புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 செப்., 2012


மகிந்த ராஜபக்சவின் இந்திய விஜயம்! சுஷ்மாவுக்கு வைகோ எச்சரிக்கை
மத்திய பிரதேசத்தில் நடக்கும் விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சவை அழைத்து வருவதாகக் கூறிய பாஜக தலைவர் சுஷ்மா ஸ்வராஜை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார். 

3 செப்., 2012

ராஜபக்சேக்கு கறுப்புக் கொடி காட்ட உள்ளார் வைகோ
மகிந்த ராஜபக்சேவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொருட்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ‌நேரடியாக சென்று கறுப்புக் கொடி காட்ட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
 அதாவுல்லாவின் குண்டர்களால் தாக்கப்பட்ட நபரை பார்வையிட்டார் அமைச்சர் ஹக்கீம
அதாவுல்லாவின் குண்டர்களால் தாக்கப்பட்டு பலத்த காயங்களுக்குள்ளாகி கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றுவரும் ஆதம்லெப்பை மர்ஜூன் என்பவரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் இன்று காலை பார்வையிட்டு ஆறுதல் கூறினார். 


கடந்த மாதம் அக்கரைப்பற்றில் அமைச்சர் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவிருந்த இப்தார் வைபவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தோர், தனது வீட்டின் முன்னாலுள்ள பாதையில் டயர்கள் எரித்தபோது, அதனைத் தடுக்க முயன்றபோது அந்தக் குண்டர்களால் தனக்கு விரைவில் உயிர் ஆபத்து இருப்பதாக எச்சரிக்கை செய்யப்பட்டதாகவும், அது தொடர்பில் உடனே தாம் அக்கரைப்பற்று

அதாவுல்லாவின் குண்டர்களால் தாக்கப்பட்ட நபரை பார்வையிட்டார் அமைச்சர் ஹக்கீம்
நேற்றிரவு அமைச்சர் அதாவுல்லாவின் குண்டர்களால் தாக்கப்பட்டு பலத்த காயங்களுக்குள்ளாகி கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றுவரும் ஆதம்லெப்பை மர்ஜூன் என்பவரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர்

இலங்கையர்கள் தமிழ் நாட்டுக்கு செல்லவேண்டாம்: இலங்கை அரசாங்கம் பயண எச்சரிக்கை
இலங்கையர்கள் மறு அறிவித்தல் வரை தமிழ் நாட்டுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று இலங்கை அரசாங்கம் பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது.

புலிகளின் நீர்மூழ்கி கப்பலின் கட்டுமானங்களை பொதுமக்கள் பார்வைக்கு விட்டுள்ள படையினர்!


தமிழீழ விடுதலைப் புலிகளினால் மிகப்பிரமாண்டமான அளவில் கட்டமைக்கப்பட்டு வந்த நீர் மூழ்கி கப்பலின் கட்டுமானங்களையும் கப்பலை சோதனையிடுவதற்கான புலிகள் அமைத்திருந்த நீர்த்தடாகத்தையும் படையினர் தற்போது பொதுமக்களின் பார்வைக்காக விட்டுள்ளனர்.

யாழ்.மக்களிடம் மகிந்த ஆட்சியில் சுதந்திரம் கிடைக்கிறதா என வினவிய சந்திரிகா
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று காலை யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனைவியை தகாத வார்த்தையால் பேசிய நபரை வாளால் வெட்டிய கணவன்: யாழில் சம்பவம்
யாழ். ஆறுகால் மடம் பகுதியில் மனைவியை தகாத வார்த்தையால் பேசிய நபர் ஒருவரை, வாளால் வெட்டிய கணவனை இன்று கைது செய்துள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பா.உறுப்பினர் சி.சிறீதரனால் பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவு திட்டம்!- 2012ல் யாழ் மற்றும் கிளிநொச்சிக்கு பல்வேறு திட்டங்கள்
பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவு திட்டம் 2012ன் கீழ் பா.உ சிறீதரனால் யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு 50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக பா.உறுப்பினரின் செயலாளர் பொன்.காந்தன் அறிவகம் மூலம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
தர்மத்தின் வாழ்வுதனைச் சூதுகவ்வும் மறுபடியும் தர்மம் வெல்லும் என்பதற்கு இணங்க ஸ்ரீலங்கா சதந்திரக் கூட்டமைப்பில் கிழக்கு மாகாண சபையின் வேட்பாளர்களாக நிற்கும் சிலர் (எண்ணிக்கை குறிப்பிட விரும்பவில்லை) அவர்களே தமிழ்த் தேசியத்துக்கு வாக்களிக்க தீர்மானத்து விட்டனர் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். முதலில் சி சந்திரகாந்தன் அவர்கள் ஒரு உறுப்பினராக வரவேண்டும் என்று எண்ணுங்கள் அப்புறம் ஆப்பு யார் யாருக்கு வைக்கிறார்கள் என்று பாருங்கள்.
இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் வடக்கு – கிழக்கு மாகாணத்திற்கான தேர்தல்கள் நடைபெறும் வரை இணைந்த மாகாணத்தை நிர்வகிக்கவென இடைக்கால நிர்வாக சபையொன்றை உருவாக்க வேண்டுமென இந்திய - இலங்கை அரசுகள் தீர்மானித்ததின் பேரில் தமிழீழ விடுதலைப்புலிகள், தமிழர் ஐக்கிய விடுதலைக்



வட மற்றும் கிழக்கு பகுதிகளில் வழக்கங்களாக மாறிப்போன தமிழீழ விடுதலை புலிகள் பெண் போராளிகள் மீதான பாலியல் கொடுமைகள்



பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த மர்ம பெண் சஹானா கைது


சென்னையில் பயிற்சி பெறும் இலங்கை கால்பந்து வீரர்களை உடனடியாக திருப்பியனுப்ப ஜெயலலிதா உத்தரவு
இலங்கை கால்பந்து விளையாட்டு வீரர்களுக்கு சென்னையில் பயிற்சி அளித்துள்ளதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, அவர்களை திருப்பி அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.

