள்ளையின் வருகையில் அவரே கேட்ட மக்கள் கதறல்களும் கண்ட கோரங்களும் 'இலங்கை படுகொலைகளின் மண்’ என்பதை மீண்டும் உலகத்துக்கு உணர்த்திவிட்டது.


யாழில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞன் பலி - தப்பியோடிய சாரதி கைது
யாழ்ப்பாணம் பலாலி வீதியின் கோண்டாவில் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்துடன் தொடர்புடைய பஸ் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
France

வாழ்வின் இனிய தருணங்கள் அனைவருக்கும் எளிதில் அமைவதில்லை…

வயதுவேறுபாடின்றி பார்த்தவர்கள் அனைவரும் வியந்து பாராட்டுகிறார்கள்…

எமக்கான முத்திரையுடன் உலகெங்கும் வெற்றிநடைபோடுகிறது…

இந்த அரிய சந்தர்ப்பத்ததை தவறவிடாதீர்கள்… பின்னர் கவலையடையாதீர்கள்…

Maaru Thadam in France...
15.09.2013 pm 19.30 in France
MEGA CCR EPINAY SUR SEINE


3 செப்., 2013

சிங்கள அரசு உரிமை தர மறுத்தால் 10 வயதிலிருக்கும் குழந்தைகள் எதிர்காலத்தில் ஆயுதம் பற்றி சிந்திப்பதை தடுக்க முடியாது: சி.சிறீதரன்
தமிழ் இனம் வடக்கு கிழக்கு எனும் சிறுபரப்பினிலே தனக்கு உரித்துடைய வாழ்வுரிமையினைக் கேட்டு நிற்கிறது. அந்த உரிமையினைக் கூட சிங்கள இனவாத அரசு தரமறுத்தால், இன்று 10 வயதுகளில் இருக்கின்ற குழந்தைகள் இன்னும் 10 வருடத்தில் ஆயுதங்கள் பற்றிச் சிந்திப்பதை
பயங்கரவாத புலனாய்வு பொலிசாரால் ஒன்றரை மணிநேரம் விசாரிக்கப்பட்டார் அரியநேத்திரன் எம் பி
தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் இன்று பயங்கரவாத தடுப்பு புலானாய்வுத் துறை அதிகாரிகளினால் அழைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டுள்ளார்.
வடமாகாண சபைக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் - 2013


தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு (த.தே.கூ) வழங்கப்பட்ட மக்கள் ஆணை !

2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் த.தே.கூ விற்கு பிரமாண்டமான ஆணை ஒன்றை வழங்கினர். அந்த அரசியல் ஆணைக்கு அமையகூட்டமைப்பு தொடர்ந்து செயற்பட்டுள்ளதோடு, அந்த நோக்கத்தை நிறைவு செய்வதற்கு தேவையான ஒரு முதற் படியாக தற்போது வட மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்கின்றது. இம் மக்கள் ஆணையின் முக்கிய அம்சங்களை நினைவுகூர்வது இங்கு பொருத்தமானதாகும்.
தமிழர்களை இலங்கைக்கு நாடுகடத்துவதை இடைநிறுத்தியது சுவிஸ் 
 புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட தமிழர்களை இலங்கைக்கு நாடுகடத்துவதை, சுவிஸ் அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளது. 
 
இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட இரண்டு தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்தே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, சுவிஸ் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 
 
இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, சுவிஸ் சமஸ்டி குடியேற்ற பணியகம் தெரிவித்துள்ளது. 
 
கைது செய்யப்பட்டுள்ள இரண்டு தமிழர்களின் நிலை குறித்து அறிந்து கொள்ளும் முயற்சியில் கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகம் ஈடுபட்டுள்ளதாகவும், சுவிஸ் ஊடகச்செய்தியில் கூறப்பட்டுள்ளது. 



நாடாளுமன்றத் தேர்தலில் மதிமுகவின் அணுகுமுறை! எதிர்பார்ப்பில் மறுமலர்ச்சியினர்!

