புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 மே, 2011

மாண்புமிகு அமைச்சர் டக்ளசோடு சுவிஸ் ஊரதீவு பாபுவும் வரதீவு சண்முகமும் சேவை செய்கிறார்கள் வாழ்க இவர்களது தொண்டு -பூனை இல்லாத வீட்டில் எலிகளின் அட்டகசமோ -நன்றி யாழ் நெட் 


ஊரதீவு பாபுவும் வரதீவு சண்முகமும் 

6 மே, 2011



[ Friday, 06-05-2011, 10:46:05 ]
உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாக நடவடிக்கைகளில் இராணுவ அதிகாரிகளை ஈடுபடுத்த பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தீர்மானமொன்றை மேற்கொண்டுள்ளார்.
[ Friday, 06-05-2011, 08:03:45 ]
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை தொடர்பிலான அறிக்கையை சரத் பொன்சேகா சாதகமாக பயன்படுத்திக் கொள்வார் என்ற அச்சத்தில் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
பிந்திய செய்திகள்
[ Saturday, 07-05-2011 02:55:16 ]
முல்லைத்தீவு கடற்பரப்பில் வைத்து கடந்த மார்ச் மாதம் காணாமற்போன நான்கு கடற்படையினர் தொடர்பில் இதுவரை எதுவித தகவலும் கிடைக்கவில்லை என்று கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தன.
[ Saturday, 07-05-2011 02:10:21 ]
வெலிக்கடைச் சிறைக்குள்ளிருந்தபடியே கப்பம் அறவிடும் செயற்பாடுகளை மேற்கொண்ட இரண்டு கைதிகளின் வங்கிக் கணக்குகளைப் பரிசோதிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செய்திகள்
[ 07-05-2011 02:09:07 ]
ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழுவின் அறிக்கையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள போர்க் குற்றச்சாட்டுக்களை கடுமையாக எதிர்ப்பதாக மாலைதீவு தெரிவித்துள்ளது.
[ 07-05-2011 02:03:06 ]
இலங்கையின் ஆதிவாசிகளான வேடுவர்களின் தலைவர் ஊருவரிகே வன்னியெலத்தோவிற்கும் ஊடகப் பேச்சாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
[ 07-05-2011 01:54:57 ]
ஓர் இனம் அழிவதையும், அந்த இனத்தைச் சார்ந்தவர்களே அவர்கள் அழிவதற்குக் காரணமாக இருந்ததையும், பின் அவர்களே அனைத்தையும் வேடிக்கை பார்த்ததும், உலகில் வேறு எங்காவது கண்டது உண்டா?
[ 07-05-2011 01:50:54 ]
சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும்சிந்தை கலங்காதிருப்பது நன்றோ தமிழா என் அன்பான உலகத்தமிழ் உறவுகளே! இன்று நாம் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சூழ்நிலையில் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம்.
[ 07-05-2011 01:48:15 ]
வெளிநாட்டில் எம்.பி. ஆன முதல் ஈழத் தமிழர் எனும் பெருமையைப்  பெற்று இருக்கிறார் ராதிகா சிற்சபை ஈசன்.
[ 07-05-2011 01:44:33 ]
'இலங்கை அரசால் பாதுகாப்பான பகுதி’ என்று அறிவிக்கப்பட்டதாகப் பொய் சொல்லி, அப்பாவி மக்களைக் கொன்​றொழித்த சிங்கள ராணுவத்தின் காட்டு தர்பார் அங்கு இருந்த மருத்துவமனைகளையும் விட்டு​வைக்கவில்லை!
[ 07-05-2011 01:42:28 ]
போலிக் கடன் அட்டைகள் மூலம் மோசடியாக பணம் சுருட்டிவந்த மட்டக்களப்பு பொறியியலாளர் ஒருவர் தலைமையிலான குழுவொன்று கைது செய்யப்பட்டுள்ளது.
[ 07-05-2011 01:33:45 ]
இருபதாம் நூற்றாண்டு ஜேர்மனியில் நடந்த யூத இனப் படுகொலை காரணமாக ஜெனோசைற்(Genocide)என்ற புதிய சர்வதேசச் சட்டம் ஜநாவால் உருவாக்கப்பட்டது. இனப் படுகொலைத் தடுப்புத் தண்டனைச் சட்டம் (The Convention on the Prevention and Punishment of Genocide) டிசம்பர் 1948ல் நிறைவேற்றப்பட்டு இன்று நடைமுறையில் உள்ளது.
[ 07-05-2011 01:30:47 ]
இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வந்த ஐக்கிய நாடுகள் நிபுணர்குழுவை ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் நேற்றுக் கலைத்துள்ளார்.
(2ம் இணைப்பு)
[ 06-05-2011 20:28:39 ] []
உலகத்தின் கருத்தூன்றிய பார்வையில் இன்று அதிகம் உச்சரிக்கப்படும் பெயராகத் தமிழினத்தின் பெயர் மாறியிருக்கின்ற காலமிது. உரிமை தேடும் இனங்களின் கருத்துகளும் போராட்டங்களும் சர்வதேசத்தால் சாதகமான அறிகுறிகளோடு எதிர் நோக்கப்படும் சூழல் விரிந்து வருகிறது.
[ 06-05-2011 16:39:33 ]
இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தின்போது நடந்ததாகத் தெரிவிக்கப்படும் சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தென்னாபிரிக்காவின் ஆளும் கட்சியான ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கேட்டுக்கொண்டுள்ளது.
[ 06-05-2011 16:26:12 ]
தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், சட்டத்தரணி சுமந்திரன், சுரேஸ் பிறேமச்சந்திரன், பொன் செல்வராசா, சீ.யோகேஸ்வரன், ஸ்ரீதரன், சரவணபவன் மற்றும் சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் இன்று காலை  புதிய மகசின் சிறைச்சாலைக்கு விஜயம் செய்துள்ளனர்.
[ 06-05-2011 16:19:16 ]
வவுனியா நகரசபையில் தொடரும் குழப்பநிலையை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று நாளை காலை வவுனியா நகரசபைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
“ஆட்சியை மாற்ற முனைகிறீர்களா?” பிளேக்கிடம் பதறினார் கோத்தாபய - வெளிவரும் சந்திப்பு இரகசியங்கள்
[ வெள்ளிக்கிழமை, 06 மே 2011, 00:03 GMT ] [ கார்வண்ணன் ]
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்குச் சென்ற அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக்கைச் சந்தித்த எந்தவொரு தமிழரும் சிறிலங்கா மீது போர்க்குற்ற விசாரணை நடத்துமாறு கோரவில்லை என்று சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச கூறியுள்ளார்.

வன்னிக்கான பயணத்தை அடுத்து சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவை பாதுகாப்பு அமைச்சில் சந்தித்துப் பேசியிருந்தார் றொபேட் ஓ பிளேக்.

இதன்போது பேசப்பட்ட விடயங்கள் பற்றி இருதரப்பும் தகவல் வெளியிடவில்லை.

