புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஜூன், 2014


வடக்கு முதல்வர்- சுவிட்சர்லாந்து தூதுவர் சந்திப்பு
வடமாகாணத்தில் தொடர்ந்தும் இராணுவம் இருப்பதால் பொதுமக்களுடைய வாழ்க்கைக்கும் பொருளாதார விருத்திக்கும் எவ்வாறு பங்கம் விளைவிக்கின்றது என்பது

தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையாருக்கு சிவாஜிலிங்கம் நன்றி தெரிவிப்பு
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இம்மாதம் 3ம் திகதி புதுடில்லியில் தாங்கள் சந்தித்த பொழுது, ஐக்கிய நாடுகள் சபையின் மேற்பார்வையில்

ஸ்கைப் மற்றும் ஜீ.பி.எஸ் போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சாட்சியங்கள் திரட்டப்படும்: பிரதீபா மஹாநாமஹேவா
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையினால் நிறுவப்பட்ட இலங்கை தொடர்பிலான விசாரணைக் குழுவினர் அடுத்த மாதம் முதல் வாரமளவில் சாட்சியங்களை திரட்டும்

கட்சத்தீவை மீட்பது ஒன்றுதான் மீனவர்கள் பிரச்சனைக்குநிரந்தர தீர்வாக இருக்கும் :பிரதமருக்கு ஜெ., கடிதம்
பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஜெயலலிதா இன்று ஒரு கடிதம் எழுதி உள்ளார். அக்கடிதத்தில்,  ‘’தமிழக மீனவர்கள் மேலும் 11

ராமநாராயணன் உடலுக்கு ஸ்டாலின் நேரில் அஞ்சலி ( படம் )
திரைப்பட இயக்குனரும் ,கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ராமநாராயணன்  மறைவையொட்டி அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை

கரூர்: இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை: உடலை வாங்க மறுத்து திடீர் சாலை மறியல்
 


கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அடுத்த பிச்சம்பட்டியை சார்ந்தவர் பொன்னுசாமி, இவர் இப்பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி நாகவள்ளி.

சென்னை வருகிறார் பிரதமர் மோடி?
பிரதமர் நரேந்திரமோடி வரும் ஜூன் 29ஆம் தேதி சென்னை வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்னையில் பெண்ணை கட்டிப்போட்டு கொலை செய்து கொள்ளை: பெண் வேடமிட்டு மர்ம நபர்கள் துணிகரம்
சென்னை ஜாம்பஜாரை சேர்ந்தவர் சையது அலி என்பவரது மனைவி மெகருன்னிசா. இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது பெண்களை போன்று பர்தா அணிந்து வந்த மர்ம நபர்கள், வெளிநாட்டில் வேலை பார்க்கும் மெகருன்னிசா மகனை தங்களுக்கு தெரியும் என்றும், அவர் அனுப்பியதாகவும் கூறியுள்ளனர்.
இதனை நம்பி அவர் மர்ம நபர்களை வீட்டிற்குள் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மெகருன்னிசாவை கட்டிப்போட்டு கொலை செய்த நபர்கள், வீட்டில் இருந்த 50 பவுன் நகைகள் மற்றும் ரூபாய் 2 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
வீடு திரும்பிய சையது அலி, சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்து, அவர் கொடுத்த தகவலின் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர். 
சென்னையில் பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கைக்கு 101..5 மில்லியன் டொலர்களை வழங்க உலக வங்கி இணக்கம் 
இலங்கையின் இளைஞர்களின் ஆளுமை அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுத்து அவர்களுக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதுடன் ஆளுமை வாய்ந்த ஊழியர்
அகதிகளை மீளவும் இலங்கைக்கு திருப்பியனுப்புவது ஆபத்தானது:ஆஸி.மனித உரிமை ஆணைக்குழு 
இலங்கையில் இருந்து வரும் அகதிகளை திருப்பியனுப்பும் அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் செயற்பாடு ஆபத்தானவை என்று அவுஸ்திரேலியாவின் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது .
நாங்கள் கிண்ணத்திற்கு தகுதியற்றவர்கள்: விரக்தியில் ரொனால்டோ 
நாங்கள் எப்போதும் உலகக்கிண்ணத்தை வெல்லும் அணியாக திகழ முடியாது என போர்த்துக்கல் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ கூறியுள்ளார்.
உலக சாதனைகளை சமநிலைப்படுத்திய சங்கா, ஜெயவர்த்தனே 
இலங்கை அணியின் ஜாம்பவான்கள் சங்கக்கரா ஜெயவர்த்தனே இருவரும் டெஸ்ட் தரவரிசையில் சமநிலையான ஓட்டங்களை பெற்றுள்ளனர்.
ரெக்சியன் கொலை ; கமல் உள்ளிட்ட மூவருக்கும் மறியல் நீடிப்பு 
news
நெடுந்தீவு பிரதேச சபைத்தலைவர் ரெக்சியன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கந்தசாமி கமலேந்திரன் உள்ளிட்ட மூவரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்று  உத்தரவிட்டுள்ளது.