தேர்தலில் மக்களின் முடிவு தெளிவாக இருந்தால் சர்வதேசம் எம்மை கைவிடாது: இரா.சம்பந்தன்
சர்வதேச சமூகம் மிகவும் உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருகின்றது. அவர்களின் பங்களிப்பு, ஆர்வம், செயற்பாடு மக்களின் ஜனநாயக முடிவில் தங்கியிருக்கின்றது. உங்களின் முடிவு உறுதியான தெளிவான முடிவாக இருக்குமாகவிருந்தால் அவர்கள் எம்மை ஒருபோதும்

முருகன், சாந்தன், பேரளிவாளன் ஆகியோரின் உயிர் காப்பதில் தமிழக முதல்வர் உறுதியாக நிற்க வேண்டும்: சீமான்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரளிவாளன் ஆகியோரின் உயிரை தூக்குக் கயிற்றில் இருந்து காக்கும் சட்டப் போராட்டத்தில் தமிழக முதல்வர் உறுதியாக நிற்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை

விடுதலைப்புலிகளை திமுக ஆதரிக்கவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறார் அன்பழகன்
தமிழீழ விடுதலைப்புலிகளை திமுக தனிப்பட்ட முறையில் ஆதரிக்கவில்லை. அதேபோல எங்களை விடுதலைப் புலிகளும் ஆதரிக்கவில்லை. திமுக கொடுத்த பணத்தைக் கூட வாங்காமல் எம்.ஜி.ஆரிடம் பணத்தை வாங்கியவர்கள் புலிகள் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் க. அன்பழகன்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் இணங்கிச்செல்ல இலங்கை தீர்மானம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் இணங்கிச் செயற்படுவது என்று இலங்கை அறிவித்துள்ளது.

இறுதிப் போரில் பங்கெடுத்த மற்றுமொரு இராணுவத் தளபதி அவுஸ்திரேலியாவில் மாரடைப்பால் மரணம்
விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கான இறுதிப் போரில் தீவிரமாகப் பங்கெடுத்த  இலங்கை இராணுவத் தளபதிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் சமந்த சூரியபண்டார அவுஸ்திரேலியாவில் மாரடைப்பால் மரணமாகியுள்ளார்.

தமிழன் மிருகத்தினைவிட கேவலமானவனா?
"தண்ணீரைத் தெளித்துவிட்டு இது தூய்மையான இடம் என்று கூறுவதால் ஓர் இடம் தூய்மையாகி விடாது. தண்ணீரால் குற்றத்தைக் கழுவ இயலாது. மனிதன் மயக்கத்திலிருந்து விடுதலை பெற வேண்டும். 

2 செப்., 2012


யாழில் தாயையும் 2வயது மகனையும் கடத்தி கப்பம் கோரிய தம்பதியர் கைது
யாழ்ப்பாணத்தில் தாய் ஒருவரையும் அவரது 2 வயது மகனையும் கடத்தி கப்பம் கோரிய இரு சந்தேகநபர்களை கைது செய்ததாக யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்தார்.

பயிற்சி பெறும் இலங்கை இராணுவ அதிகாரிகளை உடனே திருப்பி அனுப்ப நடவடிக்கை!- ஜி.கே. வாசன்
தமிழ்நாட்டில் பயிற்சி பெறும் இலங்கை இராணுவ அதிகாரிகளை விரைவில் திருப்பி அனுப்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இனி இதுபோல் நடைபெறாமல் இருக்கவும் உரிய ஏற்பாடுகள் செய்யப்படும். இவ்வாறு மத்திய கப்பல்துறை மந்திரி ஜி.கே. வாசன் தெரிவித்தார்.

மகிந்த ராஜபக்சவின் இந்திய வருகையை எதிர்த்து போராட்டம் நடத்த தயாராகும் தமிழக அமைப்புகள்!
இலங்கை ஜனாதிபதி ராஜபக்ச, வரும் 21ம் தேதி இந்தியாவிற்கு வருகிறார் ராஜபக்சவின் இந்திய வருகையை எதிர்த்து தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.

