புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 அக்., 2013

 நடிகைக்கு உதடு முத்தம் கொடுத்து நடிக்கக்கூடாது: நடிகருக்கு மனைவி உத்தரவு
 இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் தற்போது ‘பென்சில்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் நடித்த ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். மணி நாகராஜ் இயக்குகிறார். 
சென்னை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இளம்பெண், டாக்டர்களின் தவறான அணுகுமுறையால் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை அடுத்த சேலையூர் அக்ரகாரத்தை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் மோகன். தனியார் கார் நிறுவனம் ஒன்றில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஹரினி நாச்சியார் (வயது 23).
நாம் கூட்டுப் பங்காளிகளே தவிர, குத்தகைக்காரர்களல்ல - முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன்

கைதடியில் நேற்று நடந்த வடக்கு மாகாணசபையின் முதலாவது அமர்வில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நிகழ்த்திய உரையின் முழுவடிவம்
அமைதியாக ஒதுங்கிய வாழ்க்கை வாழ்ந்து வந்த என்னை சிறிய கால இடைவெளிக்குள் ஒரு நாடறிந்த உலகறிந்த அரசியல்வாதியாக மாற்றிய என் அன்பார்ந்த உள்நாட்டு, வெளிநாட்டு நண்பர்களுக்கும் மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் அபிமானிகளுக்கும் என் நன்றிகள் உரித்தாகட்டும். 
கொமன்வெல்த் மாநாடு குறித்து கூட்டமைப்புத் தலைவர்கள் ஆராய்வு

வடக்கு மாகாணசபை அதிகாரபூர்வமாகச் செயற்படத் தொடங்கியுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள், தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் கொமன்வெல்த் மாநாடு தொடர்பாக கலந்துரையாடியுள்ளனர். 
கிட்டுப் பூங்காவில் இராணுவ முகாம் அமைக்க இடமளிக்க மாட்டோம்!- கஜதீபன
யாழ். நல்லூரில் உள்ள கிட்டுப் பூங்காவில் இராணுவ முகாம் அமைப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என வட மாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தியும் அறிவு வளர்ச்சியும் முன்பள்ளி மாணவர்களிடமிருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும்: வடமாகாண உறுப்பினர் 
எந்தவொரு அபிவிருத்தி என்றாலும் அறிவு வளர்ச்சி என்றாலும் அது அடிமட்டத்திலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன் தெரிவித்துள்ளார்.
ஓட்டுப்பதிவை அதிகரிக்க பிரபல நடிகை மற்றும் கிரிக்கெட் வீரரை களமிறக்கும் தேர்தல் ஆணையம் 
இளைஞர்கள் மற்றும் பெண்களிடம் ஓட்டுப்போடுவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் விளம்பரங்களை தயாரித்து ஊடகங்கள் மூலம் வெளியிட தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. 
ஆந்திரா, ஒடிசாவில் 30 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன 
ஆந்திரா, ஒடிசாவில் 30 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் மேலும் இரண்டு நாட்கள் மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.  

26 அக்., 2013

உலகில் பாடசாலை செல்லாத 770 இலட்சம் சிறுவர்கள்
உலகம் முழுவதிலும் சுமார் 77 மில்லியன் சிறுவர்கள் பாடசாலை செல்வதில்லை. மேலும் 66 மில்லியன் சிறுவர்கள் பசியுடனேயே பாடசாலை செல்கின்றனர். இவ்வாறு தெரிவித்துள்ளார் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன.
இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெறவேண்டும்: சென்னையில் சுதர்சன நாச்சியப்பன் பேட்டி
    இலங்கையில் உள்ள தமிழர்களின் பொருளாதாரம் மேம்பட அங்கு காமன்வெல்த் மாநாடு நடைபெற வேண்டும் என்று மத்திய தொழில்துறை இணையமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்துள்ளார். 
தேசிய பாதுகாப்பு குறித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரம் விக்னேஸ்வரனுக்கு கிடையாது! கோத்தபாய
தேசிய பாதுகாப்பு குறித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரம் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு கிடையாது என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய மாநாட்டில் 16 நாடுகளின் தலைவர்களே பங்கேற்பு
கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் உச்சி மாநாட்டில் பங்கேற்பதாக இதுவரை 13 நாடுகளின் தலைவர்களே உத்தியோகபூர்வமாக உறுதியளித்திருப்பதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.
காட்டுக்குள் தனிமைப்படுத்தப்பட்ட சோகம்: விடுதலை கேட்கும் தமிழ்த் தொழிலாளர்கள்- வீரகேசரி 
எட்டு வருடங்களாக காட்டுக்குள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறோம். பட்டப்பகலில் நடந்து செல்வதற்குக் கூட பயமாக இருக்கிறது. எந்தக் குற்றமும் செய்யாமல் திறந்த வெளியில் சிறைபடுத்தப்பட்டது போலத்தான் எங்களது வாழ்க்கை - இது களுத்துறை மாவட்டத்தில் ஹொரணை பகுதியில் வசிக்கும் மக்களின் சோகக்குரல்.
ஹொரணை பெருந்தோட்டக் கம்பனியின் ஹில்ஸ்ட்றீம் தோட்டத்தின் ஒரு பிரிவே அரம்பஹேன. அங்குள்ள மக்கள் காட்டுக்குள்



