புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஆக., 2019

ஷவேந்திர சில்வா நியமனம்! உறுதிமொழிகள் மீறப்பட்டுள்ளன! ஐ.நா அதிருப்தி

இராணுவத் தளபதியாக லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமைக்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பெட்ச்லெட் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

அரசியல் கைதி தேவதசானை சந்தித்தார் வேலுகுமார்

அரசியல் கைதியான கனகசபை தேவதாசனை, புதிய மெகசின் சிறைச்சாலையில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், இன்று சந்தித்துள்ளார்.

ஒட்டுமொத்த அழிவுகளுக்கும் கோத்தாவே காரணம்இரா. துரைரெட்ணம்

வடக்கு, கிழக்கில் ஏற்பட்ட ஒட்டுமொத்தமான அழிவுகளுக்கும் காரண கர்த்தாவாக இருப்பது கோத்தாபய என்பதே உண்மை என முன்னாள் கிழக்கு மாகாண உறுப்பினர் இரா. துரைரெட்ணம் தெரிவித்துள்ளார் . இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அனந்திக்கு எதிராக அவதூறு வழக்கு

தன் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி அவதூறு ஏற்படுத்தினார் என வடமாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரனுக்கு எதிராக வழக்குத் தொடரவுள்ளதாகத் தெரிவித்துள்ளார், வடமாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன். முன்னாள் முதலமைச்சர்

எல்லையை மீறுகிறது அமெரிக்கா- விமல் வீரவன்ச

இராஜதந்திர எல்லைகளை மீறி அமெரிக்கா இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடுவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார். இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டது குறித்து அமெரிக்க வெளியிட்ட

வெளியார் தலையிட முடியாது-இலங்கை வெளிவிவகார அமைச்சு

இராணுவத் தளபதியாக லெப். ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமை நாட்டின் இறையாண்மையுடன் தொடர்புடைய விவகாரம், அதில் வெளிச்சக்திகள் தலையிடக் கூடாது என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இராணுவத் தளபதியாக லெப். ஜெனரல் சவேந்திர

பொறுப்புக்கூறல், நல்லிணக்கத்தை பாதிக்கும்-கனேடிய தூதரகம்

இலங்கையின் புதிய இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளதானது, நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் முயற்சிகளைப் பாதிக்கும் என, கனடா தெரிவித்துள்ளது. சவேந்திர சில்வா நியமனம் குறித்து இன்று கனேடிய தூதரகம் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.