குடியேற்ற அனுமதி வழங்காவிட்டால் கருணைக் கொலை செய்யுங்கள்: தமிழ் அகதி அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் கோரிக்கை
அவுஸ்திரேலியாவில் குடியேற அனுமதி வழங்க முடியாவிட்டால், தம்மை கருணை அடிப்படையில் கொன்று விடுமாறு இலங்கை அகதி ஒருவர் அவுஸ்திரேலிய அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கை கடற்படையின் அட்டூழியம்! தமிழக மீனவர்கள் 28 பேர் கைது! எச்சரித்து விடுதலை
தமிழக மீனவர்கள் 28 பேர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றுள்ளனர். கச்சதீவு அருகே இவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் இவர்களை சுற்றிவளைத்து

யுத்த காலத்தில் விடுதலைப்புலிகள் ஆயுதங்களை மிக சுலபமாக கொள்வனவு செய்தனர்!- சவேந்திர சில்வா
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் மிகச் சுலபமாக ஆயுதங்களை கொள்வனவு செய்ததாக ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கை பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

சிங்களமயமாக்கும் அரசாங்கத்திற்கு தமிழ் மக்கள் பதிலடி கொடுக்க இத்தேர்தல் நல்ல வாய்ப்பு: ஸ்ரீகாந்தா
வடக்கும் கிழக்கும் இணைந்ததுதான் தமிழரின் தாயகம்.  இதில் ஒரு சதுர அங்குல நிலத்தைக் கூட சிங்கள மயமாக்குவதற்கு நாங்கள் தயாரில்லை என்பதை நாங்கள் இந்த தேர்தலிலே எடுத்துக் காட்டவேண்டும் என யாழ். மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஸ்ரீகாந்தா

1 செப்., 2012

இலங்கை ராணுவத்திற்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்டு சார்பில் தமிழகம் முழுவதும் இன்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. 
சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு நடந்த போராட்டத்திற்கு மாநில செயலாளர் தா.பாண்டியன் தலைமை தாங்கினார். மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, மாநில துணை செயலாளர் மகேந்திரன், நிர்வாகிகள்


நடிகர் கவுண்டமணி தாயார் காலமானார்
 நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் தாயார் காளியம்மாள் (87) உடல்நலக் குறைவு காரணமாக உடுமலைப்பேட்டையில் நேற்று காலமானார்.


காளியம்மாள் வீட்டில் நடிகர் விஜய்யின் வேலாயுதம் படப்பிடிப்பு நடந்தபோது எடுத்த படம்

காளியம்மாள், உடுமலைப்பேட்டையில் தனது மகளுடன் வசித்து வந்தார். கடந்த மாதம் மாடிப் படியில் ஏறும்போது தவறி விழுந்ததில் அவருடைய காலில் கடுமையான காயம் ஏற்பட்டது.  அதற்காக வீட்டில் இருந்தவாறே சிகிச்சை மேற்கொண்டு வந்தார். 
இந்நிலையில் நேற்று மாலை 5 மணிக்கு அவர் காலமானார். அவருடைய இறுதிச் சடங்கு உடுமலைப்பேட்டையில் இன்று மாலை நடைபெறுகிறது.


இராணுவத்திடம் சிக்கிய கிளிநொச்சி முருகன்! தீர்த்தோற்சவத்தில் ஏற்பட்ட சங்கடத்தால் மக்கள் விசனம்
கிளிநொச்சி அருள்மிகு கந்தசுவாமி ஆலயத்தில் வருடாந்த உற்சவம் நடைபெற்று வரும் நிலையில் இன்று தீர்த்தோற்சவம். இராணுவ ஆக்கிரமிப்பு அற்ற முன்னான காலங்களில் கந்தப்பெருமான் தீர்த்தம் ஆடுவதற்கு பரிவாரமூர்த்திகள் சூழ, பிரதான வீதியூடாக புறப்பட்டு கரடிப்போக்கு சந்தியில் மூன்றாம்

கிழக்கு தேர்தலின் பின்னர் கூட்டமைப்புடன் இணைவது குறித்து தீர்மானம்: ரவூப் ஹக்கீம்
கிழக்கு தேர்தலின் பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் இணைந்து கிழக்கில் ஆட்சி அமைக்கும் தீர்மானத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

