புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஏப்., 2011


தமிழ் அகதிகளை திருப்பி அனுப்புவதை நிறுத்தக் கோரி சுவிஸ் - பேர்ண் பாராளுமன்றம் முன்பாக ஒன்று கூடல்!

சுவிசர்லாந்தில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளை திருப்பி அனுப்புவதை நிறுத்துமாறு கோரி எதிர்வரும் சனிக்கிழமை (02.04.2011) பிற்பகல் பேர்ண் பாராளுமன்றதிற்கு முன்னால் ஒன்று கூடல் ஒன்று நடைபெற உள்ளது. 

அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள இனங்களுக்கான சர்வதேச அமைப்பு மற்றும் சுவிஸ் தமிழர் அவை ஆகியன சுவிஸ் நாட்டில் உள்ள மனித உரிமை அமைப்புக்கள் தொழிற்சங்கங்கள் 16 அமைப்புக்களுடன் இணைந்து இந்த ஒன்று கூடலை நடத்த உள்ளன.

கடந்த 26.01.2011 அன்று சுவிஸ் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தினால் இலங்கை அகதிகள் விடயத்தில் புதிய சட்டத்திருத்தம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பாதுகாப்பு நிலைமைகள் முன்னேற்றமடைந்துள்ளதாக சுவிஸ் குடிவரவு, குடியகல்வு திணைக்களம் கருகிறது. இவர்களின் இந்த கருத்து தவறானது என இந்த அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன. 

சர்வதேச மன்னிப்புசபை, சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச அனர்த்தக்குழு மற்றும் ஏனைய மனித உரிமை அமைப்புக்களின் அறிக்கைகள் சுவிஸ் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் இக் கருத்திற்கு முரண்பாடானதாக உள்ளதாக இந்த அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இச் சட்டத் திருத்தம் எண்ணற்ற தமிழர்களின் வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாக உள்ளன.

எனவேதான் சுவிஸ் கூட்டாட்சித் தலைவர்களிற்கும், பாராளுமன்றத்திற்கும் இத் தீர்மானத்தை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் எனவும் இவ் ஒன்றுகூடலை ஏற்பாடு செய்யும் அமைப்புக்கள் பின்வரும் கோரிக்கைகளை விடுத்துள்ளன.

• இலங்கை அரசாங்கம் அனைத்துலக போர்க் குற்ற விசாரனைக்கு அனுமதியளிக்க வேண்டும்.
• இலங்கை அரசாங்கம் அவசரகால சட்டத்தை முற்றாக நீக்க வேண்டும்.
• அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திற்கு அனைத்து அரசியல் கைதிகளின் முகாம்களிற்கும் செல்வதற்கு அனுமதி வழங்க வேண்டும்.

என்ற கோரிக்கைகள் வரை அகதிகளை திருப்பி அனுப்ப கூடாது என்றும் அகதிகள் தொடர்பான சட்டத்தில் எவ்வித திருத்தங்களும் மேற்கொள்ளக் கூடாதெனவும் வலியுறுத்தி சுவிஸ் பாராளுமன்றம் முன்பாக கவனயீர்ப்பு ஒன்றுகூடலை சுவிஸ் தமிழரவையின் ஏற்பாட்டில் பொது அமைப்புக்கள் நடத்த உள்ளன.

31 மார்., 2011


பிரித்தானிய தமிழர் ஒருவருக்கு இன்டர்போல் பிடியாணையை பிறப்பித்துள்ளது
[ வியாழக்கிழமை, 31 மார்ச் 2011, 11:18.59 AM GMT ]
இன்டர்போல் பிரித்தானியாவில் வசிக்கும் தமிழர் ஒருவருக்கு எதிராக பிடியாணையை பிறப்பித்துள்ளது.
2009 ஆம் ஆண்டு கப்பலின் மூலம் கனடாவுக்கு 76 இலங்கையர்களை அனுப்;பிய குற்றச்சாட்டின் பேரிலேயே இந்த பிரித்தானியர் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவர் ஆட்கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடையவர் என்று இன்டர்போல் குறிப்பிட்டுள்ளது.
40 வயதான சண்முகசுந்தரம் காந்தஸ்கரன் என்ற இவருக்கு எதிராக ஆட்கடத்தல்,சட்டவிரோத குடியேற்றத்துக்காக ஆட்களை அனுப்பியமை, மற்றும் பயங்கரவாதம் என்ற அடிப்படையிலேயே இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

