புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஏப்., 2014

திருக்கோவிலில் ஐந்து மாணவிகள் ஆசிரியரால் துஷ்பிரயோகம் 
திருக்கோவில் தங்கவேலாயுதபுரம் பகுதியில் பாடசாலை மாணவிகள் ஐவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுக்குச் சந்தேகம்; தென்னாபிரிக்காவின் முயற்சியில் திடீர் சிக்கல் 
இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இணக்கம் ஒன்றை எட்ட வைப்பதற்கு தென்னாபிரிக்கா எடுத்து வரும் முயற்சிகளில் சிக்கல் தோன்றியுள்ளது.

கணபதிப்பிள்ளை சறோஜினிதேவி pung 10

திருமதி கணபதிப்பிள்ளை சறோஜினிதேவி
(சரசு)
பிறப்பு : 15 ஏப்ரல் 1933 — இறப்பு : 20 ஏப்ரல் 2014
வானொலி அறிவித்தல்
Broadcasted by Lankasri FM
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Thun ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சறோஜினிதேவி அவர்கள் 20-04-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
சாவித்திரி(கனடா), மங்களேஸ்வரி(கனடா), காலஞ்சென்ற உதயகுமார்(சுவிஸ்), வாசுகி(சுவிஸ்), செந்தில்(சுவிஸ்), இளங்கோ(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான முத்துலிங்கம், மனோன்மணி, சொர்ணலிங்கம், யோகேஸ்வரி, மற்றும் சண்முகலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற லட்சுமணன்(மணி), தேவராஜா(கனடா), சாந்தினி(சுவிஸ்), சந்திரன்(சுவிஸ்), அருளி(சுவிஸ்), கவிதா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற நாகலிங்கம், சுப்பையா, கண்மணி, மாரிமுத்து, செல்லம்மா, அருணாச்சலம், காலஞ்சென்ற தர்மலிங்கம்(கணக்கர்), சிவஞானம்(கனடா), திலகவதி(பாரிஸ்), இந்திரா(கனடா), சண்முகலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 21/04/2014, 10:00 மு.ப — 05:00 பி.ப
முகவரி:Krematorium Stadt, Schönaustrasse 23, 3600 Thun 
பார்வைக்கு
திகதி:செவ்வாய்க்கிழமை 22/04/2014, 10:00 மு.ப — 05:00 பி.ப
முகவரி:Krematorium Stadt, Schönaustrasse 23, 3600 Thun 
கிரியை
திகதி:புதன்கிழமை 23/04/2014, 01:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி:Krematorium Stadt, Schönaustrasse 23, 3600 Thun 
தொடர்புகளுக்கு
செந்தில் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41618511069
செல்லிடப்பேசி:+41796226248
இளங்கோ — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41333355936
செல்லிடப்பேசி:+41786321766
சிவகுமார் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41794088310
வாசுகி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41616813324
சாவித்திரி — கனடா
தொலைபேசி:+14164988833

வரணிப் படைத்தள புதைகுழிகள் இரவோடிரவாக அகற்றப்பட்டன! திடுக்கிடும் தகவல்
இலங்கை இராணுவத்தின் தென்மராட்சியின் முக்கிய முகாமாக இருந்ததும், முகமாலை முன்னரங்க நிலைக்கான விநியோகத் தளமாகவும் இருந்து வந்த வரணிப் படைத்தளத்தினிலிருந்த பாரிய மனித புதைகுழிகளது எச்சங்கள் இரவோடிரவாக
சங்கக்கார, மஹேலவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!
 