செந்தூரன் புழல் சிறையில் அடைப்பு! தமிழக அரசின் அநீதி!- மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம்!
அழுத  பிள்ளைக்கு பால் தர மறுப்பது போல் தமிழக அரசு செந்தூரனுக்கு அநீதி இழைத்துள்ளது. இலங்கையில் தான் ஈழத் தமிழர்களுக்கு இத்தகைய கொடூரங்கள் நடந்து கொண்டிருக்கிறது என்றால், தமிழகத்திலும் அதே கொடுமை தான் நடக்கிறது என்பதை அறியும் போது சொல்லில் அடங்கா வேதனை தான் மிஞ்சுகிறது.
பூந்தமல்லி அகதிகள் சிறப்பு முகாமில் உள்ள முகாம் வாசிகள் அனைவரும் திறந்தவெளி சிறைச்சாலைக்கு மாற்றவேண்டும் என்ற கோரிக்கை வைத்து செந்தூரன் கடந்த 6 ம் தேதியில் இருந்து உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுப்பட்டார்.
26 நாட்கள் அவர் செய்த தொடர் பட்டினிப் போராட்டத்தில் 12 நாட்கள் தண்ணீர் கூட அருந்தவில்லை.
செந்தூரனின் போராட்டத்திற்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி , மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி பூந்தமல்லி சிறப்பு முகாமை முற்றுகையிட்டு போராட்டம் செய்து கைதாகினர்.
பல கட்சிகள் சார இயக்கங்கள் பல போராட்டங்கள், பரப்புரைகள் செய்தன.
சென்னை மதிமுக அலுவலகத்தில் தொடர் பட்டிப் போராட்டமும் நடைபெற்று வருகிறது.
இப்படி பல வகையில் போராடியும், அரசுக்கு நேரில் சென்று மனு கொடுத்தும், இவை எதுவும் தமிழக அரசின் காதுகளுக்கு விழவில்லை.
இதற்கிடையில் பத்து நாட்களுக்கு முன் செந்தூரனின் அத்தை செந்தூரனை பார்க்க இலங்கையில் இருந்து வந்தார். அவர் செந்தூரனின் உடல் நிலையை பார்த்து கவலை அடைந்தார். செந்தூரனின் பட்டினிப் போராட்டத்தை கைவிடும்படி வேண்டினார்.
ஆனால் செந்தூரன் முடிவாக மறுத்துவிட்டார். இதனால் மனமுடைந்த அவரது அத்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டது . பின்பு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனளிக்காமல் சென்னையில் காலமானார். இப்படி ஒரு துயர நிகழ்வும் நடந்தேறியுள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது.
நேற்று செந்தூரனின் உடல் நிலை மிகவும் மோசமான நிலையை எட்டியது. அவர் மயக்க நிலையை அடைந்தார். அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என சக முகாம் வாசிகள் முகாம் காவல் துறையை கேட்டுக் கொண்டதோடு செந்தூரனை தூக்கிக் கொண்டு போய் ஆய்வாளர் அறையில் போட்டனர். மாலை 5 மணிக்கு இது நடந்தது.
இதை அறிந்த மனித உரிமை ஆர்வலர்கள் சிலர் கியூ பிரிவு காவல்துறை உயர் அதிகாரி சம்பத் குமாரிடம் செந்தூரனை காப்பாற்றுங்கள் என முறையிட்டனர். அவரும் நிச்சயம் செந்தூரனை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக உறுதி அளித்தார்.
இதை தொடர்ந்து மாலை 7 மணிக்கு அரசின் நோயாளி அவசர ஊர்தி கொண்டுவரப்பட்டது. அப்போது உயிருக்கு போராடி வந்த செந்தூரனுக்கு எந்த முதலுதவியும் செய்யப்படவில்லை. காவல்துறையும் அருகில் இருந்தபடி தேநீர் அருந்தியும், பத்திரிக்கை படித்துக் கொண்டும் அலட்சியம் காட்டினர்.
சக முகாம் வாசிகள், அதிகாரிகளை கேள்விக் கேட்க தொடங்கினர்.  அதிகாரிகள், செந்தூரனுக்கு பாதிகாப்பு வாகனம் வந்து கொண்டிருகிறது, வந்ததும் செந்தூரனை மருத்துவமனைக்கு அழைத்து செல்வோம் எனக் கூறினர்.
இரவு 10 மணிவரை செந்தூரனை அழைத்து செல்லவில்லை. 10 மணிக்கு மேல் செந்தூரனை அதிகாரிகள் ஒரு அவதிப்படும் மனிதனாக கூட பார்க்காமல் வாகனத்தில் ஏற்ற இழுத்துச் சென்றனர்.
சரி, அப்போதாவது மருத்துவ சிகிச்சை அளிப்பார்கள் என்று பார்த்தால், செந்தூரனின் தளர்ந்து போன உடல் நிலையைக்கூட கருத்தில் கொள்ளாது, அவரை பூந்தமல்லியில் உள்ள நீதிபதியின் முன் கொண்டு சென்று, செந்தூரன் தற்கொலைக்கு முயன்றார் என்று குற்றம் சாட்டி, அவரை கைது செய்தது கியூ பிரிவு காவல்துறை.
இந்நிலையில், சென்னை இராயப்பேட்டை மருத்துவமனையில் திரு வைகோ, இயக்குனர் புகழேந்தி மற்றும் பல தமிழ் உணர்வாளர்கள் செந்தூரனை காண காத்திருந்தனர். செந்தூரன் அங்கு அழைத்து வரப்படுவார் என எண்ணினர்.
நள்ளிரவு 12 மணி வரை காத்திருந்த அவர்களுக்கு அதிர்ச்சி செய்தி மட்டுமே கிடைத்தது. அப்படி ஒரு அநீதியை செய்தது தமிழக கியூ பிரிவு காவக் துறை.
செந்தூரனுக்கு மருத்துவ உதவிகள் அளிக்காமல், அவரை நேரே புழல் சிறையில் கொண்டு போய் அடைத்தது.
இதை மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்பார்க்கவில்லை. இலங்கையில் தான் ஈழத் தமிழர்களுக்கு இத்தகைய கொடூரங்கள் நடந்து கொண்டிருக்கிறது என்று நினைத்தால், தாய் தமிழகம் என்று நம்பி வந்த ஈழத் தமிழர்களுக்கு தமிழகத்திலும் அதே கொடுமை தான் நடக்கிறது என்பதை அறியும் போது சொல்லில் அடங்கா வேதனை தான் மிஞ்சுகிறது.
இவ்வளவு போராட்டம் நடத்தியும், உண்ணாநிலையில் இருந்தும், பரப்புரை செய்தும், அரசுக்கு மனுக்கள் கொடுத்தும் அரசு எதற்கும் பதில் அளிக்காமல் பிடிவாதமாக செந்தூரனின் அறவழிப் போராட்டத்தை முடக்கும் விதமாக அவரை கைது செய்து சிறையில் அடைப்பது அராஜகத்தின் உச்சகட்டம் என மனித உரிமை ஆர்வலர்கள் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அழுத பிள்ளைக்கு பால் என்ற பழமொழி பொய்த்தது போல் செந்தூரனின் அழுகுரலை ஏற்கவே மறுத்தது தமிழக அரசு.
இப்படியானதொரு அநீதியை தமிழக அரசு செய்து கொண்டிருக்கும் போது, இலங்கையில் உள்ள ஈழத்தமிழர்களுக்கு இந்த அரசு நீதி பெற்றுத் தருவோம், மறுவாழ்வு பெற்றுத் தருவோம் என்று சொல்வது வெறும் கண்துடைப்பு நாடகம் தான் என்பது தெளிவாக தெரிகிறது.

