புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 அக்., 2013

இராஜினாமா செய்யுமாறு கல்முனை மேயருக்கு பணிப்பு

மேயர் பதவியை இராஜினாமா செய்யுமாறு கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிபிடம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கோரிக்கைவிடுத்துள்ளார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள்
அரசுக்கு எதிரானவர்களை படுகொலை செய்த குழுவினர் பற்றிய விபரங்கள்! அம்பலப்படுத்தும் சிங்கள இணையம்!
இலங்கையில்  ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ச பதவியேற்ற பின்னர் அவரது அரசுக்கு எதிராகச் செயற்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டமை தொடர்பான விபரங்கள் தற்போது அம்பலத்துக்கு வந்துள்ளதாகச் சிங்கள இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய பிரதமர் காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ளக்கூடாது: சம்பந்தர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இன்று (அக்டோபர் 22,2013) செவ்வாய்க்கிழமை காலை தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்களை சென்னையில் சந்தித்து
வடக்கு – கிழக்கு இணைப்புக்கு பச்சைக்கொடி
‘வடக்கு – கிழக்கு இணைப்பு உள்ளிட்ட ஏனைய அனைத்து விடயங்கள் குறித்தும் சாதகமாகப் பரிசீலிக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தயாராகவுள்ளது. இதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புரிந்துணர்வுடன் செயற்பட முன்வர வேண்டும்.”
தமிழர்களுக்கு ராஜபக்ச அரசு ஆக்கபூர்வமாக எதையும் செய்யவில்லை: சம்பந்தன் குற்றச்சாட்டு/ விகடன் 

ஈழத் தமிழர்களுக்காக இலங்கை அரசு ஆக்கபூர்வமாக எதையும் செய்யவில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் குற்றம்சாட்டினார்
வடமராட்சி கிழக்கில் ஈபிடிபியினால் மேற்கொள்ளப்படும் மணல் கொள்ளை தடுத்து நிறுத்தப்படும்!- பொ.ஐங்கரநேசன்
வடமாராட்சி கிழக்கில் ஈ.பி.டி.பி யின் மகேஸ்வரி நிதியத்தினால் மேற்கொள்ளப்படும் மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்ததுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வடமாகாண விவசாய, கால்நடைகள் மற்றும் கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
நடிகையும் நாடாளுமன்ற உறுப்பினருமான உபேக்‌ஷாவின் தந்தை மோசடியில் ஈடுபட்டு கைது!
பிரபல சிங்கள நடிகையும், ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான உபேக்‌ஷா சுவர்ணமாலியின் தந்தை நிதி மோசடியில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டு மதுபான விற்பனை நிலையமொன்றுக்கான அனுமதிப்பத்திரம் பெற்றுத் தருவதாக ஏமாற்றி பணம் பெற்றுக் கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் பீரிசிற்கு எதிராக கவனயீர்ப்புப் போராட்டம்

பிரித்தானியாவில் அமைச்சர் ஜீ.எல். பீரிசிற்கு எதிராக இன்று மாலை WC1E 7HU, Malet Street  என்னும் முகவரியில் அமைந்துள்ள Senate House  முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று ஒன்று நடைபெற்றுள்ளது.

கரும்புலி பெண் தலைவி “மலைமகள்” இன்னும் பல வெளிவரா அதிர்ச்சிக் காட்சிகள் 

last_wor18
பெண் கரும்புலிகளின் முன்னனித் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்படும் மலைமகள் சிதைவுற்ற உடலம் மற்றும் முக்கிய தளபதியின் குடும்பம் என சந்தேகிக்கப்படும் ஒருவரின் குடும்பததை இராணுவம் மிரட்டும் காட்சி

கனடாவில் கத்திக் குத்துக்கு இலக்காகி மரணமடைந்தவர் கௌதம் (கெவின்) குகதாசன்: ரொறன்ரோ பொலிஸார் அறிவிப்பு (Photos)

kevin
கனடாவின் ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தின் வின்ட்சர் வளாகமருகே இரு மாணவர் குழுக்களுக்கிடையில் கடந்த சனிக்கிழமை சண்டை நடந்துள்ளது.