வெள்ளவத்தை கொள்ளைச் சம்பவம்: சந்தேகத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது
கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கொழும்பில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரபாகரனை காப்பாற்றிய நான் துரோகி! தமிழ் இளைஞர்களை கொன்றவர்கள் தேசியவாதிகள்!- பிரதியமைச்சர் முரளிதரன்
இந்திய இராணுவம் முல்லைத்தீவு காட்டுப் பகுதியை சுற்றி வளைத்த போது 40 மட்டக்களப்பு போராளிகளுடன் சென்று முற்றுகையினை உடைத்து விடுதலைப் புலிகளின் தலைவரை

24 ஜூன், 2014

சுவிஸ் தூதுவர் நளை யாழ்ப்பாணம் செல்கிறார்! முதலமைச்சருடன் கலந்துரையாடுவார்
அபிவிருத்தி, மற்றும் வடக்கு நிலைமைகள் குறித்து ஆராயும் நோக்கில் இலங்கைக்கான சுவிஸ் தூதுவர் நாளை யாழ்ப்பாணம் வருகிறார்.
இலங்கையின் 3000 மில்லியன் ரூபாய் நிதியீட்டத்துடன் லைக்காவின் ஞானம் அறக்கட்டளையின் இரண்டாம் கட்டப்பணிகள் ஆரம்பம்
 
இலங்கையின் வடக்கு கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை இலக்குவைத்து, பரந்துபட்ட மக்கள் நலன்புரி நடவடிக்கைகளின்
சதாம் ஹூசைனுக்கு தூக்குத்தண்டனை தீர்ப்பளித்த நீதிபதி போராளிகளால் கொல்லப்பட்டார்!
ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹூசைனுக்கு மரண தணடனை வழங்கி தீர்ப்பளித்த நீதிபதி போராளிகளால் கொல்லப்பட்டார்.
ரவூப் அப்துல் ரஹ்மான் (69) என்ற இந்த நீதிபதி
சென்னை : சகமாணவியின் பாலியல் ரீதியான ராகிங் கொடுமையால் மாணவி தற்கொலை
சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் பயின்று வந்த மாணவி ராகிங் கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தற்கொலைக்கு


மாநிலங்களவை இடைத் தேர்தலில் போட்டியிட மனுதாக்கல் திங்கள்கிழமையுட
  அதிமுக வேட்பாளர் நவநீதிகிருஷ்ணனைத் தவிர, பிரதான கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் யாரும் மனுதாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.
   மாநிலங்களவை திமுக வேட்பாளராக இருந்த டி.எம்.செல்வகணபதி, தகுதி இழப்புக்கு உள்ளானதால் அவர் தனது எம்.பி.

