புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 பிப்., 2014

வடமாகாணசபைத் தீர்மானங்களுக்கு சிறிலங்கா அதிபரே பொறுப்பு – முதல்வர் விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு

போர்க்குற்றங்கள் குறித்து அனைத்துலக விசாரணை கோரி வடக்கு மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவே காரணம் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 
சிறிலங்கா விவகாரம்:ஜெனிவாவில் இந்தியத் தூதுவருடன் பேசுகிறார் நிஷா

சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானம் குறித்து, ஜெனிவாவில், இந்தியத் தூதுவருடன் கலந்துரையாடவுள்ளதாக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச்செயலர் நிஷா தேசாய் பிஸ்வால் தெரிவித்துள்ளார். 

பரீட்சை சான்றிதழ்களை ஒரே நாளில் பெற விசேட பொறிமுறை

பரீட்சை திணைக்களத்தில் விசேட பிரிவு; 5 இல் திறப்பு
அரசாங்கப் பரீட்சைகளின் கடந்தகால பெறுபேறுகளை ஒரு நாளுக்குள் பெற்றுக்கொள்ள கூடிய வகையிலான விசேட பொறிமுறையினை பரீட்சைகள் திணைக்களம் எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளதென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் புஸ்பகுமார தெரிவித்தார். இதற்கான விசேட பிரிவு கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் 05 ஆம் திகதி புதன்கிழமை பரீட்சைகள்

அதிரடிப்படையினருடன் ஆயுதக்குழு மோதல் தப்பியோடியோர் மீது பதில் தாக்குதல்.இருவர் பலி

ஆயுதங்களும் மீட்பு திக்வெல்லையில் சம்பவம்
பொலிஸ் விசேட அதிரடிப்படையின ருக்கும் பாதாள உலக ஆயுதக் குழுவொன்றுக்குமிடையில் நடந்த மோதலில் படையினரின் பதில் தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

தமிழ் கூட்டமைப்பு பதவிப்பிரமாணத்திற்கு மாறாக செயற்படுகிறது

மார்ச் மாதத்தில் நடை பெறும் ஜெனீவா மனித உரிமைகள் உச்சிமாநாட்டை குறிபார்த்து இலங்கை யில் நடைபெற்ற யுத்தக்குற்றச்சாட்டுகள் குறித்து சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென்ற வடமாகாண சபையின் தீர்மானத்திற்கு ஆதரவளித்து வாக்களித்த தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினர் தாங்கள் எடுத்துக் கொண்ட பதவிப் பிரமாணத்திற்கு மாறான முறையில் செயற்பட்டிருப்பதாக வடமாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர

இலங்கையின் உள் விவகாரங்களில் எவரும் தலையிட வேண்டியதில்லை

நிசாவின் கருத்துக்கு வெளிவிவகார அமைச்சு ஆட்சேபம்
ஆசியாவின் தொன்மை மிக்க ஜன நாயகம் மற்றும் இறை மையுடைய நாடு என்ற வகையில் இலங்கையின் உள்ளூர் விவகாரங்களில்

எனது தந்தையார் விட்டுச்சென்ற பணியை முன்கொண்டு செல்வேன்

ஆக்ரோஷத்திலிருந்து என்னை விடுவித்தவர் ஜனாதிபதி 
எனது தந்தையார் மக்களுக்காக நிறைவேற்ற திட்டமிட்ட வேலைத் திட்டங்களை முன் கொண்டு செல்ல வேண் டும்.
இதற்காகவே நான் அரசியலுக்கு வந்தேன்.
ஆக்ரோஷத்தில் இருந்து என்னை விடு வித்து, சரியான பாதையில் கொண்டு சென்றவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களே, மத்திய கொழும்பு ஸ்ரீ. ல. சு. கட்சி இணை அமைப்பாளர் ஹிருனிகா பிரேமச்சந்திர இவ்வாறு தெரிவித்தார்.
கொழும்பு மாவட்ட ஸ்ரீல. சு. கட்சி


ஆறுநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள நேபாள இராணுவத் தளபதி ஜெனரல் கெளராவ் ஷம்ஷெர் ஜுங் பஹதூர் ரனாவுக்கு விமான நிலையத்தில் செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்டது. விமான நிலையத்திலுள்ள விசேட பிரமுகர்களுக்கான புத்தகத்தில் அவர் கையொப் பமிடுகிறார். அருகில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரத்நாயக்கவும் காணப்படுகிறார்.

அதிமுக, கம்யூ,வுடன் நிதிஷ் கூட்டணி?

மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸட் கட்சிகள் அதிமுகவடன் கூட்டணி அமைத்து வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.

    தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் உட்பட 10 மொழிகளில் நேடியாக வெளியாகும் "கோச்சடையான்"

இந்தியாவில் முதல்முறையாக  சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் படம் தமிழ், இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் உள்பட 10 மொழிகளில் நேரடியாக வெளியாகிறது.

2 சிறுமிகள் திருமணம் தடுத்து நிறுத்தி அதிகாரிகள் நடவடிக்கை

விருதுநகர் அருகே நடக்க இருந்த 2 சிறுமிகள் திருமணத்தை ஆட்சியரின் உத்தரவின் பேரில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுத்தனர்.

    இருபது ஓவர் தொடரும் ஆஸ்திரேலியா வசம்

சிட்னியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 3-வது இருபது ஓவர் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் ஜார்ஜ் பெய்லி 20 பந்துகளில் 49 ரன்கள் விளாசினார். இதனால் ஆஸ்திரேலிய அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று

ஜூரிச் செஸ்: ஆனந்த் - கருணா ஆட்டம் டிரா

ஐந்து முறை உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், இத்தாலியின் ஃபேபியானோ கருணாவுடனான ஜூரிச் செஸ் போட்டியின் 3-வது சுற்றை டிரா செய்தார்.
சிரிய ராணுவம் வெறியாட்டம்: 83 பேர் பலி

சிரியாவின் வடக்கு அலெப்போ மாநிலத்தில் சிரிய ராணுவம் ஹெலிகாப்ட மூலம் பல்வேறு இடங்களில் இருந்து வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.இந்த தாக்குதலில் குறைந்தது 83 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் அறிவித்துள்ளன.
 செந்தமிழ் திருமறை வட மாகாணத்திலேயே உயரமான சிவபெருமானின் 21 அடி உயர தியான திருச்சொரூபத்திற்கான திருக்குடமுழுக்கு
சம்பில்துறை சம்புநாத ஈஸ்வரர் ஆலயத்தில் சிவதொண்டர் அமைப்பால் அமைக்கப்பட்ட வட மாகாணத்திலேயே உயரமான சிவபெருமானின் 21 அடி உயர தியான திருச்சொரூபத்திற்கான திருக்குடமுழுக்கு இனறு ஞாயிற்றுக்கிழமை செந்தமிழ்

புத்தூரில் கார்–லாரி மோதல்: திருத்தணியை சேர்ந்த 4 பேர் பலி


ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா மல்லவரம் கிராமத்தை சேர்ந்த மணமகள் லீலாவதி குடும்பத்தினர். 25 பேர் நேற்று இரவு மினிலாரியில் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் இன்று நடைபெறும்

எம்.வி.சன்.சி கப்பலில் கனடா நாட்டிற்கு அகதியாக சென்ற தர்மரத்தினம் நாடு கடத்தப்படும் அபாயம்!

எம்.வி.சன்.சி கப்பலில் கனடா நாட்டிற்கு அகதியாக சென்ற அருமைத்துரை தர்மரத்தினம் என்பவர் பெப்ரவரி 11 அன்று இலங்கைக்கு நாடுகடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளார்.
அடுத்த பிரதமர் யார் என்பதை இப்போது விவாதிப்பது அர்த்தமற்றது : ஜெயலலிதா பேட்டி
மக்களவை தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் சேர்ந்து அதிமுக போட்டியிடுகிறது.  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் நேற்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை


 புலம்பெயர் ஈழத் தமிழ்வாழ் மக்களும் அந்த ஓட்டெடுப்பில் பங்கெடுக்க வேண்டுமெனில் அவர்கள் வன்னிக்கோ, மட்டக் களப்புக்கோ, யாழ்ப்பாணத்துக்கோ, வல்வெட்டித் துறைக்கோ, மன்னாருக்கோ அனைவரும் போய் வாக்களிக்க முடியாது. அந்தந்த நாடுகளிலேயே அவர்களுக்கு வாக்குப்பெட்டி வைக்கப்பட்டு, ஓட்டுப்போட வேண்டும் என்ற நிலையை ஐ.நா. மன்றமும், உலக நாடுகளும் வழி ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்ற கருத்தை உலக அரங்கத்தில் முதன் முதலாக பிரஸல்சில் வைத்தது இந்த வைகோ மட்டும் தான் என்பதை யாரும் மறுக்க முடியாது’’. வை கோ 

 வடசென்னை மாவட்டச் செயலாளர் சு.ஜீவன்  மகள் ஜீ.மணிமேகலை-பிரகதீஸ்வரன் திருமண வரவேற்பு இன்று 03.02.2014 திங்கட்கிழமை, சென்னை-எழும்பூரில்
அமைச்சர்கள் உட்பட 60 பேர் ஐ.தே.கட்சியில் இணையத் தீர்மானம்
அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் உட்பட 60 பேர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக அந்த கட்சியின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.

ad

ad