விருதுநகரில் அண்ணா பிறந்த நாள் மாநாட்டை மறுமலர்ச்சி தி.மு.க. நடத்துகிறது. இதற்கான பந்தல் அமைக்கும் பணியினை நான்கு முறை பார்வையிட்டிருக்கிறார் வைகோ. 
தூத்துக்குடி விமானத்தில் தீப்பற்றியது! 2 எம்.எல்.ஏ.க்கள் தப்பினர்!
தூத்துக்குடியில் ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் திடீரென தீப்பிடித்தது. இதையடுத்து அவசர அவசரமாக பயணிகள் இறக்கிவிடப்பட்டனர். இதில், 2 எம்எல்ஏக்கள் உட்பட 67 பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
தமிழக முதல்வரின் வீட்டுக்கருகில் சுற்றித் திரிந்த இலங்கைப் பெண்: பொலிஸார் விசாரணை
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டுக்கருகில் சுற்றித் திரிந்த இலங்கைப் பெண்ணொருவரை பாதுகாப்புப் பிரிவு பொலிஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
புலிகளின் தளபதி பால்ராஜின் உறவினர் மகசின் சிறையில் மரணம்! கொலை என மனைவி சந்தேகம்
கொழும்பு மகசின் சிறையில் இருந்து நேற்று முன்தினம் தொலைபேசியில் சகஜமாகப் பேசிய தமிழ் அரசியல் கைதி ஒருவர் இறந்துவிட்டதாக நேற்று திங்கட்கிழமை காலை தெரிவிக்கப்பட்ட தகவலால் உறவினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தம்புள்ளை காளி கோயிலின் விக்கிரகத்தை உடைத்தெறிந்த பிக்குகள்
தம்புள்ளையில் உள்ள காளி கோயிலின் மூலவிக்கிரகம் நேற்று இரவு பௌத்த அடிப்படைவாதிகளால் எடுத்துச் செல்லப்பட்டு உடைத்தெறியப்பட்டுள்ளது.உடைக்கப்பட்ட விக்கிரமகத்தின் பாகங்கள் வேறு இடம் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
வேழமாலிதனும் பொன்காந்தனும் பொலிசாருக்கு குற்ற ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்க மறுப்பு! சட்டத்தரணி தவராசா நீதிமன்றில் காட்டம்
2013ம் ஆண்டு தை மாதம் பயங்கரவாதத் தடைப்பிரிவுப் பொலிசாரினால் கைது செய்யப்பட்ட த.தே.கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரான அருணாசலம் வேழமாலிதன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறீதரனின், செயளாலரான பொன்காந்தனும்


தமிழ் இனத்தை விற்று பிளைக்கிறார் டக்ளஸ்; மாவை. எம்.பி. சாடல் 
தேர்தல் வாக்குக்காக தமிழினத்தைக் காட்டிக்கொடுக்கிறார் அமைச்சர் டக்ளஸ். அத்துடன் எமது மக்களை மஹிந்தவிடம் அடிமைப்படுத்தும் வேலையையும் அவர் மேற் கொள்கிறார்.

தமிழர்கள் மீண்டும் ஆயுதப் போராட்டத்திற்கு செல்வார்களானால் இனவாதிகளும் அரசாங்கமுமே பொறுப்பு! த.தே.கூட்டமைப்பு
தமிழ் தேசிய கூட்டமைப்பு தனிநாட்டு கோரிக்கையினையும், ஆயுதப் போராட்டத்தையும் மீள உருவாக்குவதற்கு நினைக்கவில்லை. ஐக்கிய இலங்கைக்குள் பூரண சமஷ்டி அடிப்படையிலான தீர்வு ஒன்றினையே நாம் கேட்டிருக்கிறோம்.
முதலமைச்சர் வேட்பாளர் யாரென அறிவித்தால் விவாதத்துக்கு வருவேன்!- தவராசாவுக்கு விக்னேஸ்வரன் சவால்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வடமாகாண முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை உத்தியோகபூர்வமாகவும் பகிரங்கமாகவும் அறிவித்தால் அவருடன் விவாதம் நடத்த தயார் என்று தமிழ்க் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
23 வயது பெண், 15 வயது சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்
23 வயதான பெண் ஒருவர், 15 வயதான சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அம்பலாந்தோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தெஹிகஹாலந்த என்னும் இடத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

