ஆளும் கட்சிக்கு ஆதரவளித்து வந்த சுமார் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயேட்சையாக இயங்கத் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதிக்கு சமர்ப்பித்துள்ள இடைக்கால அரசு பிரேரணை நிராகரிக்கப்பட்டால், இவர்கள் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவார்கள்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவிவிலகி, இடைக்கால அரசாங்கத்தை அமைக்கவில்லை எனில், எதிர்க்கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க, 40 பேரடங்கிய சுயாதீன குழு கவனம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.