புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஜூலை, 2014

கொலைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை 
கொலைச் சம்பவம் ஒன்றில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட நால்வருக்கு கண்டி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 
வடக்கில் குழந்தைகள் விவரம் வலைப்பின்னல் மூலம் பதிவு 
வடமாகாணத்தில் பிறக்கும் குழந்தைகளின் விவரங்கள் உடனுக்குடன் வலைப்பின்னல் மூலம் பதிவு செய்ய மத்திய சுகாதார அமைச்சு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

லங்கை சைக்கிள் ஓட்ட வீரர்களை தடுத்து நிறுத்திய ஸ்கொட்லன்ட்யாட் பொலிஸார்
பொதுநலவாய நாடுகளின் போட்டிகளுக்காக சென்ற சைக்கிள் ஓட்ட வீரர்கள், ஸ்கொட்லன்ட்யாட் பொலிஸாரால் தடுக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

முஸ்லிம் கலாசார உடைகளுக்கு பாடசாலைகள் அனுமதி வழங்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு
முஸ்லிம் பெற்றோர் தமது கலாசார உடைகளுடன் பாடசாலைக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம்

வடக்கு மாகாண சபையின் சட்ட மீளாய்வை நிராகரித்த ஆளுநர்
வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறியின் மீளாய்வுக்காக வடக்கு மாகாண சபை வழங்கிய மாகாண சபை சட்டத்தை
ஸ்கொட்லாந்து தலைநகரம் திணறுகிறது எங்கும் தமிழர் தலைகள். எங்கும் புலிக்கொடி மயம் 


சுவிஸ் பெர்னில் உள்ள ஹெல்வெட்டியா  பிளாட்சில் இன்று மாலை 3 மணிக்கு கறுப்புஜூலை நினைவு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது . நிகழ்வில் அக்கிநிபரவைகள் அமைப்பின்  அரங்க நிகழ்ச்சி ஒன்றும் இடம்பெற்றது.நிகழ்சிகளை  கொலம்பஸ் தொகுத்து வழங்கினார் .

இத்தாலி மேற்பிராந்தியத்தில் இடம்பெற்ற மாவீரர் கிண்ண விளையாட்டு போட்டிகள்!

இத்தாலி மேற்ப்பிராந்திய விளையாட்டுத்துறை அனைத்து தேசிய கட்டமைப்புக்களின் பங்களிப்புடன் இவ்வாண்டிற்கான மாவீரர் கிண்ண விளையாட்டு போட்டிகள்

பிரிட்டனில் இலங்கை மாணவர் கொலை! இரண்டாவது கொலையாளியும் இனங்காணப்பட்டார்

இலங்கை பல்கலைக்கழக மாணவரான தவசிக்க பீரிஸை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட இருவரில் ஒருவர் இன்று குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
தைவானில் விமான விபத்து: 47 பேர் பலி.11 பேர் கடும் காயம் 

தைவான் நாட்டில் டிரான்ஸ்ஏசியா விமான நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று மோசமான வானிலை காரணமாக பெங்கு தீவில் விழுந்து விபத்துக்குள்ளாகியதில் 47பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கிளஸ்கோ நகரில் அணி திரண்டுள்ள ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள்.பீதியில் மகிந்த வரவில்லை 
ஸ்கொட்லாந்து கிளஸ்கோ நகரில் ஆரம்பமாகியுள்ள 20வது பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டியின் முதல்நாளான இன்று ஆயிரக்கணக்கான புலம்பெயர் தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