ஆனால் இந்த சந்திப்பின் போது, கோத்தாபய ராஜபக்சவிடம் குறுக்கு விசாரணை நடத்துவது போன்று பிளேக் கேள்விகளை எழுப்பியுள்ளதாகவும், ஆட்சிமாற்றத்துக்கு அமெரிக்கா முனைகிறதா என்ற கோத்தாபய ராஜபக்ச கலக்கத்தோடு அவரிடம் விசாரித்தகாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தநிலையில் பிளேக்குடனான சந்திப்பில் பேசப்பட்ட சில விடயங்கள் தொடர்பாக கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார் கோத்தாபய ராஜபக்ச.

“வன்னிக்குச் சென்றிருந்த அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலரிடம், போரினால் இடம்பெயர்ந்து மீளக்குடியேறியுள்ள மக்கள், போதிய தொழில்வாய்ப்பின்றி இருப்பதையே அடிப்படையான பிரச்சினையாக எடுத்துக் கூறியுள்ளனர் என்று கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பிளேக்குடனான சந்திப்பு ஊக்கமளிப்பதாக இருந்தது என்று குறிப்பிட்ட அவர், போருக்குப் பிந்திய நிலைமைகளில் அமெரிக்காவும், சிறிலங்காவும் இணைந்து பணியாற்ற முடியும் என்று நம்புவதாகவும் கருத்து வெளியிட்டுள்ளார்.

அமெரிக்கக் குழுவினர் சிறிலங்கா விமானப்படையின் உலங்குவானூர்தியிலேயே வன்னிக்குச் சென்றனர் என்றும் அவர்களை கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு படைத் தளபதிகள் வரவேற்று அங்குள்ள நிலைமைகள் குறித்து விளக்கமளித்தாகவும் கோத்தாபய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்காவில் ஆட்சி மாற்றத்துக்கான முயற்சிகளில் அமெரிக்கா ஈடுபடவில்லை என்ற உறுதிமொழியை பிளேக் தன்னிடம் தந்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

கடல்சார் பாதுகாப்பு முறையில் சிறிலங்கா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாடு என்று பிளேக் தன்னிடம் கூறியதாகவும் கோத்தாபய ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

போர் முடிவுக்கு வந்த பின்னரும் வடக்கு, கிழக்கில் செயற்படும் ஆயுதக்குழுக்கள் உள்ளிட்ட சில விவகாரங்கள் குறித்தும் தன்னிடம் பிளேக் விசாரித்ததை கோத்தாபய ராஜபக்ச ஒப்புக் கொண்டுள்ளார்.

ஆயுதக்குழுக்களிடம் இருந்து ஆயுதங்களைக் களைய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தான் அதற்கு விளக்கமளித்தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆயுதக்குழுக்களின் செயற்பாடுகள் பற்றிய தகவல்கள் இருந்தால் தன்னால் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் பிளேக்கிடம் கூறியதாகவும் கோத்தாபய ராஜபக்ச கூறியுள்ளார்.

போரில் இறந்தவர்களுக்கு மரணச்சான்றிதழ் வழங்க அரசாங்கம் பின்னடிப்பது குறித்தும் கோத்தாபய ராஜபக்சவிடம் பிளேக் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு, “போர் நடந்ததால் பல ஆண்டுகளாக குடித்தொகை மதிப்பீடுகள் நடத்தப்படவில்லை. தற்போது அந்த மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன்போது போரில் மரணமானவர்களின் விபரங்களையும் திரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது“ என்று அவருக்கு விளக்கிக் கூறியுள்ளதாகவும் கோத்தாபய ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.
போர்முனையில் என்ன நடந்தது? தனக்கே நன்றாகத் தெரியும் என்கிறார் சிறிலங்கா இராணுவத் தளபதி
[ வெள்ளிக்கிழமை, 06 மே 2011, 07:50 GMT ] [ கார்வண்ணன் ]
ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கையை தவறானது என்ற சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய இன்று நிராகரித்துள்ளார்.

கிழக்குப் பகுதிக்கான பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள அவர், இன்று காலை வெலிக்கந்த படைத்தளத்தில் சுமார் 2000 சிறிலங்காப் படையினர் மத்தியில் உரையாற்றினார்.

அங்கு கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய,

“ ஐ.நாவின் அறிக்கையை நான் முழுமையாக வாசித்துள்ளேன். அது முற்றிலும் பக்கச்சார்பாகவே தொகுக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் நன்மதிப்பைக் குறைக்கும் வகையிலான தவறான தகவல்களை அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

போரின் இறுதிக்கட்டத்தில் வன்னிக் களமுனை நடவடிக்கைகளுக்குத் தளபதியாக இருந்த எனக்கு அங்கு என்ன நடந்தது என்பது நன்றாகத் தெரியும்.

இந்த அறிக்கை நாட்டினதும், அதிபரினதும், பாதுகாப்புச் செயலரினதும் மதிப்பை குன்றச்செய்யும் வகையில் அமைந்துள்ளது.

சில குழுக்களும் தனிநபர்களும் கொடுத்துள்ள தகவல்களின் அடிப்படையிலேயே தருஸ்மன் அறிக்கை தொகுக்கப்பட்டுள்ளது.  ஆனாலும் அவை ஆதாரமற்றவை“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
ஐநாவில் இருந்து சிறிலங்காவை நீக்குமாறு மலேசியத் தமிழர்கள் கோரிக்கை
[ வெள்ளிக்கிழமை, 06 மே 2011, 09:18 GMT ] [ சிறப்புச் செய்தியாளர் ]
சிறிலங்காவை ஐநாவிலிருந்து நீக்க கோரி மலேசியாவில் உள்ள 130 அரசசார்பற்ற நிறுவனங்கள் கையெழுத்திட்ட மனுவொன்று மலேசிய ஐநா பணியகத்தில் கையளிக்கப்பட்டது.

நேற்று வியாழக்கிழமை [05-05-2011] செம்பருத்தி இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த ஒன்றுகூடல் நிகழ்வு குறித்து அந்த அமைப்பு பிரதிநிதி நாடுகடந்த தமிழீழ அரசாங்க-தகவல்துறை அமைச்சகத்தின் நாதம் ஊடகசேவைக்கு கருத்துரைதிருந்தார்.

அவரது கருத்துரைப்பின்போது, 1949  ஜெனிவா உடன்படிக்கையை மீறி மனித உரிமைக்கு மீறலாக தமிழ்மக்களை போரில் கொன்றொழித்த சிறிலங்கா அரசு மீது அனைத்துலக நீதிமன்றம் விசாரணை தொடர வேண்டுமென கோரப்பட்டுள்ளதோடு ஐ.நா ஆய்வு குழு வழங்கிய தகவல்கள் அடிப்படையில் சிறிலங்கா அரசின்மீது நடவடிக்கை எடுக்கவும் கோரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்நிலையில் மிக மோசமான மனித உரிமை மீறல்களை நிகழ்த்தியிருக்கும் சிறிலங்கா அரசினை ஐ.நா அங்கத்துவத்தில் இருந்து நீக்குமாறும் மனுவில் கோரப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

வெளிநாடுகளில் புலி ஆதரவாளர்கள் என வீரவசனம் பேசுவோர் கவனத்திற்கு!