30 மார்., 2011


யாழ். யுவதியை வல்லுறவுக்குட்படுத்திக் கொலைசெய்த இராணுவத்தினருக்கு மரண தண்டனை
[ புதன்கிழமை, 30 மார்ச் 2011, 02:03.00 PM GMT ]
யாழ். யுவதியொருத்தியை வல்லுறவுக்குட்படுத்திக் கொலைசெய்த மூன்று இராணுவத்தினருக்கு இன்று கொழும்பு நீதிமன்றில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
1996ம் ஆண்டில் யாழ்ப்பாணம் கோண்டாவில், உரும்பிராய் பிரதேசத்தைச் சோ்ந்த வேலாயுதன் ரஞ்சனி எனும் 22 வயது யுவதியைக் கடத்திப் போய் வல்லுறவுக்குட்படுத்திக் கொலை செய்த குற்றச்சாட்டிலேயே மூன்று இராணுவத்தினருக்கு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
அவர்களுக்கு எதிராக கடத்தல், வல்லுறவு, படுகொலை ஆகிய மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமாஅதிபர் கொழும்பு மேல்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
யுவதியைப் படுகொலை செய்த குற்றச்சாட்டுக்கு மரண  தண்டனை விதித்த நீதவான், கடத்தல் மற்றும் வல்லுறவுக்குற்றச்சாட்டுகளுக்கு புறம்பான சிறைத்தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்துள்ளார்.
அத்துடன் குற்றவாளிகளுக்கு மேன்முறையீட்டுக்கான சந்தர்ப்பமும் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.



இந்திய வீரர் சேவாக் மூன்றாவது ஓவரில் மட்டும் ஐந்து நான்குகளை அடித்து மொத்தமாக இருபத்தொரு ஓட்டங்கள் எடுத்து உள்ளார்.இந்திய பாகிஸ்தான் பிரதமர்கள் நேரடிய ஆட்டத்தை கண்டு களிக்கின்றனர்

India 48/1 (5.5 ov)
Pakistan
India won the toss and elected to bat
  • India RR 8.22
  • Last 5 ovs 44/1 RR 8.80
Refresh scorecard
Current time: 15:03 local, 09:33 GMTODI career
BatsmenRunsB4s6sSRThis bowlerLast 5 ovsMatRunsHSAve
Sachin Tendulkar(rhb)8111072.720 (3b)8 (11b)45218016200*45.15
 
BowlersOMRWEcon0s4s6sThis spellMatWktsBBIEcon
*Wahab Riaz(lfm)0.50010.005000.5-0-0-118273/225.23
Umar Gul(rfm)3.0033011.0011803-0-33-0881336/425.05
Recent overs 4 4 . 4 4 5nb . | 3 . 4 1 . 4 | . . . 4 . 4 | . . 1lb . W
Last Bat V Sehwag lbw b Wahab Riaz 38 (25b 9x4 0x6) SR: 152.00
Fall of wicket: 48/1 (5.5 ov); Partnership: 48 runs, 5.5 overs, RR: 8.22 (Tendulkar 8, Sehwag 38)
Umpire reviews remaining India 1 (0 successful, 1 unsuccessful); Pakistan 2 (0 successful, 0 unsuccessful)
5.5
Wahab Riaz to Sehwag, OUT
V Sehwag lbw b Wahab Riaz 38 (25b 9x4 0x6) SR: 152.00
5.05 Taufel has given Sehwag out and
மகிந்தா ராஜபக்ஷேஏப்ரல் 1ம் தேதி, திருப்பதி வெங்கடேசபெருமாளை தரிசிக்க திருமலை வர உள்ளார்.ராஜபக்ஷே வருகையையொட்டி, வரவேற்பு ஏற்பாடுகள் குறித்து, திருப்பதி தேவஸ்தான துணை நிர்வாக நகரி : இலங்கை அதிபர்மகிந்தா ராஜபக்ஷேஏப்ரல் 1ம் தேதி, திருப்பதி வெங்கடேசபெருமாளை தரிசிக்க திருமலை வர உள்ளார்.ராஜபக்ஷே வருகையையொட்டி, வரவேற்பு ஏற்பாடுகள் குறித்து, திருப்பதி தேவஸ்தான துணை நிர்வாக அதிகாரி பாஸ்கர் திருமலையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ராஜபக்சேவை வரவேற்கவும், தங்குமிட வசதிகளை செய்து தரவும், தகுந்த ஏற்பாடுகளை செய்யுமாறு அதிகாரிகளுக்கு பாஸ்கர் உத்தரவிட்டுள்ளார்

17 மார்., 2011

மான் ஆட மயில் ஆட


Posted Image

8 மார்., 2011



திமுக 121 தொகுதிகளில் போட்டி: கலைஞர்


வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக 121தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 63தொகுதிகளிலும், பாட்டாளி மக்கள் கட்சி 30தொகுதிகளிலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 10 தொகுதிகளிலும், கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் 7 தொகுதிகளிலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 2 தொகுதிகளிலும், மூவேந்தர் முன்னேற்றக் கழகம் ஒரு தொகுதியிலும் போட்டியிடும் என திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார். 