23 ஜூலை, 2014


யாழ் மணிக்கூட்டுக் கோபுரத்தைச் சுற்றி யோகேஸ்வரி அம்மணி செய்கின்ற வேலை இது 
23.07.2014
யாழ்.மணிக்கூட்டு கோபுரத்தை சுற்றி அமைக்கப்படுகிறது யாழ்ப்பாணத்தை ஆண்ட மன்னர்களின் சிலைகள்... யாழ்ப்பாணத்தினை ஆண்ட மூன்று மன்னர்களின் சிலைகளை மணிக்கூட்டுக் கோபுரத்தின் மூன்று மூலைகளிலும் வைப்பதற்கு யாழ்.மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா நடவடிக்கை எடுத்துள்ளார்.. யாழ் நகரப் பகுதியில் சுற்றுலாப்பணிகளின் வருகை அதிகரித்துள்ளது. அதனடிப்படையில் யாழ்.சமூகத்துடன் கலந்துரையாடிய போது எமது வரலாற்று மன்னர்களின் சிலைகளை வைப்பதன் மூலம் வரலைாற்று உண்மைகளை யாவருக்கும் காட்ட முடியும் என்ற நோக்கத்துடன் யாழ்.மாநகர சபை யாழ்ப்பாணத்தினை ஆண்ட மூன்று மன்னர்களின் சிலைகளை நிறுவுவதற்கு நடவடிக்கையினை எடுத்துள்ளார். இதன்படி யாழ்.மணிக்கூட்டுக் கோபுரத்தினை சுற்றியுள்ள மூன்று வளைவுகள் தற்போது யாழ்.மாநகர சபையினால் இடிக்கப்பட்டு அவ்விடத்தில் மன்னர்களின் சிலைகள் அமைப்பதற்காக தூன்கள் அமைக்கப்பட்டு அவற்றில். மன்னர்களின் சிலைகள் அமைக்கப்படவுள்ளது. இந்தச் சிலைகள் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றத்தின் போது திறந்து வைக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார் -
யாழ் மணிக்கூட்டுக் கோபுரத்தைச் சுற்றி யோகேஸ்வரி அம்மணி செய்கின்ற வேலை இது
யாழ்.மணிக்கூட்டு கோபுரத்தை சுற்றி அமைக்கப்படுகிறது யாழ்ப்பாணத்தை ஆண்ட மன்னர்களின் சிலைகள்.

பதவி கவிழ்க்கப்படலாம் என்ற அச்சத்தில் ஜனாதிபதி; ஏ.எவ்.பி
பதவி கவிழ்க்கப்படலாம் என்ற அச்சத்தில் ஜனாதிபதி; ஏ.எவ்.பி
23.07.2014

பதவி கவிழ்க்கப்படலாம் என்ற அச்சத்தில் ஜனாதிபதி; ஏ.எவ்.பி
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச, தான் பதவி கவிழ்க்கப்படலாம் என்ற அச்சத்தில் சிக்கியிருக்கிறார் என பெயர் குறிப்பிட விரும்பாத அமைச்சர்  ஒருவரை மேற்கோள் காட்டி ஏ.எவ்.பி. செய்தி வெளியிட்டுள்ளது.
அதன் காரணமாக, தனது அதிகாரத்தின் பிடியை இறுக்கமாக்கிக் கொள்வதற்காக அவர் மக்களை மௌனமாக்க முயல்கிறார் என மனித உரிமை பணியாளர்கள் மற்றும் அரச அமைச்சர் ஆகியோர் தெரிவித்துள்ளதாக அச்செய்தி மேலும்  தெரிவித்துள்ளது.
 
சமீபத்தில் அரசசார்பற்ற அமைப்புகளுக்கு எதிராக விடுக்கப்பட்ட உத்தரவுக்கு இந்த அச்சமே காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அரசு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை கருத்திற்கொண்டே தனக்கு எதிரான குரல்களை மௌனமாக்க முயல்வதாக அரச சார்பற்ற அமைப்புகளின் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
நாடு ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகும் வேளையில், அரசு தனது நிலை ஆட்டம் காண்பதாக உணர்கிறது, அதன் காரணமாகவே அரச சார்பற்ற அமைப்புகளுக்கு எதிரான உத்தரவு வெளியானது என ஊடகவியலாளர்களை பாதுகாப்பதற்கான குழு தெரிவித்துள்ளது.
 
