புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 நவ., 2012


ராம்ஜெத்மலானிக்கு பாஜக  நோட்டீஸ் வழங்கியது
பாரதீய ஜனதா கட்சித் தலைவர் நிதின் கட்காரி பதவி விலக வேண்டும் என்று புதிய சி.பி.ஐ. தலைவர் நியமனத்தில் மத்திய அரசு தவறு செய்யவில்லை என்றும் கருத்து தெரிவித்த பாரதீய ஜனதா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான

தாக்கியதாக புகார்!  பிரபல கவர்ச்சி நடிகையை தேடுகிறது போலீஸ்!
 

சென்னையை அடுத்த ஈஞ்சம்பாக்கத்தில் சினிமா தியேட்டரில் கார் நிறுத்துவதில் 2 தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் நடிகை புவனேஸ்வரி மற்றும் ஆதரவாளர்கள் தியேட்டரை சூறையாடி, போலீசாரை தாக்கியதாக புகார் கூறப்பட்டுள்ளது.

அதிமுக அமைச்சரை பதவி நீக்கம் செய்யக்கோரி ஜெயலலிதா வீட்டு முன்பு எம்எல்ஏ முற்றுகை
அதிமுக அமைச்சர் மாதாவரம் மூர்த்தியை பதவி விலக்கக்கோரி, அம்பத்தூர் எம்எல்ஏ வேதாச்சலம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் போயஸ் கார்டனில் குவிந்தனர். அவர்கள் தங்கள்

மாவீரர் நாள் : திருமாவளவன் உரையாற்றுகிறார்
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனால் அறிவிக்கப்பட்ட நவம்பர் -27 மாவீரர் நாள் நிகழ்வுகளை, ஒவ்வோர் ஆண்டும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி  தொடர்ச்சியாக நடத்தி வருகிறது.

ஈழ தமிழர்களுக்கு எல்லாளன் படையின் வேண்டுகோள்
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் எல்லாளன் படை ஒரு அறிக்கை விடுத்துள்ளது. அவ்வறிக்கையில்,
’’எமது விடுதலைப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் முடிவடைந்து விட்டதாக


விசாரணைக்கு வருமாறு சிறிதரன் எம்.பி. க்கு அழைப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரனை விசாரணக்கு வருமாறு குற்றத் தடுப்பு புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.

13வது திருத்தத்தை ரத்துச்செய்ய முயன்றால் தீர்க்கமான முடிவினை எடுக்கவேண்டி வரும்!- ஸ்ரீ.மு.கா. ஜனாதிபதிக்கு கடிதம்
அரசியலமைப்பிலிருந்து 13வது திருத்தச் சட்டத்தை ரத்துச் செய்யும் முயற்சியை அரசாங்கம் உடனடியாக கைவிட வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் தீர்க்கமான முடிவுகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எடுக்கும் என்று தெரிவித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு கடிதம்

நாகப்பட்டணம் கடற்கரைக்கு மர்மமாக வந்து மறைந்த விசைப்படகில் வந்த 50 பேர் யார்!
நாகப்பட்டணம் கடற்கரைக்கு ஒரு மர்மமான விசைப்படகு கரை தட்டி நின்றுள்ளது. அதில் 50க்கும் மேற்பட்டோர் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் அனைவரும் மாயமாகி விட்டனர்

தலைவரின் பிறந்தநாள் சுவரொட்டிகள் மீண்டும் யாழ் பல்கலைக்கழகத்தில் ஒட்டப்பட்டுள்ளன!
இன்று யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் தமிழீழ தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை ஒட்டிய வாழ்த்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு காணப்படுகின்றன.
பட்டதாரிகளின் ஆர்ப்பாட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து ஜனாதிபதி : ஹக்கீம்
நீதியமைச்சிற்கு புதிதாக சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ள 195 பட்டதாரிகளுக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு கொழும்பு-12 இல் அமைந்துள்ள இலங்கை சட்டமன்றத்தின் கேட்போர் கூடத்தில்
கிழக்குப் பல்கலைக் கழகத்தில் மாவீரர் தின சுவரொட்டிகள் : படையினரால் அகற்றப்பட்டன
கிழக்குப் பல்கலைக்கழகம் வந்தாறுமூலை வர்த்தக பீடத்தை சுற்றியுள்ள சுவர்களில் இன்று திங்கட்கிழமை ஒட்டப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் மாவீரர் தின சுவரொட்டிகள் படையினரால் அகற்றப்பட்டன.
கிரேண்ட்பாஸ் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் 3 வயது குழந்தை ஆகியோர் சற்றுமுன்னர் வீடொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.மூவரும் நஞ்சருந்தி பலியான நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
தீர்வின்றேல் சாகும் வரை போராட்டம் : செல்வம் எம்.பி.தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு விரைவில் உறுதிப்படுத்தப்படாவிட்டால் ஜனவரியில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்வரவு-செலவுத்திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 

பொலிஸார் என கூறி தமிழ் வியாபாரி வீட்டில் கொள்ளை
பொலிஸார் என தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட 7 பேர் அடங்கிய குழு கிரேண்ட்பாஸ் டிமேல் தொடர்மாடி தொகுதியில் உள்ள தமிழ் வியாபாரியொருவரின் வீட்டில் சுமார் 40 பவுண் நகை மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு பணம் என்பவற்றை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.