18 டிச., 2010

பிரபலமான ஈழத்துபணியாரமே  -பனங்காய்

7 ஜூன், 2010

நிர்வாகம் ------------ தலைவர் .இராசமாணிக்கம் ரவீந்திரன் உப தலைவர் -சதானந்தன் செயலாளர்-அரியபுத்திரன் நிமலன் உபசெயலாளர் -தர்மலிங்கம் தங்கராசா பொருளாளர் -சிறிதாஸ் நிர்வாக உறுப்பினர்கள் ------------------------------------------------------------------------------------------------- பரமு தயானந்தன் சின்னதுரை நாகலிங்கம் ஜெயபாலன் உதயன் கணபதிபிள்ளை சேனாதிராசா ------------------------------------------------------------------------------------------------ போசகர்கள் ------------------------------------------------------------------------------------------------ சுப்பையா வடிவேலு ஆறுமுகம் சிவகுமார் நாகராசா ஜெயக்குமார் --------------------------------------------------------------------------------------------------- மக்கள் தொடர்பாளர் -சிவசம்பு சந்திரபாலன்-------------------------------------------- வெளியுறவுத் தொடர்பாளர் -செல்வரத்தினம் சுரேஷ்---------------------------------- கலைத்துறை பொறுப்பாளர் -சத்தியநாதன் ராமணாதாஸ்---------------------------- விளையாட்டு துறை பொறுப்பாளர் -உதயன்-------------------------------------------- எண் பார்வையாளர் -செல்லத்தம்பி சிவகுமார்
செயற்ற்பதிவுகள் ----------------- சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் நடத்திய பெருவிழாக்கள் -------------------------------------------------------------------------------------------- 16.11.97-தமிழர் புனர்வாழ்வு கழக நிதிக்காக பொன்.சுந்தரலிங்கம் பொன்.சுபாஸ் சந்திரன் வழங்கிய ´´தமிழிசகச்சேரி ´´´ 26.08.2000கேஸ்பர ராஜ் அடிகளார் ,மு.நேமிநாதன் ,வீ.டி.இளங்கோவன் .எஸ்.எஸ்.குகநாதன் பங்கு பற்றி சிறப்பித்த ´´எழுச்சி விழா ´´ 14.04.2002 --கவிப்பேரரசு வைரமுத்து ,கவிஞர் மு.பொன்னம்பலம்,மாமனிதர் .தராக்கி டி.சிவராம்.,வீ.டி.தமிழ்மாறன் வரவில் சிறப்பு பெற்ற ´´வைரமாலை ´´ 18.04.2010-பேராசிரியர் நா.பேரின்பநாதன் பங்கு பற்றிய ´´வேரும் விழுதும் ´´ சிறிய விழாக்கள் --------------------- 12.08.2001-கவிஞர் சு..வில்வரத்தினம் அவர்களின் நூல் வெளியீடு ஜீ.சாந்த உட்பட்ட தமிழீழம் இசைக்குழுவை அனுசரித்து நடத்திய கவுரவிப்பு விழா --வெரிதாஸ் வெள்ளி விழா (பகுதி பங்களிப்பு ) அஞ்சலி /கண்டனக் கூட்டங்கள் ---------------------------------------- 09.01.2000-சாரதாம்பாள் அவர்களின் கண்டனக்கூட்டம் 25.11.2001- சர்வோதயம் திருநாவுக்கரசு அஞ்சலிகூட்டம் 08.01.2006 -தர்சினியின் கண்டனக் கூட்டம் 30.12.2006-கவிஞர் சு.வில்வரத்தினம் அஞ்சலிக் கூட்டம் சந்திப்பு கூட்டங்களை ஏற்பாடு செய்து ஒன்றியத்தினால் கவுரவிக்கபட்டோர் ------------------------------------------------------------------------------ பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன்(13.04.2002) .பா.அரியநேந்திரன்(07.01.2006).எஸ்.கனகசபை (30.12.2006).செல்வம் அடைக்கல நாதன்(03.09.2006) .ஜெயானந்தமூர்த்தி(03.09.2006) .செ.கஜேந்திரன்(03.12.2005) ,சி.சிறீதரன் (16.09.2010) மற்றும் சர்வோதயம் .புஸ்பமணி(21.05.2003).

