புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஆக., 2012


மன்னார் நீதவான் மீதான அச்சுறுத்தல்! சந்தேக நபர்கள் மீது நடவடிக்கை எதுவுமில்லை! சட்டமா அதிபர்
மன்னார் நீதவானுக்கு விடுக்கப்பட்ட தொலைபேசி மூலமான அச்சுறுத்தல்கள் தொடர்பான சந்தேக நபர்களுக்கு எதிரான நடவடிக்கை குறித்து தீர்மானம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என சட்டமா அதிபர் பாலித பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

டெசோ மாநாடு வை.எம.சி.ஏ மைதானத்தில் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது
டெசோ மாநாட்டை சென்னை ராயப்பேட்டை வை.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்த அனுமதி மறுத்து காவல்துறை பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து நிபந்தனையுடன் மாநாட்டை நடாத்த அனுமதியளித்துள்ளது. 

புலிகளின் ஆதரவாளர்கள் 22 பேர் கே.பியின் ஏற்பாட்டில் கோத்தபாயவுடன் இரகசிய சந்திப்பு!
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தீவிர ஆதரவாளர்கள் என்று நம்பப்படும் புலம்பெயர் தமிழர்கள் 22 பேர் சில நாட்களுக்கு முன்னர் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவுடன் இரகசியமாகச் சந்தித்துப் பேசியுள்ளனர்.

இலங்கை மரணங்கள் மலிந்த பூமியாக மாறிவிட்டது - டில்ருக்சன் இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட அரசியல்வாதிகளின் அஞ்சலி உரைகள்!
வவுனியா சிறைச்சாலை அசம்பாவிதத்தில் காயமடைந்து கோமா நிலையிலிருந்து உயிரிழந்த தமிழ் அரசியல் கைதியான டில்ருக்சன் மரியதாஸின் இறுதிச்சடங்கு நிகழ்வில் கலந்துகொண்டு இரங்கல் உரையாற்றும்போதே தமிழ் அரசியல்வாதிகள் ஆற்றிய உரைகளின் தொகுப்பு

கல்கிஸ்ஸை விபச்சார விடுதி முற்றுகை: 6 பெண்கள் உட்பட எழுவர் கைது
காலி வீதி கல்கிஸ்ஸையில் ஆயுர்வேத மத்திய நிலையம் என்ற பெயரில் செயற்படுத்தப்பட்டு வந்த விபச்சார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.

இந்தியா எமக்கு ஆதரவளித்திருந்தால் ஐ.நாவில் இலங்கை தொடர்பான பிரேரணை இருந்திருக்காது: ஜனாதிபதி
இலங்கைக்கு இந்தியா ஆதரவாக இருந்து, எமக்கு மேலும் அவகாசம் வழங்கப்பட வேண்டும் என என்ற இலங்கையின் கோரிக்கைக்கு ஆதரவளித்திருந்தால் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான பிரேரணை இருந்திருக்காது என ஜனாதிபதி மஹிந்த ராபஜக்ச கூறியுள்ளார்.

டெசோ மாநாடு! நீதிபதி இரு தரப்பினரிடமும் சரமாரியாக கேள்விகள்! வழக்கை விசாரிக்க மறுப்பு
டெசோ மாநாடுக்கு அனுமதி கோரி தொடரப்பட்ட மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க டெசோ மாநாட்டு அமைப்பாளர்கள் கோரிக்கை வைத்தனர். இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி பால் வசந்தகுமார், இருதரப்பினரையும் சரமாரியாக கேள்விகள் கேட்டார். மேலும் இந்த வழக்கை விசாரிக்க

அரசு - கூட்டமைப்பு பேச்சுவார்த்தை! தென்னாபிரிக்கா அனுசரணை? இருதரப்பையும் தென்னாபிரிக்க தூதுக்குழு சந்திப்பு
 இலங்கை அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையே இனப்பிரச்சினை தீர்வுக்கான பேச்சுவார்த்தையில் அனுசரணையாளராக தென்னாபிரிக்கா செயற்படவுள்ளது. அரசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இதை வரவேற்றுள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது.

டெசோ மாநாட்டை தொடரும் சோதனைகள்! புலிகள் பங்கேற்கக்கூடும் என்று கூறுவது உண்மைக்கு மாறானது! கருணாநிதி
திமுக நாளை சென்னை நடத்தவிருக்கும் தமிழீழ ஆதரவாளர் அமைப்பான டெசோவின் மாநாடு பல்வேறு சிக்கல்களை தொடர்ந்து எதிர்நோக்குகிறது. இலங்கையில் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகிவரும் ஈழத்தமிழர்களுடைய வாழ்வுரிமையை பாதுகாப்பதே இம்மாநாட்டின்

அரசாங்கத்திற்கு அளிக்கும் வாக்கு அராஜக நடவடிக்கைக்கு அங்கீகாரம் வழங்குவதாக அமையும்: சோ. யோகானந்தராஜா
தமிழ் மக்கள் த.தே.கூட்டமைப்புக்கு அளிக்கும் வாக்கு, எமக்குரிய தீர்வை உடன் வழங்க வேண்டும் என்ற செய்தியை அரசுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் எடுத்துக் காட்டுவதாக அமையும். மாறாக இந்த அரசாங்கத்திற்கு அளிக்கும் வாக்கு, அரசாங்கத்தின் அராஜக நடவடிக்கைக்கு அங்கீகாரம் வழங்குவதாக

ஜெயலலிதா இலங்கைக்கு விஜயம் செய்ய வேண்டும்!- சுப்பிரமணிய சுவாமி வலியுறுத்து
சிங்கள, தமிழ் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்காக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இலங்கைக்கு வியஜம் செய்ய வேண்டுமென ஜனதா கட்சியின் தலைவரான சுப்பிரமணிய சுவாமி இன்று கோரியுள்ளார்.

