 இலங்கைத் தமிழரசுக்கட்சியின் புதிய தலைவர் சிவஞானம் சிறீதரன் 2009ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்தததைப்போன்று ஏனைய தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து ஐக்கியமாகச் செயற்படுவதற்கான பகிரங்க அறிவிப்பை விடுத்துள்ள நிலையில், ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகியன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கூட்டுக் கட்சியாக பதிவு செய்ய வேண்டும், பொதுச்சின்னமொன்று ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்துள்ளன. |