இலங்கை அணியின் நட்சத்திர கிரிக்கட் வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகி
ஜோசப் பரராஜசிங்கம், லசந்த விக்ரமதுங்க ஆகியோரை இலங்கை அரசே படுகொலை செய்தது!- சொல்ஹெய்ம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தையும், சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவையும் இலங்கை அரசாங்கமே
தமிழ்நாட்டு சொந்தங்கள் ஜெயலலிதாவின் அ.தி.மு.க கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்!- ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு
 
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஈழத்தமிழர் பற்றி அதிக அக்கறை உள்ளவர், எனவே எம் தமிழ்நாட்டு சொந்தங்கள் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க கட்சிகு
சர்வதேச விசாரணைகளில் ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக சாட்சியமளிக்கத் தயார்: பொன்சேகா
 
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினரால் இழைக்கப்பட்ட மனிதஉரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணைகளின் போது சாட்சியமளிக்கத் தயாராக இருப்பதாக


விடுதலைப் புலிகளின் மீளெழுச்சி தொடர்பில் பிரசுரங்களை அச்சிட்டதாக குற்றம் சுமத்தி கணணி ஆசிரியர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் கடந்த 19ம் திகதி இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீவகத்தின் பிரதான வீதி அகலமாக்கப்படுகிறது

யாழ்குடாநாட்டினையும் தீவகத்தினையும் இணைக்கும் பிரதான வீதியான பண்ணை -ஊர்காவற்றுறை வீதி அகலமாக்கப்பட்டு காபெட் வீதியாக மாற்றப்படவுள்ளது. இதற்கான பணிகள் மிகவும் துரித கதியில் நடைபெற்று வருகின்றன.
முதற்கட்டமாக மண்டைதீவு சந்திக்கு அடுத்துள்ள பகுதிகளில் வீதி அகலமாக்கப்பட்டு கருங்கற்றகளால் நிரவப்பட்டுவருகிறது.
jaffna_alaki_1920_2
யாழில் நடைபெற்ற அழகி போட்டி
தமிழ் சிங்களப் புத்தாண்டு கோடைகாலத் திருவிழாவின் கலை நிகழ்வுகள் யாழ் தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டு நாட்களாக
இலங்கைக்கு எதிராக தடைகளை விதிக்குமாறு கனேடிய அரசாங்கத்திடம் அந்நாட்டு 80 தமிழ் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இலங்கை உயர் அதிகாரிகள் ராஜதந்திரிகளுக்கு எதிராக பயணத் தடை விதிக்க வேண்டுமென 80 கனேடிய தமிழர் அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து கோரியுள்ளன. அனைத்து தமிழ் அமைப்புக்களையும் இணைத்து தமிழ் மஹா சங்கமென்ற ஓர் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பயணத் தடை விதிப்பது குறித்து தமிழ் மஹா சங்கத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 16 புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் தடை செய்யப்பட்டமை கண்டிக்கப்பட வேண்டியது என தெரிவிக்கப்பட்டுள்ளது
தமிழகம் -15 தொகுதிகளின் கணிப்பில் திமுக 12 இலும் அதிமுக 2 இலும் தென்சென்னையில் சமநிலையில் இரண்டும் இருபதாக  நக்கீரன் .சரியான கணிப்பா என மே 24 தெரியவரும் நக்கீரனின் திமுக பக்க சார்பு இருக்கிறதா  என்பது புரியும்-மீதி செவ்வாய் வெளிவரும் 
 விழுப்புரம் -திமுக அதிமுக
விருதுநகர் -திமுக மதிமுக
ராமநாதபுரம் -திமுக அதிமுக



‘‘ஒரு குற்றமும் செய்யாத அழகிரியை நீக்கியது, ஓரவஞ்சனை’’  பிரேமலதா விஜயகாந்த் .
குப்பை நிரம்பிய மதுரை
மதுரை பாராளுமன்றத்தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் சிவமுத்துக்குமாரை ஆதரித்து பிரேமலதாவிஜயகாந்த் நேற்று கீழவாசல் அரசமரத்துப் பிள்ளையார் கோவில் அருகே

சிறந்த நிர்வாகி, குஜராத் மோடியா? தமிழகத்தின் இந்த ‘லேடி’யா? தென் சென்னை பிரசாரத்தில் ஜெயலலிதா விளக்கம்

நாட்டில் சிறந்த நிர்வாகி யார்? என்று கேள்வி எழுப்பியதுடன், குஜராத்தை சேர்ந்த மோடியா?, தமிழ்நாட்டை சேர்ந்த இந்த லேடியா? என்று தென்சென்னை தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா பேசினார்.


பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பாகவே, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும், தனது பிறந்தநாளான பிப்ரவரி மாதம் 24–ந் தேதி முதல்–அமைச்சர் ஜெயலலிதா வேட்பாளர்களை அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, மார்ச் மாதம் 3–ந் தேதி கோவில் நகரமான காஞ்சீபுரத்தில் இருந்து தனது தேர்தல் பிரசார பயணத்தை ஜெயலலிதா தொடங்கினார்.
சூறாவளி பிரசாரம்
புதுச்சேரி உள்ளிட்ட ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று சூறாவளி பிரசாரம் மேற்கொண்ட முதல்–அமைச்சர் ஜெயலலிதா, கடந்த 17–ந் தேதி கிருஷ்ணகிரி, தர்மபுரி தொகுதியில் பிரசாரம் செய்தார்.
அன்றுடன் 37 தொகுதிகளில் தனது பிரசாரத்தை நிறைவு செய்தார்.
சென்னையில் 3 நாட்கள்
தேர்தல் பிரசாரத்தை ஜெயலலிதா நிறைவு செய்தார்; ஒரே மேடையில் 40 அ.தி.மு.க. வேட்பாளர்கள்; சென்னையில் இறுதிக்கட்ட ஓட்டு வேட்டை
பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பாகவே, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும், தனது பிறந்தநாளான பிப்ரவரி மாதம் 24–ந் தேதி முதல்–அமைச்சர் ஜெயலலிதா வேட்பாளர்களை அறிவித்தார்

 விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் தங்கியிருந்த மேலும் ஒரு வீட்டை இலங்கை ராணுவத்தினர் கண்டுபிடித்துள்ளனர்.
 
இலங்கையில் முல்லைத்தீவு பகுதியில் கடந்த 2009ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி சிங்கள ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த இறுதிக்கட்ட போரில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனும், அவருடன் இருந்தவர்களும் கொல்லப்பட்டனர்.

அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம்: இன்று மாலை 6 மணியுடன் முடிவு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த ஒரு மாத காலமாக அனல் பறக்கும் வகையில் நடைபெற்று வந்த மக்களவைத் தேர்தல் பிரசாரம், இன்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 22) மாலை 6 மணியுடன் முடிவுக்கு வருகிறது.

நோக்கியா இனி மைக்ரோசாப்ட் மொபைல் என பெயர் மாற்றப்பட உள்ளதாக தகவல்

உலகின் முன்னணி மொபைல் நிறுவனமான நோக்கியா மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் 7.3 பில்லியன் டாலருக்கு ஒப்பந்தம் செய்து

சவூதியில் பணியாற்றுவோர் முறைப்பாடுகளை பதிவு செய்ய விசேட தொலைபேசி இலக்கங்கள்

சவூதி அரேபியாவில் வீட்டுப் பணியாளர்களாகப் பணியாற்றுபவர் களிடமிருந்து முறைப்பாடுகளைப் பதிவு

நிதியை இடைநிறுத்தும் தீர்மானத்தை கனடா மீள்பரிசீலனை செய்ய வேண்டும்


கனடிய அரசாங்கத்தினால் வழங்கப்படும் பொதுநலவாய நாடுகளுக்கான நிதி இடைநிறுத்தப்படும் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி கோரிக்கை விடுத்துள்ளார்
இது தொடர்பாக அவர் கனடியப் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது பொதுநலவாய நாடுகளில் ஒன்றாகிய இலங்கையின் ஓர் மூத்த தமிழ் பிரஜை என்ற வகையில் பொதுநலவாய நாடுகளின் நிதிக்கு உங்கள்
வடக்கை அடக்க நினைக்கிறது அரசு- ரில்வின் சில்வா 
வடக்கு மக்களை அரசாங்கம் அடக்கி ஆழ முயற்சித்து வருகிறது என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா குற்றஞ்சாட்டியுள்ளார்.
வடக்கை அடக்க நினைக்கிறது அரசு- ரில்வின் சில்வா 
வடக்கு மக்களை அரசாங்கம் அடக்கி ஆழ முயற்சித்து வருகிறது என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா குற்றஞ்சாட்டியுள்ளார்.

