புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஜூன், 2014

ஒரு ஷூட்டிங் ஸ்பாட்..கடவுளின் அவதாரமான பாம்பு ஓரிடத்தில் ஒளிந்திருக்கும். வில்லன் வந்து நாயகியிடம் தந்திரமாக பேச வேண்டும். பின் பாம்பு தன் பலத்தால் வில்லனைப் பற்றி நாயகிக்கு அறிவுறுத்த வேண்டும். ஷாட் படி வில்லன் வந்து பேசிவிட்டுச் சென்றுவிட்டார். ஷூட்டிங் முடியும்போதுதான் உதவி இயக்குநர் ஒருவர் கவனித்திருக்கிறார். காலையில் வில்லன் போட்டிருந்த சர்ட் மஞ்சள் கலர். பிரேக்கிற்குப் பிறகு அவர் போட்டிருந்தது சிவப்பு கலர். கன்டினியூட்டி மிஸ்ஸிங்.

கடலோர காவல் படையினருக்கும், காவல்துறையிருக்கும் இடையே நடத்தப்படும் 48 மணி நேர 'ஆபரேஷன் ஆம்லா' இன்று (25ஆம் தேதி) காலை 6 மணிக்கு தொடங்கியது.
மும்பையில் கடந்த 2008ஆம் ஆண்டு தீவிரவாதிகள் கடல் வழியாக புகுந்து நடத்திய தாக்குதலில், நூற்றுக்கணக்கானோர் பலியானார்கள். மேலும், 9 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தொடரும் பலி...கண்டுகொள்ளப்படாத ராக்கிங் கொடுமை!
ராக்கிங் கொடுமையால் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற போதிலும் அதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் அதிகாரிகள் மேற்கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிராக அரங்கேறும் கொடுமைகளை தடுக்க சட்டத்தில் பல வழிகள் இருந்தும் அதை சரியாக  நடைமுறைப்படுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்தக் கொடுமையின் உச்சக்கட்டத்தில் பாதிக்கப்படுபவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

சென்னை, எழும்பூரில் உள்ள கல்லூரியில் படித்த மாணவி சரிகாஷா ராக்கிங் கொடுமையால் கடந்த 1998ல் இறந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதன் பிறகு ராக்கிங் கொடுமையை தடுக்க கல்லூரி நிர்வாகமும், காவல்துறையும் இணைந்து பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டனர். ஒவ்வொரு கல்லூரிகளிலும் ராக்கிங்கை தடுக்க குழு அமைக்கப்பட்டது. இருப்பினும், தொடர்ந்து நடைபெறும் ராக்கிங் சம்பவங்கள் அந்தக் குழுக்கள் பெயரளவுக்கே செயல்படுவதை உறுதிப்படுத்துகின்றன.
மத்திய அமைச்சர்கள் புது கார்கள் வாங்க பிரதமர் மோடி தடை விதித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்றதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர்கள் 100 நாட்களில் செய்யவிருக்கும் பணிகள் குறித்து


சீரழியும் இளம்பெண்கள் தமிழக அவலங்கள் 
தேனி மாவட்டம் கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் கடந்த சில தினங்களில் விசாரணைக்கு வந்த வழக்குகள் இவை. எத்தகைய சீரழிவை நோக்கி இந்தச் சமூகம் சென்றுகொண்டிருக்கிறது என்பதற்கு இந்தச் சம்பவங்கள் உதாரணம்.

அம்மா மருந்தகம் தொடகுகிறார் ஜெயலலிதா 
சென்னை: தமிழகம் முழுவதும் அம்மா மருந்தகங்களை முதலமைச்சர் ஜெயலலிதா நாளை தொடங்கி வைக்கிறார்.

தமிழகம் முழுவதும் அம்மா உணவகங்களை அரசு தொடங்கியுள்ளது. குறைந்த விலையில் தரமான உணவை வழங்கும் இந்த உணவகங்கள், மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. அந்த வரிசையில் அம்மா குடிநீர், அம்மா உப்பு ஆகியவை இடம் பிடித்துள்ளன.

25 ஜூன், 2014

ஸ்டாலின் மீது சரமாரி புகார் கூறி கருணாநிதிக்கு கே.பி.ராமலிங்கம் பரபரப்பு கடிதம்!

ராசிபுரம்: தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் மீது சரமாரியாக புகார்கள் கூறி கட்சித் தலைவர் கருணாநிதிக்கு, கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட முன்னாள் விவசாய பிரிவு அணி செயலாளர் கே.பி.ராமலிங்கம் விளக்க கடிதம் அனுப்பியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் திமுக படுதோல்வியை சந்தித்ததைத் தொடர்ந்து அக்கட்சிக்குள் களை எடுக்கும் படலம் நடந்து வருகிறது. முதல் கட்டமாக விவசாய பிரிவு அணி செயலாளர் டாக்டர் கே.பி.ராமலிங்கம் எம்.பி, தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் பழனிமாணிக்கம், முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் உள்பட 30க்கும் மேற்பட்டவர்களை கட்சியில் இருந்து
தமிழர்களுக்கான நிரந்தரதீர்வைப் பெற அழுத்தம் கொடுங்கள்; சுவிஸ் தூதுவரிடம் அவைத்தலைவர் வேண்டுகோள் 
தமிழ் மக்களுக்கு ஒரு நிலையான தீர்வை வழங்குவதற்கு சுவிட்சர்லாந்து   இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என வடக்கு மாகாண அவைத்த

