பக்கங்கள்

பக்கங்கள்

16 ஜூலை, 2020

வன்னி காட்டுக்குள் சென்ற யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீட்பு

Jaffna Editor
புதுக்குடியிறுப்பு - முத்தியன்கட்டு வன பகுதிக்கு சுற்று பயணம் மேற்கொண்ட யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் 9 பேரும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர்.

காவல்துறை மற்றும் இராணுவத்தினர் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த மாணவர்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் (15) குறித்த மாணவர்கள் இவ்வாறு வன பகுதிக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒட்டுச்சுட்டான் காவற்துறை நிலைய அதிகாரிகள் குழு, இலங்கை இராணுவத்தின் உறுப்பினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து குறித்த தேடுதல் நடவடிக்கையினை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

காட்டுக்குள் சென்ற பாதையை தவறவிட்ட இந்த மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர் என காவல்துறை தெரிவித்தது
சுவிஸ் லுசேர்ன் மாநிலம் வெள்ளிக்கிழமை முதல் 100 பேர் மட்டுமே விருந்தினர்கள் இருக்க முடியும் என்ற விதியை கொண்டு வருகிறது
சுவிஸ்  லுசேர்ண்   மாநிலத்தில் உணவகம் விடுதி கிளப் எல்லா வகையான கொண்டாட்டங்களில் 100 பேர் மட்டுமே  பங்கு பற்றலாம்