 முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை குற்றப் புலனாய்வுத் துறைக்கு அழைக்கப்பட்டுள்ளார். தனிப்பட்ட வெளிநாட்டு பயணத்திற்கு அரசாங்க நிதி பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைக்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளார். இந்தப் பயணம் 2023 ஆண்டு, செப்டம்பர் 22 மற்றும் 23 ஆகிய திகதிகளில் நடந்ததாகக் கூறப்படுகிறது. |