முல்லைத்தீவு -கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி இன்று ஐந்தாம் நாளாக தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது. குறித்த அகழ்வாய்வின் போது நான்கு மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன் இரண்டு மனித எச்சங்கள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் மனித புதைகுழி அகழ்வுப்பணி அமைய வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்