177 கி.மீ. புளோரிடா கடலை நீந்தி 64 வயதான அமெரிக்க வீராங்கனை சாதனை
177 கி.மீ. புளோரிடா கடலை நீந்தி 64 வயதான அமெரிக்க வீராங்கனை சாதனை


அமெரிக்காவின் வலிமையான நீச்சல் வீராங்கனை டயான நையத் (64). இவர் கியூபா தலைநகர் ஹவானாவில் இருந்து அமெரிக்காவின் புளோரிடா வரை 177 கி.மீ. தூரத்தை கடலில் நீத்திக்கடக்கும் முயற்சியை சனிக்கிழமை காலை தொடங்கினார்.  

177 கிலோமீட்டர் நீளமுடைய இந்த
சுவிஸ் வீரர் பெடரர் அமெரிக்க  ஓபன் டென்னிஸ்  அரைக் காலிறுதிஆட்டதில் தோற்று வெளியேற்றம் .ஸ்பெயின் வீரர்டொம்மி   ரோப்ரோடோ இடம் 6.7,3-6, 4-6 என்றரீதியில் தோல்வி கண்டு வெளியேறி உள்ளார் 
எழுச்சிப்பாடகர் சாந்தன்  இப்போது கூட்டமைப்பு மேடைகளில் இசை மழை பொழிகிறார் 

தமிழீழ விடுதி எழுச்சி பாடகனாக இருந்து சிறை சென்று மீண்ட புங்குடுதீவை சேர்ந்த பிரபல பாடகர் எஸ் ஜி சாந்தன் சிலகாலமாக அரச துப்பாக்கி கலாசாரதில்கட்டுண்டு கிடந்தநிலை போய் இப்போதெல்லாம் கூட்டமைப்பின் பிரசாரத்துக்கு துணையாக இருந்துவருகிறார் .அண்மையில் கூட கூட்டமைப்பின் பிரசாரதுக்கென ஒரு கீதமொன்றினைப் பாடி இருந்தமை குறிப்பிடத் தக்கது


அண்ணா பிறந்தநாள் : சிறைவாசிகளை விடுவிக்க வைகோ கோரிக்கை

அண்ணா பிறந்த நாளையொட்டி, சிறைவாசிகளை விடுவிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இராணுவ நடவடிக்கையை தடுக்குமாறு சிரிய அரசு ஐ.நாவிடம் வலியுறுத்து

கடும் நடவடிக்கைக்கு அரபு லீக் அழுத்தம்
சிரியா மீதான யுத்த செயற்பாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு சிரிய அரசு ஐ. நா. சபையை கேட்டுள்ளது. ஆனால் சிரிய அரசுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரபு லீக், சர்வதேச சமூகத்தையு

ஆசியக் கிண்ண ஹொக்கிப் போட்டி: தென்கொரிய அணி சம்பியன்

ஆசியக் கிண்ண ஹொக்கிப் போட்டியில் இறுதிப் போட்டியில் 4 - 3 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி நடப்புச் சம்பியனாக தென்கொரிய அணி வெற்றி பெற்றது.

தாய்லாந்து மெய்வல்லுனர் போட்டி; இலங்கை வீரர்கள் பங்கேற்பு

தாய்லாந்தில் இன்று 03ம் திகதி முதல் 06 வரை நடைபெறும் மெய்வல்லுனர் விளையாட்டு விழாவில் இலங்கை சார்பாக கலந்து கொள்வதற்காக எட்டு வீர வீராங்கனைகள் தேர்ந்தெடுக்கப்பட் டுள்ளனர்
கச்சத்தீவை திரும்ப பெறுவது குறித்து பிரதமரிடம் வலியுறுத்துவேன் : ஜி.கே.வாசன் 
தமிழர்களுக்கு விரோதமான செயலில் தொடர்ந்து ஈடுபடும் இலங்கை அரசிடமிருந்து கச்சத்தீவை  திரும்ப பெறுவது குறித்து பிரதமரிடம் வலியுறுத்துவேன் என மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவத்துள்ளார்.