ஈராக் போர் பகுதியில் இருந்து 17 இந்தியர்கள் மீட்பு: 120 பேர் சிக்கியிருப்பதாக வெளியுறவுத்துறை தகவல்
ஈராக் போர் பகுதியில் இருந்து 17 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் 120 இந்தியர்கள் சிக்கியிருப்பதாகவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சென்னை சவுகார்ப்பேட்டையில் தீ விபத்து: 14 வாகனங்களில் வந்த வீரர்கள் 4 மணி நேரம் போராட்டம் 
சென்னை சவுகார்ப்பேட்டை நாராயணப்பா தெருவில் உள்ள குடோன் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட குடோனில் வாசனை திரவியம், பிளாஸ்டிக் பொருட்கள், ரசாயன பொருட்கள் இருந்துள்ளது. 
தலைதப்பிய போர்ச்சுகல்: பிழைக்க வைத்த கடைசி கோல்
உலகக்கிண்ணத் தொடரில் அமெரிக்காவிற்கு எதிரான ஆட்டத்தில் போர்ச்சுகல் அணி வீரர் வாரேலா

பொதுபல சேனாவை மூன்று சட்டங்களின் கீழ் கைது செய்ய வேண்டும்: சட்டத்தரணிகள் சங்கம்
பொதுபல சேனாவைச் சேர்ந்தவர்களை மூன்று சட்டங்கங்களின் கீழ் கைது செய்து தண்டனைக்கு உட்படுத்த முடியும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
முல்லையில் மீனவர்களின் வாழ்வாதாரம் முடக்கம்; அரசியல் ஆதிக்கங்களுடன் அரங்கேற்றம் 
வடக்கில் வசந்தத்தை ஏற்படுத்துகிறோம் என்ற அரசின் போலிகளின் பின்னணியில் நாலாப்புறமும் மக்களின் இயல்பு வாழ்வு சிதைக்கப்படும் திட்டங்களே அரங்கேறி வருகிறன என
பொருளாதார தடை விதிக்கவே ஐ.நா. திட்டம் அதற்கு துணைபோகிறது தமிழ் கூட்டமைப்பு - அமைச்சர் திஸ்ஸவிதாரண 
 "இலங்கைக்கு எதிராகப் பொருளாதாரத்தடை விதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அனைத்துலக சமூகத்திடம் முன்வைப்பதற்குரிய பொறிமுறைத் திட்டங்களை ஐ.நா. மனித உரிமைகள் சபை தற்போது வகுத்துவருகின்றது. 

ஈராக்கில் ஓயாத அலைகள்-3: குர்திஸ் மக்களைப் போல தமிழர்களுக்கும் தனிநாடா? புதிரான உண்மைத் தகவல்
ஈராக் இன்றைய செய்திகளின் தலைப்பாக இருக்கிறது. இந்த நிலைமையால் எரிபொருளின் விலை உயர்வு உலகின் எல்லா நாடுகளையும் ஆட்டங்காண வைத்துள்ளது.

டக்ளஸ் மீதான கொலை வழக்கு குறித்து உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
கொலை வழக்கில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மனு குறித்து பதிலளிக்க சென்னை சூளைமேடு காவல்துறை ஆய்வாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

23 ஜூன், 2014



"இலங்கை இனப்படுகொலை போர்க் குற்றவாளிகள் மீது பன்னாட்டு விசாரணை நடத்தவேண்டும் என தமிழகமே ஐந்து ஆண்டுகளாக தீவிரமாகப் போராடி வருகிறது. இதே தமிழகத்தின் தலைநகரில், அந்த இனப்படுகொலையின் முக்கிய குற்றவாளி ராஜபக்சே, சொகுசு ஓட்டல் தொழிலை நடத்தப்போகிறார்' என்கின்றன அதிர்ச்சித் தகவல்கள்.


டிகை பிரீத்தி ஜிந்தா என்றதுமே... அவரின் குழந்தைச் சிரிப்பும், குதூகல கன்னக் குழியும் சட்டென ஞாபகத்திற்கு வரும். அவரின் அப்பாவித் தோற்றத்திற்கு சம்பந்தமே இல்லாமல் அவரைச்சுற்றி அதிரடி சர்ச்சைகளும் நிறையவே உண்டு



கலைஞர் கோபம்.சீனியர் மா.செ க்கள்  நம்பும் ஸ்டாலின் 


""ஹலோ தலைவரே...… சட்டம்-ஒழுங்கு நிலைமை பற்றி இந்து முன்னணித் தலைவர் ராஜகோபாலன் பேசுனப்ப, தமிழ்நாட்டில் சட்டம் இருக்குது, ஆனா அது ஒழுங்கா இல்லைன்னு சொல்லியிருக்காரு.''     

