புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 நவ., 2013

சனல் 4" காணொலி ஆராயப்பட வேண்டும் - பொன்சேகா 
இசைப்பிரியா உயிருடன், இலங்கை இராணுவத்தால் பிடிக்கப்பட்டு கோரமாகக் கொல்லப்பட்டுள்ளமை தொடர்பில் "சனல் 4' வெளியிட்டுள்ள காணொலி தொடர்பில் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று போரை வழிநடத்திய இராணுவத் தளபதி ஜெனரல் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
 வடக்கு ஆளுநரை மாற்ற அரசுக்குள்ளும் ஆதரவு; கூட்டமைப்பின் முடிவுக்கு ஆதரவு என்கிறார் அமைச்சர் திஸ்ஸ விதாரண 
news
 வடமாகாணத்தில் சிவில் ஆளுநர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானத்துக்கு ஆதரவு அளிப்பதாக சம சமாஜக் கட்சியின் தலைவரும், சிரேஷ்ட அமைச்சருமான திஸ்ஸ விதாரண நேற்றுத் தெரிவித்தார்.
 
"போர் முடிந்து சமாதானமான சூழ்நிலை காணப்படுகின்ற இந்நிலையில் வடக்கில் இராணுவ ஆளுநர் ஒருவர் இருப்பது அவசியமில்லாத ஒன்றாகும்'' என்றும் வடக்கில் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ள வீடுகளும், காணிகளும் உரியவர்களிடம் வழங்கப்பட வேண்டும்'' என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அரசின் நல்லிணக்க முனைப்புக்களை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை!வடக்குத் தேர்தல் வெளிப்படுத்துகின்றது: டக்ளஸ்
யுத்தத்தின் பின்னரான இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்க முனைப்புக்களை மக்கள் ஏற்றுக்கொள்ளத் தவறியுள்ளமையினாலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றியடைந்துள்ளது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இசைப்பிரியாவின் மறைவை எண்ணியாவது இந்தியா கண்ணீர் சிந்துமா?: கருணாநிதி உருக்கமான கடிதம்
இசைப்பிரியாவின் மறைவை எண்ணியாவது இந்தியா கண்ணீர் சிந்துமா? கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்காமல் புறக்கணிக்குமா என்று கேள்வி எழுப்பி உடன்பிறப்புக்கு கடிதம் எழுதியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.
இசைப்பிரியாவின் வாழ்க்கை வரலாறு…! இசைப்பிரியா.. 1982 ஆம் ஆண்டு மே திங்கள் இரண்டாம் நாள் யாழ் நெடுந்தீவை பூர்வீகமாகவும் மானிப்பாயை வாழ்விடமாகவும் கொண்ட தர்மராஜா வேதரஞ்சினி இணையரின் நான்காவது மகளாகப் பிறந்தாள். சோபனா என்று அவளுக்கு பெயர் சூட்டபட்டது. பேரழகும், வெள்ளை நிறமும், புன்சிரிப்பும் நிறைந்த மழலையை எண்ணி மனம்நிறைந்த கனவுகளோடு சீராட்டி தாலாட்டி பாலுட்டி வளர்த்தனர். மழலையால் தன் குறும்புகளால் அனைவரையும் கவர்ந்தவள் வளர்ந்து சிறுமியானாள். அக்கா மூவரோடும் தங்கையோடும் அயலாவரோடும் அழகுபதுமையாக அன்றாட கடமைகளான பாடசாலை செல்லுதல் பள்ளி தோழிகளோடு விளையாடுதல் என கவலையில்லாமல் பொழுதுகள் கழிந்தன. இக்காலகட்டத்தில் அனைவரின் இதயத்தையும் கவர்ந்திழுக்கும் இதயத்தில் கோளாறு என்ற செய்தி இடியாய் வந்திறங்கியது. இரக்ககுனத்தோடு அனைவரையும் அணுகும் இதயத்தில் ஓட்டை உண்டு என்றன மருத்துவ அறிக்கைகள். .மாறி மாறி பல சோதனைகள் இடம்பெற்றன. .மனவேதனையோடு இருந்த குடும்பத்தினருக்கு ஒருவழியாக மகிழ்ச்சியான செய்தி வந்தடைந்தது.