Published on May 5, 2011-5:41 pm   ·   No Comments
மேற்குலக நாடுகளில் தாங்கள் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என்றும் சிலர் தாங்களே விடுதலைப்புலிகளின் தூண்கள் என்றும் வீரவசனம் பேசித்திரிகின்ற போதிலும் வடக்கு கிழக்கில்விடுதலைப்போராட்டத்திற்காக தங்களின் முழுக்குடும்பங்களையே தியாகம் செய்த பலர் மிகப்பெரிய பரிதாப நிலையிலேயே உள்ளனர்.
வெறும் 5ஆயிரம் ரூபா பணம் இல்லாததால் தொடர்ந்து சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டிய நிலைக்கு மட்டக்களப்பில் உள்ள முன்னாள் போராளி தள்ளப்பட்டிருக்கிறார்.
2004ஆம் ஆண்டு வந்தாறுமூலையில் கைது செய்யப்பட்ட மூதூர் கிளிவெட்டியைச்சேர்ந்த கந்தசாமி கரன் என்பவர் மோட்டார் சைக்கிளில் செல்லும் போது வந்தாறுமூலையில் வைத்து படையினரால் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சிறை வைக்கப்பட்டிருந்தார்.
இவர் மீது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஆயுதங்களை வைத்திருந்ததாகவும் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் ஆயுதப்பயிற்சி பெற்றதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி சிவபாதசுந்தரம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இவர் கடந்த 7 ஆண்டுகளாக தடுத்து வைத்துள்ளதை கவனத்தில் கொண்டு 5ஆயிரம் ரூபா காசுப்பிணையிலும் இரண்டு சரீரப்பிணையிலும் செல்வதற்கு அனுமதித்தார்.
இந்த இளைஞரின் பெற்றோர் உறவினர்கள் அனைவரும் வன்னி போரில் கொல்லப்பட்டு விட்டதால் அவரை பிணையில் எடுப்பதற்கு உறவினர்கள் யாரும் வரவில்லை. இவரின் மனைவியும் இவர் கைது செய்யப்பட்ட பின் வேறு ஒருவரை திருமணம் முடித்து சென்று விட்டார். இந்நிலையில் இவரை பிணை எடுப்பதற்கு யாரும் முன்வராத நிலையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
ஒரு போராளியை 5ஆயிரம் ரூபா செலுத்தி பிணையில் எடுப்பதற்கு யாரும் அற்ற நிலையிலேயே இன்று பல முன்னாள் போராளிகளின் வாழ்க்கை இருப்பதாக நமது கிழக்கு மாகாண செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
விடுதலைப்புலிகள் இயக்கம் என கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பல இளைஞர்களுக்கு நீதிமன்றத்தில் அவர்களுக்காக வாதாடுவதற்கோ அல்லது அவர்களை பிணையில் எடுப்பதற்கோ யாரும் அற்ற நிலையே இன்று காணப்படுகிறது.