ஜுவனிதாநாதன்அவர்கள்லிபரல்கட்சிவேட்பாளர்நியமனத்திற்கு போட்டியிட தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார்.

யோர்க் பிராந்திய கல்விச்சபை உறுப்பினரும், சமூக சேவையாளரும், கடந்த பத்து வருட காலமாக மார்க்கம்- தோர்ன் ஹில் தொகுதியை நிரந்தர வதிவிடமாக கொண்டவருமா ன  ஜுவனிதா நாதன்  புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மார்க்கம் – தோர்ன்ஹில் தொகுதிக்கான
கனடாவில் மாணவர் குழுக்களுக்கிடையில் நடைபெற்ற மோதலில் தமிழ் இளைஞன் பலி
கனடாவின் ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தின் வின்ட்சர் வளாகமருகே இரு மாணவர் குழுக்களுக்கிடையில் கடந்த சனிக்கிழமை ஏற்ப்பட்ட மோதலில். மாணவர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி இறந்துள்ளார்.
பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் இலங்கைத் தமிழ்ப் பெண்
பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு அடுத்து நடக்கவுள்ள தேர்தலில் தொழிற்கட்சியின் சார்பில் உமா குமரன் என்ற இலங்கைத் தமிழ்ப் பெண் போட்டியிடவுள்ளார்.

21 அக்., 2013

ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக வழக்கு: நாஞ்சில் சம்பத் விடுதலை
கடந்த 2002ம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையில் நடந்த மதிமுக., கூட்டத்தில், அப்போது அந்த கட்சியில் இருந்த நாஞ்சில் சம்பத், முதல்வர் ஜெயலலிதாவை
கனகபுரம், முழங்காவில், தேராவில்; துயிலும் இல்லங்களில் முகாம் அமைக்க முயற்சி 
கிளிநொச்சி கனகபுரம், முழங்காவில் மற்றும் முல்லைத்தீவு தேராவில் ஆகிய பகுதிகளில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் திடீரென படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. 
தெற்கில் கூட்டமைப்பு தேர்தலில் போட்டியா? விரைவில் பதில் என்கிறார் மாவை 
மார்ச் மாத இறுதியில் நடைபெறவுள்ள மேல்மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு களமிறங்குமா அல்லது இல்லையா என்ற வாதம் கொழும்பு அரசியல் களத்தில் பெரிதாகப் பேசப்படும் விடயமாக உருவெடுத்து வருகின்றது.


பாமக தலைமையில் சமூக ஜனநாயகக் கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் போட்டி: வேட்பாளரை அறிவித்தார் ராமதாஸ்
2014ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாமக போட்டயிடுகிறது. இதுதொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு திங்கள்கிழமை காலை சென்னையில் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர்
28ம் தேதி தயாளு அம்மாளிடம் விசாரணை
சிபிஐ சிறப்பு  நீதிமன்றத்தில் நடந்து வரும் 2ஜி வழக்கில் சிபிஐ தரப்பில் சாட்சியாக திமுக தலைவர் கலைஞர் மனைவி தயாளு அம்மாள் நேரில் ஆஜராக உத்தரவு

கொழும்பு - கட்டுநாயக்க அதிவேகப் பாதையினை நாளை முதல் மூன்று நாட்களுக்கு பொது மக்கள் பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 27ம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் திறந்து வைக்கப்படவுள்ள கொழும்பு கட்டுநாயக்க அதிவேக பாதையினை எதிர்வரும் 22ம் திகதி முதல் 24ம் திகதி வரை பொது மக்கள் பார்வையிட முடியுமென நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிவித்துள்ளது.
மாத்தறையில் ரணிலுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு மோதிய 44 சந்தேகநபர்கள் அடையாள அணிவகுப்பில்
மாத்தறையில் ஐக்கிய தேசிய கட்சியின் இரண்டு தரப்புக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 44 பேர், இன்று அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டனர்.

ad

ad