செந்தூரனின் உடல் நிலை கவலைக்கிடம்.







செந்தூரன்
உண்ணாநிலைப் போராளி.
அவரது கொள்கையிலும் நிலைப்பாட்டிலும்
சரியாகவிருக்கிறார். பாராட்டுகிறேன்.

ஈழத்தமிழர்களை முகாம்களிலும், சிறப்புமுகாம்களிலும், அடைத்துவைப்பது , அதுவும் போர் முடிந்த காலமாக கருதும், இந்நாட்களிலும் கைதியாக வைத்திருப்பது முறையா? அப்படியாயின், அவர்களைவிசாரணைக்குட்படுத்தவேண்டும், அல்லது விடுவிக்கவேண்டும்,

செந்தூரன் கைது  செய்யப்பட்டார்
திறந்த வெளி முகாமுக்கு அகதிகளை மாற்றக்கோரி செந்தூரன் என்பவர் கடந்த 26 நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். 
ராஜீவ் காந்தி படுகொலை! திடுக்கிடும் தகவல்களை வெளியிட போகிறார் திருச்சி வேலுச்சாமி!
 
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குறித்து பல திடுக்கிடும் தகவல்களுடன் ஒரு புத்தகத்தை எழுதி வருகின்றார் திருச்சி வேலுச்சாமி.
பதவியில் உள்ளவர்களும், அரசியலில் உள்ளவர்களும் ஓய்வு பெற்ற
பிரபாகரனின் வீட்டை பார்வையிட்ட தென்னிலங்கை பெண் தவறி விழுந்து மரணம்
 
தேசியத்தலைவர் பிரபாகரனின் வீட்டைச் சுற்றிப்பார்த்துக் கொண்டிருந்த கொழும்பைச் சேர்ந்த வயோதிபப் பெண்ணொருவர் அவ் வீட்டிற்குள் தவறிவிழுந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து
திருச்சியில் சிங்கள மாணவர்களை எதிர்த்து ஆர்ப்பாட்டம்! நிகழ்வின் இடைநடுவில் வெளியெறிய மாணவர்கள்
 
தமிழகத்தின் திருச்சியில் அமைந்திருக்கும் கலைக்காவேரி நுண்கலைக் கல்லூரியில் கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்ற சிங்கள மாணவர்களை எதிர்த்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

31 ஆக., 2012



புலம்பெயர் இளையோருக்கு உரிமையுடன் அவசர மடல்

அன்பார்ந்த புலம்பெயர் இளையோர்களே!!!

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மிக முக்கியமான பணி உங்கள் கைகளுக்கு மாறுவதாக தமிழீழ தேசியத் தலைவர் 2008 மாவீர் தின உரையிலேயே அறிவித்திருந்தார். 2009 இல் வரலாறு காணாத இனப்படுகொலையை சந்தித்திருந்தது தமிழினம். லண்டன் உட்பட வெளிநாடுகள் எங்கும் புலம்பெயர் தமிழர்கள்

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் மனைவி மிஷலை கருப்பர் இன அடிமைப் பெண் போல் சித்தரித்து
அரை நிர்வாண கோலத்தில் மார்பிங் செய்யப்பட்ட படத்தை வெளியிட்டு ஸ்பெயின் நாட்டு பத்திரிக்கையொன்று சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஒரு கருப்பர் இனத்துப் பெண் மேலாடை இல்லாமல், வெற்று மார்புகளுடன் இருப்பது போல அந்தப் படம் உள்ளது.
ஆனால் முகம் மட்டும் மிஷல் ஒபாமாவுடையது. மார்பிங் செய்து முகத்தை மட்டும் மிஷல் முகமாக

''திரையிசைச் சக்கரவர்த்தி''... எம்.எஸ்.விக்குப் புதிய பட்டம் கொடுத்த ஜெயலலிதா!

 jaya gives new title msv

ஆண்டுதோறும் பில்லாக் வானொலி மற்றும் தொலைக்காட்சி உரிமக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இம் முறையினை மாற்றி கூடுதல் மதிப்பு வரி விதிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு ஒரு மசோதாவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
ஜீவாவின் ‘முகமூடி’ படம் நாளை ரிலீசாகிறது. இதில் சூப்பர்மேன் கேரக்டரில் நடித்துள்ளார். மிஸ்கின்11 கிலோ உடை அணிந்து 'முகமூடி' படத்தில் கஷ்டப்பட்டு நடித்தேன்: நடிகர் ஜீவா இயக்கியுள்ளார். ‘முகமூடி’ படத்தில் நடித்த அனுபவம் பற்றி ஜீவா கூறியதாவது:- 

‘முகமூடி’ குழந்தைகள் முதல் எல்லோரும் ரசிக்கு
ஜீவாவின்
சென்னை உயர்நீதிமன்ற 150வது ஆண்டு விழா! ஜெ.வை அனுமதிக்கக் கூடாது! வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

சொத்து குவிப்பு வழக்கில் சிக்கியுள்ள ஜெயலலிதா சென்னை உயர்நீதிமன்ற 150வது ஆண்டு விழாவில் கலந்துகொள்ளக் கூடாது என வலியுறுத்தி உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சொத்து குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மனைவியுடன் கோர்ட்டில் ஆஜர்
திருச்சி மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் கூறப்பட்டது. 