அவுஸ்திரேலிய பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய இலங்கையர் ஒருவரை அந்நாட்டு பொலிஸார் அவுஸ்திரேலிய பிளேக் டவுன் ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண்ணொருவரை குறித்த சந்தேக நபர் கடந்த ஆகஸ்ட் மாதம் இரு முறை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.

யாழில் சட்டவிரோத ஆயதங்களின் பாவனை அதிகரிப்பு : கபே அமைப்பு குற்றச்சாட்டு

வன்செயலற்ற தேர்தல் ஒன்றை யாழ். மாவட்டத்தில் நடத்த எதிர்பார்ப்பதாயின் சட்டவிரோதமாகவும், அனுமதியுடனும் வைத்திருக்கின்ற ஆயுதங்கள் அனைத்தும் கையளிக்கப்படவேண்டும்

மீண்டுமொரு போராட்டத்தை நாம் தூண்டவில்லை: விமலின் கருத்துக்கு சுரேஷ் எம்.பி. கண்டனம்

வடக்கில் பிரிவினைவாதத்தைத் தூண்டி எதிர்காலத்தில் மீண்டுமொரு போராட்டத்தை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதியும் அவருடைய அமைச்சரவையில் அங்கத்துவம் வகிக்கின்ற அமைச்சர்களுமே

சர்வதேச கடல் எல்லையில் மீன்பிடிக்கும் உரிமையை மத்திய அரசு நிலை நாட்ட வேண்டும்: கனிமொழி