6 ஜூன், 2010

பழைய நிர்வாகம் -------------------- எமது ஒன்றியம் சுமார் பன்னிரண்டு வருடங்களாக மத்திய குழ உறுபினர்களையும்,பிராந்திய உறுபினர்களையும் நிர்வாகமாக ஏற்று இயங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது. மத்திய குழு உறுப்பினர்கள் சிவசம்பு சந்திரபாலன் சுப்பையா வடிவேலு செல்வரத்தினம் சுரேஷ் விஸ்வலிங்கம் குகராசன் சின்னதுரை கருணாமூர்த்தி கணபதிபிள்ளை சேனாதிராசா ஆறுமுகம் சிவகுமார் செல்லத்தம்பி சிவகுமார் சண்முகம் சுதன் சுப்பிரமணியம் ஞானச்சந்திரன் சத்தியகுமார் ரமணதாஸ் தர்மலிங்கம் தங்கராசா அம்பலவாணர் திருவருட்செலவன் (கனடாவுக்கு இடம்பெயரும் வரை

--------------------------------------------------------------------------

த,பெருமாள் .ஜெனீவா

கி.கண்ணதாசன்-லவுசான்

ஐ.தர்மகுலசிங்கம் -லவுசான்

பா.சிவசூரியதாஸ்-லவுசான்

க.சிவகுமார்.தூண்

ச.சிவநேசன்-பீல்

ச.முருகானந்தன்.சொலோதூன்ன்

வி.பகீரதன் -சொலோதூன்ன்

த.நித்தியானந்தன் -சூரிச்

நா.சந்தரதினம்-சூரிச்

பா.சந்தநிகேதான் -சூரிச்

மூர்த்தி -பரமு -சூரிச்

நா.கிருபானந்தன் .பாசல்

அமரர் .உக்கு .பாசல்,

அ.ஜெயக்குமார் மோலின்

ச.நகுலன்-மோலின்

நா.தருமரத்தினம் -சிவ-செங்காலன்

நா.பிரசன்னாநேசன்-.வில்

மதிரூபன்-லுசர்ன்

சி.நாகலிங்கம் -பே ரன்

க.ஞானகுமார் -பேரன்

ச.ரமேஸ் .ஆரவ

அ.ஜெகன் ஆரவு

ச.மோகனதாஸ்-போர்க்டோர்ப்

ம.சிவலிங்கம்-பூர்க்டோர்ப்

நா.கேதீஸ்வரன் -சுமிச்வல்த்

சோ.சதானந்தன் .ஹீர்சொகேன்புக்சே

சோ.லிங்கன் .லங்காந்தால்

நன்றிப் பெருக்குடையோர்

-------------------------------------

கவிப்பேரரசு வைரமுத்து

கவிஞர் அறிவுமதி

டி .சிவராம் .(தராக்கி)

வீ.டி.தமிழ்மாறன்

கவிஞர் மு.பொன்னம்பலம்

கேஸ்பர் ராஜ் அடிகளார்

பாடகர் ஜீ.சாந்தன்

இரா.சம்பந்தன் (பா.உ )

செ.கஜேந்திரன் (பா.உ)

பா.அரியநேந்திரன் (பா .உ)

செல்வம் அடைக்கலநாதன் (பா.உ)

ஜெயானந்த மூர்த்தி (பா.உ)

கனகசபை (பா.உ)

தொல் .திருமாவளவன்

வை.கோபால்சாமி

மு.நேமிநாதன்

வீ.டி.இளங்கோவன்

எஸ்.எஸ்.குகநாதன்

சங்கர் (முன்னாள் வி.பு.பொறுப்பாளர் )

பொன்.சுந்தரலிங்கம்

பொ.சுபாஸ்சந்திரன்

சோ.சச்சிதானந்தன்

க.அரியரத்தினம்

எஸ்.கராலபில்லை

செ.செல்வகுமார்

து.கணேசலிங்கம்

விசுவலிங்கம்

அ.திருவருட்செல்வன்

கவுசல்யா சொர்ணலிங்கம்

கன்னிகா சந்திரபாலன்

கனகசபாபதி நாகேஸ்வரன்

சரவனனபவானந்த குருக்கள்

கல்லாறு சதிஸ் க.புஷ்பராணி (சர்வோதயம் )

நா. பேரின்பநாதன்

தமிழீழம் இசைக் குழு

செ.குலம்

மண் மறவா வீரர்கள்

---------------------------

நாட்டுப்பற்றாளர்கள்

-------------------------

கவிஞர் சு.வில்வரத்தினம்

வே.க.ஏரம்பு --

மாவீரர்கள்

----------------------

வைரமுத்து ரத்தினம்

நாகலிங்கம் மனோரஞ்சன்

பொன்னுத்துரை கோணேஸ்வரி

குணரத்தினம் திருவேந்தன் (கப்டன் இமைவாணன் )