10 வருடங்களாக கதிர்காம பாதையை தனிவழியாக மாற்றியிருக்கும் புத்தளை யானை



பத்து வருடங்களாக புத்தளை வழியாக கதிர்காமம் செல்லும் பிரதான பாதை தனிவழி பாதையாக மாற்றியிருப்பதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த யானை சுமார் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக புத்தளைக்கும் செல்லகதிர் காமத்திற்கும் இடையில் பிரதான பாதையினை மறைத்து நிற்பதாகவும் இந்த யானைக்கு சாப்பிடுவதற்கு எதனையாவது தந்த பின் வழிவிடுவதாகவும் இதனை பொது மக்கள் தங்கள் பயணத்தினை மேற்கொள்வதற்கு தொடர்ந்த இந்த பணியினை மேற்கொள்வதனால் அது தற்போது வழமைக்கு வந்துள்ளதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
பத்து வருடங்களாக புத்தளை வழியாக கதிர்காமம் செல்லும் பிரதான பாதை தனிவழி பாதையாக மாற்றியிருப்பதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த யானை சுமார் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக புத்தளைக்கும் செல்லகதிர் காமத்திற்கும் இடையில் பிரதான பாதையினை மறைத்து நிற்பதாகவும் இந்த யானைக்கு சாப்பிடுவதற்கு எதனையாவது தந்த பின் வழிவிடுவதாகவும் இதனை பொது மக்கள் தங்கள் பயணத்தினை மேற்கொள்வதற்கு தொடர்ந்த இந்த பணியினை மேற்கொள்வதனால் அது தற்போது வழமைக்கு வந்துள்ளதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்
இவ்வாறான கையூட்டல்கள் பெறுவதை இதற்கு முன் மனிதர்களே பெற்றுகொண்டு வாகனங்களை அனுப்புவதாகவும் தற்போது இவ்வாறு ஒரு யானை தனது வயிற்று பிழைப்புக்கு கையூட்டல்களை பெற்றுக்கொள்வதாக பொது மக்கள் கேலியாக தெரிவிக்கின்றனர். எது எவ்வாறான போதிலும் குறித்த யானை காட்டில் அலைந்து திரிந்து சாப்பிடாமல் ஒரே இடத்தில் இருந்து தனது உணவினை தேடிக்கொள்வதனால் இதன் ஆயுள் காலம் குறைந்து விடும் என பலர் சுட்டிக்காட்டுகின்றனர். எனவே இது குறித்து உரிய அதிகாரிகள் கவனமெடுக்க வேண்டுமெனவும் பலர் கோரிக்கை விடுக்கின்றனர்.
இலங்கை மண்ணின் மைந்தன் பிக்போஸ் தர்சனை ஆதரிப்போம்  வாருங்கள்தர்சன் தியாகராசா -(ஆக்கம் சிவ-சந்திரபாலன் )
------------------------------
பெயர் -தர்சன் தியாகராசா
பிறந்த திகதி -17.09.1990
பிறந்த இடம் -யாழ்ப்பாணம்
வாழும் இடம் -தின்னவேலி .யாழ்ப்பாணம்
தந்தை பெயர் -தம்பு தியாகராசா
தாயின் பெயர் - தியாகராசா சியாமளா (நல்லையா )
உயரம் -6 அடி 1 அங்குலம் 180 cm 
நிறை 80 Kg
கண்கள் நிறம் -கறுப்பு
முடியின் நிறம்-கருப்பு 
சமயம் -சைவம் 
கல்வி -சென் ஜோன்ஸ் கல்லூரி 
லெளகீகம்- மணமாகாதவர் 
பிடித்த நடிகர்-விஜய் 
பிடித்த நடிகை . சனம் ரெட்டி 
வெற்றியாளர் -Mister Srilanka for Mister International 2016 and won the title.
கொரிய ஆணழகன் போட்டியின் வேட்பாளர் பங்குதாரர் தேசிய மட்டத்தில் Hurdles போட்டியில் இரண்டாம் இடம் பிடித்ததற்காக பரி யோவான் கல்லூரியின் அதியுயர் விருதான Johnian Eagle பதக்கத்தை வென்றவர
இந்த அரிய விருது  இருவருக்கே வழங்கப்பட்டிருத்தது. ஒருவர் 1972ல் இலங்கையின் U19 உதைபந்தாட்ட அணியில் இடம்பிடித்த அன்டனிப்பிள்ளை மாஸ்டர், மற்றவர் 1983ல் தேசிய U19 Cricket அணியில் ஆடிய திருக்குமார்.