ஜெ., பங்கேற்ற விழாவில் எம்.எஸ்.வி, ரஜினி,கமல், இளையராஜா,எஸ்.பி.பி.  ( படங்கள் )
 மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி ஆகியோருக்கு பாராட்டு வழங்கும் விழாவில் கலந்து கொண்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா பேசினார். 

இலங்கை ராணுவ அதிகாரிகள் பயிற்சிக்கு கண்டனம்: ரெயில் மறியல் செய்தவர்கள் கைது
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வெலிங்டனில் உள்ள ராணுவ முகாமில் இலங்கையைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகள் 2 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஈழத் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை ராணுவத்துக்கு பயிற்சி அளிப்பதா?

விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வெட்டிக்கொலை: புதுச்சேரியில் பரபரப்பு
புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர் மணவாளன் என்வரை சோனாம்பாளையம் என்ற இடத்தில் மர்ம கும்பல் ஒன்று வெட்டி படுகொலை செய்தது.

சென்னை: 40க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்தன
சென்னையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பட்டினப்பாக்கம் ஸ்ரீனிவாசபுரத்தில் 40க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து நாசமாகின. தீயை அணைக்க 3 வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் சென்றனர். 

இந்தோனேசியாவில் மூழ்கிய படகு! கடலில் தத்தளித்த 55 பேர் இதுவரை மீட்கப்பட்டனர்-video
இந்தோனேசியக் கடலில் தஞ்சக் கோரிக்கையாளர்களை ஏற்றிச் சென்ற படகொன்று மூழ்கி ஒரு நாள் கடந்துவிட்ட நிலையிலும் அதில் பயணித்தவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் நடந்து வருகின்றன. கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த நிலையில் 55 பேர் வரையில் இதுவரை மீட்கப்பட்டிருக்கிறார்கள்.
திரைப்பட கலைஞர்களுக்கு விருந்தளித்த ஜெயலலிதா
தமிழக முதல்வர் ஜெயலலிதா தன்னுடன் நடித்த திரைப்பட நடிகர்- நடிகைகளை அழைத்து விருந்தளித்தார்.
மெல்லிசை மன்னர்கள் எம்எஸ் விஸ்வநாதன் - ராமமூர்த்திக்கு திரை இசைச்சக்கரவர்த்தி என்ற புதிய பட்டத்தை வழங்கி முதல்வர் ஜெயலலிதா கௌரவித்தார்.

இலங்கை இராணுவ பயிற்சி விவகாரம்! இந்திய பாராளுமன்றம் 7வது நாளாக இன்றும் முடக்கம்
நிலக்கரி ஊழல் பிரச்சனைக்கு தார்மீக பொறுப்பேற்று பிரதமர் பதவி விலக கோரி பிஜேபி உறுப்பினர்கள் இன்றும் அமளியில் ஈடுபட்டதால் 7வது நாளாக பாராளுமன்றத்தின் நடவடிக்கைகள் முடங்கின.
 இன்று கிளிநொச்சி கந்தசாமி கோவிலின்பக்தர்கள் புடைசூழ வீதியில் கந்தப் பெருமானின் முத்தேர் பவனி இடம் பெற்றது.


கிளிநொச்சி நகரின் அணிகலனாக விளங்கும் ஆலய வருடாந்த உற்சவம் நடைபெற்று வருகின்றது.
முதன் முறையாக இந்த


சிங்களப் படையினருக்கு இராணுவப் பயிற்சியளிப்பதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகங்களை செப். 4ம் நாள் விடுதலைச் சிறுத்தைகள் முற்றுகையிடப் போவதாக  விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.
சிங்களப் படையினருக்கு இந்திய அரசு தமிழகத்திலோ அல்லது இந்தியாவின் பிற பகுதிகளிலோ பயிற்சி அளிக்கக் கூடாது என்று தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும்

கடலில் காவியமான அப்பாவுக்கு ஒரு கப்பல்
கடந்த இருவாரங்களாக மட்டக்களப்பைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சில முன்னாள் போராளிகளைச் சந்தித்து அவர்களின் இன்றைய வாழ்க்கைச் சிக்கல்களைத் தீர்க்கும் வகையில், வெளிநாட்டில் உள்ள சில நண்பர்களின்

மட்டு. போதனா வைத்தியசாலை குளியலறைகளில் இஸ்லாமியச் சின்னங்கள்: முஸ்லிம்கள் கவலை
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் குளியலறைகள் பலவற்றில் இஸ்லாமிய சின்னங்கள் பொறிக்கப்பட்ட தரையோடுகள் பொருத்தப்பட்டமை குறித்து அப்பிரதேச முஸ்லம்கள் கவலை

30 ஆக., 2012


பிரபாகரன் ஆயுத இரைச்சல்களும் மரணக் கூச்சல்களும் நிறைந்த போர்ச் சூழலில் பகையை எதிர்த்துப் படையை நடத்தும் ஒரு மாவீரன் - திருமாவளவன்
தமிழ்நாட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் விகடன்

கிழக்கில் சூடுபிடிக்கும் தேர்தல் பிரசாரம்! அரசின் நாடகம் தலைகீழாக மாறும் நிலை! அமைச்சர் ஹக்கீம்
கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடாத காரணத்தினால் தான் தமிழ் பிரதேசங்களில் தேர்தல் மோசடிகளைச் செய்து, அமைச்சர் அதாவுல்லாவினால் களமிறக்கிய மூன்று வேட்பாளர்களும் வெற்றிபெற முடிந்தது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