11 ஆக., 2012

அமைதி முயற்சிக்கு உதவ தென்னாபிரிக்க அரசு தயார்; கூட்டமைப்புடனான சந்திப்பில் அந்த நாட்டு அமைச்சர் உறுதி
 மூன்று தசாப்த காலப் போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையில் தேசிய நல்லிணக்கம் மற்றும் அமைதி முயற்சிகளுக்கு முழுவீச்சில் உதவுவதற்குத் தென்னாபிரிக்கா முன்வந்திருக்கிறது.கொழும்பில் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்திய சந்திப்பின்போது தென்னாபிரிக்க

டெசோ மாநாடு திட்டமிட்டபடி நடக்கும்;ஈழம் என்ற சொல்லுக்கு தடை போட முடியாது : கலைஞர்
சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வருகிற 12-ம் தேதி ஈழத்தமிழர் பாதுகாப்பு மாநாடு (டெசோ) நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இந்நிலையில் இம்மாநாட்டுக்கு அனுமதி கொடுப்பது பற்றி
HIT NEWS
சுவிசில் புங்குடுதீவு தமிழர் தொடரூந்தில்  பாய்ந்து தற்கொலை 
இன்று புங்குடுதீவு 7 ஆம்  வட்டாரம் ஊரதீ வை சேர்ந்த சுவிஸ்  கிறங்கன் நகரில் வசித்து வந்த 48 வயதான 2 பிள்ளைகளின் தந்தையான  நவரத்தினம் பா ஸ்கரசிங்கம் (ஈசன் ) என்பவரேஇவ்வாறு  தற்கொலை செய்தவர் ஆவார் -மேலதிக விபரங்கள் பின்னர் தரப்படும் 

10 ஆக., 2012


கலைஞர் கருணாநிதியால் நடத்தப்படும் டெசோ மாநாட்டுக்கு செல்வது இல்லையென த.தே.கூட்டமைப்பு தீர்மானம்
தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் திராவிட முன்னேற்றக் கழகம் நடாத்தும் டெசோ மாநாட்டில் கலந்து கொள்வது இல்லையென த.தே.கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது.

டெசோ மாநாடு சென்னையில் நடாத்த தமிழக அரசு அனுமதி மறுப்பு! வேறு எங்காவது நடாத்தலாம்

இலங்கைத் தமிழர்களின் நலன் கோரி சென்னையில் நாளை மறுநாள் திமுக தலைமையில் நடக்க இருந்த டெசோ மாநாட்டுக்கு தமிழக அரசு திடீரென இன்று அனுமதி மறுத்துள்ளது. 
இத்தகவலை சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது.

டில்ருக்சனது பூதவுடல் இன்று யாழ்ப்பாணத்தை சென்றடையும்! நாளை நல்லடக்கம்!
வவுனியா சிறைச்சாலையில் தாக்கப்பட்ட நிலையில் படுகாயமடைந்து ராகம வைத்தியசாலையில் கோமா நிலையில் இருந்த நிலையில் மரணமடைந்த மரியதாஸ் டில்ருக்சனது (வயது 36)பூதவுடல் இன்று வெள்ளிக்கிழமை  அவரது சொந்த இடமான யாழ். பாஷையூரைச் சென்றடையவுள்ளது.

இலங்கையின் நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்க எட்டு ஆலோசனைகளை வழங்கிய சுப்ரமணியம் சுவாமி
அரசியலமைப்பின் 13+ திருத்தத்தில், முதலமைச்சர்களுக்கு பொது ஒழுங்கைப் பேணுவதில் அதிகாரம் வழங்கும் சரத்துக்களைச் சேர்க்க வேண்டும் என இந்திய ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமி தெரிவித்தார்.

இலங்கையின் நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்க எட்டு ஆலோசனைகளை வழங்கிய சுப்ரமணியம் சுவாமி
அரசியலமைப்பின் 13+ திருத்தத்தில், முதலமைச்சர்களுக்கு பொது ஒழுங்கைப் பேணுவதில் அதிகாரம் வழங்கும் சரத்துக்களைச் சேர்க்க வேண்டும் என இந்திய ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமி தெரிவித்தார்.

வடக்கு கிழக்கில் தனி இராச்சியம் அமைப்பதே டெசோ மாநாட்டின் நோக்கமாகும்: ஜாதிக ஹெல உறுமய
இலங்கையில் தனி இராச்சியம் அமைக்கும் நோக்கிலேயே தமிழ் நாட்டின் தி.மு.க டெசோ மாநாட்டை நடாத்துகின்றது என அதுரலிய ரதன தேரர் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கில் தனி இராச்சியம் அமைப்பதே டெசோ

ad

ad