""ஊடகங்களில் வரும் செய்திகளும் அதைத் தானே காட்டுது. மீடியாக்களில் வராத செய்தி களைப் பற்றிப் பேசுவோம்ப்பா.. அதைத்தானே நம்ம நக்கீரன் வாசகர்களும் பொதுமக்களும் நம்மகிட்டே எதிர்பார்க்குறாங்க.''




96-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், 91-96 வரையான ஜெ. ஆட்சியில் நடந்த ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக 40  வழக்குகள் போட்டது. ""எல்லா வழக்கிலும் நான் குற்றமற்றவள் என  என்னால் நிரூபித்துவிட முடியும். ஆனால் இந்த சொத்துக்குவிப்பு வழக்குதான்...'' என தனது  வழக்கறிஞர்களிடம் சந்தேகமாக அன்றே சொன்ன ஜெ., கடந்த 18 வருடங்களாக சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பை நெருங்கவிடாமல் பார்த்துக்கொண்டார்.

ஆனால் கடந்த 17-ந் தேதி (செவ்வாய்) சுப்ரீம்கோர்ட்டில் நீதியரசர் விக்ரம்ஜித் சென், சிவகீர்த்திசிங் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்த வாதங்கள்தான் "ஜெயலலிதாவின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியது என்கிறார்கள் சுப்ரீம்கோர்ட் வழக்கறிஞர்கள். 

ஜெ. முதலமைச்சராக இருந்த 91-96ம் ஆண்டுவரை ஜெ., சசி, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்குபேரை இயக்குநர்களாக கொண்டு சுமார் 32 கம்பெனிகள் ஆரம்பிக்கப்பட்டன. ஜெ. வீடான 36, போயஸ் கார்டன் என்ற முகவரியில் இயங்கிய இந்த கம்பெனிகளில் கோடிக்கணக்கான ரூபாய் புழங்கியது. ஒரு கம்பெனியின் பெயரில் போடப்படும் லட்சக்கணக்கான ரூபாய் பணம் மற்றொரு கம்பெனியின் பெயருக்கு மாற்றப்படும் என நடந்த இந்தப் பணப்புழக்கத்திற்குக் காரணம் இரண்டே நபர்கள். ஒருவர் பெயர் ஜெயராமன். இன்னொரு வர் ராஜன்.  இருவருமே போயஸ் கார்டன் வேலையாட்கள். இந்த இருவரும்தான் இந்த 32 கம்பெனிகளையும் பதிவு செய்தவர்கள். இவர்கள் கையெழுத் தில்தான் 32 கம்பெனிகளிலும் திடீர் திடீரென்று லட்சக்கணக் கில் பணப் பரி மாற்றம் நடக்கும். 

கருப்பு பண விவகாரம் தொடர்பாக சுவிஸ் அரசிடம் இருந்து எந்த தகவலையும் பெறவில்லை: அருண் ஜெட்லி
கருப்பு பண விவகாரம் தொடர்பாக நாங்கள் சுவிஸ் அரசிடம் இருந்து எந்த தகவலையும் பெறவில்லை என்று மத்திய நிதிமந்திரி அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

சுவிட்சர்லாந்தில் கருப்பு பணத்தை பதுக்கியோர் விவரங்களை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்: டி.ராஜா
சுவிட்சர்லாந்தில் கருப்பு பணத்தை பதுக்கியோர் விவரங்களை நாட்டு மக்களுக்கு மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்
தமிழ், முஸ்லிம் இனவாத அமைப்புக்களுக்கே தடையாம் ; அரசாங்கம் 
 இலங்கையில்  இனவாத அமைப்புகள் என்ற பெயரில் செயற்பட்டுவரும் தமிழ், முஸ்லிம் அமைப்புகளைத் தடை செய்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
சுற்றுலா பயணிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் 
 இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சாரதி அனுமதிப்பத்திரங்கள் விநியோகிக்கப்படவுள்ளன.
ஐ.நா விசாரணைக்குழு நிபுணராக முன்னாள் பின்லாந்து ஜனாதிபதி 
news
ஐக்கிய நாடுகள்; மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, இலங்கை தொடர்பிலான விசாரணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