இதேவேளை, வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஊட்டுவதற்காக யு.எஸ்.எயிட் நிறுவனம் முன்னெடுக்க இருந்த திட்டம் காரணமாக அரசு கடும் அச்சமடைந்தது.
 
ஆட்சி மாற்றத்திற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என அரசில் உள்ள சிலர் அச்சமடைந்துள்ளனர் என பெயர் குறிப்பிட விரும்பாத அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
இவ்வாறு ஏ.எவ்.பி செய்திச் சேவை மேலும் தெரிவித்துள்ளது.
பதவி கவிழ்க்கப்படலாம் என்ற அச்சத்தில் ஜனாதிபதி; ஏ.எவ்.பி
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச, தான் பதவி

: ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் அவரது தரப்பு இறுதிவாதம் இன்றுடன் நிறைவடைந்தது.

ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
டக்லஸ் வழக்கின் தீர்ப்பு 31 அன்று-சென்னை உயர்நீதிமன்றம் கொலை வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க கோரி இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தாக்கல் செய்த மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில் வரும் 30ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. 
யங் ஸ்டார் மற்றும் தாய்மண் கழகங்கள் பாரிஸ்  சுற்றுபோட்டிக்கு செல்லும் ஒழுங்கு முறை ,மற்றும் ஆதரவாளர்களுக்கான அழைப்பு
எதிர்வரும் சனியன்று இங்கிருந்து பேரூந்தில் புறப்பட்டு திங்கள்  காலை  திரும்ப வந்து சேருவோம்  .யங் ஸ்டார் கழகத்தோடு இணைந்து றோயல் வீரர்களும் தாய்மண் கழகத்தோடு  தமிழ் யுத், வானவில் வீரர்களும் விளையாடுவார்கள் .யங் ஸ்டார் தாய்மண் கழகங்கள் பங்கு பற்றவுள்ளன.இன்னும் 26 இருக்கைகள்  இருப்பதால் பதிவு செய்து கொள்ளுங்கள் முரளி அல்லது மதி (தமிழர் இல்லம் )
சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே 200 கடைகள் இடிப்பு


 சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இதற்காக சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே இருந்த சாலையோர கடைகளை

மாறன் சகோதரர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய
 போதிய ஆதாரங்கள் உள்ளது : அட்டர்னி ஜெனரல்
ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி மாறன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய


வைரமுத்துவுக்கு அறுவை சிகிச்சை
 


கவிஞர் வைரமுத்து முதுகு வலியால் அவதிப்பட்டு வந்தார்.  இந்நிலையில் அவர் கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கடந்த ஒருவாரமாக
யாழ் நகரில் மற்றும் 'மாறு தடம்' மாபெரும் வெளியீட்டு விழா... 25.07.2014 வெள்ளிக்கிழமை பி.ப 3.30 மணிக்கு யாழ். ராஜா திரையரங்கில்...
ஈழத்துக்கலைஞர்களும் சுவிஸ்கலைஞர்களும் இணைந்த பிரமாண்ட தயாரிப்பு. நீண்டகால இடைவெளிக்குப்பின்
யாழ்நகரில் வெளியாகும் நம்மவரின் முழுநீள திரைப்படம் (150 நிமிடங்கள் )
இது உங்களின் கதை உறவுகளே! காணத்தவறாதீர்கள்.
யாழ். ராஜா திரையரங்கம்
தொடர் காட்சிகளாக 26 யூலை சனி பி.ப 2.30 மணி 27 யூலை ஞாயிறு பி.ப 2.30 மணி

மன்னார் அஜன் திரையரங்கம்
தொடர் காட்சிகளாக 26 யூலை சனி பி.ப 2.30 மணி 27 யூலை ஞாயிறு பி.ப 2.30 மணி

ad

ad