சவூதியில் சிறைவாசம் அனுபவித்த 60 பேர் நாடு திரும்பினர்
சவூதி அரேபியாவில் நிர்கதி நிலைக்குள்ளாகியும் சிறையில் அடைக்கப்பட்டும் இருந்த 60 தமிழ் , முஸ்லிம் ,சிங்கள இளைஞர்கள் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
 


மட்டக்களப்பு, அம்பாறை, அனுராதபுரம், பதுளை, குருநாகல் மாவட்டங்களைச் சேர்ந்த குறித்த நபர்கள் சித்ததா நகரிலுள்ள சிறையில் 2 முதல் 7 மாதம் வரை சிறைவாசம் அனுபவித்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.


உலகப் பிரசித்தி பெற்ற நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சனத் ஜயசூரிய மூன்றாவது தடவையாக திருமணம் செய்து உள்ளார்.
இத்திருமணம் கல்கிசையில் உள்ள விகாரை ஒன்றில் நேற்று காலை மிகவும் இரகசியமான முறையில் இடம்பெற்றது.
விரல் விட்டு எண்ணக் கூடிய தொகையினரே திருமணத்துக்கு அழைக்கப்பட்டு இருந்தார்கள்.
ஊடகங்களுக்குக்கூட அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கவில்லை.
மணமகள் மலீகா. எல்லோரையும் ஆச்சரியப்படுத்தக் கூடிய விடயம் என்னவென்றால் இவர் மூன்றாவதாக தெரிவு செய்து உள்ள மனைவியும் ஒரு விமானப் பணிப் பெண் என்பதுதான். மலீகா ஒரு நடிகையும் ஆவார்.

முதலிரவு அன்றே தம்பதியரிடையில் கடும் சண்டை 


யாழ். தென்மராட்சிப் பகுதியில் நடந்த கலியாண வீட்டில் அன்று இரவே புதுமணத்தம்பதியரிடையே பெரும் சண்டை வெடித்துள்ளது. கடந்த வாரம் தென்மராட்சிப் பகுதியில் திருமணம் நடைபெற்ற அன்று இரவே தம்பதிகள் முட்டி மோதிக் கொண்டனர்.

காதலர்களின் சில்மிச கூடாரங்களாக மாறிவரும் வெள்ளவத்தை கடற்கரை!


எனினும் காதல் என்ற பெயரில் இளைஞர்கள் புரியும் அட்டகாசத்தினால் கரையோரங்களுக்கு நிம்மதியாக பொழுதைக் கழிக்க வரும் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குகிறார்கள்.
வெள்ளவத்தை தமிழர்கள் பெருமளவாக வாழும் பகுதி. அங்கு அழகிய கரையோரங்கள் அப்பகுதி மக்களை ஆசுவாசப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.

26 நவ., 2012




களமும் காதலும்(மாவீரர் 5ம் நாள்)
( அ.பகீரதன்)

அம்மி மிதிக்கும் வயதில்
விம்மி வெடித்தீர் 
கும்மி அடிக்கும் பருவத்தில்

குப்பி கடித்தீர்

கல்வி கற்கும் வயதில்
சொல்லி அடித்தீர்
செல்வி கலையும் பருவத்தில்
வேள்வி வளர்த்தீர்


முத்தங்கள் தொடுக்கும் வயதில்
யுத்தங்கள் தொடுத்தீர்
அர்த்தங்கள் புரியும் பருவத்தில்
அனர்த்தங்கள் தடுத்தீர்

பெண்ணைக் காதலிப்பதே
பேருவகை என அவன் நினைக்க
மண்ணைக் காதலிக்கும்
மகத்துவத்தை போதித்தீர்

இடுப்புவலி அடுப்புவழி தொடரும்பழி
அதுவே பெண்ணென அவன் நினைக்க
கரும்புலி கருணைமொழி காக்கும்விழி
அதுவே பெண்ணென நிரூபித்தீர்

அடிமைப்பூ அழுமூஞ்சி அருளிக்கொட்டை
அதுவே பெண்ணென அவன் நினைக்க
விடுதலைப்புலி உரிமைக்குரல் சயனற்வில்லை
அதுவே பெண்ணென சாதித்தீர்


வெள்ளியும் செவ்வாயும்
விரதமிருந்த பெண்டீர்-எமக்காய்
கொள்ளியும் கொலையும் எடுத்தீரே
எண்ணியும் வணங்கியும் உமைவாழ்த்துறோம்

ஈழத்து நிலமெல்லாம் நீ
பூவாய் மலரும்
தாயகத்து தாயிடத்தே நீ
சேயாய் வளரும்



அன்புடன், அ.பகீரதன்

www.pageerathan.blogspot.ca

ad

ad