புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஆக., 2012


வெள்ளி பதக்கம் வென்ற விஜயகுமாருக்கு ராஜீவ் கேல் ரத்னா வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரை
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் சுபேதார் விஜயகுமார் வெள்ளி பதக்கம் வென்றார். இந்நிலையில், இமாச்சல பிரதேச மந்திரிசபை விஜயகுமாருக்கு ராஜீவ் கேல் ரத்னா விருது வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வது என்று தீர்மானம் நிறைவேற்றியது. மேலும் வெள்ளி பதக்கம் வென்றதற்காக அவரை பாராட்டியுள்ளது.

லண்டனில் பிரிட்டன் கொடிக்கு சமமாக பறந்த தமிழீழ தேசியக் கொடி: இலங்கை கடும் கோபத்தில்
லண்டனில் ஒலிம்பிக் விளையாட்டு நிகழ்வுகளின் போது தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தினரின் பிரசாரச் செயற்பாடுகள் முன்னெடுக்கப் படுவதற்குப் பிரிட்டன் இடமளித்திருப்பது தொடர்பில் இலங்கையை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியிருப்பதாக தெரியவருகிறது.

வசூல் ராணியான யாழ். மாநகர முதல்வர்?
உற்சவ காலத்தையொட்டி யாழ். மாநகர சபையால் வர்த்தக நிலையங்கள் அமைக்கவும் மற்றும் துவிச்சக்கர வண்டி மோட்டார் வண்டி மற்றும் கார் போன்வறவற்றிற்கான பாதுகாப்பு நிலையங்கள் போன்றவற்றை கொடுப்பதில் விலைக் கோரல் ஊடாக பல இலட்சங்களை பார்த்த யாழ். மாநகர முதல்வர் தற்போது

அநுராதபுர சிறை அதிகாரிகளால் தாக்கப்பட்ட மற்றும் ஒரு தமிழ் அரசியல் கைதி மரணம்
வவுனியா சிறைச்சாலையில் இருந்து கடந்த மாதம் அநுராதபுரத்துக்கு மாற்றப்பட்டு பின்னர் அங்கு வைத்து சிறைச்சாலை அதிகாரிகளால் தாக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதி இன்று காலை மரணமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

யாழ்.போதனா வைத்தியசாலையில் பல மில்லியன் மோசடி: கணக்காய்வு விசாரணைகள் இன்று ஆரம்பம்
யாழ். போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கு மாபிள் பதித்தது தொடர்பில் இடம்பெற்றதாகத் தெரியவரும் ஊழல் மோசடிகள் தொடர்பான விசாரணைகளை கணக்காய்வாளர் திணைக்களம் இன்று ஆரம்பித்துள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உப குழு அமைக்கும் கலந்துரையாடல் நாளை யாழில் ஆரம்பம்
நாளை காலை 9 மணிக்கு யாழ். கிறீன்கிறாஸ் விடுதியில், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் தலைமையில் இக்கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதுஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழவின் ஏற்பாட்டில் பிராந்திய சிவில் உப குழுவை அமைப்பது தொடர்பான சிவில் சமூகப்

தமிழ் அரசியல் கைதி டில்ருக்சன் மரணம்! தமிழ் தேசிய மக்கள் முன்னணி கண்டனம்
வவுனியா சிறைச்சாலை தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த தமிழ் அரசியல் கைதி டில்ருக்சன் நேற்று உயிரிழந்த சம்பவம் தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமது கடுமையான கண்டனத்தை தெரிவித்திருக்கின்றது.

யாழ்ப்பாணத்தில் நம் தேசம் என்னும் புதிய பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டுள்ளது !