          எம்.பி. வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் இப்போதே பா.ம.க.வைப் போல் ஜரூராகக் களமிறங்கிவிட்டது அ.தி.மு.க. ஒவ்வொரு மா.செ.வுக்கும் மூன்று வாரங்களுக்கு முன்பு கடிதம் எழுதிய கட்சித் தலைமை, ’உங்கள் மாவட்டத்தில் இருக்கும் நாடாளு மன்றத் தொகுதிகளுக்கு, யார் யாரை வேட் பாளராக நிறுத்தலாம் என்ற பரிந்துரைப் பட்டியலை 15 நாட்களுக்குள் அனுப்பிவையுங் கள் என குறிப்பிட்டிருந்தது. இதன்படி ஒவ்வொரு அ.தி.மு.க., மா.செ.க்களும் தங்களுக்குப் பிடித்த மாதிரி ஒரு பட்டியலை தலைமைக்கு அனுப்பிவைத்துள்ளனர். மா.செ.க்கள் அனுப்பி வைத்திருக்கும் அந்த சீக்ரெட் பரிந்துரைப் பட்டியல் இதோ...
சனத் ஜயசூரியவிடமிருந்து மனைவி விவாகரத்து கோரியுள்ளார்!
இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சனத் ஜயசூரியவிடமிருந்து விவகாரத்து பெற்றுத் தருமாறு அவரது மனைவி நீதிமன்றில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இராணுவமானது வட மாகாணத்தில் உடனேயே அதன் முகாம்களுக்கு முடக்கப்பட வேண்டும். மாகாணத்தின் வயது எய்திய குடிமக்கள் ஐவருக்கு ஒருவர் இராணுவ போர் வீரராக வலம் வரும்போது முறையான படைத்துறை சாராத குடிமக்கள் சார்ந்த நிர்வாகத்தை நாம் முன்நடத்த முடியாது. எமது மக்கள் எமது கட்சிக்கு ஏகோபித்த ஆதரவை வழங்கியதில்

25 அக்., 2013

மாகாண சபையிடம் முழுமையாக ஒப்படைக்கப்பட்டுள்ள ஒரே துறை கூட்டுறவுத் துறையே ;நா.சேனாதிராசா 
இலங்கையில் முதலாவது சி.க.கூ சங்கம் யாழ்ப்பாணத்திலேயே அமைக்கப்பட்டது அதன் கிளைகளாகவே ஏனைய சங்கங்கள் அமைக்கப்பட்டன. மேலும் மாகாண சபைக்கு முழுமையாக பாரங்கொடுக்கப்பட்டுள்ளது கூட்டுறவுத் துறை மட்டுமே எனவும்   வவுனியா
தீர்வைப் பெறக்கூடிய காலத்தின் அத்திபாரமே மாகாண சபையின் வெற்றி; வடமாகாண சுகாதார அமைச்சர் தெரிவிப்பு 
news
சுயாதீனமாகச் சிந்தித்து எமக்கான தீர்வைப் பெறக்கூடிய காலத்தின் அத்திபாரம் தான் மாகாண சபையின் வெற்றி - இவ்வாறு தெரிவித்தார் வடமாகாண சபை சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம்.
 
வவுனியாவில் நேற்று முன்தினம் சுகாதார சேவைகள் பணிமனைக்குச் சென்று அங்குள்ள உத்தியோகத்தர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
தொடர்ந்து அவர் அங்கு தெரிவித்ததாவது:
 
போர், இயற்கை அழிவு காரணமாக எமது மக்கள் பல துன்பங்களை எதிர்கொண்டனர். அதன்போது அவர்களுக்கு உதவும் பொருட்டு நான் குறைந்த
இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டை ஒட்டு மொத்தமாக புறக்கணிக்க போவதாக ஆப்ரிக்க நாடுகள் அறிவித்துள்ளது.இன வெறியின் பாதிப்பையும் அதன் வலியவும் அதிகமாக அனுபவித்த நாடுகள் இந்த ஆப்பிரிக்க நாடுகள்.அதனால்தான் இன அழிப்பு நடத்தப்பட்ட இலங்கையில் நடக்கும் மாநாட்டில் பங்கேற்க போவதில்லை என்று தாங்களே முன் வந்து அறிவித்துள்ளன.
தமிழர்களின் வலியவும் வேதனைகளையும் புரிந்துகொள்வதற்கு சர்வேதேச அரங்கில் பலநாடுகள் இருப்பது நமக்கு ஒரு நம்பிக்கையை தருகிறது...அந்த நாடுகளுக்கு ஒவ்வொரு தமிழனும் கடமைப்பட்டுள்ளோம்.
Red Bull குளிர்பானத்திற்கு புதிய வரி விதிக்க முடிவு

பிரான்சில் ரெட் புல்(Red Bull) குளிர்பானத்திற்கு புதிய வரியை விதிக்க நாடாளுமன்றம் முடிவு செய்துள்ளது.
பிரான்சில் ஏராளமான குடிபானங்களுக்கு பொதுமக்க

ad

ad