22 ஜூன், 2014

ராமநாராயணன் உடல் நாளை சென்னை கொண்டுவரப்படுகிறது
பிரபல திரைப்பட இயக்குநர் - தயாரிப்பாளர் ராமநாராயணன் சிங்கப்பூரில் மாரடைப்பால் காலமானார். 
அமைச்சர் சம்பத் வீடு முற்றுகை :
பண்ருட்டியில் பரபரப்பு

பண்ருட்டி அருகே அமைச்சர் சம்பத் வீட்டை  அதிமுக ஊராட்சி துணைத்தலைவர் தலைமையில்

இந்தியாவிலேயே
அதிக திரைப்படங்களை இயக்கிய
 ராமநாராயணன் காலமானார்
 


பிரபல திரைப்பட இயக்குநர் - தயாரிப்பாளர் ராமநாராயணன் சிங்கப்பூரில் மாரடைப்பால் காலமானார். 

இன்று நடைபெற்ற சிட்டிபோய்ஸ் கிண்ண சுற்று போட்டியில் லீஸ் யங் ஸ்டார் கழகம் வெற்றி பெற்றுள்ளது 

CityBoys Cup 22.05.2014

தமிழ் யுவதியை இராணுவ வீரர் திருமணம் செய்வதா? திரைப்பட வெளியீடு இரத்து 
news
தமிழ் யுவதியை இராணுவ வீரர் திருமணம் செய்வதான கதையை உள்ளடக்கி இலங்கையில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்தை தமிழகத்தில் திரையிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதும் இறுதி நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. 
சைபர் தாக்குதலால் முடங்கியது மகிந்தவின் இணையம் 
 ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இணையத்தளம் உள்ளிட்ட   அரச தரப்பினரின்  பல அதிகாரபூர்வ இணையத்தளங்கள் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகி செயலிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
பாதுகாப்புச் சபைக்கு இலங்கை விவகாரம் 
இலங்கையின் நிலைமைகள் தொடர்பில் பல தரப்பட்டவர்களுடனும் கலந்துரையாடல்கள் நடத்தி வரும், ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் ஒஸ்கார் பெர்னாண்டஸ் தரங்கோ, தனது இலங்கைப் பயணத்தின் முடிவில்

திமுகவில் இருந்து நீக்கம் : பழனிமாணிக்கம், முல்லைவேந்தன்,
கே.பி.ராமலிங்கம் ஆவேசம்
 


மக்களவை தேர்தல் தோல்வி குறித்து ஆராய 6 பேர் குழுவை தி.மு.க. தலைமை அமைத்தது. அக்குழுவினர் அளித்த அறிக்கையை அடுத்த தேர்தல் பணி செய்யாதவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

அளுத்கம மற்றும் பேருவளை சம்பவங்கள் பற்றிய அறிக்கையை கோரும் ஐ.நா
அளுத்கம மற்றும் பேருவளை பிரதேசங்களில் ஏற்பட்ட வன்முறையான நிலைமை சம்பந்தமாக தனக்கு அறிக்கை ஒன்றை பெற்றுதருமாறு ஐக்கிய நாடுகளின்

போரில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள கருத்து வெளியிடும் உரிமை இருக்க வேண்டும் என தாம் அமெரிக்க தூதுவரிடம் கேட்டுக் கொண்டதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்
ஐநா மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் நடத்தும் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர் குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணையில் சாட்சியங்களை வழங்க தயாராக உள்ளவர்களுக்கு பாதுகாப்பை வழங்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற போர் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமா இல்லையா என அண்மையில் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட யோசனைக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களித்திருந்தது.
இந்த நிலையில், இலங்கைக்கான அமெரிக்கத் துதுவர மற்றும் அமெரிக்காவின் விசேட பிரதிநிதி ஒருவரை சந்தித்துள்ள கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இந்த கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகிறது.
அமெரிக்க தூதரகத்தில் கடந்த வியாழக்கிழமை இந்த சந்திப்பு நடைபெற்றதுள்ளதுடன், அதில் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இலங்கையில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் சர்வதேச விசாரணையில், இலங்கையை சேர்ந்த எவராவது சாட்சியமளித்தால், அவருக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த முடியும் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறியிருந்ததை அடிப்படையாக கொண்டே, கூட்டமைப்பு, அமெரிக்காவிடம் இந்த கோரிக்கையை விடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
போரில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள கருத்து வெளியிடும் உரிமை இருக்க வேண்டும் என தாம் அமெரிக்க தூதுவரிடம் கேட்டுக் கொண்டதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்