பிரான்ஸ் சென்றிருந்த இலங்கையர் ஒருவர் இறந்த நிலையில் ஹோட்டல் அறையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கையின் கட்டுநேரிய பிரதேசத்தை 47 வயதான சுதேஷ் சந்தன பெரேரா என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஐ.நாவுடன் இணைந்து பணியாற்ற போகும் அமைச்சர் விமல் வீரவன்ஸ
ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் மற்றும் அந்த அமைப்புக்கு எதிராக சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த அமைச்சர் விமல் வீரவன்ஸ, அந்த அமைப்புடன் இணைந்து பணியாற்றப் போவதாக தெரியவருகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி 
ஐ.பி.எல். தொடரின் 8வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- டெல்லி டேர் டெவில்ஸ் அணிகள் மோதி வருகின்றன.

காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் முடிவுரை எழுதியவர் அண்ணா: நாஞ்சில் சம்பத் பேச்சு
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மருதராஜாவை ஆதரித்து கொள்கை பரப்பு துணை செயலாளர் நாஞ்சில் சம்பத் நேற்று இரவு மண்ணச்சநல்லூரில் பிரச்சாரம் செய்தார். 
அப்போது அவர் பேசியபோது

ஜெயலலிதா வீட்டு முன்பு மண்ணைவாரி இறைக்கும் போராட்டம்
நடத்தவிருந்த சட்டக்கல்லூரி மாணவி நந்தினி கைது
 
பூரண மதுவிலக்குக் கோரி மதுரை சட்டக்கல்லூரி மாணவி நந்தினி, பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்.  

போலீஸாருடன் விடுதலை சிறுத்தைகள் மோதல்:ஸ்டாலின் பிரச்சாரத்தில் பரபரப்பு
திமுக பொருளாளர் ஸ்டாலின் திமுக வேட்பாளர் பொன்.முத்துராமலிங்கத்தை ஆதரித்து ஆண்டிபட்டி எம்ஜிஆர் சிலை அருகே திங்கட்கிழமை காலை பிரச்சாரம் செய்தார். பிரச்சாரத்தின் போது திமுக கூட்டனி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியை

வைகோவை நாம் வெற்றி பெற செய்ய வேண்டும் :  ஆதரவாளர்களிடம் அழகிரி பேச்சு


விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட கள்ளிக்குடி ஒன்றியம், வில்லூரை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் செல்வம் என்பவரது தோட்டத்துக்கு மு.க.அழகிரி சென்றார். அங்கு ஏராளமான அவரது ஆதரவாளர்கள் திரண்டனர். அவர்கள் மத்தியில் மு.க.அழகிரி

நடிகர் விஜய் விவகாரத்தில் தேர்தல் கமிஷன் அதிரடி : ரசிகர்கள் கொந்தளிப்பு
பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்–மந்திரி நரேந்திரமோடி அறிவிக் கப்பட்டுள்ளார். அவர் நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார்.

21 ஏப்., 2014


மு.க. அழகிரிக்காக சமாதானம் பேச வந்த கே.பி.ராமலிங்கத்துக்கு கருணாநிதி எச்சரிக்கை

தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த கருணாநிதி ஏப்ரல் 7-ஆம் தேதி ஈரோட்டில் பொதுக்கூட்டத்தில் பேசினார். அன்றைய தினம் இரவு ஈரோட்டில் லீ ஜார்டின் ஹோட்டலில்

வைகோ வழியில் வாரிசு

நடைப் பயணத்துக்கு அசராதவர் வைகோ. பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி, தமிழகம் முழுவதும் அவர் நடைப்பயணம் மேற்கொண்டார். இப்போது விருதுநகர்


இணையத்தில் உள்ள திமுக உறுப்பினர்களுக்கு திமுக தலைவர் கருணாநிதி வேதனையுடன் கூடிய கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த கடிதம், அவரது பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் வெளியிடப்பட்டுள்ளது.
அதில்,
நடக்கிற தேர்தலைக் கவனித்துக் கொண்டிருக்கிறாய்! கருத்து வெளியிடும் சுதந்திரத்தை இணையம் வழங்கியிருக்கிறது. உன்னைப் போன்ற பலர் துணிச்சலுடன்  மனதில் பட்டதைப் பதிவுசெய்வதையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். உனக்குக்