இதயத்தில் ஓட்டை இருந்தாலும் இவருக்கு எந்த சிக்கலும் இல்லையென்று மருத்துவர்கள் கூறினர். ஆறுதல் அடைந்த சோபனாவின் குடும்பத்தினர் இவரை தொடர்ந்து படிக்க வைத்தனர். சோபனா ஐந்தாம் ஆண்டுவரை மானிப்பாய் கிரீன் மெமோரியல் பாடசாலையில் கல்வி கற்றாள். சிறுவயதில் இருந்தே அமைதியான பயந்த குணமுள்ளவர் சோபனா.தன வயதுக்கு மீறிய இரக்க குணமுள்ளவர், யாரவது துன்பபடுவதை பார்த்தால் மனமிரங்கி ஓடிச்சென்று அவர்களுக்கான உதவிகளை செய்துவிடுவார். ஆடல் பாடலில் அதிகம் ஆர்வம் கொண்டவள். அவற்றை முறையாக கற்றுகொள்ளும் முன்னரே ஏற்கனவே பயின்றவள் போல் திறம்பட செய்துகாட்டி பலரையும் ஆச்சரியப்பட வைத்தாள். புலமை பரீட்சை எழுதி சித்தியடைந்தவள் .யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியில் மேற்படிப்புக்காக சென்றால். அமைதியாக படிப்பை தொடர்ந்துகொண்டு இருக்கையில் 1995 ஆம் ஆண்டு முன்றாம் கட்ட ஈழப்போர் யாழ்ப்பாணத்தில் மையம் கொண்டிருந்த வேளை அது. எதிரியானவன் பெருமெடுப்பிலான தாக்குதல்களின் ஊடாக யாழ் நகரை கைப்பற்றினான். தான் முன்னேறிச்செல்லும் பாதையெங்கும் காண்பவரையெல்லாம் அடித்தும், துன்புறுத்தியும் படுகொலை செய்தான். உயிரை காக்க ஊரையும் உடமையையும் விட்டுவிட்டு கையில் கிடைத்தவற்றோடு நடந்தும், ஓடியும், விழுந்தும், எழும்பியும் வன்னியை நோக்கி ஓடினர் மக்கள். அவர்களில் சோபனாவின் குடும்பமும் ஒன்று.ஒருவழியாக உயிரை கையில் பிடித்துகொண்டு சோபனாவின் குடும்பத்தினர் வன்னிக்கு சென்றனர்.வன்னி மண்ணும் வரவேற்பில் பேர்பெற்ற மக்களும் இவர்களை அன்புக்கரம் நீட்டி வரவேற்றனர். சோபனா தனது மேற்படிப்பை வன்னியில் தொடர்ந்தாள். வன்னி மண்ணுக்குள் சென்ற நாளிலிருந்து தமிழீழ விடுதலை போர் பற்றிய தேவையினையும் தன கடமையினையும் நன்கு உணர்ந்து கொண்டாள். தமிழீழ விடுதலை புலிகளின் பரப்புரை குழுவினரால் நடத்தப்படும் வகுப்புக்களில் அதிக ஈர்ப்பு கொண்டாள். ஒவ்வொரு தமிழனும் ஒவ்வொரு தீப்பந்தமானால்தான் ஓயாது ஒலித்துகொண்டிருக்கும் வெடியோசை ஓய்ந்து ஒளிமயமான எதிர்காலம் தமிழனுக்கு விடியும் என்று உணர்ந்தாள். 1999 ஆம் ஆண்டு பாடசாலைக்கு பரப்புரை செய்யவந்தவர்களோடு கடமையும் கண்ணியமும் நிறைந்த தமிழீழ விடுதலைப் புலிகளோடு தன்னை இணைத்து கொண்டாள்.சோபனா. இயக்கத்தில் இணைந்துகொண்டால் இயக்க பெயர் ஒன்று சூட்ட வேண்டுமல்லவா…? சோபனா என்ற பெயர் இவரது தோற்றத்தோடு எவ்வளவு ஒத்துபோகின்றதோ அதைவிட அதிகளவில் பொருந்தக்கூடிய ஒரு பெயர் இவருக்கு இடப்படுகின்றது. இயல் இசை நாடகத்துறையில்தான் இவரது விடுதலை பயணம் இருக்கபோகின்றது என்பது தெரிந்தோ என்னவோ ”இசையருவி” என பெயர்சூட்ட பட்டது இசையருவியாய் விடுதலை போராளியாய் தொடக்க பயிற்ச்சிகளை முடித்தாள்.சோபனா, தமிழின விடுதலைக்காக தன முழு நேரத்தையும் ஒதுக்கினாள். இசையருவியின் உடல்நிலை காரணமாகவும் இவரது கவர்ந்திழுக்கும் அழகான தோற்றமும் இவளை ஊடகத்துறை போராளியாக தெரிவுசெய்ய வைத்தது. இசையருவி என்ற அழகான தமிழ் பெயரோடு தன் பணியை தொடங்கியவளை .இசையின் மேல் இவளுக்கு இருந்த விருப்பம் காரணமோ என்னமோ தோழிகள் இவளை இசைப்பிரியா என்று அழைக்க தொடங்கினர்.. நிதர்சனத்தின் ஊடாக தன்னை அறிமுக படுத்தினாள். கணீர் என்ற இவள் குரலை கேட்டவர்கள் ஒவ்வொரு மாதமும் இடம்பெறும் விடுதலை தொடர்பான நிகழ்வுகள் புலம்பெயர் மக்கள் பார்