ஹக்கீம் அரசிலிருந்து அவராக வெளியேறினால் நல்லது! இல்லையேல் நாம் வெளியேற்றுவோம்!- அமைச்சர் சம்பிக்க
ஹக்கீம் வெட்கம் இல்லாதவர். அவரை யாரும் அரசாங்கத்தில் இருக்க வேண்டும் என வலியுறுத்தவில்லை. அரசாங்கத்தில் இருந்து அவராக வெளியேறினால்

பொதுபல சேனா பற்றிய அரசாங்கத்தின் நிலைப்பாடு அடுத்த வாரம் வெளியாகும்! மதவாதத்தை தூண்டும் அமைப்புகள் தடை செய்யத் தீர்மானம்
அளுத்கம மற்றும் தர்கா நகர் பகுதியில் அண்மையில் ஏற்பட்ட சம்பவங்கள் மற்றும் பொதுபல சேனா அமைப்பின் செயற்பாடுகள் குறித்து அமைச்சரவையில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

அசாத் சாலியை கைது செய்த பொலிஸ் ஏன் ஞானசாரரை கைது செய்யவில்லை?! பொலிஸ்மா அதிபர் பதவி விலக வேண்டும்!- ஆங்கில செய்தித்தாள் 
வன்முறையை தூண்டும் வகையில் செயற்பட்டதாக குற்றஞ்சாட்டி அசாத் சாலியை கைதுசெய்ய முடியுமானால் ஏன் அதே தவறை செய்த கலகொட அத்தே ஞானசார தேரரை

இலங்கையை சிங்கள தீவிரவாத நாடாக அறிவிக்க வேண்டும்: சீமான் 
நாம் தமிழர் கட்சியின் நிறுவன தலைவர் சீமான் இன்று  நெல்லை வந்தார். அவர் சிந்துபூந்துறை சாலை தெருவில் கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.

ரசிகரின் கன்னத்தில் பளார் விட்ட விஜயகாந்த்
விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் சகாப்தம் திரைப்படத்தின் படப்பிடிப்பு மலேசியால் நடைபெறுகிறது. இதற்கான படப்பிடிப்பு இடங்களை தேர்வு செய்வதற்காக விஜயகாந்தும், அவ

ஒரு மொழி பற்றிய திணிப்புகள் மடரிய மொழிகளை அழிப்பது கவலையை அளிக்கின்றன - 
ஏறத்தாழ 40,000 ஆண்டுகளாக மனித இனம் பேசிக் கொண்டிருக்கிறது. இன்றைய நிலையில் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட மொழிகள் உலகின் பல்வேறு பாகங்களில் பேசப்பட்டு வருகின்றன. வேடிக்கை என்னவென்றால், ஒருபுறம் உலகின் மக்கள்தொகை

திமுக பிரமுகர் ஆக்கிரமித்திருந்த ரூ.100 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு

தாம்பரம் அருகே உள்ள மாம்பாக்கம் மெயின் ரோட்டில் சித்தாலப் பாக்கம் சந்திப்பில் அரசுக்கு சொந்தமான 4 ஏக்கர் புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தை கடந்த 5 ஆண்டுகளுக்கும்

கரகாட்டக் கலைஞர் மோகனா வழக்கு திசை மாறுகிறது : பெரும் புள்ளிகளும் சிக்குகிறார்கள்



