புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 மார்., 2014

7 பேர் விடுதலை: மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதாக தமிழக அரசு வாதம்!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரை விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மூங்கிலாற்றில் மீட்கப்பட்ட எலும்பு கூடுகள் விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்டவையாம் : தெரிவிக்கிறார் பொலிஸ் பேச்சாளர்

முல்லைத்தீவு மூங்கிலாற்று பகுதியில் மீட்கப்பட்ட எலும்பு கூடுகள் அனைத்தும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் புதைக்கப்பட்டவை என பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபை உறுப்பினர்கள்லிங்கநாதன்,ரவிகரன்  மாமடு , பழம்பாசி மக்களின் குறைகளை கேட்டறிந்தனர்
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட மாமடு, பழம்பாசி கிராமங்களுக்கு விஜயம் செய்த வடமாகாண சபை உறுப்பினர்களான ரவிகரன் மற்றும் லிங்கநாதன் ஆகியோர் மக்களின் குறைகளைக் கேட்டறிந்தனர்.
பளையை வந்தடைந்தது யாழ்தேவி
கிளிநொச்சியிலிருந்து பயணத்தை ஆரம்பித்த யாழ்தேவி சொகுசு ரயில் இன்று காலை பளை ரயில் நிலையத்தை வந்தடைந்தது.
சர்வதேச விசாரணை கோரி ஐ.நாவில் குவியும் அழுத்தம்; ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன் தீவிரம்
 ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 25 ஆவது கூட்டத்தொடர் நேற்று ஆரம்பமான நிலையில் இலங்கை அரசின் செயற்பாடுகள் குறித்து ஆரம்பத்திலேயே கண்டனங்களும், கடுமையான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.
மீளமைப்பு விடயங்களை சரிவர செய்யாமையால்   சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைப்போம்!- கனடா
மறுசீரமைப்பு மற்றும் மனித உரிமை விடயங்களில் இலங்கை அரசாங்கம் தோல்வி அடைந்திருப்பதாக, கனடாவின் இராஜாங்க (வெளிவிவகாரம்) அமைச்சர் லின்னெ யலீச் தெரிவித்துள்ளார்.
மியன்மாருக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று சந்தித்து கலந்துரையாடினார்.
இரு நாடுகளின் தலைவர்களும் இரு நாடுகளுக்கிடையலான பல முக்கியமான பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடினர்.
இருதரப்பு போர்க்குற்றம் தொடர்பாக ஜெனீவாவில் நவிபிள்ளையின் வரைபு விநியோகம் (அறிக்கை இணைப்பு) வரைபை அமெரிக்கா, பிரித்தானியா, மொன்டேனேக்ரோ, மொரிசியஸ் போன்ற நாடுகள் ஏனைய நாட்டு பிரதிநிதிகளுக்கு விநியோகித்தனர்.
இலங்கையில் படையினரும் விடுதலைப் புலிகளும் போர்க்குற்றத்தில் ஈடுபட்டனர் என்ற அடிப்படையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் பிரேரணை
குமரியில் காங். எம்.எல்.ஏக்கள் 2 பேர் கைது

குமரி மாவட்டம் திருவட்டாரில் நாம் தமிழர் கட்சி சார்பில்  இரு தினங்கலுக்கு முன்பு பொதுக்கூட்டம் நடத்துவதற்காக திருவட்டார் அருகே ராஜீவ்காந்தி சிலை அருகே பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.   
ராஜீவ் சிலை உடைப்பு: நாம் தமிழர் கட்சியினர் 3 பேர் கைது
கடையம் அருகே உள்ள பாப்பான்குளம் பஜாரில் உள்ள ராஜீவ்காந்தி சிலையை சிலர் உடைத்து சேதப்படுத்தினர். இந்த சம்பவம் நேற்று அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
மீனம்பாக்கத்தில் ஜெயலலிதா பிரச்சாரம் : 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா முதல்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று காஞ்சீபுரத்தில் பிரச்சாரத்தை தொடங்கிய அவர் அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம்
இனப்படுகொலைக்குப் பன்னாட்டு விசாரணை- ஐநா மனித உரிமைக் கவுன்சிலை வலியுறுத்த இந்திய அரசுக்கு திருமாவளவன் வேண்டுகோள்!
விடுதலை சிறுத்தைகள் கட்டித்தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவ்வறிக்கையில்,  ’’அய்.நா. மனித உரிமைக் கவுன்சில் கூட்டம் நேற்று (3-3-2014) தொடங்கியுள்ள நிலையில் இலங்கையின் இனப்படுகொலைக்கு
இலங்கை கடற்படையினர் மீண்டும் அட்டூழியம்: ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 32 பேர் சிறைபிடிப்பு
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 32 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்ற சம்பவம் மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி யுள்ளது.
திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது

கூட்டணி கட்சிகளுடன் திமுக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியது.  முதலில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடக்கிறது
மயக்க மருந்து கொடுத்து இளம் பெண்ணை கற்பழித்த கணேசமூர்த்தி: கிளிநொச்சியில் பரபரப்பு 
மன உளைச்சலுக்குள்ளான தாயொருவர் அங்கு அமைந்துள்ள கிளிநொச்சி
பொது மருத்துவ மனையில் உளவளத்துறை தொடர்பான வைத்திய உதவிகளைப் பெற்று வந்துள்ளார். கடந்த 15.02.2014 அன்று
சர்வதேச விசாரணை நடத்தக் கோரி 205 கிறிஸ்தவ மதகுருமார் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை உறுப்பு நாடுகளுக்கு கடிதம்
இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் மற்றும் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக, சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரி மன்னார் ஆயர் வண.ராயப்பு ஜோசப்

ஜெனிவாவிபிரேரணை வலுவானதாக அமையும். இந்தியாவும் ஆதரவு வழங்கும்  மாவை 
ஜனநாயக மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஜெனிவா அமர்வு தொடர்பாக எழுப்பப்பட்ட
எச்சரிக்கை கனடா டொரோண்டோ நகர மோசமான காலநிலை அடுத்த 24 மணி நேரத்தில் 
இந்த வருடம் வழக்கத்திற்கும் மாறாக ஆட்டிப் படைத்து வரும் குளிருக்குப் பின்னர் டொரோண்டோ வாசிகளுக்கு மீண்டும் தீவிர குளிர்காற்று
1553125_470595186402769_470835597_o


கனடா தமிழ் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு மார்ச் மாதம் முதலாம் நாள் அனைத்துலக மகளிர் நாள்  மாநாடு 
கனடா தமிழ் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு மார்ச் மாதம் முதலாம் நாள் அனைத்துலக மகளிர் நாள் நிகழ்வையும் மாநாட்டையும் காலை 9:30 முதல் மாலை 5:00மணி வரை 2035 Kennedy வீதியில் அமைந்துள்ள Delta Hotel இல் வெகு சிறப்பாக நடாத்தியது
சிறிலங்கா மீதான அமெரிக்காவின் 56 பக்க குற்றப்பட்டியலின் சுருக்கம்
சிறிலங்கா படைகளால் உரிமைமீறல்களில் ஈடுபடுவதாகவும், அவர்கள் மீது சிறிலங்கா அரசாங்க அதிகாரிகள் காத்திரமான கட்டுப்பாட்டை கொண்டுள்ளதாகவும், அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. 

ad

ad