பக்கங்கள்

பக்கங்கள்


பிழையான அரசியல் தலைமைத்துவத்தினால் வடக்கின் கல்வித்துறை பாதிக்கப்பட்டிருந்தது : டக்ளஸ் குற்றச்சாட்டு-புங்குடுதீவு கமலாம்பிகை பவளவிழாவில் உரை 
[ செவ்வாய்க்கிழமை, 10 மே 2011, 08:13.19 AM GMT ]
பிழையான அரசியல் தலைமைத்துவங்களினால் வடக்கின் கல்வித்துறை பாதிக்கப்பட்டிருந்ததாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
தற்போது வடக்கின் கல்வித்துறையை மீள மறுசீரமைக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
யாழ். புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலத்தின் 75ம் ஆண்டு நிறைவு நிகழ்வுகளில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கொள்கைத் திட்டத்தின் அடிப்படையில் ஆசியாவின் ஆச்சரியமாக இலங்கையை உருவாக்குவதற்கு நாட்டின் சகல பிரதேசங்களும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக சுவிட்சர்லாந்த் ஈ.பீ.டி.பீ அமைப்பாளர்களான 
வ.ஜெயக்குமார் (பாபு),எஸ்.சண்முகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர் 
புங்.கமலாம்பிகை வித்தியாலய பவள விழா நிகழ்வுகள் நாளை
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-05-04 08:01:46| யாழ்ப்பாணம்]

புங்குடுதீவு கமலாம்பிகை கனிஷ்ட மகாவித்தியாலய பவள விழா நிகழ்வுகள் நாளை காலை 9மணிக்கு பாடசாலை மண்டபத்தில் நடைபெறும்.இரு அமர்வுகளாக நடைபெறும் இந் நிகழ்வில் முதல் அமர்வு வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் திருமதி சு.விஜயலட்சுமி தலைமையில் நடைபெறும்.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முய ற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா கலந்து கொள்கிறார்.சிறப்பு விருந்தினர்களாக தீவகம் வலயக் கல்விப் பணிப்பாளர் ஜீ.வி.இராதாகிருஷ்ணன், ஈழ மக்கள் ஜன நாயகக் கட்சியின் 
சுவிஸ் கிளை பொறுப்பாளர்கள் வ.ஜெயக்குமார், எஸ்.சண்முகநாதன் ஆகியோரும், கெளரவ விருந்தின ராக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கே.கமலேந்திரன் ஆகி யோரும் கலந்து கொள்கின்றனர்.

நிகழ்வில் தொடர்ந்து கமலமலர் நூல் வெளியீடும்,வாழ்த்துரைகளும், மாணவர் கெளரவிப்பும் இடம்பெறும்.அதிபர் நா.நாகராசா தலைமையில் நடை பெறும் மாலை நிகழ்வில் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் நா.சண்முகலிங்கன் பிரதம விருந்தினராக கலந்து கொள்கிறார்.சிறப்பு விருந்தினராக தீவகம் கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஐ.புவனேந்திரன்,வேலணை கோட்டக் கல்வி அதிகாரி கு.சரவணபவன்,ஈழ மக்கள் ஜன நாயகக் கட்சியின் புங்குடு தீவு பொறுப்பாளர் ஐ.சிவநேசன் ஆகியோரும், கெளரவ விருந் தினர்களாக ஓய்வு பெற்ற அதிபர் ந.இராசதுரை, கிராம அலுவலர் எஸ்.சிவா ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

மாலை நிகழ்வுகளில் மாணவர்களின் கலை நிகழ்வுகளும்,பட்டிமன்றம் மற்றும் இசை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன



நன்றி --வலம்புரி