பக்கங்கள்

பக்கங்கள்

30 மார்., 2020

கொரோனா - புங்குடுதீவில் வர்த்தகர்கள்  பொருட்களை  நம்பமுடியாத அளவுக்கு  லாபம்  வைத்து கொள்ளையடிக்கிறார்கள் . இந்த ஊரடங்கு நிலையிலும்  பின்கதவாலும்  மதில் சுவராலும்  வியாபாரம்   நன்றாகவே  செய்து சம்பாதிக்கிறார்கள் .  சமூகநலவாதிகள்  தலையிட்டு  கவனிக்க முடியாதா ? சட்ட்தின் பிடியில்  சிக்க மாடடார்களா ? வசதி படைத்தவர்கள்    மொத்தமாக  யாழ்நகர் சென்று  வாங்கி சேமித்துவிடடார்கள் .அன்றாடம் கசடத்தில் உள்ளவர்கள் தான் இந்த  கொள்ளை முதலாளிகளின்  செயல் கண்டு  எதுவுமே செய்ய முடியாது தவிக்கிறார்கள் .  முன்கூட்டியே பதுக்கி வைத்திருந்த பொருட்களை இப்படி  பலமடங்கு விலைக்கு  விற்று சம்பாதிக்கிறார்கள் 
அமெரிக்காவில் இறப்போர் எண்ணிக்கை 1  லட்ஷம் பே ருக்குள்   கட்டுப்படுத்தி விடடாலே  கெட்டித்தனம்  என்கிறார்  டொனால்டு  ட்ரம் 
புங்குடுதீவில் இன்று  சமுர்த்தியினால்  ஒரு குடும்பத்த்துக்கு  5000  ரூபா பணமும் 5000  ரூபா பெறுமதியான பொருட்களும்  கடனாக வழங்கப்படுகின்றது 
கனேடிய சமஷ்டி அரசின் அவசரகால நடவடிக்கைகளில் புதிதாக அறிவிக்கப்பட்டவை:

கோவிட்-19 உலகளாவிய பெருந்தொற்று நோய்க்கு எதிராகக் கனடா நடவடிக்கை எடுத்து வரும் வேளையில், பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ இன்று பின்வரும் விடயங்களை அறிவித்தார்:
கொவிட்-19 : ஒன்ராறியோவில் மேலும் இருவர் மரணம்

கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கொவிட்-19  தொற்றுக்கு இலக்காகியிருந்த மேலும்

கனடாவில் கொரோனா - அதிகாலை நிலவரம்!

கனடாவில் இன்று அதிகாலை 4 மணி வரையான காலப்பகுதிக்குள் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,655 ஆக அதிகரித்துள்ள
புலம்பெயர்  தமிழர்கள்   நலமுடன்  வாழ  எல்லோரும்  இணைந்து பிரார்த்திப்போம்  உறவுகளே 
கொரோனா அவசர கால  கடடமைப்பில்  தமிழகம்   சிறந்த முறையில் ஒழுங்கு படுத்துவதாக பாராட்டுக்கள் குவிகின்றன முதல்வருக்கு அரச இயந்திரத்துக்கும் நன்றி  தெரிவிக்கும் மக்கள் 
பிரான்ஸ் வாழ்   தமிழ் உறவுகளே --விசா இல்லாத எம்  சொந்தங்கள் பலர்  அனுமதியில்லாத வகையில் செய்த தங்கள் வேலையை இழந்து தவிக்கிறார்கள் வேலையின்றி  பொருளாதாரகஸ்டத்தில் இருப்பதாக  அறிகிறோம் முடிந்தளவு  உணவுக்காக  உதவி செய்யுங்கள் 
ஒரு கண்ணீர் மடல் 
-------------------------------
தாயகத்தமிழருக்கும்  புலம்பெயர்  தமிழருக்கும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாத  ஓர்  பிணைப்பு  எப்போதும் இருந்துவருகிறது. அந்த இயல்பான  பிருத்திக்க முடியாத உறவை   அத்திவாரமிட்டு  நீரூற்றி  வளர்த்தெடுத்த  பெருமையும் தீர்க்கதரிசனமும்  தேசியத்தலைவருக்கும் அவர் கட்டிவளர்த்த அமைப்புகளுக்கு உரியது . இந்த  தேசியப்பற்றின் அடிப்படையில் தான்  தாயகத்தின் உடைத்தலை  போராட்டத்துக்கு மட்டுமல்ல  சுனாமி,,,, வெள்ளப்பெருக்கு இடப்பெயர்வு  பட்டினி ச்சாவு புனர்வாழ்வு என  எல்லா பக்கமும் கைகொடுத்து  நின்றார்கள் புலம்பெயர் தமிழர் . மறுபுறம் புலம்பெயர் தமிழரின் பொருளாதார வளத்தின்   நீரூற்றால் தான் தாயகத்தின் பொருளாதாரபலமும் கடடமைப்பும்  பணப்புழக்கமும் உச்சகட்ட,,த்தில் என்றும்  இருக்கிறது .அத்தோடு  மறைமுகமாக  தொழில் கல்வி புனரமைப்பு  எனவும் தொட்டு நிற்கிறது. இந்த  உள்பரிமாணம் புரியாத சிலரும் அமைப்புகளும்  அவ்வப்போது புலம்பெயர் தமிழரை   கேவலமாக   சித்தரிப்பதும் புறம்கூறலும் அரங்கேறுவது கண்கூடு . இத்தனையையும்  தாங்கி   தலைவரினதும்  அவர்வழிவந்த போராளிகளின் தியாகத்தாலும்  மட்டுமே  தாம் இந்த நிலைக்கு உயர்ந்திருக்கிறோம் என்ற நன்றி மறவாத்தன்மையினால்  அன்றும் இன்றும் தாயாக தொப்புள்கொடி உறவுகளோடு பின்னிபின்னணிந்து   வாழப்பழ கி  விடடார்கள் -. இப்போது மேற்குலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா  புலத்துத்தமிழரையும்  பலவிதத்திலும் பாதிக்கப்போகிறது  உயிருக்கு அச்சுறுத்தல் கொடுப்பது மட்டுமல்ல அவர்களின்     அதியுன்னத  பொருளாதாரவளத்தையும்  ஆட்டுவிக்கும் .இந்த வீழ்ச்சி தாயக உறவுகளையும் பாதிக்கும்  கவலைப்படுத்தும் என்பதில் மறுப்பில்லை  ஆதலால்  ஈழத்தமிழர்கள் நாங்கள் புலத்திலும் தாயகத்திலும் ஒருவருக்கொருவர்   புறம்கூறல்  வஞ்சித்தலை  தவிர்த்து  நேசம் கொண்டு  தேசியப்பற்றோடு  தலைவனின் வழியில்  நடைபோடுவோம் . புலத்தமிழரின்  கவலை போக்க சோகம் நீக்க  பிரார்த்திப்போம்  நலம் விசாரிப்போம்  ஒன்றுபடுவோம்  செய்வோமா உறவுகளே 




$


$$$$$$