தேவராசா அன்பரசி

ஏரம்பு பாலச்சந்திரன் (கப்டன் அருண்)

சு.மகிழ்ந்தினி (ஜென்தினி)

சிவசுபிரமனியம் விஜயதேவி (கரும்புலி சாந்த)

ரங்கன் (கரும்புலி மேஜர் பவனி )

நாகலிங்கம் ஹரிகரன்

சிவகுமார் சிவசாமி

சொக்கலிங்கம் பத்மினி

இந்த பகுதி இன்னும் நிறைவுறவில்லை

ஆலயங்கள்(சிறியவை) ---------------------------- ஊரதீவு காளி கோவில் கேரதீவு ஐயனார் கோவில் ஊரதீவு ஞான வைரவ கோவில் ஊரதீவு முருகமூர்த்தி கோவில் வரதீவு வைரவர் கோவில் மடத்துவெளி தூண்டி வைரவர் கோவில் மடத்துவெளி கடற்கரை வைரவர் கோவில் காத்தவராயர் கோவில் வயல்வெளி முருகன் கோவில் சாட்டி வீரகத்தி விநாயகர் கோவில் நாச்சிமார் கோவில் புதையடி வைரவர் கோவில் சங்குவேலி ஐயனார் கோவில் தெங்குதிடல் ஸ்ரீ வீரகத்தி விநாயகர் கோவில் வீராமலை வைரவ நாதர் கோவில் வீராமலை துர்க்கை அம்மன் கோவில் கொரியாவடி நாயன்மார் கோவில் வீராமலை முருகன் கோவில் மலையடி நாயன்மார் கோவில் போக்கத்தை மாரியம்மன் கோவில் இத்தியடி நாச்சிமார் கோவில் பெரிய கிராய் கோவில் குறுந்தடி வைரவர் கோவில் ஆதி விநாயகர் கோவில் நடுவுதுருத்தி பெத்தப்பர் கோவில் நாயனார் கோவில் அனுமார் கோவில் ஆலடி வைரவர் கோவில் கொம்மாபிட்டி பிள்ளையார் கோவில் மருதடி விநாயகர்கோவில் பட்டையர் அம்மன் கோவில் மாநாவெள்ளை ஐயனார் கோவில்

3 ஜூன், 2010

நுணுக்க வரைபடமாக புங்குடுதீவு

நாம் பிறந்த மண் நுணுக்கமான வரைபடமாக உங்கள் முன் சமர்ப்பிக்கிறோம்.பெரிதாக்கி பார்த்து மனதினிலே மகிழலாம்.

31 மே, 2010

புங்குடுதீவு முத்துமாரி அம்மன் கோவில்

28 மே, 2010

கந்தசாமி கோவில் இந்த varusath திருவிழா.காட்சிகள்

27 மே, 2010

யா/புங்குடுதீவு கமலாம்பிகை கனிஷ்ட மஹா வித்தியாலயம் யா/புங்குடுதீவு மஹா வித்தியாலயம் யா/புங்குடுதீவு சண்முகநாதன் வித்தியாலயம் யா/புங்குடுதீவு சுப்பிரமணிய மகளிர் மஹா வித்தியாலயம் யா/புங்குடுதீவு சித்தி விநாயகர் மஹா வித்தியாலயம் யா/ஸ்ரீ கணேச மகா வித்தியாலயம் யா /திருநாவுக்கரசு விதியாலாயம் யா /சண்முகநாதன் வித்தியாலயம் யா/ராஜேஸ்வரி விதியாலாயம் யா/ரோமன் கத்தோலிக்க விதியலாயம் யா/பெருங்காடு அமெரிக்கன் மிசன் பாடசாலை யா/பராசக்தி வித்தியாலயம் யா/துரைசாமி வித்தியாலயம் யா/அரியநாயகன் புலம்தமிழ் கலவன் பாடசாலை யா/இறுபிட்டி அமெரிக்கன் மிசன் வித்தியாலயம் யா/குறிகட்டுவான் அமெரிக்கன் மிசன் பாடசாலை

