பக்கங்கள்

பக்கங்கள்

2 நவ., 2020

தமிழ்  உறவுகளே -எச்சரிக்கை .கொரோனாவில் இருந்து உங்களை காப்பா ற்றிக்கொள்ளுங்கள் 
தமிழர்  வாழும் அணைத்து நாடுகளிலம் கொரோனா  தாண்டவமாடுகிறது .தமிழர்களை கூட  பரவலாக  தாக்க தொடக்கி இருக்கிறது தயவு  செய்து ஒவ்வொரு  உயிருக்கும் மதிப்பளியுங்கள் . ஆலயங்கள்   விழாக்கள் கொண்டாட்ட்ங்கள் எல்லாவற்றையும்  ஒதுக்கி வையுங்கள் ,ஆலய நிர்வாகங்கள் பொது அமைப்புகள் சங்கங்கள் தனிப்பட்டவர்கள்  கூட இந்த  உயிரோடு விளையாடும் விஷயங்களில்  நல்ல  முடிவெடுங்கள் .  உறவுகள்  நீடூழி  வாழவேண்டும் அநியாயமாக எங்கள்   உறவுகளின் உயிரோடு  விளையாடாதீர்கள் .புலத்தில் பனி யிலும் குளிரிலும் இயந்திர வாழ்க்கையில்  ஓடித்திரிந்து உழைத்து  தன்னையும்  உறவுகளையும்  நாடடையும்  வாழ வவை த்த  ஒவ்வொரு  தமிழனும் ஓய்வு காலத்திலாவது ஒரு சில வருடங்களாவது நிம்மதியாக  அனுபவித்து வாழவேண்டும் மக்கள்  மருமக்கள் பேரப்பிள்ளைகள்  என  இணைந்து சந்தோசத்தில் இருக்க வேண்டாமா  ?சிந்தியுங்கள் செயல்படுங்கள் உங்கள் உயிர்  உங்கள்  கையில்