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது தொடர் கதையாகியுள்ள நிலையில், கடந்த சில மாதங்களில் மட்டும் 194 மீனவர்களை இலங்கை கடற்படை பிடித்துச் சென்றுள்ளதாக
முஸ்லிம்களின் பிரச்சினைகளில் அக்கறை கொண்டு செயற்பட்டமைக்கு தமிழ் கூட்டமைப்புக்கு நன்றி தெரிவிப்பு
இலங்கையில் பௌத்த பேரினவாத செயற்பாடுகளால் முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் கவனத்திற்கு கொண்டு வந்தமைக்கு அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள்
களுத்துறைச் சிறையில் தமிழ் அரசியல் கைதி மரணம்: அதிகாரிகளின் மனிதாபிமானமற்ற செயலென ஆனந்த சங்கரி கண்டனம்
களுத்துறைச் சிறைச்சாலையில் இன்று காலை உயிரிழந்த தமிழ் அரசியல் கைதியான பிரான்ஸிஸ் நெல்சனின் மரணத்திற்கு சிறை அதிகாரிகளின் மனிதாபிமானமற்ற செயலே காரணம் என வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
யாழில் மாணவிகளின் எதிர்காலத்தையும் கலாசாரத்தையும் சீரழிக்கும் நடவடிக்கைகள் அதிகரிப்பு
பாடசாலை மாணவிகளின் எதிர்காலத்தையும் யாழ்ப்பாணத்தின் கலாசாரத்தையும் திட்டமிட்டு சீரழிக்கும் நடவடிக்கைகள் யாழ். கோட்டைப் பகுதியில் இடம்பெற்று வருவதாக ஊடகங்கள் மூலம் பலமுறைகள்
ஆளும் கூட்டணியிலிருந்து விலகப் போவதில்லை! மகிந்தவே எமது அரச தலைவர்: ரவூப் ஹக்கீம்
அரசாங்கத்தையும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌சவையும் வலுவிழக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
வவுனியா ஆச்சிபுரம் மற்றும் தரணிக்குளம் பகுதிகளில் கூட்டமைப்பின் தேர்தல் கருத்தரங்குகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள் வவுனியா ஆச்சிபுரம் மற்றும் தரணிக்குளம் பகுதிகளில் நேற்று இடம்பெற்றுள்ளன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட புளொட் வேட்பாளர்களான வவுனியா நகரசபையின் முன்னாள் தலைவர் ஜி.ரி.லிங்கநாதன் (விசு), வவுனியா நகரசபையின் முன்னாள் உபதலைவர் திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) ஆகியோருடன் ஊர்ப் பிரமுகர்களும் ஆதரவாளர்களும் நண்பர்களும் மேற்படி கருத்தரங்குகள் மற்றும் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தனர்.
சர்வதேச குற்றச்சாட்டுக்களுக்கு 13ஏ தீர்வாக அமையும்!- அரசாங்கம்
சர்வதேசம் இலங்கை மீது சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்களுக்கு 13ஏ என்ற தீர்வை பயன்படுத்தப் போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது
போலி ஆவணங்களை தயாரித்து வங்கியில் கடன் பெற்ற ஆசிரியை கைது! புத்தளத்தில் சம்பவம்
போலி ஆவணங்களை தயாரித்து வங்கியிலிருந்து ஒரு லட்சம் ரூபாவை கடனாக பெற்ற ஆசிரியை ஒருவரை புத்தளம் பிரிவு விசேட குற்றப்புலனாய்வு பிரிவினர் இன்று திங்கட்கிழமை கைது செய்துள்ளனர்.
பதவி இல்லாத நேரத்தில் வெளியேறும் துரோகிகள் : அழகிரி ஆவேசம்
திமுக விவசாய அணி துணை அமைப்பாளர் மாரி என்பவரது இல்லத்திருமணம் மதுரையில் நடை பெற்றது.   முன்னாள் அமைச்சர் மு.க.ஆகிரி இத்திருமணத்திற்கு தலைமை
நரேந்திர தபோல்கர் படுகொலைக்கு எதிரான கண்டன கூட்டம்
மூட நம்பிக்கைக்கு எதிராகப் போராடிய பகுத்தறிவாளர் நரேந்திரா தபோல்கர் படுகொலையைக் கண்டித்தும், மூடநம்பிக்கைக்கு எதிரான முழுமையான சட்டம் தமிழகத்திலும், இந்தியா முழுமைக்கும் இயற்றக் கோரியும் தீர்மானம். 
தமிழக மக்களுக்கு திமுக துரோகம் இழைத்து விட்டதா? :  கலைஞர்
உணவு பாதுகாப்பு சட்டத்தைத்  ஆதரித்தது குறித்து திமுக தலைவர் கலைஞர்  அறிக்கை வெளியிட்டுள்ளார்.
காதல் கணவனை மீட்டு கொடுங்கள் : இளம்பெண் கலெக்டரிடம்  மனு 
   புதுக்கோட்டை மாவட்டம் வத்தனாக்கோட்டை கிராமத்தைச் சேந்த இளம்பெண் பாண்டிச் செல்வி(22) என்பவர் திங்கள் கிழமை இரவு 7 மணிக்கு புதுக்கோட்டை  மனு மாவட்ட

2 செப்., 2013

சிரியா மீதான தாக்குதல்: அமெரிக்காவுக்கு பிரான்ஸ் கைகொடுக்குமா?

