புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜன., 2014


உயிருக்கு போராடும் மைக்கல் ஷ¥மாக்கர் கோமாவில் இருந்து மீள வாய்ப்பு குறைவு


ஜெர்மனியைச் சேர்ந்த போமியுலா-1 கார் பந்தய சம்பியனான மைக்கேல் ஷ¤மாக்கர் டிசம்பர் மாதக் கடைசியில் தனது குடும்பத்தினருடன் விடுமுறையைக் கழிக்க பிரான்ஸ் நாட்டிற்கு சென்றிருந்தார்.

வலுவான நிலையில் இலங்கை அணி


இலங்கை - பாகிஸ்தான் அணிக்கிடையியே இடம்பெறும் மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வலுவான நிலையில் உள்ளது.
இலங்கை அணி 2வது நாள் ஆட்டத்தை நேற்று 5 விக்கெட் இழப்புக்கு 220 ஓட்டங்கள் பெற்றிருந்த போது தொடர்ந்தது. அணித் தலைவர் மெத்திவ்சுடன் இணைந்து ஆடிய விக்கெட் காப்பாளர் பிரசன்ன ஜயவர்தன 35 ஓட்டங்கள் பெற்ற போது ஆட்டமிழந்து சென்றார்.

வலிவடக்கில் இராணுவத்தின் வசமுள்ள காணிகளை உரியவர்களிடம் ஒப்படைக்குக

புதிய யாழ். கட்டளைத் தளபதியிடம் அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள்

வலி வடக்கில் இராணுவத்தினரின் பயன்பாட்டிலுள்ள தனியார் காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை

காங்கிரஸின் தேர்தல் பிரசார குழுத் தலைவராக ராகுல் காந்தி

சோனியா காந்தி அறிவிப்பு-பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படவில்லை
இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி அறிவிக்கப்படமாட்டார் என காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.


பத்மஸ்ரீ விருது பெறும் முதல் விளையாட்டு வீரர் சச்சின்

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டென்டுல்கர் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அவரது சாதனைகளை கௌரவிக்கும் விதமாக நாட்டின் மிக உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை மத்திய அரசு அவருக்கு வழங்கி கௌரவிக்கவுள்ளது

கடும் வெப்பத்துக்கு மத்தியில் ஆஸி. ஓபன் 3 ஆவது சுற்றுக்குள் முன்னணி வீரர்கள்

அவுஸ்­தி­ரே­லிய ஓபன் டென்னிஸ் தொடரின் 3 ஆவது சுற்­றுக்குள் முன்­னணி வீர, வீராங்­க­னைகளான ரோஜர் பெடரர், ரபேல் நடால் மற்றும் நடப்பு சம்பியன் அஷரென்கா, செரீனா வில்லியம்ஸ், மரியா ஷரபோவா
2013 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்ப் பாடல்களிலேயே மிகச் சிறந்த பாடல்களின் தொகுப்பாக மரியான்பட பாடல்களை ஆப்பிள் நிறுவனம் தேர்வு செய்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும் அந்தாண்டு நடந்த சிறந்தவைகள் மற்றும், மறக்க இயலாத முக்கிய சம்பவங்களை தொகுத்து வழங்குவது வழக்கமே. அந்தவகையில் பிரபல நிறுவனமான ஆப்பிள் தனது 2013ம் ஆண்டு தொகுப்பை வெளியிட்டுள்ளது.

இரு மகள்மாரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய தந்தை: யாழில் சம்பவம்

தந்தை ஒருவர் தன்னுடைய இரு பிள்ளைகளை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பாக குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச் சம்பவம் அளவெட்டிப் பகுதியில் கடந்த 10ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடத்தப்படும் வாய்ப்பு? 
2014ம் ஆண்டுக்கான ஆசிய கிண்ணம் இலங்கையில் நடத்தப்படுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.அதற்காக ஆடுகளங்களை தயார்படுத்துமாறு ஆசிய கிரிக்கெட் கவுன்ஸில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திடம்
அரசின் இராஜதந்திர நகர்வுகள் ஜெனிவா பொறிக்குள் தப்புமா?
இலங்கை அரசு ஜெனி வாவில் 25ஆவது மனித உரிமைகள் மாநாட்டை எதிர்கொள்வதற்கான ஆயத்தங்களைச் செய்து வருகிறது. தனக்கெதிராக மார்ச்சில் இடம்பெறலாமென எதிர்பார்க்கப்படும் பிரேரணையை
இலங்கையை ஆண்ட இறுதி தமிழ் மன்னரின் வாரிசு வேலூரில் மரணம் 
news
இலங்கையை ஆண்ட இறுதி தமிழ் மன்னர் விக்கிரம ராஜசிங்கரின் 3 வது வாரிசு பிருதிவிராஜ் இன்று மரணம் அடைந்துள்ளார்.
 