2 நவ., 2013

மானிப்பாய் பரிஸ் அணி 44 ஓட்டங்களால் வெற்றி
 நியூஸ்ரார் விளையாட்டுக் கழகம் 2 ஆவது ஆண்டாக நடத்தும் 20 பந்து பரிமாற் றங்களைக் கொண்ட துடுப்பாட்ட சுற்றுப் போட்டியின் 2 ஆவது சுற்றில் 3 ஆவது போட்டி கடந்த சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற

மட்டுநகரில் முஸ்லீம் நபரின் உணவு விடுதியில் விபச்சாரத் தொழில்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்புறமாகவுள்ள காத்தான்குடியை சேர்ந்த முஸ்லீம் நபரால் நடாத்தப்படும் ஹொட்டலில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இரு யுவதிகளை மட்டக்களப்பு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
நேற்று இரவு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சென்ற பொலிஸார் இவர்களை கைதுசெய்துள்ளனர்.
கோத்தபாய ராஜபக்சவின் இந்திய பயணம் ரத்து.
இலங்கையில் நடைபெறஇருக்கும் கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதற்கு தமிழக அரசியல் கட்சிகளிடமிருந்து கடும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்நிலையில் இலங்கையின் பாதுகாப்பபுச் செயலர்  கோத்தபாய ராஜபக்ச தனது இந்திய பயணத்தை ரத்து செய்துள்ளார்.
இசைப்பிரியா கொலையால் தமிழகம் கொந்தளிப்பு!- கி.வீரமணி அறிக்கை
இலங்கை இராணுவத்தால் நடைபெற்றுள்ள இசைப்பிரியா கொலை பெரும் உணர்ச்சிக் கொந்தளிப்பை தமிழக மண்ணில் ஏற்படுத்தியுள்ளது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நாம் தமிழர் கட்சியினர் உண்ணாவிரதம்

இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்பதை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் சார்பில் வெள்ளிக்கிழமை காலவரையற்ற உண்ணாவிரதப்

கொளத்தூர்மணி கைது: வைகோ கண்டனம்

சேலத்தில் வருமான வரி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட வழக்கில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கைது செய்யப்பட்டுள்ளதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
அதிமுக இணையதளம் சிதைப்பு

அதிமுகவின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் www.aiadmkallindia.org  இதனுள் அத்துமீறிய பாகிஸ்தான் இணையதள தாக்காளர்கள் ஒரு மண்டை ஓட்டின் படத்தை வைத்துவிட்டு அதில் பாகிஸ்தான் கொடியை பறக்கும்படி டிசைன் செய்துள்ளனர்.
இசைப்பிரியா படுகொலை வீடியோ உண்மையானதுதான்: ப.சிதம்பரம் கண்டனம்

சனிக்கிழமை திமுக தலைவர் கலைஞரையைச் சந்திப்பதற்காக வந்திருந்த ப.சிதம்பரம், அவரை சந்தித்துவிட்டு வந்தபின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். 

காதலியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய காதலன் தற்கொலை.

இரத்தினபுரி - இரக்குவானை பகுதியில் காதலன் காதலி இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக காதலன் காதலியை கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இலங்கையில் கிரிக்கெட் நடைபயணம்! கிளிநொச்சியில் ஆரம்பமானது/பீ பீ சீ 
இலங்கையின் கிரிக்கெட் பாரம்பரியத்தைக் கட்டியெழுப்புவதற்கான நடைபயணம் ஒன்று வெள்ளியன்று வடக்கே கிளிநொச்சி நகரில் இருந்து தலைநகர் கொழும்பு நோக்கி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.
மட்டக்களப்பில் அத்துமீறி குடியேறிய சிங்களவர்களை வெளியேற்ற நடவடிக்கை/வரலாறு திரும்புகிறது 
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவுப் பிரதேச செயலாளர் பிரிவில் மேய்ச்சல் தரைக்கு என ஒதுக்கப்பட்ட காணியில் அத்துமீறி குடியேறியவர்கள் ஒருமாத காலத்துக்குள் வெளியேற வேண்டும் என்று மண்முனை மேற்குப் பிரதேச செயலாளர் அறிவித்தல் விடுத்துள்ளார்.
 