6 மார்., 2010

யாழ். புங்குடுதீவு ஸ்ரீகணேச மகா வித்தியாலயத்தின் நூற் றாண்டு விழாவின் இறுதிநாள் நிகழ்வு இன்று புதன்கிழமை காலைத மாலை இரு நிகழ்வுகளாக நடை பெறவுள்ளது. இதில் வித்தியாலய அதிபர் எஸ்.கே. சண்முகலிங்கம் தலைமையில் காலை 9 மணிக்கு ஆரம்பமாகும் நிகழ்வில் வித்தியாலய பெயர் திரைநீக்கம் மற்றும் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ளும் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ. இளங்கோவனால் நூற்றாண்டு நினைவுக்கல் திரை நீக்கம் ஆகியன இடம்பெறவுள்ளன. தொடர்ந்து நிகழ்வில் சிறப்பு ரையை யாழ். பல்கலைக்கழக புவி யியற் துறைத் தலைவர் பேராசிரியர் கா.குகபாலன் வழங்கவுள்ளார். மேலும் செல்வி சைந்தவி பரமேஸ் வரனின் இன்னிசைக் கச்சேரியும் ஏனைய கலை நிகழ்ச்சிகளும் நடை பெறவுள்ளன. மாலை நிகழ்வுகள் நூற்றாண்டு விழாக் குழுத்தலைவர் த. துரைசிங் கம் தலைமையில் மாலை 3 மணிக்கு ஆரம்பமாகும். நிகழ்வில் ‘கணேசதீபம்’ என்னும் நூற்றாண்டு மலர் வெளியி டப்படவுள்ளதுடன் நூல் வெளியீட் டுரையை பேராசிரியர் எஸ். சிவலிங் கராசா வழங்கவுள்ளார். தொடர்ந்து தமிழகத்தின் தலை சிறந்த பேச்சாளர் சொல்வேந்தர் சுகி சிவம் சிறப்புரை வழங்கவுள்ளார்.

யா/புங்குடுதீவு கணேச மஹா வித்தியாலய நூற்றாண்டு விழா

3 மார்., 2010

நூற்றாண்டில் யா /புங் .ஸ்ரீ கணேச மஹா வித்தியாலயம்

யாழ்/புங்குடுதீவு ஸ்ரீ கணேச மஹா vithiyaalayam march திங்கள் மூன்றாம் திகதி தனது நூற்றாண்டில் கால் பதித்து பெருமை அடைகிறது.நூற்றாண்டு விழ வெகு சிறப்பாக இந்த வாரம் முழுவதுமாக கொண்டாடப படுகிறது. விழாவை சிறப்பிக்க சுகி.சிவம் அவர்கள் சிறப்பு சொற்பொழிவாளராக கலந்து கொள்கிறார்.முத்தமிழ் நிகழ்ச்சிகள் பலவும் நடைபெற ஏற்பாடாகி உள்ளது.

ஸ்ரீ கணேச வித்தியாலயம் சித்திரை மூன்றாம் திகதி ஆயிரத்து தொளாயிரத்து பத்தாம் ஆண்டு வ.பசுபதிப்பிள்ளை விதானையாரினால் சிறிய கட்டிடத்தில் ஆரம்பிக்கப் பட்டது ஆயிரத்து தொளாயிரத்து எழுபதிரண்டில் கனிஷ்ட மஹா விதியாலயமகவும் எட்டு வருடங்களில் உயர்தர கலை பிரிவு வகுப்பினை கொண்டதாகவும் தரம் உயர்ந்தது. இவ் வித்தியாலயத்தின் க.நமசிவாயம்பிள்ளை,இளையப்பா,க.செல்லத்துரை ,வை.கந்தையா,நா.கார்த்திகேசு,சோ,சேனாதிராசா.த.துறைச்ங்கம்,மு.தர்மலிங்கம் பொ.சபாரத்தினம்,ச,அமிர்தலிங்கம் ,கு,சண்முகலிங்கம் ஆகியோர் அதிபர்களாக பணியாற்றி பெருமை சேர்த்தனர்.சுவட்சர்லாந்து இல் வசிக்கும் புங்குடுதீவு மக்களின் முயற்சியினால் பழையமாணவர் சங்கம் ஆரம்பிக்கபட்டு ஆயிரத்து தொளாயிரத்து தொண்ணூற்றிirandu muthal வாணி விழா நடத்தபட்டு வந்ததூ .இந்த சங்கம் பாடசாலைக்கென பாரிய நிதிப் பங்களிப்பும் செய்ய பட்டுள்ளது.இந்த பாடசாலைக்கு புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியமும் நிதி உதவியை செய்திருக்கிறது.ஏனைய நாடுகளில் உள்ள புங்குடுதீவு அமைப்புக்களும் இந்த பாடசாலைக்கென உதவி இருகின்றன.