வேலூர் சாய்நாதபுரம் நடேச முதலி தெருவில் வசித்து வந்த பிருதிவிராஜ் அப்பகுதி மக்களால் இளவரசன் என அழைக்கப்பட்டு
ஏப்ரல் மாதத்தில் யாழிற்கு புகையிரத சேவை; இந்திய துணைத்தூதுவர் 
வடக்கின் மாபெரும் வர்த்தகக் கண்காட்சி இன்று காலை 10 மணியளவில் யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் ஆரம்பமாகியுள்ளது. இக் கண்காட்சியில் யாழிலிருந்து 30 உள்ளூர் உற்பத்தி நிறுவனங்களும்
அமெரிக்கா- இலங்கைக்கு இடையில் பனிப் போர்: ஜெனீவாவில் யோசனை நிறைவேறுவது நிச்சயம்
ஜெனீவா மனித உரிமை பேரவையில் எதிர்வரும் மார்ச் மாதம் 28ம் திகதி அமெரிக்கா, இலங்கைக்கு எதிராக கொண்டு வரும் யோசனை கட்டாயமாக வெற்றிபெறும் என தெரியவருகிறது.அமெரிக்காவின் யோசனை தொடர்பான வாக்கெடுப்பு மனித உரிமை பேரவையில் 28ம் திகதி
ஜெனீவா செல்லும் பிரதிநிதிகள் குழு தொடர்பில் சர்ச்சை
ஜெனீவா செல்லும் பிரதிநிதிகள் குழு தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் பங்கேற்கும் பிரதிநிதிகள் குழு தொடர்பில் சர்ச்சை நிலைமை ஏற்பட்டுள்ளது.
வேலைக்காரருக்கு ரூ.600 கோடி சொத்தை கொடுத்த காங்கிரஸ் தலைவர்

குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் ஒருவர் தனது வீட்டு வேலையாள் பெயரில் சுமார் 600 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை உயில் எழுதி வைத்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க போர்க் குற்ற நிபுணர் ஸ்டீவன் ராப்பின் அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது
ஸ்டீவன் ராப், ஒருதலைப்பட்சமான தீர்மானத்தை எடுத்துள்ளார் என குற்றம் சுமத்தியுள்ளது.மன்னார், யாழப்பாண பேராயர்கள் மற்றும் புலி ஆதரவாளர்களினால் நாட்டுக்கு எதிராக அளிக்கப்பட்ட போலிச் சாட்சிகளை ராப் ஏற்றுக்கொண்டுள்ளார்.
ராதிகாவின் குற்றச்சாட்டை கனேடிய உயர்ஸ்தானிகர் நிராகரிப்பு
இலங்கைக்கு கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் சென்றிருந்த போது அவரை மோட்டார் சைக்கிளில் சிலர் பின்தொடர்ந்ததாக வெளியான தகவலை இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது.ராதிகா சிற்சபேசன், கனேடிய செய்தி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய
விடுதலைப் புலிகள் அமைப்பில் ஒரு போராளியாக இல்லாவிட்டாலும், வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் குறித்து விசாரணைகள் நடத்தப்படுவதாக  இலங்கை பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது. 
இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள பாதுகாப்பு அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர்,போர்க் காலத்தில் மட்டுமன்றி போருக்குப் பிந்திய காலகட்டத்தில் அனந்தி சசிதரனது பங்கு தொடர்பாகவும் தற்போதைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இனி என்ன செய்யலாம்? தமிழீழத்தின் கதவு திறக்கும்.. உங்களால் முடியும் -உங்களால் மட்டுமே.
தமிழக மாணவர்களுக்கு... தமிழக மாணவர்கள் போராட்டம் தமிழகத்தின் குக்கிராமங்கள் வரை சென்று தொடர்ந்து பரவிக் கொண்டிருக்கிறது. தமிழக சட்டசபை தீர்மானம் என்பது மாணவர்கள் போராட்டத்திற்கு கிடைத்த உச்சபட்ச வெற்றி.

17 ஜன., 2014

ஒரு லட்சம் பேருடன் இணைந்து தேசப்பற்று பாடலை பாடுகிறார் லதா மங்கேஸ்கர்
மகாராஷ்டிராவின் மும்பை நகரில் மகாலட்சுமி ரேஸ் கோர்ஸ் பகுதியில் ஷாகித் கவுரவ் சமிதி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள தேசப்பற்று பாடலின் 50ம் ஆண்டு பொன் விழா கொண்டாட்டம் நடைபெறுகிறது.  இதில்,

ad

ad