உயிருடன் பிடித்த பின்னரே பின்லேடனை சுட்டுக்கொன்றனர் ஒசாமாவின் மகள் தெரிவிப்பு
[ வியாழக்கிழமை, 05 மே 2011, 08:24.28 AM GMT ]
பாகிஸ்தானின் அபோட்டாபாத்தில் அல் கைதா அமைப்பின்  தலைவர் ஒசாமா பின்லேடனை உயிருடன் பிடித்த பின்னரே அமெரிக்க படையினர் அவரை சுட்டுக்கொன்றதாக ஒசாமாவின் 12 வயதான மகள் கூறியுள்ளார்.
தனது தந்தை சுட்டுக்கொல்லப்பட்டதையும் அதன் பின்னர் அவரின் உடல் ஹெலிகொப்டருக்கு இழுத்துச் செல்லப்பட்டதையும் 12 வயதான அந்த மகள் பார்த்ததாக பாகிஸ்தானின் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரிகளை மேற்கோள்காட்டி அரேபிய செய்தி கட்டமைப்பான அல் அரேபியா நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளது.
ஒசாமா பின்லேடன் தங்கியிருந்த கட்டிடத் தொகுதியிலிருந்து அமெரிக்கப் படைகள் மீதோ அவர்களின் ஹெலிகொப்டர்கள் மீதோ ஒரு துப்பாக்கிச் சன்னங்கள் கூட பாய்ந்திருக்கவில்லை. தொழில்நுட்ப கோளாறினாலேயே அவர்களின் ஒரு ஹெலிகொப்டர் விழுந்து மோதியுள்ளது என்று பாகிஸ்தான் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். மோதல் நடந்ததாக அமெரிக்கா தெரிவித்திருக்கும் விடயங்களை அவர் நிராகரித்திருப்பதாக பிரிட்டனின் டெய்லி மெயில் பத்திரிகை நேற்று தெரிவித்துள்ளது.
உயிர் தப்பிய பின்லேடனின் ஆறு பிள்ளைகள் மற்றும் மனைவிமாரில் ஒருவர் உட்பட அவரின் உறவினர்கள் ராவல்பிண்டியிலுள்ள ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக அரபு செய்திச் சேவை தெரிவித்துள்ளது. அமால் அல் சாடா (27 வயது) என்ற பின்லேடனின் இளைய மனைவியின் காலின் மீது துப்பாக்கிச் சன்னம் பாய்ந்துள்ளது. ஆனால், அவர் தப்பிவிட்டார். முன்னர் பின்லேடன் ஏக்.கே. 47 துப்பாக்கியை வைத்திருந்ததகவும் தனது மனைவியை மனிதக் கேடயமாக வைத்திருந்த போது சுடப்பட்டதாகவும் அமெரிக்க அதிகாரிகள் கூறியிருந்தனர்.
ஆனால், பின்னர் பின்லேடன் நிராயுதபாணியாக இருந்தார் என வெள்ளைமாளிகை செவ்வாய் இரவு கூறியிருந்தது. இந்த இருவேறுபட்ட கருத்துகள் குழப்பத்தை ஏற்படுத்துவதாகக் காணப்படுகின்றன. பின்லேடனின் இளைய மனைவியான அல்ஷாடா 17 வயதாக இருக்கும் போது ஆப்கானிஸ்தானில் அவரைத் திருமணம் செய்துள்ளார். யேமனில் பிறந்த அப்பெண்ணுக்கு அந்த நாட்டுடன் பின்லேடனுக்கு தொடர்புகளை வலுப்படுத்துவதற்காக செய்துவைக்கப்பட்ட திருமணம் என கூறப்படுகிறது.
தனது மனைவியை யேமன் வீட்டிற்கு பின்லேடன் பாதுகாப்புக்காக அனுப்பி வைத்த போதும் அப்பெண் திரும்பி வந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. 2005 லிருந்து அபோட்டாபாத்திலுள்ள மாளிகையில் தான் பின்லேடனுடன் வாழ்ந்துவருவதை அப்பெண் பாகிஸ்தான் விசாரணையாளர்களுக்குக் கூறியிருந்தார்அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்திக்க மறுத்த அமெரிக்க துணை அமைச்சர் றொபேர்ட் ஓ பிளேக்
[ வியாழக்கிழமை, 05 மே 2011, 09:39.01 AM GMT ]
சிறிலங்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க உதவி செயலாளர் றொபேர்ட் ஓ பிளேக்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பதற்கு மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிவடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈ.பி.டி.பி கட்சியின் தலைவர் என்ற முறையிலும் சிறிலங்கா அரசின் தமிழ் அமைச்சர் என்ற வகையிலும்; ரொபேர்ட் ஓ பிளேக்கை சந்திக்க விரும்புவதாக இலங்கையிலுள்ள அமெரிக்கத் உயர்ஸ்தானிகராலயத்துக்கு அமைச்சர் டக்ளஸ் தெரிவித்திருந்தார் என்றும் அவரது வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
அமைச்சர் டக்ளஸின் இந்த வேண்டுகோளை இலங்கையிலுள்ள அமெரிக்க உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் ரொபேர்ட் ஓ பிளேக்கிடம் தெரிவித்தனர்.
ஆனால் பிளேக் அவ்வாறான சந்திப்புக்கள் தனது நிகழ்ச்சி நிரலில் இல்லை என கூறி நிராகரித்துவிட்டார்.
எனினும், ரொபேர்ட் ஓ பிளேக் சிறிலங்கா வந்தவுடனேயே முதன் முதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் பல மணி நேரம் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கதுஅவசரகாலச் சட்டத்தை நீக்கிப் பாருங்கள்! ஆறுமாதத்தில் இந்த ஆட்சி கவிழும்! - பாராளுமன்றத்தில் சிவசக்தி ஆனந்தன் உரை
[ வியாழக்கிழமை, 05 மே 2011, 01:07.27 PM GMT ]
இந்த நாட்டு மக்களுக்கு ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. இந்த அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தை நீக்கினால் மக்கள் வீதியில் வந்து போராடுவார்கள். அப்பொழுது இந்த அரசாங்கத்தினால் அவைகளைச் சமாளிக்க முடியாமல் போகும். இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும்.
ஆகவே இறந்துபோன புலிகளின் சடலங்களைத் தோண்டியெடுத்தாவது அவசரகாலச்சட்டத்தை நீட்டிக்க இந்த அரசாங்கம் முயற்சிக்கின்றது. அவசரகாலச் சட்டம் இல்லாமல் இவர்களால் ஆட்சி செய்ய முடியாதுள்ளது.
இவ்வாறு  இன்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற அவசரகால சட்ட நீட்டிப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது:
ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கைக்கு எதிராக கையெழுத்து வேட்டை நடத்துவதாலோ, ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதினாலோ எதுவிதப் பயனும் கிட்டாது. முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் ஐயோ என்று போட்ட மரண ஓலமும் ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீரும் உயிர்த் தியாகமும் தான் ஐ.நா.நிபுணர் குழுவின் அறிக்கையாக வெளிவந்துள்ளது.
இந்நாட்டில் அறுபதாண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுவரும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் இப்பொழுதுதான் ஐ.நா.வின் கதவைத் தட்டியுள்ளது. எனவே அரசாங்கம் இனியும் காலம் தாழ்;த்தாது தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஒரு சுமுகமான தீர்வினைக் காணவேண்டும்.
வன்னி மாவட்டத்தில் அரசாங்க உயரதிகாரிகள் வன்னி மாவட்ட மக்களின் ஆதரவினால் அமைச்சர் பதவியைப் பெற்றுக்கொண்ட ஒருவரினால் அரசியல் பழிவாங்கப்படுகின்றனர்.
மன்னார் அரசாங்க அதிபர், மடுவலயக் கல்விப் பணிப்பாளர் ஆகியோரின் இடமாற்றங்களும், மன்னார் பிரதேச செயலாளர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலும், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர், முசலி பிரதேச செயலாளர் ஆகியோரை மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவைகள் சில உதாரணங்கள் மட்டுமே.
எனக்கு முன்பு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கௌரவ சந்திரகுமார் அவர்கள் வவுனியா நகரசபை குறித்து பேசினார். அவர் முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். அவரது கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டு யாழ் மாநகரசபையின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றது.
இன்று யாழ்ப்பாணத்தில் என்ன நடக்கின்றது? ஆளும் கூட்டணியினுள்ளேயே ஈபிடிபியினர் ஓரணியிலும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினர் ஓரணியிலும் நிற்கின்றனர். மேயருக்கெதிராக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டுள்ளது.
வவுனியா நகரசபையைப் பற்றிப் பேசுவதற்கு முன்பாக அவர் யாழ் மாநகரசபையின் பிரச்சினைகளைத் தீர்த்துவிட்டு வரட்டும். வவுனியா நகரசபையின் பிரச்சினைகள் தொடர்பாக நான் இந்தச் சபைக்கும் மக்களுக்கும் தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.
சமீபகாலமாக நகரசபை நிர்வாகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பல்வேறு முறைகேடுகள் மற்றும் நிர்வாகத் தாமதங்களால்; நகர மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். சுகாதாரச் சீர்கேடுகளால் இங்குள்ளோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 28.05.2011 அன்று நகரசபைச் செயலாளர் திரு.வசந்தன் அவர்களால் நகரசபைக்கு வெளியில் வேப்பங்குளம் என்னுமிடத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை மீள்சுழற்சி செய்வதற்கான இயந்திர நிர்மாண ஆரம்ப நிகழ்வில், செயலாளருக்கும் நகரசபை உறுப்பினரான திரு.எஸ்.எஸ்.சுரேந்திரன் அவர்களுக்கும் இடையில் உறுப்பினர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படாமை குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.
இந்தச் சர்ச்சையைத் தொடர்ந்து 03.05.2011 அன்றிலிருந்து நகரசபை உத்தியோகத்தர்கள், சிற்றூழியர்கள் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளதுடன் நகரசபை நுழைவுவாயில் பூட்டப்பட்டுள்ளது. மேலும் நகரத்தின் மையத்திலுள்ள பொது மலசலக்கூடங்கள், குளியலறைகள் என்பனவும் பாவனைக்குத் தடை செய்யப்பட்டுள்ளதுடன் பொதுநூல்நிலையமும் பூட்டப்பட்டுள்ளது.
நகரத்தில் உள்ள குப்பை கூளங்கள் அகற்றப்படாமையினால் வர்த்தக நிலையங்களின் வாயில்களில் அசுத்தங்கள் நிறைந்து துர்நாற்றம் வீசுகின்றது. இதன் பின்னணியில் உள்ளுராட்சி நிர்வாகத்தை நெறிப்படுத்தும்; பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அவர்கள் செயற்படுவதனையும் காணக்கூடியதாக இருக்கின்றது.
நகரசபை உறுப்பினர் திரு.சுரேந்திரன் தவறிழைத்திருந்தால் கட்சி அவர்மீது நடவடிக்கை எடுக்கும். அல்லது நகரசபை நிர்வாகம் குறைந்தபட்சம் பொலிஸ் அல்லது நீதிமன்றத்தையாவது நாடியிருக்க வேண்டும். அதனை விடுத்து தமது கையில் அதிகாரத்தை எடுத்து அதிகாரிகள் செயற்படுவதானது வருந்தத்தக்கது.
இவரது தூண்டுதலின் பேரில் ஒருசில ஊழியர்கள் கடைகளைப் பூட்டி ஆதரவு வழங்குமாறு வர்த்தகர்களை வற்புறுத்துகின்றனர். ஏற்கனவே கீழ்காணும் விடயங்கள் தொடர்பாக நகரசபை மற்றும் உள்ளுராட்சி அதிகார சபை அலுவலகத்தால் எதுவித தீர்வும் எட்டப்படாத நிலையில் மேற்குறித்த சம்பவம் இங்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது.
1. வவுனியா நகரசபைக்கு அதிகூடிய வருமானத்தை ஈட்டிக்கொடுத்த ஈட்டிக்கொடுத்துவந்த வவுனியா சந்தை சுற்றுவட்டத்துக்குள் அமைந்துள்ள மாட்டு இறைச்சிக்கடை, ஆட்டு இறைச்சிக் கடைகளை எவ்வித கேள்விப்பத்திரமும் கோராமல் தனிநபர் ஒருவருக்கு 2009 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை மிகக்குறைந்த குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இதனால் நகரசபைக்கு இலட்சக்கணக்கில் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
2. இதே வேளையில் குருமன்காடு சந்தையில் அமைந்துள்ள மாட்டிறைச்சிக்கடை பகிரங்க கேள்வி விடப்பட்டு வருடாந்தம் 29லட்சம் ரூபாய்க்குக் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இதனைப் போன்றே பூந்தோட்ட சந்தையில் அமைந்துள்ள மாட்டிறைச்சிக்கடை பகிரங்க கேள்விப்பத்திரம் விடப்பட்டு ஆண்டிற்கு 19லட்சம் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. மேற்கண்ட இரண்டு இடங்களையும்விட வவுனியா சந்தைக்கு மூன்று முதல் நான்கு மடங்குவரை கூடுதல் வருமானம் கிடைக்கும்.
3. டெங்கு ஒழிப்பு செயற்றிட்டத்திலும் மோசடி இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது. இதற்காக ஆளுநரால் நகரசபைக்கு எண்பத்திரண்டு லட்சம் (82 லட்சம்) நிதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பதினைந்து மாதமாகியும் இதுவரை இதற்கான செலவுக்கணக்கோ அல்லது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்தோ சபைக்கு அறிவிக்கப்படவில்லை.
4. கோவில்குளத்தில் பாலர் பாடசாலை கட்டி முடிக்கப்பட்டதாக சபையில் பணக்கொடுப்பனவுக்கான அனுமதி பெறப்பட்டு F.J.V  என்னும் ஒப்பந்ததாரருக்கு ஒரு லட்சத்து எழுபத்தியேழாயிரத்து நூற்று எண்பது ரூபாய் அறுபத்தியாறு சதம் (177,180.66) வழங்கப்பட்டதாகத் தெரியவருகிறது. ஆனால் அந்த இடத்தில் பாலர் பாடசாலை கட்டப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
5. வீதிகளில் மின்விளக்கு பொருத்துவதற்கு வடமாகாண ஆளுநரால் ரூ.5.5 மில்லியன் வழங்கப்பட்டது. இதற்கான கணக்கறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்படவில்லை. வேலை முன்னேற்றம் தொடர்பாகவும் தரவு இல்லை.
6. வவுனியா குளத்தினை அழகுபடுத்துவதற்கு அரசாங்க அதிபரால் ரூ75 லட்சம் வழங்கப்பட்டது. குளம் அழகுபடுத்தப்படவும் இல்லை. இதற்கான கணக்கறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்படவும் இல்லை.
இவ்விடயங்களை அம்பலப்படுத்தி நீதியான தீர்வைப்பெற்றுக்கொள்வதற்காகவும் நகரசபையின் வளர்ச்சிக்காகவும் சபையில் உள்ள ஏனைய ஏழு அங்கத்தவர்களுடன் தலைமை தாங்கி திரு.எஸ்.எஸ். சுரேந்திரன் செயற்பட்டதால்தான் அவருக்கு எதிராக உயர் அதிகாரிகள் தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்தி உண்மையை விளங்கிக்கொண்ட நேர்மையான உண்மையான உத்தியோகத்தர்களையும் ஊழியர்களையும் தங்களின் பிடிக்குள் வைத்துக்கொண்டு பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ளுமாறு தூண்டிவிட்டுள்ளனர். இதில் பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளரின் பங்கு முக்கியமானதாகும்.
கடந்த மூன்று தினங்களாக நகரசபையில் இடம்பெற்றுவரும் பணிப்புறக்கணிப்பின் பின்னால் நின்று ஊழியர்களைத் தூண்டிவிடும் சம்பந்தப்பட்ட பிராந்திய உள்ளுராட்சி உதவியாணையாளரின் செயற்பாட்டைத் தடுத்து நிறுத்தி, இடம்பெற்ற ஊழல் மோசடிகளை விசாரிப்பதற்கான விசாரணைக்குழுவை நியமித்து இது தொடர்பான நிலையை மக்களுக்குத் தெளிவுபடுத்துமாறு தங்களைக் கேட்டுக்கொள்கின்றேன். இவ்வாறு சிவசக்தி ஆனந்தன் கூறினார்தமிழர்களின் பிரதான பிரதிநிதிக் கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பு – அமெரிக்கா
[ வியாழக்கிழமை, 05 மே 2011, 01:05.49 PM GMT ]
தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் துணை இராஜாங்க செயலாளர் ரொபோ்ட் ஓ பிளேக் இலங்கை அரசாங்கத்திடம் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்
அத்துடன் போர் முடிவடைந்த நிலையில் இனப்பிரச்சினைக்கான தீர்வை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் என்று அவர் கோரியுள்ளார்