சுன்னாகத்தில் குடிநீர்க் கிணறுகளில் எண்ணெய்க் கசிவுகள்!-ஆய்வின் மூலம் வெளியான அதிர்ச்சித் தகவல்
யாழ்.சுன்னாகத்திலுள்ள பொது மக்களது பல குடிநீர்க் கிணறுகளில் உள்ள நீரில் எண்ணைக்கசிவுகள் கலந்துள்ளது ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

இலங்கையில் காணாமல்போனவர்களின் நிலைகுறித்து பிரத்தியேக கவனம் செலுத்துங்கள்: நா.தமிழீழ அரசாங்கம் கோரிக்கை
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 21வது கூட்டத் தொடரில், இலங்கைத் தீவில் காணாமல்போயுள்ளவர்களின் நிலைகுறித்து, பிரத்தியேக கவனம் செலுத்த வேண்டுமென, காணாமல்போனோருக்கான ஐ.நாவின் ஆய்வுக்குழுவிடம், நாடுகடந்த தமிழீழ

29 ஆக., 2012

 டென்மார்க்கில் நடந்த உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியில் சுவிட்சர்லாந்து அணி வெற்றியீடி உள்ளது - லிஸ் யங் ஸ்டார்  அணி வீர்கள் நான்கு பேர் இந்த அணியில் இடம்பெற்று இருந்தனர்


செங்கல்பட்டு அகதி முகாம் முற்றுகைப் போராட்டம்: திருமாவளவன் உட்பட 500 பேர் கைது
பூந்தமல்லி அருகே கரையான்சாவடியில் உள்ள இலங்கை அகதிகள் சிறப்பு முகாமையும், செங்கல்பட்டு சிறப்பு அகதிகள் முகாமையும் மூடக்கோரி திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கை இராணுவ அதிகாரிகளை திருப்பி அனுப்புமாறு மத்திய அரசிடம் ஞானதேசிகன் வேண்டுகோள்
நீலகிரி மாவட்டம் வெலிங்டன் இராணுவ  முகாமில்  பயிற்சி பெறும் இலங்கை இராணுவ அதிகாரிகளை திருப்பி அனுப்ப வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமை முஸ்லிம் சமூகத்தை விற்க தலைமை முயல்கிறது: பைஸர் முஸ்தபா
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்ட நோக்கத்தை மறந்து இன்றைய தலைமை பணத்திற்காகவும் பதவிக்காகவும் முஸ்லிம் சமூகத்தை விற்பதற்கு தயாராகி விட்டது என பிரதி அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

நிந்தவூரில் வாகன விபத்து: 6 பேர் ஸ்தலத்திலே பலி
அம்பாறை மாவட்டத்தில், நிந்தவூர் அட்டப்பளம் பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முச்சக்கர வண்டி மீது பஸ் ஒன்று மோதியதால், முச்சக்கர வண்டியில் பயணம் செய்த வாகன சாரதி உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளதாக, கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுதலைப் புலிகள் அழிந்துவிட்டார்கள் என்பது தவறான கருத்து!- அரியநேத்திரன் பயங்கரமான புலி: ஹிஸ்புல்லா உறுமல்
தமிழீழ விடுதலைப் புலிகள் எல்லாம் அழிந்துவிட்டார்கள் என்பது தவறான கருத்து தமிழ் கூட்டமைப்பிற்குள் இருக்கும் “அரியம்” என்கின்ற அரியநேத்திரன் பயங்கரமான புலி என கிழக்கு மாகாண சபைத்
கனடா - புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் நடத்திய ஒன்றுகூடல் -விளையாட்டு போட்டியில் சில காட்சிகள் 


புங்குடுதீவு பழைய மாணவா் சங்கம்(கனடா) அமைப்பினால் வழங்கப்பட்ட மூன்று லட்சம் ரூபா நிதி உதவியுடன் போரினால் தனது இடது காலை துடையுடன் இழந்து வறுமையில் வாடும் கார்த்திகேஸ்வரி அவா்களுக்கு சுயதொழில் செய்வதற்காக 455000பெறுமதியான

28 ஆக., 2012


செங்கல்பட்டு முகாமிலிருந்து 7 இலங்கைத் தமிழர்கள் விடுதலை! தமிழக அரசு உத்தரவு
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள 7 இலங்கைத் தமிழ் அகதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் இவர்களின் குடும்பத்தாரும், ஈழத் தமிழ் ஆதரவு அமைப்புகளும், கட்சிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வாந்தி ௭டுத்த தங்கைக்கு மீண்டும் தூக்க மருந்தை வாயில் ஊற்றினேன்! முக்கொலை சந்தேகநபர்
தூக்க மருந்துக்கள் கலந்த பழச்சாற்றை அப்பாவுக்கும் அம்மாவுக்கும் கொடுத்தபோது அம்மா மளமளவென பருகிவிட்டார். அப்பாவோ கொஞ்சம் குடித்து விட்டு கசக்கிறது ௭ன்றார். புதுப் பழங்கள் ௭ன்றால் அப்படித்தான் இருக்குமென்று கூறவே அவரும் குடித்துவிட்டார்.