இலங்கை அணியின் பயிற்சியாளர் போல் பாப்ரஸ் இங்கிலாந்து உதவி பயிற்சியாளராக செல்ல திட்டம்

இலங்கை கிரிக்கெட் அதிர்ச்சி, ஏமாற்றம்

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் போல் பாப்ரஸை இங்கிலாந்து அணியின் உதவிப் பயிற்சியாளராக நியமிக்க வாய்ப்பு உள்ளதாக வெளியான உறுதியற்ற செய்திக்கு இலங்கை கிரிக்கெட் அதிர்ச்சி மற்றும் ஏமாற்றத்தை வெளியிட்டுள்ளது.

கிழக்குப் பல்கலைக்கழகம்

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வளாகத்துக்கு நேற்று முன்தினம் விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நவீன கட்டடத் தொகுதிகளை வைபவரீதியாக அங்குரார்ப்பணம் செய்து வைத்தபோது எடுத்தபடம். அமைச்சர்கள், கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜேவிக்ரம, கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கோவிந்தன் கிட்ணன் உட்பட அதி காரிகளும் காணப்படுகின்றனர். 

யாழ்.ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம் 
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இணைத்தலைமையேற்றிருந்த வடமாகாண சபை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆற்றியிருந்த உரை வருமாறு

Chennai T20
Delhi T20
Match scheduled to begin at 18:30 local time (14:30 GMT

மோடி தொடர்பில் ஈழத்தமிழரின் நிலைப்பாடு -நிலாந்தன் 
கடந்த வாரம் தமிழ் நாட்டில் உள்ள படைப்பாளிகள் மற்றும் செயற்பாட்டாளர்களில் ஒரு தொகுதியினர் பாரதீய ஜனதாக் கட்சியின் முதன்மை வேட்பாளராகிய நரேந்திர மோடிக்கு எதிராக ஒரு பகிரங்க அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள். இந்த அறிக்கைக்கு
கிளிநொச்சியில் விபத்து:ஒருவர் சாவு 
 கிளிநொச்சி நகர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் தண்ணிர் போத்தல்கள் ஏற்றிச் சென்ற பார ஊர்தி மின் கம்பத்துடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டம் 
 யாழ். மாநகர சபை பதில் தொழிலாளர்கள் நிரந்தர நியமனம் வழங்க கோரி வடக்கு மாகாண ஆளுநர் அலவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்களிடமே வலி. வடக்கை கையளிக்குக : பலாலி ஆசிரிய கலாசாலை மீண்டும் தொடங்குக, தீர்மானங்கள் நிறைவேற்றம் 
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைத் தலைமையில் இன்று காலை யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
கணிப்புக் கில்லாடிகள் சொல்லும் ரிசல்ட்!-விகடன் 
தேர்தல் வெற்றி - தோல்விகளைக் கணிப்பதில் விகடன் வாசகர்கள் கில்லாடிகள்! ஒவ்வொரு தேர்தல் முடிவுகளையும் வாக்குப்பதிவுக்கு முன்னரே கச்சிதமாகக் கணித்துவிடுவார்கள். நாட்டில் எந்த அலையடித்தாலும், அனுதாப மழை பொழிந்தாலும்
ராம் ஜெத்மலானியின் கறுப்புப் பண வேட்டை!
இந்தத் தேர்தலில் தேசியக் கட்சிகள் எல்லாம் சொல்லும் ஒரு வாக்குறுதி, கறுப்புப் பணத்தை மீட்போம் என்பதுதான். இதனைக் கையில் எடுத்து போராடி வருகிறார் இந்தியாவின் மூத்த வழக்கறிஞர்களில் ஒருவரான ராம் ஜெத்மலானி. இந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தேகத்துக்கு உரிய சில வேட்பாளர்கள் குறித்து ராம் ஜெத்மலானி இந்திய தேர்தல் கமிஷனிடமும் புகார் கூறியுள்ளார். இவர் நரேந்திர மோடியின் ஆதரவாளராக அறியப்பட்டாலும், பி.ஜே.பி-யில் இருந்து நீக்கப்பட்டவர். ராம் ஜெத்மலானியை டெல்லியில் சந்தித்தோம்.