இந்த விடயங்களில் இதுவரை காலமும் இலங்கை அரசாங்கம் வழங்கி வந்த உறுதிமொழிகள் யாவும் நிறைவேற்றப்படவில்லை என்றும் பிளேக் குறிப்பிட்டுள்ளார்

போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை உள்ளுர் மட்டத்தில் எவ்வாறான பொறுப்புள்ள நடவடிக்கைகளை எடுக்கிறது என்பதை பார்க்கவேண்டியுள்ளது

இதேவேளை தமிழர்களின் பிரதான பிரதிநிதியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தமிழர் பிரச்சினைக்கு தீர்வை எட்டுவதற்கு உதவும் என தாம் நம்புவதாக பிளேக் குறிப்பிட்டுள்ளார்

இதில் அதிகாரப்பகிர்வு தடுப்புக்காவலில் உள்ளோர் விவகாரம் காணாமல் போனவர்களுக்கான மரணச்சான்றிதழ் என்பன முக்கியமானவை என்றும் பிளேக் தெரிவித்துள்ளார்

30 ஏப்., 2011


இன்ரனெட் கபே செல்லும் ஜோடிகளே கவனம்! உங்கள் காமலீலைகள் வெளியாகும்!!(பட இணைப்பு)


இன்ரனெட் சேவை வழங்கும் கடைகளுக்குச் செல்லும் இளம் ஜோடிகளின் தவறான நடவடிக்கைகளை வீடியோ படமெடுத்து வெளியிடும் சம்பவம் அண்மையில் யாழ் நகரில் அதிகரித்திருக்கிறது. 

