புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 செப்., 2012


விஜய் நடித்த 'காவலன்' படத்தின் வெளியீட்டிற்கு தான் பிரச்னை எழுந்தது. ஆனால் 'துப்பாக்கி' படத்திற்கு தலைப்பே பெரும் பிரச்னையை ஏற்படுத்தி இருக்கிறது. 
'துப்பாக்கி' தலைப்பு பிரச்னையை ஒன்பதாவது முறையாக ஒத்திவைத்து இருக்கிறது சென்னை நீதிமன்றம். மும்பையில் அனைத்து படப்பிடிப்புகளையும் முடித்து விட்டு சென்னை திரும்பி இருக்கிறது 'துப்பாக்கி' படக்குழு.


சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் பயனுள்ள வகையில் கவனிக்கப்படவில்லை: ஐ.நா சபையில் கரன் பார்கர் அம்மையார்
இலங்கைத்தீவில் தமிழ் மக்களுக்கும் விடுதலை புலிகளுக்கும் எதிராக சிங்கள அரசினால் மேற்கொள்ளப்பட்ட பாரியளவிலான மனித உரிமைச் சட்ட மீறல்கள் பயனுள்ள முறையில் இன்னமும் கவனிக்கப்படாமல் உள்ளதென்பதனை ஐ.நா மனித உரிமைச்சபையோருக்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்

தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் கற்றுக் கொள்ளுங்கள்!
இன்றைய அரசியலில் பணம் , பதவி, மற்றும் இதர வாய்ப்புளுக்கு சோடை போகாத அரசியல் கட்சிகளையும் அரசியல்வாதிகளையும் காணுவது அரிதாகவே உள்ளது. இந்த வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சற்று எதிர் மறையாகவே உள்ளது எனலாம்.

ஆடையில் தீப்பற்றியதால் பரிதாபகரமாக உயிரிழந்த கர்ப்பிணித் தாய்: மன்னாரில் சம்பவம்
மன்னார், வெள்ளாங்குளம் பிரதேசத்தில் எட்டு மாத கர்ப்பிணித்தாய் ஒருவர் ஆடையில் தீப்பற்றியதால் பரிதாபகரமாக இன்று உயிரிழந்துள்ளார்.


விகடன்
டக்ளஸ்... பொலிஸ் கண்ணாமூச்சி! பொலிஸ் பதில் சொல்லுமா?

இந்தியாவில் 'குற்றவாளி’. இலங்கையில் 'அமைச்சர்’. அத்தகைய 'பெருமை’ டக்ளஸ் தேவானந்தாவுக்கு உண்டு!  டக்ளஸ் தேவானந்தா இப்போது, இலங்கை அமைச்சராக இருந்தாலும் தமிழகத்தில் 18 ஆண்டுகளாக தேடப்படும் குற்றவாளி.

தமிழக சட்டப்பேரவை சபாநாகயர் பதவியை ராஜினாமா செய்தார் டி.ஜெயக்குமார்!


தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் பதவியில் இருந்து டி.ஜெயக்குமார் ராஜினாமா செய்தார். பேரவைத் தலைவர் பணிகளை துணைத் தலைவர் தனபால் கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தம்புள்ள பள்ளிவாசலைச் சுற்றியுள்ள வீடுகள் மற்றும் கடைகளை அகற்றுமாறு உத்தரவு
தம்புள்ள பள்ளிவாசலைச் சுற்றியுள்ள சகல வீடுகளினதும் கடைகளினதும் உரிமையாளர்கள் அடுத்த மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் வெளியேற வேண்டுமென நகர அபிவிருத்தி அதிகார சபை உத்தரவிட்டுள்ளது.

வாழ்வாதாரத்திற்கு வழிதேடிச் சென்ற யாழ். திருவடிநிலை மக்களுக்கு ஒற்றுமையை சொல்லிக் கொடுத்த ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர்!
யாழ். மாதகல், திருவடிநிலை பகுதியில் படையினரால் கரையோரம் முழுவதும் விழுக்கப்பட்டுள்ள நிலையில் நீதி கேட்ட மக்களுக்கு நீதி சொல்லச் சென்ற ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அயல் கிராமத்து
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து, கடந்த சில தினங்களில் வடக்கில் பெருமளவும் போர் ஆயுதங்கள் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டிருப்பதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே பொலிஸார் மேற்படி விடயத்தை தெரியப்படுத்தியிருக்கின்றனர்.

பாலியல் தொழிலை இலங்கையில் சட்ட ரீதியாக்குமாறு கொழும்பு மாநகரசபை ஐதேக உறுப்பினர் கோரிக்கை!
இலங்கையில் நாட்டில் பாலியல் தொழிலை சட்ட ரீதியாக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாநகரசபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் நதில் மாலகொடவே இக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது அவுஸ்திரேலியா
டி20 உலக கிண்ண தொடரின் சூப்பர்-8 பிரிவில் இன்றைய போட்டியில், இந்திய அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது அவுஸ்திரேலியா.

இலங்கை இந்திய நாடுகளில் இருந்து விபச்சாரத்துக்காக டுபாய்க்கு பெண்கள் கடத்தல்
இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து பெண்களை துபாய்க்கு அனுப்பி அங்கு மேற்கொள்ளப்பட்டு வந்த விபச்சார வர்த்தக செயற்பாடு ஒன்று குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

28 செப்., 2012


கூட்டமைப்பை ஆதரிக்காமை மு.கா. செய்த பெரும் துரோகம்; கொழும்பு மேயர் முஸம்மில் குற்றச்சாட்டு
 கிழக்கில் முதலமைச்சர் பதவியுடன் ஏனைய அமைச்சுப் பதவிகளையும் நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் என எதுவித நிபந்தனைகளும் இன்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் தரப்பினருக்கு அழைப்பு விடுத்தது.
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றால், என் ஆடைகளை துறக்க தயார் என்று பிரபல பொப் பாடகி மடோனா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வாஷிங்டனில் கடந்த 24ஆம் திகதி இரவு பொப் பாடகி மடோனாவின் இசை நிகழ்ச்சி

விடுதலைப் புலிகளின் தடை மீதான தீர்ப்பாய விசாரணையில் வைகோ பங்கேற்பார்!
விடுதலைப் புலிகளின் தடை மீதான சட்டத் தீர்ப்பாயத்தின் விசாரணையில் வைகோ பங்கேற்பார் என்று மதிமுக செய்தி வெளியிட்டுள்ளது.

பசில் ராஜபக்சவை கல்வி அமைச்சராக நியமிக்க ஜனாதிபதி தீர்மானம்?
கல்வி அமைச்சுப் பொறுப்பை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது சகோதரரும், தற்போதைய பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஸில் ராஜபக்சவுக்கு வழங்கத் தீர்மானித்துள்ளதாக நம்பகரமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கும் ஜனாதிபதிக்குமிடையில் முரண்பாடு
அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்குமிடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஜனாதிபதி அழைப்பு
தமிழ் தேசிய கூட்டமைப்பை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து கொள்ளுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.

பிள்ளையான் ஆறாயிரத்துக்கும் குறைவான வாக்குகளையே பெற்றதாக கருணா குற்றச்சாட்டு!
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு ஆறாயிரத்துக்கும் குறைவான வாக்குகளை

விருப்பு வாக்கு முறைமையில் திருத்தம் கொண்டு வரும் சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்: ஜனாதிபதி
விருப்பு வாக்கு முறைமையில் திருத்தம் கொண்டு வரும் சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ad

ad