இங்கிலாந்தை தொடர்ந்து பிரான்சும் சிரியா மீதான தாக்குதலிலிருந்து விலகி கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கிளிநொச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர்களுக்கு தொட்ர்ந்து அச்சுறுத்தல்; சுதந்திரமாக பிரசாரம் செய்ய முடியாத நிலை என முறைப்பாடு
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பர்ளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் தொடர்ச்சியாக
"ஆளும் ஐ.ம.சு. முன்னணியின் சார்பில் இராணுவம் நிறுத்திய 4 வேட்பாளர்'
வடமாகாண சபைத்தேர்தலில் யாழ்.குடாநாட்டில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தவிர, இராணுவத்தினரின் சிபார்சின்
நவநீதம் பிள்ளை எமக்கு பாடம் கற்பிக்க முடியாது - பொதுபலசேனா 
எம் நாட்டிற்கு நவநீதம்பிள்ளை பாடம் கற்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என பொதுபலசேனா அமைப்பின் தலைவர் கிரம விமலஜோதி தேரர் தெரிவித்தார்.
அனிதா குப்புசாமி அதிமுகவில் சேர்ந்தார்
அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,   ‘’பிரபல இசைக் கலைஞர் அனிதா குப்பு சாமி முதலமைச்சர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து, தன்னை கழகத்தின்
பாமக முன்னாள் தலைவர் தீரன் அதிமுகவில் சேர்ந்தார்
அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ’’அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலி தாவை அவரது இல்லத்தில் இன்று பட்டாளி மக்கள் கட்சியின்
முன்னாள் திமுக அமைச்சர் கோமதி சீனிவாசன் அதிமுகவில் இணைந்தார்
முன்னாள் அமைச்சர் கோமதி சீனிவாசன், தனது கணவர் சீனிவாசனுடன் முதல்–அமைச்சர் ஜெயலலி தாவை சந்தித்து, தி.மு.க.வில் இருந்து விலகி தங்களை கழகத்தின்
உழவன் எக்ஸ்பிரஸ் துவக்க விழாவில்அதிமுக -திமுகவின் தள்ளுமுள்ளு - ஒருவர் பலி
தஞ்சாவூரில் உழவன் எக்ஸ்பிரஸ் ரயில் துவக்க விழா நேற்று இரவு நடந்தது. இதில் திமுக., எம்பி., பழனிமாணிக்கமும், மாநில அமைச்சர் வைத்தியலிங்கமும் கலந்து கொண்டனர்.
முட்டாள் அரசாங்கம் தற்போது வகையாக மாட்டிக் கொண்டுள்ளது!- ரில்வின் சில்வா
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை வருமாறு அழைப்பு விடுத்துவிட்டு அவருக்கு எதிராக பேசும் அரசாங்கத்தின் முட்டாள் தனமான செயற்பாட்டால் நாட்டிற்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
என்ன சொல்லப் போகிறார் நவநீதம்பிள்ளை அம்மையார்?
மே 2009 , இனப்படுகொலை முடிந்த கையோடு, இலங்கைக்கு விஜயம் செய்த ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் அவர்கள் என்ன சொன்னார்?. சர்வதேச சுயாதீன போர்க்குற்ற விசாரணை ஒன்று தேவை என்றரா? இல்லவேயில்லை.
வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் சிறப்புற நடைபெற்ற த.தே.கூட்டமைப்பின் தேர்தல் பிரசார நடவடிக்கை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட வேட்பாளரான 14ம் இலக்கத்தில் போட்டியிடும் சி.சுகிர்தனை ஆதரித்து, வடமராட்சி கிழக்கின் கிராமங்களுக்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்,
விடுதலைப் புலிகள் கோட்பாட்டு ரீதியாக தோற்கடிக்கப்படவில்லை: கெஹெலிய ரம்புக்வெல்ல
விடுதலைப் புலிகளுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்த குழுவுக்கு வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றிப்பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக புலனாய்வு பிரிவினர் அறிக்கை வழங்கியிருந்த போதும்,
விடுதலைப் புலிகள் கோட்பாட்டு ரீதியாக தோற்கடிக்கப்படவில்லை: கெஹெலிய ரம்புக்வெல்ல
விடுதலைப் புலிகளுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்த குழுவுக்கு வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றிப்பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக புலனாய்வு பிரிவினர் அறிக்கை வழங்கியிருந்த போதும்,
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண தேர்தல் விஞ்ஞாபனம் நாளை யாழில் வெளியீடு
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபைக்கான தேர்தல் விஞ்ஞாபனம் நாளை 3ம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்திலுள்ள தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் வெளியிடப்படவுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வெற்றிக்கு உதவுங்கள்- British Tamil Conservatives