யாழ்ப்பாணத்தில் உள்ள சில இன்ரனெட் சேவை வழங்கும் கடை உரிமையாளர்கள் அங்கு வரும் வாடிக்கையாளர்களான இளம் காதலர்கள் செய்யும் காம லீலைகளை தங்கள் அதி நவீன தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி அவர்களுக்குத் தெரியாமல் தங்கள் கணினியில் வீடியோப் படம் பிடிக்கின்றனர்.

அந்த வகையில் அண்மைய நாட்களில் யாழ் பல்கலை காதல் ஜோடி எனும் பெயரில் வீடியோக்கள் சில முறைகேடான இணையத்தளங்களில் வெளிவந்தது.

இது தொடர்பாக எமக்குத் தெரியவருவது, 

இன்ரனெட் சேவை வழங்கும் இந்தக் இன்ரனெட் கபேயினர் தங்கள் கடையில் அதிநவீன வசதிகள் கொண்ட கணினித் தொகுதியை சிறிய மூடிய அறைகளாகப் பிரிக்கப்பட்டதாக உருவாக்கி வைத்துள்ளனர்.

இந்த அறைகளுக்குள் உள்ள கணினியுடன் வெப் கமரா பொருத்தப்பட்டு ஸ்கைப் வசதியும் ஏற்படுத்தப்பட்டு அந்தக் கணினியின் ஸ்கைப் கணக்கு தங்கள் பிரதான கணினியுடன் தொடர்பேற்படுத்தப்பட்டு அதனை பணிப்பட்டியில் (TaskBar) தெரியாதவாறு மறைத்துக் காணப்படும்.

சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பிரத்தியேக வகுப்பிற்குப் போகும் இளம் காதல் ஜோடிகள் வகுப்பு செல்லாமல் தங்கள் மானத்தைப் போக்க பெற்றோரின் பணத்தை எடுத்துக் கொண்டு இங்கு கூடிவிடுகின்றனர்.

இதனால் அந்தக் கடைகளில் கூட்டம் நிரம்பி வழியும். இதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் கடை உரிமையாளர்கள் தங்கள் காட்டும் கணினி அறைகளிலேயே இந்தக் காதல் ஜோடிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.



அங்கே தயார் நிலையி்ல் கணினியும் இணையக் கமராவும் காணப்படுகின்றது என்பது தெரியாமல், கணினியை ஆராயாமல் அறைக்குள் சென்றவுடனேயே தங்கள் காம லீலைகளை நிகழ்த்த ஆரம்பித்துவிடுகின்றனர்.

இதனை பிரதான கணினியுடன் பார்த்துக் கொண்டிருக்கும் கடை உரிமையாளர் தனக்குத் தேவையான காட்சிகளை வீடியோவாகவும், போட்டோவாகவும் சேமித்து வைத்து பிறருடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.

இன்று எமது மண்ணின் கலாசாரச் சீரழிவுக்கு இந்த இணையமும், இன்ரனெட் கபேகளும் ஒரு காரணமாக அமைந்து விடுகின்றன.

அந்த வகையில் இன்ரனெட் சேவை வழங்கும் கடை உரிமையாளர்களே! நீங்கள் இந்தச் கலாச்சார சீரழிவுக்கு உடந்தையாக இராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது கட்டாயத் தேவையாக உள்ளது.

உங்கள் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களது தனிப்பட்ட இரகசியங்களை பாதுகாக்க வேண்டிய கடப்படு உங்களுக்கு உள்ளது. அதேநேரம் அவர்களை மூடிய அறைக்குள் விடும்போது அவர்கள் தவறு செய்ய சந்தர்ப்பம் கிடைக்கிறது.

மூடிய அறையில்லாமல், திறந்த வெளியில் ஓரளவு மூடியதாக கணினியை வைக்கலாம். இதனால் இவ்வாறான கலாசாரச் சிரழிவுகள் வராமல் தடுக்கலாம்.

20 ஏப்., 2011

சிறைச்சாலைக்குள்ளிருந்து கப்பம் கோரல் சம்பவம்! திருமலை பிரதான சிறை அதிகாரியை தானாக பதவியிலிருந்து ஒதுங்கிக் கொண்டுள்ளார்


[ Wednesday, 20-04-2011 02:07:21 ]



திருகோணமலை சிறைக்குள்ளிருந்தபடி கப்பம் கோரிய சம்பவம் தொடர்பில் பிரதான சிறை அதிகாரி தன் பதவியிலிருந்து தானாக ஒதுங்கிக்கொண்டுள்ளார்.

மேலும் படிக்க...

இறுதிக்கட்ட யுத்தத்தின் கடைசி நாட்களில் விடுதலைப் புலிகள் 600 சிவிலியன்களை கொன்றொழித்தனர்: முன்னாள் எம்.பி. கனகரத்தினம்

[ Wednesday, 20-04-2011 01:45:35 ]



இறுதிக்கட்ட யுத்தத்தின் கடைசி நாட்களில் சுமார் 600 சிவிலியன்களை விடுதலைப் புலிகள் கொன்றொழித்ததாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம் குற்றம் சாட்டுகின்றார்.

மேலும் படிக்க...

மட்டக்களப்பில் தலைதூக்கத் தொடங்கியிருக்கும் ஆயுதந் தாங்கிய கொள்ளையரின் அட்டகாசம்

[ Tuesday, 19-04-2011 16:40:50 ]



கிழக்கு மாகாணத்தில் அண்மைக்காலமாக ஆயுதந் தாங்கிய நபர்களினால் முன்னெடுக்கப்படும் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.

மேலும் படிக்க...

அரசியல் தீர்வுத்திட்டத்தைத் தயாரிப்பதற்கான கலந்துரையாடல் சிங்கப்பூரில்! த.தே.கூ. பிரதிநிதிகள் விஜயம்

[ Tuesday, 19-04-2011 16:35:06 ]



அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்கும் நோக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விசேட கருத்தரங்கொன்றை சிங்கப்பூரில் நடாத்த உள்ளது.

மேலும் படிக்க...