தேசிய மட்டத்தில் Hurdles போட்டியில் இரண்டாம் இடம் பிடித்ததற்காக Johnian Eagle பதக்கத்தை வென்றவர 
தந்தை குடும்பம் ,வரலாறு .இலங்கைத் தீவின் பெருமைமிகு தீவகத்தில் புங்குடுதீவு மடத்துவெளியில் பிறந்த கே வி தம்பு அவர்கள் புங்குடுதீவு பத்தாம் வடடாரத்தில் பெண்ணெடுத்து குடும்பத்தோடு யாழ்ப்பாணம் சென்று வெலிங்டன் தியேட்டர் சந்தி ,இல.31 மணிக்கூண்டு வீதியில் அமைந்துள்ள முனீஸ்வரகபே என்ற பெருமைக்குரிய சைவ ஆசார உணவகத்தை வெற்றிகரமாக நடத்தி வந்தார் . உணவகத்தின் பின்பகுதியிலேயே இல்லம் அமைத்து வாழ்ந்து வந்த தம்பு அவர்களுக்கு பிறந்த தியாகராசா மூன்றாவதும் ஒரே ஒரு ஆண்மகனுமாவார் .இரண்டு மூத்த சகோதரிகளையும் சாந்தி என்ற ஒரு தங்கையையும் கொண்டவர் .கே வி தம்பு அவர்கள் முறைப்படி சங்கீத வாய்ப்பாடடை கற்று பிரபலமான சங்கீத வித்துவானாக திகழ்ந்துள்ளார் அடிக்கடி இலங்கை வானொலியில் இவரது நிகழ்ச்சி ஒலி பரப்பாகி வந்தது . அதோடு இசைக்கலைக்கு ஊக்கமளிக்கும் வகையில் அருகாமையிலேயே இளம்கலைஞர் மன்றத்தினை அமைக்க முன்னோடியாக செயல்படடார் தனது இசைத்துறையிலேயே தனது ஒரே மகனை ஈடுபடுத்தி தியாகராசாவை இந்தியாவுக்கு அனுப்பி சிறந்த வயலின் வித்துவானாக்கி மகிழ்ந்தார் . தினமும் காலை ஏழு மணிக்கே இவரது இல்லத்தில் இசைப்பயிச்சி ஆரவாரமாக நடக்கும் தந்தைபாட தியாகராசா வயலின் வாசிக்க சுமார் ஒரு மணிநேரம் இசைப்பிரவாகம் தான் . தனது உணவகத்தை உயிராக மதித்து பக்கத்திலேயே இருந்து கவனித்து வந்த தம்பு அவர்கள் 1991 இடப்பெயர்வில் பிரிய மனமில்லாது வெளியேற வேண்டிய சூழலில் தன்னுயிரையும் துறந்து விடடார் . பின்வந்த காலத்தில் தியாகராசா இந்த் நிறுவனத்தை இன்றுவரை திறம்பட நடத்தி வருகிறார் .தியாகராசாவின் சகோதர்களும் மனைவியின் சகோதரர்களும் வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் இவர் மட்டும் இங்கேயே ஒருவித பிடிப்புடன் இருந்துவிடடார்
தாயாரின் குடும்பம் , வரலாறு .
புங்குடுதீவு மடத்துவெளி நல்லையா லடசுமி தம்பதியின் மூன்றாவது மகவு சியாமளா . தர்மபாலன்(கனடா )மாமா ,அமரர் மஞசுளா(கனடா )பெரியம்மா ,சியாமளா ,கிருஷ்ணபாலன்(சுவிட்சர்லாந்து) மாமா ,பிரேமிளா(யாழ்ப்பாணம் )சிறிய தாயார் என சகோதரர் வரிசை கொண்டவர் .இதில் தர்மபாலன் பி.காம் யாழ் பல்கலைகழக படடதாரி புங்குடுதீவு மகா வித்தியாலய அதிபராக பணியாற்றி இப்போது கனடாவில் வாழ்கிறார் .சிறந்த சமூக, ஆன்மீக பணியாளர் . இவர் கூட மடத்துவெளி சனசமூக நிலையத்தின் மலர்விழி நாடக மன்றத்தின் பல நாடகங்களில் நடித்துள்ள ஒரு சிறந்த நடிகர் அண்மைக்காலத்தில் காலமாகி விடட தர்சனின் பெரியம்மா திருமதி மஞ்சுளா நினைவாகவே அவரது கணவர் புங்குடுதீவு இரட்டை சந்தி அருகே கட்டி கொடுத்துள்ள பெருமைமிகு சிற்பக்கலை தரிசனமாக திகழும் கண்ணகி அம்மன் நுழைவாயில் அமைந்துள்ளது .
தர்சனின் வரலாறு
யாழ்ப்பாணத்தில் தனது ஆரம்ப கல்வியை கற்று தேறிய  பின் தர்சன் தொடர்ந்து தலைநகர் கொழும்பில் உள்ள Asia Pasific Institute of Informatuion Technology (APIIT ) நிறுவனத்தில் B,Tech software Engneering படிப்பை முடித்துள்ள இவர் மாடலிங் துறையில் ஈடுபாடாகி 2016 இல் இலங்கை மண்ணில் நடந்த  ஆணழகன் போட்டியில் வென்று மிஸ்டர் ஸ்ரீலங்கா விருதை வென்றார் அதன் நிமித்தம் கொரியாவில் நடந்த ஆணழகன் போட்டியிலும் பங்கு பற்றி  சிறப்பித்தார்
தர்சன்
அமெரிக்க கம்பெனியான Virtusa இல் பணியாற்றி அவுஸ்திரேலியாவுக்குமாற்றலாகி பின்னர் வேலையை துறந்து இந்தியா சென்று தன் முழுநேர கவனத்தையும் மாடலிங் நடிப்பு துறையில் செலுத்தினார் வேறென்ன வேண்டும் என்ற திரைப்படத்தில் வில்லன் வேடத்தில் நடித்துள்ள தர்சன் இந்தியாவில் தங்கி இருந்து மேலும் தகுதியை வளர்த்து கொண்டார் அந்த காலங்களில் பல பிரபலமான நிறுவனகளுக்கு மாடலிங் செய்து விளம்பரங்கள் தயாரிப்பில் ஈடுபடுத்தி கொண்டார் அவற்றில் போத்தீஸ் ,நண்டு மார்க் லுங்கி. குமரன் சில்க்ஸ் என்பன முக்கியமானவை .தற்போது பிரபலமான விஜய் டி வி இந்த பைக் போஸ் நிகழ்ச்சியின் போட்டியாளாராகி ஏகோபித்த ரசிகர்களின் விருப்பத்துக்குரிய எதிர்பார்ப்புக்குரிய வேட்ப்பாளராக திகழ்கிறார் . வழமைக்கு மாறாக இந்த மூன்றாவது சீசன் பிக்போஸ் தொடரில் மலேசியாவை சேர்ந்த முகின் ,இலங்கையை சேர்ந்த லூசியாவுடன் ஐவரும் பங்கு கொள்வது விறுவிறுப்பை கூட்டி உள்ளது முக்கியமாக உலகெங்கும் பரந்து வாழும் ஈழத்தமிழரிடையே தர்சன் மீதான நம்பிக்கை மகிழ்ச்சியை தருகிறது இலங்கை மண்ணின் புகழ் சேர்க்கும் தர்சனை வெற்றிபெற வைக்க எங்களால் முடிந்த ஆதரவை வழங்கி வைப்போம்

20 ஆக., 2019

வரதர் தனது காட்டி ,கூட்டி கொடுத்த வரலாற்றை சொல்லட்டும்?