தமிழ் மக்கள் சம உரிமை பெற்ற விடுதலை பெற்ற சமூகமாக வாழ வேண்டும் என்ற நிலைப்பாட்டை கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடமாகாணசபை தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தமிழ் மக்கள் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என பிரித்தானியாவில் உள்ள பிரிட்டிஷ் தமிழ்

சுவிசர்லாந்து பேர்ண் நகரில் பொன். சுந்தரலிங்கம் அவர்களின் இசைக்கோலங்கள் 2013


சுவிசர்லாந்து பேர்ண் நகரில் பொன். சுந்தரலிங்கம் அவர்களின் இசைக்கோலங்கள் 2013 நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இளம்கலை மன்ற ஸ்தாபகரும், தமிழிசையால் மக்கள் மனம் நிறைந்த சங்கீதபூசணம் பொன். சுந்தரலிங்கம் அவர்களின் தமிழிசைகானமிர்தம் நிகழ்ச்சி எதிர்வரும் வெள்ளிக்கிழமை 6ஆம் திகதி மாலை 6.30மணிக்கு பின்வரும் முகவரியில் உள்ள மண்டபத்தில் நடைபெற உள்ளது.
Kleefeld Zentrum
Mädergutstr 5,    3018 Bern

இந்தியாவில் இருந்து வர்த்தகர்கள் என்ற பெயரில் வருகை தந்து வடக்கில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருபவர்கள் இந்திய புலனாய்வு அதிகாரிகள் என வன்னி கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்திய புலனாய்வு அதிகாரிகளே இந்தியாவில் இருந்து வர்த்தகம் என்ற போர்வையில் வடக்கிற்கு வந்து வியாபாரங்களை மேற்கொள்கின்றனர்.
யாழ் தேவி எதிர்வரும் 14 முதல் கிளிநொச்சியில் 
 கொழும்பில் இருந்து வவுனியா, ஓமந்தை வரை தற்போது சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வரும் யாழ் தேவி ரயில் எதிர்வரும் 14 ஆம் திகதியில் இருந்
விடுதலைப் புலிகளுடன் மவோயிஸ்ட் அமைப்பு தொடர்பு! 
 விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணியதாக நேபாளத்தின் மாவோயிஸ்ட் அமைப்பின் தலைவர் புஷ்ப கமல் தஹால் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கோர முகம் அம்பலமாகியுள்ளது : ராமதாஸ் 
இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை அதிர்ச்சி நிறைந்த உண்மைகளை கூறியுள்ளார். அதன் மூலம் இலங்கையின் கோர முகம் அம்பலமாகியுள்ளது என பாமக நிறுவுனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் பிரசாரத்திற்கு சமூக விழாக்களை பயன்படுத்தக்கூடாது : தேர்தல்கள் ஆணையாளர்

மாகாண சபைத் தேர்தலில் கட்சிகளும், குழுக்களும் விசேடமாக வேட்பாளர்களை ஊக்குவிப்பதற்காக சமய வழிபாட்டு நிலையங்களையும் சமய விழாக்களையும் பயன்படுத்தக்கூடாது.

நவநீதம்பிள்ளையின் கைகளை சென்றடைந்த நோர்வே சிறுவர் விவகாரம்

நோர்வே நாட்டில் அவல நிலைக்குள்ளாக்கப்பட்டுள்ள வெளிநாட்டு வதிவாளர்களின் குழந்தைகள் தொடர்பான விவகாரம் இலங்கை வந்திருந்த ஐ.நா. மனித உரிமைகள் விவகாரங்களுக்கான உயர்ஸ்தானிகர்

குழியில் விழுந்து சிறுவன் பலி : காத்தான்குடியில் சம்பவம்

குழி தோண்டிக்கொண்டிருந்த வேளையில் குழியில் விழுந்து ஐந்து வயது சிறுவனொருவன் பலியான சம்பவமொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் காத்தான்குடி விடுதி வீதி 03ஆம் குறுக்கு லேனில்