1 மார்., 2010

புங்குடுதீவு ஓரு நோக்கு

புங்குடுதீவு ஓரு கிராமம் அல்லது ஊர் .எப்படியும் சொல்லி கொள்ளலாம் .ஏன் என்றால் யாழ்ப்பாண குடா நாட்டில் உள்ள கிராமங்களிலேயே ஓரு மிகபெரிய ஊர் இதுவாகும் . யாழ் தீபகற்பத்தின் தென் மேற்கே அமைந்துள்ள ஏழு தீவுகளின் மத்தியிலே அமைந்துள்ளது .ஒல்லாந்து நாட்டவர் தமது ஆட்சியின் போதுஇந்த ஏழுதீவுகளுக்கும் ஹோல்லந்தில் உள்ள இடங்களின் பெயர்களை சூடி மகிழ்ந்தனர்.அந்த வகையில் புங்குடுதீவுக்கு மிட்டில்ஹ்பெர்க் என்று நாமம் இட்டு அழைத்தனர் . யாழ்ப்பானதிலிருந்து தெற்கு பண்ணை பாலம் ஊடாக மனடைதீவு சந்தி அல்லைப்பிட்டி அராலி சந்தி வேலணை வங்களாவடி வேலனைதுறை கடந்து புங்குடுதீவுக்கான இலங்கையிலேயே பெரியதான வாணர் தாம்போதி மேலே பயணம் மேற்கொண்டால் புங்குடுதீவை அடையலாம். புங்குடுதீவு சுமார்ஆறு மைல்நீளமும் ஐந்து மைல் அகலமும் கொண்ட நால் புறமும் கடலால் சூழப்பட்டு வேலையுடன் நேரிய பேரு வீதியினால கடலினூடே இணைக்க பட்ட ஓரு பிரதேசமாகும். ஓரளவு சதுர வடிவில் இருந்தாலும் கேரதீவு ஓடான நீரேரியின் பிரிப்பினால் ப எழுத்து வடிவிலும் தோன்றும் .வட கிழக்கே வேலனைத்தீவினையும் மேற்கே நயினாதீவினையும் தென்மேற்கே தூரத்திலே நெடுன்தீவினையும் கொண்டு மத்தியிலே இத்தீவு சீராக அமைந்துள்ளது, தீவின் தெற்குப் பகுதி உயர்வாகவும் வடக்கு பகுதி தாழ்வாகவும் காணபடுகிறது . புங்குடுதீவில் பல வகையான தரை அமைப்புகளும் காணப் படுகின்றன.மடத்துவெளி கரை பகுதிகள் சீனி போன்ற தூய வெள்ளை பளிங்கு மணல் பகுதியாகவும் ஊரதீவு மட்டும் தீவின் தெற்கு பகுதி கரைகள் இளமைன்சல் மணல்பகுதியாகவும் இருகின்றன.மடத்துவெளி ஊரதீவு பகுதிகள் சமதரைகளாக அமைந்துள்ளன.மேல் பகுதி மணல் தன்மையாகவும் சட்டு கீழே நரை நிற மக்கியாகவும் இன்னும் கீழே நல்ல தரமான களிமண்ணாகவும் அமைந்துள்ளது.வல்லன் பகுதி மற்றும் வீராமலை பகுதிகள் விவசாயத்திற்கு சிறந்த சிறிய குறுநி கலந்த கருநிற நிலமாக உள்ளன.குரிசிக்காடு போக்கதை பகுதிக்கு மேற்கே மிக அசாதாரணமான வகையில் செம்மண் பகுதியாகக உள்ளது.பெருங்காடு இருபிட்டி தெற்கு போன்ற பகுதிகள் மேலே குறைந்தளவு மண்ணும் கட் பாங்கான கீழ் பகுதியாகவும் காணப்படுகின்றன. இந்த தரை தோற்ற அடிப்படையில் புங்குடுதீவில் மடத்துவெளி ஊரதீவு இருபிட்டி வடக்கு வல்லன் பகுதிகளில் நெல் பயிர் செய்கைக்கு உட்படுத்த படுகின்றன. வல்லன் வீரமலை நடுவுதுருதி பகுதிகளில் மிளகாய் புகையில வெங்காயம் போன்றன தரமான முறையில் பயிரிடபடுகின்றன-சுமார் நாற்பது ஆண்டுகளின் முன்னே வரை பெரும்பாலான மேட்டு பகுதிகளில் சிறு தானியங்களான வரகு சமை குரக்கன் பயறு உழுந்து பயிர்கள் பயிரிடப்பட்டன.இவற்றை விட நிறைந்த பனை தென்னை வளம் மிக்க கிராமமாக புங்குட்தீவு திகழ்கின்றது. விருட்சங்களாக வேம்பு பூவரசு ஆள் அரசு இத்தி கதியால் முருங்கை சீமைகதியால் போன்றனவும் கடல்கரை ஓரங்களில் ஆவாரை கற்றாளை கள்ளி கொட்டனி போன்ற மருத்துவ குணாசெடிகளும் காணபடுகின்றன

28 பிப்., 2010

புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் -சுவிட்சர்லாந்து

நிர்வாகம்-புதியது

தலைவர்-இராசமாணிக்கம் ரவீந்திரன்

உபதலைவர்சதானந்தன் செயலாளர்-அறியபுதிரன் .நிமலன்

பசெயலாளர் -தர்மலிங்கம் தங்கரசா (மதி)

பொருளாளர் -ஸ்ரீதாஸ்

நிர்வாக உறுப்பினர்கள்.