தமிழ் தேசியத்துக்கான மக்கள் முன்னணி கட்சியினரால், யாழில் நம் தேசம் என்னும் மாதாந்த பத்திரிகை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக   கார்த்திகைப் பூவை சின்னமாகக் கொண்டு மிடுக்குடன் இப் பத்திரிகை பிரசுரமாகியுள்ளது

மறுபடியும் இணைந்த சிம்பு – நயன்


சிம்புவும் நயன்தாராவும் தங்கள் நட்பையும் உறவையும் புதுப்பித்துக் கொண்டுள்ளனர் என்பதுதான் திரையுலகின் புதிய செய்தி. சினிமா காதலர்களில் ஏக பரபரப்பைகத் கிளப்பிய ஜோடி சிம்பு - நயன்தாராதான்.
பதவிக்கு சோரம் போகாத தமிழர் தரப்பின் அரசியல்
பாராட்டுகிறார் ஹக்கீம்
காவியுடை தரித்த பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த விடயங்களைவிட்டு முஸ்லிம் காங்கிரஸின் தலைமையானது மௌனமாக இருக்கமுடியாது.
சென்னையில் திமுக சார்பில் நடைபெற உள்ள டெசோ மாநாட்டுக்கு தடை விதிக்கக் கோரி தமிழகத்தில் வழக்கு தாக்கல் செய்யபட்டுள்ளது.

எதிர்வரும் 12ம் திகதி சென்னையில் டெசோ மாநாடு நடைபெறவுள்ளது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் அவ் அமைப்பினரால் நிறைவுறுத்தப்பட்டுள்ள நிலையில் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞரான பாலசுப்ரமணியன் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் அம் மாநாட்டை

7 ஆக., 2012


விஜேந்தர் 3-3, 5-7, 5-7 என்ற கணக்கில் தோல்வி
குத்துச்சண்டை ஆண்கள் மிடில் வெயிட் பிரிவில் (75 கிலோ) இந்திய வீரர் விஜேந்தர் உஸ்பெகிஸ்தான் வீரர் அப்பாஸ் அதோவுடன் மோதினார்.

‘வரூம்‌ ஆனா‌ வரா‌து…’ என்‌னத்‌தே‌ கண்‌ணை‌யா‌ கா‌லமா‌னா‌ர்‌
துணை குடியரசுத் தலைவராக 11ந் தேதி பதவி ஏற்கிறார் ஹமீது அன்சாரி
தற்போது துணை ஜனாதிபதியாக இருக்கும் அமீத் அன்சாரியின் பதவிக் காலம் வருகிற 10-ந்தேதியோடு முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் செவ்வாய்க்கிழமை நடந்தது.

கலைஞரிடம் பேசிக்கொள்ளுங்கள்! இலங்கை தூதருக்கு ராம்விலாஸ் பாஸ்வான் பதிலடி!
டெசோ மாநாட்டில் தான் பங்கேற்பதை தடுக்க டெல்லியில் உள்ள இலங்கை தூதர் பிரசாத் கரியவாசம் முயற்சித்ததாக கூறிய ராம்விலாஸ்பாஸ்வான், எதுவாக இருந்தாலும் கலைஞரிடம் பேசிக்கொள்ளுங்கள் என்று பதில் அளித்துவிட்டதாக தெரிவித்தார். 
இலங்கைக்கு எதிரான 20-20 போட்டி: இந்தியா வெற்றி
இலங்கைக்கு எதிரான 20-20 போட்டியில் 39 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. முத-ல் விளையாடிய இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 155 ரன் குவித்தது. இலங்கை அணி 18 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 116 ரன் எடுத்தது. 

நவநீதம்பிள்ளையை பதவி விலகுமாறு அமெரிக்கா கோரியது?
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனும், அமெரிக்காவும் நவநீதம்பிள்ளையை பதவி விலகுமாறு கோரியதாக இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை பதவி

இலங்கையில் தமிழ் ஈழப் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் பற்றி சென்னையில் விவாதம்!
இலங்கையில் தமிழ் ஈழப்பெண்களுக்கு எதிரான கொடுமைகள் பற்றி விவாதிக்க இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் 19-வது அகில இந்திய மாநாடு சென்னையில் நாளை தொடங்கி 4 நாட்கள் நடக்கிறது. 

வல்வெட்டித்துறையில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் வீட்டைச் சுற்றியிருந்த இராணுவத்தினர் வெளியேற்றம்
வல்வெட்டித்துறையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டின் அருகில் இராணுவத்தினர் அமைத்திருந்த இராணுவ முகாமைவிட்டு வெளியேறிச் சென்றுள்ளதாகத் தெரியவருகின்றது.

ad

ad