''அரசியல்வாதிகள் மற்றும் முக்கியப் புள்ளிகளின் கறுப்புப் பணம் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்ததில், என்ன உண்மைகள் வெளியாகி உள்ளன?''
''இந்தியாவுக்கு வெளியே இருக்கும் கறுப்புப் பணத்தை மீட்கும் விவகாரம் சம்பந்தமாக 2009-ல் உச்ச
அதிமுக அளித்த 177 வாக்குறுதிகளில் 150 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன-ஜெயலலிதா 
 காங்கிரஸ் ஆட்சி தான் சுதந்திர இந்தியாவின் மிக மோசமான ஆட்சி என்று முதலமைச்சர் ஜெயலலிதா தாக்கியுள்ளார்.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதிமுக பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா இன்று முதல் 3 தினங்களுக்கு
 பேரறிவாளன் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்பதுதான் தமது கருத்து என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.

பேரறிவாளன் வழக்கில் ஏப்ரல் 25ஆம் தேதிக்குள் தீர்ப்பு அளிக்கப்படும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கூறியது பற்றி தி.மு.க. தலைவர் கருணாநிதி விமர்சித்து இருந்தார். அதில், சதாசிவத்தின் கருத்து நீதிமன்ற மரபுகளுக்கு உகந்ததா என கருணாநிதி கேள்வி எழுப்பியிருந்தார்.

 நரேந்திர மோடி மீது மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறையினர் எச்சரிக்கை 
நரேந்திர மோடி மீது மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மோடி பிரதமரானால் ராஜபக்சே மீது விசாரணை கமிஷன்: வைகோ தகவல்
நரேந்திர மோடி பிரதமாராக பதவியேற்றால், இலங்கை படுகொலைக்கு காரணமான ராஜபக்சே மீது விசாரணை நடத்த கமிஷன் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.

5 பேர் கொண்ட கும்பலால் சிறுமி பஸ்சிற்குள் வைத்து பாலியல் பலாத்காரம்: ரோட்டோரம் தூக்கி வீசபட்டார்
மத்தியபிரதேசம் சிங்குரவ்லி மாவட்டத்தில் மாவட்ட தலைநகரில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது நல்கதானி கிராமத்தில் ரோட்டோரம் ரத்தம் காயங்களுடன் கிடந்த 14 வயது சிறுமியை கிராமத்தை சேர்ந்தவர்கள் மீட்டு

2ஜி வழக்கு: மே 5 முதல் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலம் பதிவு

2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலம் மே மாதம் 5-ம் தேதி முதல் பதிவு செய்யப்படும் என  இந்த  வழக்கை விசாரித்து வரும் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஒ.பி.ஷைனி உத்தரவிட்டுள்ளார்.

இலங்கை மீதான  விசாரணை  குறித்து பான்கீ மூ னும் நவநீதம்பில்லையும் ஆராயவுள்ளனர் 
இலங்கையில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து விசாரிப்பதற்கான ஐ.நா விசாரணைக் குழுவின் நியமனத்தை அதிகாரபூர்வமாக அறிவிப்பதற்கு முன்னதாக, ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனை,

வர்த்தக தடையை ஏற்படுத்தும் முயற்சிகளில் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள்- ஆங்கில நாளேடு செய்தி 
பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் இலங்கையுடன் பிரித்தானியா கொண்டிருக்கும் வர்த்தக நடவடிக்கைகளில் தடைகளை ஏற்படுத்தக்கோரும் ஆரம்ப பணிகளில் ஈடுபட்டுள்ளன.
அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளைப் பார்வையிடுவதற்குச் சென்ற மன்னார் மற்றும் அநுராதபுரம் மறை மாவட்டங்களுக்கான ஆயர்களுக்கு  அனுமதி மறுப்பு
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் அனுமதியுடன், அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளைப் பார்வையிடுவதற்குச் சென்ற மன்னார் மற்றும் அநுராதபுரம் மறை மாவட்டங்களுக்கான

ad

ad