அரசியல்வாதிகளுக்கெதிரான குற்றச்சாட்டுகளை சட்டமாஅதிபர் வாபஸ் பெறுவது பெரும் தவறு: பிரதம நீதியரசர்

[ Tuesday, 19-04-2011 16:25:43 ]



தற்போதைய சட்ட மா அதிபர் ஆளுங்கட்சி அரசியல்வாதிகளுக்கெதிரான குற்றச்சாட்டுகளை வாபஸ் பெறுவது பெரும் தவறாகும் என்று பிரதம நீதியரசர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க...

பான் கீ மூன் இலங்கைக்கு எதிராக தனிப்பட்ட முறையில் பயங்கரவாத நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்: ஜாதிக ஹெல உறுமய

[ Tuesday, 19-04-2011 16:18:59 ]



இலங்கைக்கு எதிராக தனிப்பட்ட முறையில் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பயங்கரவாத நடவடிக்கையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளதாக ஜாதிக ஹெல உறுமய குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் படிக்க...

கல்வி ஊக்கிவிக்கப்படவேண்டும். கிளிநொச்சி முருகானந்தா மகாவித்தியாலயத்திற்குஉதவி வழங்கும் நிகழ்வில் மாவை எம் பி உரை.

[ Tuesday, 19-04-2011 15:55:20 ] []



நமது சமுகம் முன்னேற்றப்பாதையில் செல்ல தொழில் சார் கல்வி ஊக்கிவிக்கப்படவேண்டும். கிளிநொச்சி முருகானந்தா மகாவித்தியாலயத்திற்குஉதவி வழங்கும் நிகழ்வில் மாவை எம் பி

மேலும் படிக்க...

இலங்கை அரசை குற்றவாளிக் கூண்டில் ஏற்றிய ஐ.நா.அறிக்கை - மனோ கணேசன்

[ Tuesday, 19-04-2011 13:53:37 ]



ஐ.நா. சபை செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை இலங்கை அரசாங்கத்தை குற்றவாளி கூண்டில் நிறுத்தியுள்ளது என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க...

ஐ.நா அறிக்கை போலி - இலங்கை பதிலளிக்கக் கூடாது: தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்

[ Tuesday, 19-04-2011 13:44:32 ]



இலங்கையில் யுத்தக் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அறிக்கை போலியானது. நம்பத்தகுந்த விடயங்களின் அடிப்படையில் அமையாதது என கண்டித்துள்ள தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம், இந்த அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் பதிலளிக்கக் கூடாது என இன்று கூறியுள்ளது.

மேலும் படிக்க...

(2ம் இணைப்பு)

கிருஷ்ணமூ​ர்த்தி தியாகத்திற்​கு தலை வணங்கும் புலம்பெயர் அமைப்புக்கள்

[ Tuesday, 19-04-2011 13:26:21 ]



தாய் தமிழகத்தில் தமிழருக்கு நடக்கும் கொடுமைகளை வெறும் பார்வையாளராக பார்த்துகொண்டு இருக்க முடியாமல் தன் இன்னுயிரை தியாகம் செய்த கிருஷ்ணமூர்த்திக்கு புலம்பெயர் அமைப்புக்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க...

வவுனியா பூந்தோட்டம், சிதம்பரபுரம் முகாம்களிலிருந்து 100 குடும்பங்கள் வெளியேற்றம்

[ Tuesday, 19-04-2011 12:51:15 ]



வவுனியா பூந்தோட்டம் மற்றும் சிதம்பரபுரம் நலன்புரி நிலையங்களிலிருந்து கடந்த இரண்டு மாதங்களில் 100இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெளியேறிச் சென்றுள்ளதாக வவுனியா அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க...

இலங்கைக்கும் பங்களாதேஷிற்கும் இடையில் 5 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன

[ Tuesday, 19-04-2011 11:08:05 ] []



நேற்று பங்களாதேஷ் சென்ற மஹிந்த, இலங்கைக்கும் பங்களாதேஷிற்கும் இடையில் ஐந்து ஒப்பந்தங்களுக்கு கைச்சாத்திட்டுள்ளார்.

மேலும் படிக்க...

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதனை கூட்டமைப்பு விரும்பவில்லை – டக்ளஸ் தேவானந்தா

[ Tuesday, 19-04-2011 10:48:32 ]



தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்பவில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க...

தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வைத் தர அரசாங்கம் தயாராக இல்லை: சுரேஷ் பிரேமச்சந்திரன் பா.உ.

[ Tuesday, 19-04-2011 10:38:42 ]



தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வைத் தர அரசாங்கம் தயாராக இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம் சாட்டுகின்றார்.

மேலும் படிக்க...

ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை பக்கச்சார்பானது – லக்பிம

[ Tuesday, 19-04-2011 10:34:23 ]



ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழுவினால் இலங்கை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பக்கச்சார்பானது என லக்பிம பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் படிக்க.

13 ஏப்., 2011

ஜூ. விகடன் கணிப்பு : அதிமுக கூட்டணி 141 ! திமுக கூட்டணி 92 !

ஜூனியர் விகடன் தேர்தல் முடிவுகள்!
அதிமுக கூட்டணி 141 இடங்களிலும் திமுக கூட்டணி 92 இடங்களிலும் முன்னணியில் இருப்பதாக ஜூனியர் விகடன் தெரிவித்துள்ளது.



இந்த இதழ கருத்து கணிப்பு என்று ஏதும் நடத்தவில்லை. ஆனால், தனது நிருபர் குழுவின் கணிப்பை வைத்து இந்த முடிவை வெளியிட்டுள்ளது.
அதிமுக கூட்டணி 141:

இதன்படி அதிமுக கூட்டணியில் அதிமுக 105 இடங்களிலும், தேமுதிக 17 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 11 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் 4 இடங்களிலும், மனித நேய மக்கள் கட்சி 3 இடங்களிலும், கொங்கு இளைஞர் பேரவை 1 இடத்திலும் என மொத்தம் 141 இடங்களில் முன்னணியில் உள்ளதாகவும்,

இந்தக் கூட்டணியில் உள்ள புதிய தமிழகம், சமத்துவ மக்கள் கட்சி, இந்தியக் குடியரசுக் கட்சி, மூவேந்தர் முன்னணிக் கழகம், பார்வர்ட் பிளாக் ஆகியவை போட்டியிடும் 7 இடங்களிலும் தோல்வி அடையும் என்றும் கூறப்பட்டுள்ளது.

திமுக கூட்டணி 92:

திமுக கூட்டணியில் திமுக 67 இடங்களிலும், காங்கிரஸ் 15 இடங்களி்லும், பாமக 7 இடங்களிலும், விடுதலைச் சிறுத்தைகள் 2 இடங்களிலும், கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் 1 இடத்திலும் என மொத்தம் 92 இடங்களில் முன்னணியி்ல் உள்ளதாகவும்,

இந்தக் கூட்டணியில் உள்ள இந்திய தேசிய முஸ்லீம் லீக், மூவேந்தர் முன்னணிக் கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகியவை போட்டியிடும் 5 இடங்களிலும் தோற்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம் தனித்து ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை இரு கூட்டணிகளும் பிடிக்க முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.