இலங்கையின் மனித உரிமை மீறல்கள்: 3 உறுப்பினர்கள் கொண்ட சர்வதேச விசாரணைக்குழு அறிவிப்பு
 


இலங்கை ராணுவத்தின் மனித உரிமை மீறல் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கடந்த மார்ச் மாதம் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டது. அதன் அடிப்படையில் இலங்கை


சென்னை: பாலத்தில் இருந்து குதித்து 82 வயது தொழில் அதிபர் தற்கொலை
சென்னை அடையாறு பாலத்தில் தொழில் அதிபர் ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்டார். புதன்கிழமை காலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

வடக்கு முதல்வர்- சுவிட்சர்லாந்து தூதுவர் சந்திப்பு
வடமாகாணத்தில் தொடர்ந்தும் இராணுவம் இருப்பதால் பொதுமக்களுடைய வாழ்க்கைக்கும் பொருளாதார விருத்திக்கும் எவ்வாறு பங்கம் விளைவிக்கின்றது என்பது

தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையாருக்கு சிவாஜிலிங்கம் நன்றி தெரிவிப்பு
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இம்மாதம் 3ம் திகதி புதுடில்லியில் தாங்கள் சந்தித்த பொழுது, ஐக்கிய நாடுகள் சபையின் மேற்பார்வையில்

ஸ்கைப் மற்றும் ஜீ.பி.எஸ் போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சாட்சியங்கள் திரட்டப்படும்: பிரதீபா மஹாநாமஹேவா
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையினால் நிறுவப்பட்ட இலங்கை தொடர்பிலான விசாரணைக் குழுவினர் அடுத்த மாதம் முதல் வாரமளவில் சாட்சியங்களை திரட்டும்

கட்சத்தீவை மீட்பது ஒன்றுதான் மீனவர்கள் பிரச்சனைக்குநிரந்தர தீர்வாக இருக்கும் :பிரதமருக்கு ஜெ., கடிதம்
பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஜெயலலிதா இன்று ஒரு கடிதம் எழுதி உள்ளார். அக்கடிதத்தில்,  ‘’தமிழக மீனவர்கள் மேலும் 11

ராமநாராயணன் உடலுக்கு ஸ்டாலின் நேரில் அஞ்சலி ( படம் )
திரைப்பட இயக்குனரும் ,கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ராமநாராயணன்  மறைவையொட்டி அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை

கரூர்: இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை: உடலை வாங்க மறுத்து திடீர் சாலை மறியல்
 


கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அடுத்த பிச்சம்பட்டியை சார்ந்தவர் பொன்னுசாமி, இவர் இப்பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி நாகவள்ளி.

சென்னை வருகிறார் பிரதமர் மோடி?
பிரதமர் நரேந்திரமோடி வரும் ஜூன் 29ஆம் தேதி சென்னை வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்னையில் பெண்ணை கட்டிப்போட்டு கொலை செய்து கொள்ளை: பெண் வேடமிட்டு மர்ம நபர்கள் துணிகரம்
சென்னை ஜாம்பஜாரை சேர்ந்தவர் சையது அலி என்பவரது மனைவி மெகருன்னிசா. இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது பெண்களை போன்று பர்தா அணிந்து வந்த மர்ம நபர்கள், வெளிநாட்டில் வேலை பார்க்கும் மெகருன்னிசா மகனை தங்களுக்கு தெரியும் என்றும், அவர் அனுப்பியதாகவும் கூறியுள்ளனர்.
இதனை நம்பி அவர் மர்ம நபர்களை வீட்டிற்குள் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மெகருன்னிசாவை கட்டிப்போட்டு கொலை செய்த நபர்கள், வீட்டில் இருந்த 50 பவுன் நகைகள் மற்றும் ரூபாய் 2 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
வீடு திரும்பிய சையது அலி, சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்து, அவர் கொடுத்த தகவலின் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர். 
சென்னையில் பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கைக்கு 101..5 மில்லியன் டொலர்களை வழங்க உலக வங்கி இணக்கம் 
இலங்கையின் இளைஞர்களின் ஆளுமை அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுத்து அவர்களுக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதுடன் ஆளுமை வாய்ந்த ஊழியர்
அகதிகளை மீளவும் இலங்கைக்கு திருப்பியனுப்புவது ஆபத்தானது:ஆஸி.மனித உரிமை ஆணைக்குழு 
இலங்கையில் இருந்து வரும் அகதிகளை திருப்பியனுப்பும் அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் செயற்பாடு ஆபத்தானவை என்று அவுஸ்திரேலியாவின் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது .

ad

ad