பக்கங்கள்

பக்கங்கள்

11 டிச., 2024

மு. பொன்னம்பலம்

www.pungudutivuswiss.com

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

மு. பொன்னம்பலம் யாழ்ப்பாண மாவட்டம்புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.

விருதுகளும் பரிசுகளும்

[தொகு]
  • மு. பொன்னம்பலம் எழுதிய "திறனாய்வின் புதிய திசைகள்" என்ற நூலுக்கு மலேசியாவில் தான்சிறீ சோமசுந்தரம் கலை, இலக்கிய அறவாரியம் 2010/2011ஆம் ஆண்டுகளுக்கான அனைத்துலகப் புத்தகங்களுக்கான இலக்கியப் பரிசாக 10,000 அமெரிக்க டாலர்களை வழங்கியது.[1]
  • 'தமிழ் நிதி' விருதை கொழும்புத் தமிழ்ச் சங்கம் வழங்கிக் கௌரவித்தது.[2]

இவரது நூல்கள்

[தொகு]
  • அது (1968)
  • அகவெளிச் சமிக்ஞைகள் (1980)
  • விடுதலையும் புதிய எல்லைகளும் (1990)
  • பேரியல்பின் சிற்றொலிகள் (1990)
  • யதார்த்தமும் ஆத்மார்த்தமும் (1990)
  • கடலும் கரையும் (1996)
  • காலி லீலை (1997)
  • நோயில் இருத்தல் (1999)
  • திறனாய்வு சார்ந்த பார்வைகள் (2000)
  • ஊஞ்சல் ஆடுவோம் (2001)
  • பொறியில் அகப்பட்ட தேசம் (2002)
  • சூத்திரர் வருகை
  • விசாரம்
  • திறனாய்வின் புதிய திசைகள் (2011)

மேற்கோள்கள்

[தொகு]
தளத்தில்
மு. பொன்னம்பலம் எழுதிய
நூல்கள் உள்ளன.
ஈழத்து எழுத்தாளுமை மு.பொ காலமானார்
(26.08.1939-07.11.2024)
மு.பொ என தமிழ் இலக்கியப பரப்பில் நன்கு அறியப்பட்ட மு.பொன்னம்பலம் இன்று காலமானார். யாழ்ப்பாணம் புங்குடுதீவில் பிறந்த மு.பொ தமது பன்னிரண்டாவது வயதில் கவிதைகள் எழுதத்தொடுங்கியவர். கவிஞர், சிறுகதை, நாவலாசிரியர், விமர்சகர், சிறுவர் பாடலாசிரியர் என பன்முக ஆளுமையாக அழுத்தமாக தடம் பதித்தவர்.

எழுபது ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக இயங்கிவந்தவர்.
1968ல் முதல் கவிதைத்தொகுதி 'அது' வெளிவருகின்றது. ஆசிரியப் பணியை மேற்கொண்டவர். யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த 'திசை' வாரப்பத்திரிகையின் ஆசிரியர் (தை 1989- வைகாசி 1990). மு.தளையசிங்கத்தின் இளைய சகோதரான, அவரின் தொடர்ச்சியாக முன்வைத்து அதற்கும் வளஞ்சேர்த்தவர். மு. தளையசிங்கம்: அடிபெயர்க்கும் நினைவுகள் என்பது அவர் எழுதி வெளியிட்ட இறுதி நூல் (மே 2024). அதன் பின்னரும் இயங்கிக்கொண்டிருந்தார். அதில் தமிழ் ஆங்கில கவிதைகளும் உள்ளடங்கும்.
அவரது வெளியீடுகள்;: அது (கவிதைகள், 1968), அகவெளிச் சமிக்ஞைகள் (1980), விலங்கை விட்டெழும் மனிதர்கள் (1987), விடுதலையும் புதிய எல்லைகளும் (1990), பேரியல்பின் சிற்றொலிகள் (1990), யதார்த்தமும் ஆத்மார்த்தமும் (விமர்சனம், 1991), நான் அரசன்(மஹாகவி, மு.பொ, சு.வில்வரத்தினம் ஆகியோரின் சிறுவர் பாடல்கள்;, 1995), கடலும் கரையும் (சிறுகதை, 1996), காலி லீலை (கவிதைகள், 1997), நோயில் இருத்தல் (நாவல், 1999), திறனாய்வு சார்ந்த பார்வைகள் (2000), ஊஞ்சல் ஆடுவோம் (சிறுவர் இலக்கியம், 2001), பொறியில் அகப்பட்ட தேசம் (கவிதை, 2002), சூத்திரர் வருகை(கவிதைகள், 2003), விசாரம்(விமர்சனம், 2004), இலக்கியத் தொடுவானை நோக்கி(2006), A Country Entrapped (Poem, 2007)> கடலும் கரையும்(2008), நீர்க்கோலங்கள்( சிறுவர் இலக்கியம், 2008), முடிந்துபோன தசையாடல் பற்றிய கதை(சிறுகதைகள், 2009), கவிதையில் துடிக்கும் காலம்(கவிதை, 2009) திறனாய்வின் புதிய திசைகள் (விமர்சனம், 2011), வாசிப்பதும் வாசிக்கப்படுவதும்(விமர்சனம், 2012), சங்கிலியன் தரை(நாவல், 2015), உண்மையில் எழுதல் (நாடகம்), யுகம் ஒன்று மலரும், கலைகள் செய்வோம்( சிறுவர் இலக்கியம்,), செவ்வாய் மனிதன் (சிறுவர் இலக்கியம்), முற்றத்துக் பூக்கள்(சிறுவர் இலக்கியம்.)

இனிய நண்பர்.
அண்மையிலும் கொழும்பில் கண்டு கதைத்தோம்.

இனிய நல்ல நினைவுகளைத் தந்து சென்றீர்கள் மு.பொ

நிறைந்த அன்பொடு விடைபெற்றீர்கள். 
Weniger anzeigen
Alle Reaktionen:
139
146
22