மதுரை ஆதீனம் உடல் நிலை மோசம் ; சென்னை ஆஸ்பத்திரியில் அனுமதிக்க
விமானம் மூலம் அழைத்துவரப்படுகிறார்


ஈழத் தமிழர்களுக்கான அந்த அமைதி திட்டத்தை நிறைவேற்றாமல் போனதற்கு வைகோவுக்கும் பங்கு உண்டு: க.அன்பழகன்
ஈழத் தமிழர்களுக்கு நன்மை செய்யும் அமைதித் திட்டத்தை தடுத்ததில் வைகோவுக்கும் பங்கு உண்டு என்று திருப்பூரில் நடைபெற்ற டெசோ மாநாட்டு தீர்மான விளக்கக் கூட்டத்தில் திமுக பொதுச் செயலர் க.அன்பழகன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலும் கூட்டமைப்பினருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களும்!
கலர் கலராக போஸ்டர்கள்... நினைத்துப் பார்க்க முடியாத வாக்குறுதிகள்... துண்டுப் பிரசுரங்கள்.... என பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது கிழக்கு மண்ணில் மாகாண சபைத் தேர்தலை நோக்கி...!

அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானங்கள்!
தமிழக முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா தலைமையில், அதிமுக செயற்குழுக் கூட்டம் சென்னை அதிமுக தலைமையகத்தில் இன்று மதியம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள இலங்கை தொடர்பான தீர்மானங்கள் வருமாறு:

மாகாண தேர்தலில் ஒதுங்கியிருந்தால் வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கே வாக்களித்திருப்பேன்! கருணா
தமிழன் ஒருவன் முதலமைச்சராக வர வேண்டும் என்பதற்காக கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் இருந்து ஒதுங்கிக் கொள்கிறோம் என்றும் வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவோம் என்றும் கூட்டமைப்பினர் கூறியிருந்தால் நான் கூட தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குத் தான் வாக்களித்திருப்பேன் எ

புலிகளின் தலைவரின் இருப்பிடத்தை பார்வையிட ஆயிரக்கணக்கில் படையெடுக்கும் சிங்கள மக்கள
புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளில் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இருப்பிடம் என கூறப்படும் இடத்தினை பார்வையிடுவதற்காக ஆயிரக்கணக்கான சிங்கள மக்கள்

நீதிபதி அச்சுறுத்தல் விவகாரம்: அமைச்சர் றிஷாட் பிணையில் விடுதலை! 20 சட்டத்தரணிகள் சகிதம் ஆஜர்
மன்னார் நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் இன்று நீதிமன்றத்தில் 20 சிரேஷ்ட சட்டத்தரணிகள் சகிதம் ஆஜரான அமைச்சர் றிஷாட் பதியுதீன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் கொலை குற்றவாளிக்கு மரண தண்டணை
ஐக்கிய தேசியக் கட்சயின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான தி.மகேஸ்வரன் கொலை சம்பத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் மரணதண்டை

தமிழ்நாடு எதிர்த்தாலும் இலங்கை படையினருக்கு பயிற்சிகளை இந்தியா வழங்கும்! பள்ளம் ராஜூ
தமிழக கட்சிகள் தொடர்ந்தும் தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்ற பொழுதிலும், இலங்கை பாதுகாப்பு படைத்தரப்பினருக்கான பயிற்சிகளை இந்தியா வழங்கும் என இந்திய பாதுகாப்பு ராஜாங்க
அதிமுக செயற்குழு கூட்டத்தில் கருணாநிதியின் கபட நாடகத்திற்கு கண்டனம்
தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா தலைமையில், அதிமுக செயற்குழுக் கூட்டம் சென்னை அதிமுக தலைமயகத்தில் இன்று மதியம் நடைபெற்றது.

உயிரிழப்புகளை சந்தித்த எம்மினம் உரிமைக்கான குரலை இழந்திருக்குமென அரசு தப்புக்கணக்குப் போடுகிறது: சித்தார்த்தன்
உயிரிழப்புகளுக்கும் அழிவுகளுக்கும் முகங்கொடுத்த எமது இனம், உணர்வுகளையும் உரிமைகளுக்கான குரலையும் இழந்திருக்கும் என்று அரசு தப்புக்கணக்குப் போடுகிறது. இந்த அரசுக்கு சரியான பாடத்தை

நீதிபதி சரோஜினி இளங்கோவனை தாக்கிய பெண்ணை நீதிமன்றில் ஆஜராக உத்தரவு
முன்னாள் நீதிபதியும் சட்டத்தரணியுமான சறோஜினி இளங்கோவன் மீது  தாக்குதல் நடத்திய பெண்ணை 29ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இலங்கை வீரர்களுக்கு பயிற்சியளித்த இராணுவ முகாமுக்குள் நுழைய முயன்ற 30 பேர் கைது
இந்தியாவில், இலங்கை இராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாம் தமிழர் கட்சியினர் இன்று குன்னூரில் போராட்டம் நடத்தினர்.

27 ஆக., 2012


பிரேமதாசா விளையாட்டரங்கில் நடைபெற்ற SLPL போட்டியில் தென்னாபிரிக்க வீரர் ரில்லி ரூசாவின் முகம் உடைந்து இரத்தகலறி ஆகியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இலங்கையின் மலிங்க 140KM/Hவேகத்தில் வீசிய பவுன்சர் பந்து ரிள்ளியின் முகத்தை நேரடியாக பதம் பார்த்தது. நேரடி வீடியோ காட்சி உங்களுக்காக இணைக்கபட்டுள்ளது.

ad

ad