தமிழ் மக்களுடைய விடுதலைக்காக தாங்கள் எல்லாம் போராடியவர்கள் என்று கூறுகின்ற வடகிழக்கு முன்னாள் முதலமைச்சராக இருந்த வரதராஐப் பெருமாள் அந்த விடுதலைப் போராட்டத்தை தாங்கள் எல்லாம் தான் காட்டிக் கொடுத்தவர்கள் என்ற வார்த்தையைச் சொல்ல மறந்துவிட்டார் எனக் கடுமையாக வரதராஐப் பெருமாளைச் சாடியுள்ள தமிழ்த் தேசிய மக்கள்

காலி மைதானத்தில் இலங்கை அணிக்கு வரலாற்று வெற்றி

நியூசிலாந்து அணிக்கு எதிராக காலி மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 06 விக்கட்டுக்களினால் வரலாற்று வெற்றியினை பதிவு செய்துள்ளது.

தமிழ் மக்களுக்கு விழுந்துள்ள உதை-சுமந்திரன்

இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளது தொடர்பாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் அதன் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் எச்சரிக்கை

லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டிருப்பது குறித்து கவலை வெளியிட்டுள்ள ஐ.நா மனித உரிமை ஆணையாளர், இது ஐ.நா அமைதிப்படையில் சிறிலங்காவின் பங்கெடுப்பை பாதிக்கக் கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மஹிந்த எதிர்க்கட்சி தலைவர் பதவிவகிக்க தகுதியில்லை - வெடிக்கும் சர்ச்சை

பரபரப்பான சூழ்நிலையில் பாராளுமன்றம் இன்று பிற்பகல் கூடவுள்ளது. பொதுஜன பெரமுனவின் புதிய தலைவராக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ கடந்த வாரம் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் எதிர்க்கட்சி தலைவர் பதவியையும், எம்.பி பதவியையும்

19 ஆக., 2019

வல்லரசுகளின் களமாகும் ஜனாதிபதித் தேர்தல்! சட்டத்தரணி சயந்தன்

மரபுரிமைக்குரிய விளையாட்டு,மொழி, கலை, சமயம் பண்பாடு,கலாசாரம் போன்ற தனித்துவமான ஓர் அடையாளத்தை கொண்ட இனமாக தமிழினம் இருக்கின்றது. இவ்வாறு தனித்துவமான ஒரு இனமாக தமிழினம் தொடர்ந்தும் இருந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் குறி வைத்து

சவேந்திர சில்வாவின் நியமனம் தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப்பெரிய அவமரியாதை

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டமை தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப்பெரிய அவமரியாதை எனவும் அதேவேளை, அவரின் நியமனத்தினால் மிகுந்த கலக்கமடைந்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்திருக்கிறது.

மட்டு. பல்கலைக்கு எதிராக போராட்டம்

.

விடுதி மீது குண்டுவீச்சு, வாள்வெட்டு

யாழ்ப்பாணம், கொக்குவில்– ஆடியபாதம் வீதியில் உள்ள விடுதி ஒன்றுக்குள் புகுந்த சிலர், பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தியதுடன், அங்கிருந்தவர்களை வாளால் வெட்டி காயப்படுத்தியுள்ளனர். புதிதாக திறக்கப்பட்ட குறித்த விடுதியில் சமூக சீர்கேடுகள் இடம்பெறுவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

சிறிலங்கா அரசுத் தலைவர் தேர்தலில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன ?

சிறிலங்கா அதிபர் தேர்தல் களத்தில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்சவை மட்டும் நாம் குற்றவாளியாகப் பார்க்கவில்லை. இனப்படுகொலைக் குற்றவாளியாக சிறிலங்கா அரசினையே(state) நாம் பார்க்கின்றோம். இனப்படுகொலை அரசின் முகமாக ஆட்சிபுரிந்தவர்கள்

இராணுவ தளபதியாக லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா-அமெரிக்கா ஆழ்ந்த கவலை

இலங்கை இராணுவ தளபதியாக லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமை தொடர்பாக, ஆழ்ந்த கவலையடைவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. புதிய இராணுவ தளபதியின் நியமனம் தொடர்பில் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம், இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில்

ad

ad