வேலூர் கரகாட்டக் கலைஞர் வீட்டில் இருந்து ரூ.4.04 கோடி, 73 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
பாணந்துறை தீ விபத்து மின்சார கசிவால் ஏற்படவில்லை :நோலிமிட் முகாமையாளர் 
பாணந்துறையில் இன்று தீ வைக்கப்பட்ட நோலிமிட் கட்டடத்தில் மின்சார கசிவு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்று நோலிமிட் ஆடை விற்பனை நிலையத்தின் முகாமையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை மாணவி பிளஸ் 2வில் உயர் புள்ளி - மருத்துவம் படிக்க மறுக்கிறது தமிழகம் 
news
இலங்கையில் உயர்தர பரீட்சை இந்தியாவில் பிளஸ் 2 பரீட்சை என அழைக்கப்படுகின்றது. இந்தப் பரீட்சையில் 1200க்கு 1170 மதிப்பெண் எடுத்து மருத்துவம் படிக்க விரும்பி கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த மாணவி அழைப்புக்

சுவிட்சர்லாந்தில் தந்தை ஒருவர் தனது மகளை திருமணம் செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸில் 46 வயது நபர் ஒருவர் 12 வயதான தனது மகளிடம் பாலியல் தொடர்பில் ஈடுபட்டுள்ளார். பின்னர் 2005ம் ஆண்டு தனது மனைவியை
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கைது 
news
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் சஞ்ஜீவ பண்டார பொலிஸாரினால் இன்று  கைது செய்யப்பட்டுள்ளார்.
பேராதனை பல்கலைக்கழகத்திற்குள் அத்துமீறி நுழைந்தமை  மற்றும் அங்கிருந்த பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளை அச்சுறுத்தி

21 ஜூன், 2014


 விஜய் பிறந்தநாள்: நாளை கோவை இ.எஸ்.ஐ. யில்
பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
நடிகர் விஜய்யின் 40–வது பிறந்த நாள் விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து நகர விஜய் இளைஞரணி தலைமை விஜய் நற்பணி இயக்கம் சார்பில் கோவையில்

திமுக ஒழுங்கு நடவடிக்கை :
மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் 33 பேர் நீக்கம்
 
 


 
திமுக தலைமைக் கழகம் சார்பில், கழக பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள

குற்ற வழக்கு! அதிமுக எம்.பி.க்கள் உள்பட 53 எம்.பி.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட வாய்ப்பு!

53 மக்களவை உறுப்பினர்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவர்களுக்கு எதிராக தீர்ப்பளிக்கப்பட்டால் அனைவரும் தகுதி நீக்கம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. 
இலங்கைக்கு முஸ்லிம் நாடுகள் எச்சரிக்கை 
 முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட்டவர்களுக்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது போனால், இலங்கை தொடர்பான நுழைவுச்சகட்டுப்பாடுகளில் திருத்தங்களை
யாழில் பட்டம் ஏற்றும் விழா ;முதலிடம் டிராகன் 
யாழில் மக்களின் 'பாரம்பரியங்களையும் கலை கலாசாரங்களையும் ஏற்படுத்தும் வகையிலான வடமாகாணத்தில் பட்டம் ஏற்றும் விழா  இன்று  யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கில் இடம்பெற்றது.


இந்த பட்டங்களில் வெகும் விமர்சையாக கட்டப்பட்டதும் பறக்கவிடப்பட்டதுமான பட்டங்களுக்கான விருதுகளில் முதல் இடத்தை டிராகன் பட்டமும்,இரண்டாம் இடத்தை கடல் கன்னி உருவ பட்டமும்,தக்கவைத்து கொண்டது.
யாழ். பள்ளிவாசல்களை முற்றுகையிட்ட அதிரடிப் படையினர் 
 யாழ்.குடாநாட்டில் பள்ளிவாசல்கள் மீதும், முஸ்லிம் தொழுகை இடங்கள் மீதும் கடந்த சில நாட்களாக தாக்குதல்கள் நடத்தப்படும் நிலையில் குடாநாட்டிலுள்ள பள்ளிவாசல்கள்
மைக்கேல் சூமேக்கரின் பரிதாப நிலை 
news
ஜேர்மனி நாட்டை சேர்ந்த பிரபல கார்ப்பந்தய வீரரான மைக்கேல் சூமேக்கரின் வாழ்க்கை நிலை பரிதாபத்துக்குரியதாக மாறியுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