சவுதியில் மரணமான இலங்கைப் பணிப்பெண்ணின் மரணம் தொடர்பில் உறவினர்கள் சந்தேகம்

சவுதி அரேபியா ஜித்தாவில் பணிப்பெண்ணாக பணியாற்றிய இளம் பெண் ஒருவர் நஞ்சருந்தி மரணமானதாக தெரிவித்து அவரது சடலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறித்து உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

வடக்கில் தேர்தல் வன்முறைகளில் எவரேனும் ஈடுபட்டால் அவர்களை உடனடியாக கைது செய்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
வடக்கில் தேர்தல் விதிமுறைகளை மீறி எவராவது வன்முறைகளில் ஈடுபட்டால் அவர்களை கட்சி, பதவி, அந்தஸ்து மற்றும் செல்வாக்கு என எதனையும் பொருட்படுத்தாது உடனடியாகக் கைதுசெய்து

எகிப்தில் பிடிபட்ட உளவு பார்க்கும் நாரை?

உளவுபார்க்கும் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் நாரையொன்று  எகிப்தில் பிடிபட்டுள்ளது.
குறித்த பறவையை நபரொருவர் பிடித்துள்ளதுடன்


1 செப்., 2013

தேமுதிக செயற்குழு கூட்டம்: பரபரப்பை ஏற்படுத்திய பண்ருட்டியார்
தேமுதிகவின் செயற்குழு கூட்டம் கட்சித்தலைவர் விஜயகாந்த் தலைமையில் கட்சியின் தலைமை அலுவலகத்தில்  இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. 7 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தவிர மற்ற எம்.எல்.
5 ஆயிரம் ஆன்மிக தொண்டர்கள் சென்னை அரசு மருத்துவமனையை சுத்தம் செய்தனர்
சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளை ஆன்மிக தொண்டர்கள் 5 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் தூய்மைப் படுத்தினார்கள். சுவாமி விவேகானந்தரின் 150–வது பிறந்த
வடக்கு, கிழக்கிலிருந்து படைகளை அகற்றுக; அரசிடம் நவிப்பிள்ளை வலியுறுத்து 
போரினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களில் இருந்து இராணுவத்தை அகற்றும் பணியை இலங்கை அரசு துரிதப்படுத்த வேண்டும்.
போதை ஊசி போட்டு விபசாரத்தில் ஈடுபடுத்தும் கும்பலின்
சென்னை வியாசர்பாடி பி.வி.காலனியைச் சேர்ந்த 14 வயது சிறுமி அபர்ணா. இவரை அதே பகுதியில் ஆசிரமம் வைத்து குறி சொல்லி வந்த அறவழி சித்தர் (48) என்பவர் போதை மருந்து கொடுத்தும், போதை ஊசி போட்டு பல முறை கற்பழித்து உள்ளார். இதற்கு அபர்ணாவின் தாயாரும் உடந்தையாக இருந்துள்ளார். அபர்ணாவுடன் தனது காம பசியை தீர்த்து அலுத்து போன அறவழி சித்தர் பின்னர் அந்த அப்பாவி சிறுமியை விபசார கும்பலிடம் விற்பனை செய்து விட்டார். அந்த கும்பலிடம் இருந்து தப்பிய அபர்ணா திருப்பதி சென்று அங்கு மாங்காய் வியாபாரம் செய்து வந்தார். 
முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னத்தை திறந்து வைப்பார் ஜெயலலிதா?

தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் அமைக்கப்பட்டு வரும் முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னத்தை தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா திறந்து வைக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 
காற்று தங்கள் பக்கம் வீசவில்லையாம் – ஒப்புக்கொள்கிறது சிறிலங்கா

சிறிலங்கா எதேச்சாதிகாரப் பாதையில் செல்கிறது என்று ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை கருத்து வெளியிட்டதில் இருந்து, காற்று எந்தப் பக்கம் வீசுகிறது என்று புரிந்து கொள்ள முடிவதாக, ஆதங்கப்பட்டுள்ளார் சிறிலங்கா அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல. 

ad

ad