பக்கங்கள்

பக்கங்கள்

காலி மாநகர சபை வரவுசெலவுத் திட்ட வாக்கெடுப்பில் பதற்றம்! [Wednesday 2025-12-24 18:00] தேசிய மக்கள் சக்தி மற்றும் பொதுஜன ஐக்கிய முன்னணி இணைந்து ஆட்சியமைத்துள்ள காலி மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், இன்று இரண்டாவது முறையாக வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. தேசிய மக்கள் சக்தி மற்றும் பொதுஜன ஐக்கிய முன்னணி இணைந்து ஆட்சியமைத்துள்ள காலி மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், இன்று இரண்டாவது முறையாக வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. கடந்த 15ஆம் திகதி நடைபெற்ற முதலாவது வாக்கெடுப்பில் இந்த வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்திருந்தது. இந்நிலையில், இன்று இடம்பெற்ற இரண்டாவது வாக்கெடுப்பில் ஆதரவாக 21 வாக்குகளும், எதிராக 15 வாக்குகளும் கிடைத்தன. இதனையடுத்து வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்த மேயர் சுனில் கமகே, சபையை ஒத்திவைத்துவிட்டு வெளியேறினார். 36 உறுப்பினர்களைக் கொண்ட காலி மாநகரசபையில், மேயர் வெளியேறியதை அடுத்து பெரும் பதற்றம் ஏற்பட்டது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நகர செயலாளரை வெளியேற விடாமல் தடுத்து நிறுத்தியதுடன், எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் மேயரின் ஆசனத்தில் அமர்ந்து மீண்டும் ஒரு வாக்கெடுப்பை நடத்த முயற்சித்தார். இதன்போது 17 பேர் எதிராக வாக்களித்ததுடன், 19 உறுப்பினர்கள் சபையில் இருக்கவில்லை. நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸார் வரவழைக்கப்பட்டனர். வாக்கெடுப்பு குறித்த இறுதித் தீர்மானம் பின்னர் அறிவிக்கப்படும் என மாநகர ஆணையாளர் தெரிவித்துள்ளார். வாக்கெடுப்புக்கு முன்னதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாநகர சபைக்கு முன்னால் பதாதைகளை ஏந்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதேவேளை, பேலியகொடை நகரசபையின் வரவு செலவுத் திட்டம் இரண்டாவது முறையாகவும் இன்று ஒரு வாக்கினால் தோல்வியடைந்தது. தவிசாளர் கபில கீர்த்தி ரத்ன தலைமையில் நடைபெற்ற வாக்கெடுப்பில், எதிராக 9 வாக்குகளும் ஆதரவாக 8 வாக்குகளும் கிடைத்தன. வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்த போதிலும், எதிர்காலத்தில் எதிர்க்கட்சியினருடன் இணைந்து செயற்படப் போவதாக தவிசாளர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

www.pungudutivuswiss.com தேசிய மக்கள் சக்தி மற்றும் பொதுஜன ஐக்கிய முன்னணி இணைந்து ஆட்சியமைத்துள்ள காலி மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவ...

பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண நிதியை 31ஆம் திகதிக்குள் வழங்க உத்தரவு! [Sunday 2025-12-21 06:00] அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நிதிகளை, எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன் வழங்கி முடிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நிதிகளை, எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன் வழங்கி முடிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். ‘Rebuilding Sri Lanka’ வேலைத்திட்டத்தின் கீழ் மக்களின் வாழ்க்கையை மீட்டெடுப்பது குறித்த விசேட கலந்துரையாடல் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றபோது இந்த பணிப்புரையை விடுத்தார். இதன்போது, வீடுகளைச் சுத்தம் செய்வதற்காக வழங்கப்படும் 25,000 ரூபா மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவதற்காக வழங்கப்படும் 50,000 ரூபா ஆகியவற்றை இந்த மாத இறுதிக்குள் பாதிக்கப்பட்டவர்களின் கைகளுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார். அத்துடன், வீடுகள் மற்றும் பயிர்ச் சேதங்களுக்கான இழப்பீடுகளை வழங்கும் பணிகளைச் செயற்திறனுடன் முன்னெடுக்க வேண்டும் எனவும் எவரையும் கைவிடாத வகையில், தகுதியுள்ள அனைவருக்கும் வெளிப்படைத்தன்மையுடன் இழப்பீடு கிடைக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி அறிவுறுத்தினார். அதேநேரம், அதிக ஆபத்துள்ள பகுதிகளில் இருந்து மக்களை உடனடியாக வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்த வேண்டும். இதற்கான காணி அடையாளப்படுத்தல் மற்றும் புதிய வீட்டுத் திட்டங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது. மேலும், பாடசாலை மாணவர்களுக்காக வழங்கப்படும் 15,000 ரூபா உதவித்தொகையை உடனடியாக வழங்கி நிறைவு செய்யுமாறு பணிக்கப்பட்டதுடன், அனர்த்தத்தின் போது சேதமடைந்த கடவுச்சீட்டுகள் மற்றும் அடையாள அட்டைகளை மீண்டும் வழங்குவதற்கான விசேட வேலைத்திட்டம் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது

www.pungudutivuswiss.com அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நிதிகளை, எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன் வழங்கி முடிக்கு...