தர்கா நகரில் காடையர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு சிறப்பு அதிரடிப் படையினருக்கு உத்தரவிடப்பட்டது
அளுத்கம பகுதியில் கடந்த வாரம் பேரணி நடத்திய பௌத்த அடிப்படைவாதக் குழுக்களுக்கு பாதுகாப்பினை வழங்குவதற்காகவே சிறப்பு அதிரடிப் படையினர் அந்த இடத்தில் குவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.



பாணந்துறை நோலிமிட் ஆடை நிறுவனம் தீக்கிரை! பொதுபலசேனா வெறிச்செயல்






இலங்கையின் முன்னணி ஆடை விற்பனை நிலையம் நோலிமிட்டின் பாணந்துறை காட்சியறை சற்று முன் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் தலைவராக மீண்டும் பா.உறுப்பினர் சிறீதரன்
கிளிநொச்சி மாவட்டத்தின் இலங்கை தமிழரசுக் கட்சிக்கான புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் மாநாட்டு

 இந்தி பேசும் மாநிலங்களில் மட்டுமே சமூக வலைத்தளங்களில் இந்தி கட்டாயம்: மத்திய அரசு விளக்கம்
பேஸ்புக், டுவிட்டர், பிளாக்ஸ், கூகுள் மற்றும் யுடியூப் போன்ற சமூக வலைத் தளங்களில் அரசு தொடர்பான கணக்குகளில் ஆங்கிலம் மட்டுமே பயன்படுத்துவதற்கு
இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை எப்போது கிடைக்கும் ? 
தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர் இடைத்தங்கல் முகாம்களில் வசிப்போருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.
இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல்கள் கண்டிக்கப்பட வேண்டும் - ராதிகா எம்.பி 
news
இலங்கையின் அரசியல் அமைப்பின் கீழ், அந்த நாட்டின் மக்களை அரசாங்கம் பாதுகாக்க வேண்டும் என்று கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் கோரியுள்ளார்.
அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே இனவாத பேயிலிருந்து சிறுபான்மையினர் தப்பிக்கலாம்; சிவாஜிலிங்கம் 
சர்வதேச நீதி விசாரணை மூலம் அரசின் தோலை உரிக்கின்ற இந்த நேரத்தில் முஸ்லிம் சகோதரர்களும் தமக்கு நடைபெற்ற அநியாயங்களை சர்வதேசத்திடம் கூற முன்வர வேண்டும் .
நாங்கள் பொறுமையிழந்தால் பௌத்தர்கள் தாங்க மாட்டார்கள்; எம்.எம்.நிவாகிர் 
நிலம் வேண்டும் என்றால் அந்த நிலங்களை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்  எங்கள் மீது தேவையில்லாது கை வைத்து மோதலை தூண்டி விடாதீர்கள்.
அமெரிக்க பிரதிநிதிகளிடம் அளுத்கம சம்பவம் பற்றி எடுத்துரைத்தார் ஹக்கீம் 
நாட்டுக்குள் காணப்படும் மோதலான நிலைமையை நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இன்று நடத்தப்பட்ட ஹர்த்தாலை அமைதியான முறையில் நடத்தியமையை பாராட்டுவதாகவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
அளுத்கம வன்செயல் எண்மர் பலி, 580 கோடி பெறுமதியான சொத்து இழப்பு - மொஹமட் அஸ்லம் எம்.பி தகவல் 
அளுத்கமையில் இடம் பெற்ற சம்பவங்களினால்  இதுவரை எண்மர் உயிரிழந்துள்ளதுடன் 170 பேர் காயமடைந்துள்ளனர்.  370 குடும்பங்களை சேர்ந்த  2450 பேர் இடம்பெயர்ந்து அகதிகளாகியுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி. மொஹமட் அஸ்லம்

ad

ad