மொத்தம் 234 தொகுதிகள் உள்ள நிலையில், (141+92=233) இன்னும் ஒரு தொகுதி குறித்து அதில் விவரம் இல்லை.

-தட்ஸ் தமிழ் ! 
சென்னை: நக்கீரன் இதழ் நடத்தியுள்ள இறுதிக் கட்ட கருத்துக் கணிப்பின்படி திமுக கூட்டணி 140 தொகுதிகளும்இ அதிமுக கூட்டணி 94 இடங்களிலும் வெற்றி பெரும் என்று தெரியவந்துள்ளது.

நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலையொட்டி தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் மார்ச் 10இ 11இ 12இ 13 ஆகிய நாட்களில் நக்கீரன் முதல் கட்ட கருத்துக் கணிப்பு நடத்தியது.

அப்போது அதிமுக கூட்டணியில் மதிமுக இருந்தது. திமுக-அதிமுகவின் இலவசங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கைகள் வெளியாகவில்லை. ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 5 பேர் வீதம் 234 தொகுதிகளில் 1இ170 பேர் களமிறங்கி இந்த மெகா சர்வேயை நடத்தினர்.

ஒரு தொகுதிக்கு 400 வாக்காளர்கள் என்ற அடிப்படையில் ஆண்இ பெண்களிடம் சரிபாதியாகஇ படித்தவர்கள்இ பாமரர்இ கிராமத்தினர்இ நகர்ப்புறத்தினர்இ தொழிலாளர்கள்இ அரசு ஊழியர்கள்இ தனியார் நிறுவனத்தில் பணியாற்றுவோர்இ சொந்தத் தொழில் செய்வோர்இ மாணவர்கள்இ வீட்டுவேலை செய்வோர்இ இல்லத்தரசிகள்இ மகளிர் சுய உதவிக் குழுவினர்இ வியபாரம் செய்வோர்இ சொந்த விவசாயம் செய்வோர்இ விவசாயக் கூலிகள்இ கூலி வேலை செய்வோர்இ உயர் நிலை பணியாளர்கள்இ வேலையில்லாதோர் என அனைத்துத் தரப்பினரிடமும் இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

தொகுதிக்கு 400 பேரை ஆண்கள்இ பெண்கள் சரிபாதி அளவிலும்இ வயதளவில் 18-25இ 25-40இ 40-55இ 55க்கு மேற்பட்டோர் என்று பிரித்தும் தேர்வு செய்து கருத்துக் கணிப்பை நக்கீரன் நடத்தியது.

அதிலும் முற்பட்டஇ பிற்படுத்தப்பட்டஇ மிகவும் பிற்படுத்தப்பட்டஇ தாழ்த்தப்பட்டஇ மத வழி சிறுபான்மையினர் என அந்ததந்தப் பகுதியில் அவரவர் எண்ணிக்கைக்கு ஏற்ற விகிதாச்சாரப்படி வாக்காளர்களை அடையாளம் கண்டு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

அந்தக் கருத்துக் கணிப்பின்படி திமுக கூட்டணி 146 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 80 தொகுதிகளிலும் முன்னணியில் உள்ளதும்இ 8 தொகுதிகளில் நிலைமையை கணிக்க முடியாத அளவுக்கு இரு கட்சிகளும் சம பலத்தில் உள்ளதும் தெரியவந்தது.

அதே நேரத்தில் பெரும்பாலான தொகுதிகளில் இரு கட்சிகளும் ஒன்று அல்லது இரண்டு சதவீத வாக்கு வித்தியாசத்தில் தான் ஒருவரைவிட ஒருவர் முன்னணியில் இருந்ததும் தெரியவந்தது.

இந் நிலையில் அதிமுக கூட்டணியை விட்டு மதிமுக வெளியேறியது. மேலும் திமுகஇ அதிமுக ஆகியவை போட்டி போட்டுக் கொண்டு தங்களது இலவசங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டன. இதைத் தொடர்ந்து அனைத்துக் கட்சிகளும் வேட்பாளர்களையும் அறிவித்து பிரச்சாரத்தையும் தொடங்கின.

நக்கீரன் 2வது கட்ட கருத்துக் கணிப்பு:

இந் நிலையில் நக்கீரன் 234 தொகுதிகளிலும் தனது 2வது கட்ட கருத்துக் கணிப்பை நடத்தியது.

திமுக கூட்டண் 140-அதிமுக கூட்டணி 94:

இதன் விவரங்களை கடந்த 3 இதழ்களில் நக்கீரன் வெளியிட்டது. அதன்படிஇ திமுக கூட்டணிக்கு மொத்தம் 140 இடங்களும் அதிமுக கூட்டணிக்கு 94 இடங்களும் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.

திமுகவுக்கு 90 இடங்கள்:

திமுக கூட்டணியில் திமுகவுக்கு 90 இடங்களும்இ காங்கிரசுக்கு 24 இடங்களும்இ பாமகவுக்கு 17 இடங்களும்இ விடுதலைச் சிறுத்தைகளுக்கு 4 இடங்களும்இ இந்திய யூனியன் முஸ்லீம் லீக்குக்கு 3 இடங்களும்இ கொங்கு நாடு முன்னேற்றக் கழகத்துக்கு 1 இடமும்இ ஸ்ரீதர் வாண்டையாரின் மூவேந்தர் முன்னணிக் கழகத்துக்கு 1 இடமும் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.

இந்தக் கூட்டணிக்கு மொத்தத்தில் 140 இடங்கள் கிடைக்கும் என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

அதிமுகவுக்கு 74 இடங்கள்:

அதிமுக கூட்டணியில் அதிமுகவுக்கு 74 இடங்களும்இ தேமுதிகவுக்கு 8 இடங்களும்இ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 இடங்களும்இ இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 3 இடங்களும்இ மனித நேய மக்கள் கட்சிக்கு 1 இடமுநம்இ சமத்துவ மக்கள் கட்சிக்கு 1 இடமும்இ கொங்கு இளைஞர் பேரவைக்கு 1 இடமும் கிடைக்கும் என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

அதிமுக கூட்டணிக்கு 94 இடங்கள் கிடைக்கும் என்று நக்கீரன் கூறியுள்ளது.
நன்றி-தற்ஸ்தமிழ்.கொம்




முரண்பாடான கருத்துக் கணிப்புக்கள்.பத்திரிகைகளின் நிலைப்பாட்டை தேர்தல் முடிவுகளாகச் சொல்கின்றன.இந்த முறை மிகவும் குழப்பமான முடிவுகள் கிடைக்கலாம்.தொங்கு சட்டசபை உருவாகலாம்.சிறிய கட்சிகளை கிள்ளுக்கீரையாக நினைப்பவர்கள் அவர்களின் தயவை நாடலாம்.எல்லாவற்றையும் விட தேர்தலின் பின் அணி மாறும் கூத்துக்களுக்கும் இடம் இருக்கும்.மொத்தத்தில் மக்களை வைத்து காமடி கீமடி நடத்தப் போகிறார்கள். 

ad

ad