சின்னதுரை .நாகலிங்கம்

எஸ்.ஜெயபாலன்

ப.தயானந்தன்கணபதிபிள்ளை

.சேனாதிராசா

போசகர்கள் -சு.வடிவேல்

நா.ஜெயக்குமார்

ஆ.சிவகுமார்

செ.சிவகுமார்

மக்கள் தொடர்பாளர்-சிவ.சந்திரபாலன்

வெளியுறவு தொடர்பாளர்-செ.சுரேஷ்

விளையாட்டுத் துரைபொறுப்பாளர் -உதயகுமார்

கலைத்துறை பொறுப்பாளர் ச.ராமநாதாஸ்

நிர்வாகம் -பழையது

மத்தியகுழு உறுப்பினர்கள்

-------------------------------------------

சிவ-சந்திரபாலன்

செ.சுரேஷ்

சு.வடிவேலு

செ.சிவகுமார்

ஆ.சிவகுமார்

க.சேனாதிராசா

த.மதி இ.சந்துரு

ச.சுதன்

வி.குகராசன்

சி.கருணாமூர்த்தி

புங்குடுதீவெனும் பொழுதினிலே ---------------------------------------- தந்தை வாணரின் கொடையாம் வாணர் தாம்போதியின் நேரிய தோற்றம் , கனவான் பசுபதிபிள்ளையின் கைங்கரியத்தில் கல்விக்கூடங்கள் ,சிந்தனையாளர் தளையசிங்கத்தின் சமூகப்புரட்சித் தாக்கம்.திருநா அண்ணரின் ஒருநாளும் ஓயாத பெருந்தொண்டு ,எஸ்.கே.மகேந்திரனின் எழுச்சிமிகு அரசியல் மேடை முழக்கம்,வித்துவான் பொன்.கனகசபையும் புலவர் ஈழத்து சிவானந்தனும் அருளிய சிவராதிரிச் சொல்பொழிவுகள்,சிவன் கோவில் ஒலிபெருக்கியில் சீராக சேவிக்கப்படும் சின்னமணி ஐயாவின் வேதபாராயணம்,ஊரதீவு ஐயனார் கோவில் குருபூசை,கண்ணகி அம்மான் ஆலய கப்பல் திருவிழா ,ஆயிரம் கால் மண்டப சிகர மேடையில் விடிய விடிய நடக்கும் கந்தசாமி கோவில் பூங்காவனம் ,பேச்சி அம்மன் கோவிலிலும் இருபிட்டி பிள்ளையார் கோவிலிலும் நெஞ்சை உருக்கும் வீ.வீ.வைரமுத்துவின் நாடகத்தமிழ் ,மடத்துவெளி முருகன் சிற்ப தேரோட்டம் ,வல்லன் அய்யானார் கோவிலில் கண்ணன் கோஷ்டியும் இரட்டையர் கோஷ்டியும் பொழிந்த இன்னிசைமழை ,மாரியம்மன் கோவில் வேட்டைத் திருவிழா ,சிவன்கோவில் வீதியின் சீர்காழியின் கானாமிர்தம்,கன்னகித்தாய்முன்றல் சிலப்பதிகார விழாம.பொ.சி.இன் தமிழோசை ,கழட்டிப் பிள்ளையார் வீதியில் கிருபானந்த வாரியாரின் விருந்து,சவேரியார் கோவில் கூடு தூக்கல் ,கலட்டியிலும் கிராஞ்சியிலும் சூரன்போரின் நாரதர் கழக கூட்டணிக்காய்,விடுதலைப் புலிகளுக்காய் கொடியேந்திய எம்மவர் அரசியல் வெறி ,எந்த மூளைக்கும் சென்று வணிகம் புரியும் நம்மவர் திறமை ,யாழ்ப்பான கல்லூரிகளை விடுதிகளை நிரப்பும் எம் மாணாக்கரின் கல்வி உயர்ச்சி நெஞ்சங்களே கண்களை இருக் மூடி ஓரு கணம் எம் ஊரை மனதில் நிறுத்தி தியானியுங்கள் மகிழுங்கள் உறுதி எடுத்துக் கொள்ளுங்கள் .நன்றி.

ad

ad