இசைப்பிரியாவின் கொலை ஆதாரம்! சீமான் கண்டனம்
சனல் 4 வெளியிட்டுள்ள இலங்கையின் போர்க்குற்றத்திற்கான புதிய ஆதாரமான விடுதலைப் புலிகளின் ஊடகப் பிரிவில் பணியாற்றிய இசைப்பிரியாவின் கொலை தொடர்பிலான காணொளியைப் பார்வையிட்ட நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
ஒபாமா மனைவிக்கு பயம்! மன்மோகன் ஜெயலலிதாவிற்கு பயம்!- ஹெல உறுமய ஏளனம்!
அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா மனைவிக்கு பயம், இந்திய பிரதமர் மன்மோகன் சிங், தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு பயம் என இலங்கை ஆளும் கட்சியின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஜாதிக ஹெல உறுமய ஏளனம் செய்துள்ளது.
கைது செய்யப்பட்ட ஆஸி. ஊடகவியலாளர்களின் கணணித் தரவுகள் இலங்கை அதிகாரிகளால் அழிப்பு
இலங்கையில் சுற்றுலா வீசாவில் வந்து கருத்தரங்கை நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்ட அவுஸ்திரேலியாவை சேர்ந்த சர்வதேச ஊடக மையப் பணிப்பாளர் ஜெக்லின் பாக் மற்றும் ஜீன் வோர்திங்டன் ஆகியோரின் கணணிகளின் முழுமை தரவுகளும் இலங்கை அதிகாரிகளால் அழிக்கப்படடுள்ளன.
வெகு சிறப்பாக நடைபெற்ற சுவிஸ் எழுகை அமைப்பின் இரண்டாவது ஆண்டுவிழா
இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் துயர்துடைக்கும் பணியில் பங்கெடுக்கும் நோக்குடன் சுவிஸ் நாட்டில் செயற்படும் ஆன்மீக, கலை, பண்பாட்டு, சமூக நிறுவனங்களின் ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்ட எழுகை நிறுவனத்தின் இரண்டாவது ஆண்டுவிழா

பட்டாசு தொழிற்கூடத்தில் திடீர் தீ விபத்து 9 பேர் பலி

கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் ஒன்றியத்தைச் சேர்ந்த முள்ளங்குடி கிராமத்தில் பல வருடங்களாக ராஜாங்கம் என்பவரின் மனைவி தனலெட்சுமி பட்டாசு தயாரிக்கும் தொழில் நடத்தி வருகிறார். இவரது தொழிற்கூடத்தில் 15க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனா
தம்புள்ள பத்திரகாளி அம்மன் ஆலயத்தை உடைத்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்துக! ஜனாதிபதிக்கு யோகேஸ்வரன் எம்.பி. மகஜர்
தம்புள்ள தமிழ் மக்களால் 40 வருடத்துக்கு மேலாக வழிபட்டு வந்த ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தை இடித்தவர்களை அரசாங்கம் கண்டு பிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் அவசரமாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள மகஜரில் குறிப்பிட்டுள்ளார்.
அரசுடமையாக்கப்பட்ட காணி உரிமையாளர்கள் வழக்கு தாக்கல்!- சட்டத்தரணி கௌரிசங்கரி தவராசாவின் வாதத்தினால் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிப்பு
பாதுகாப்பு அமைச்சின் மூலம் 2012ம் ஆண்டு அரச உடமையாக்கப்பட்டு தமிழ்நாதம் பத்திரிகை அச்சிடும் காரியாலயமாக பயன்படுத்தப்படும் காணி  உரிமையாளர்கள் தமது காணி சட்டரீதியற்ற முறையில் அரச உடமையாக்கப்பட்டதை எதிர்த்து   மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

1 நவ., 2013

இசைப்பிரியா வீடியோ உண்மையெனில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜெயந்தி நடராஜன்

சென்னை: தமிழீழத் தேசிய தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளரான இசைப்பிரியாவை இலங்கை ராணுவம் உயிருடன் பிடித்து கொன்றது தொடர்பான சேனல் 4 தொலைக்காட்சியின் வீடியோ ஆதாரம் உண்மையெனில் மத்திய அரசு அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் கூறியுள்ளார்.  



                28-10-2013 திங்கட்கிழமை, சபை ஆரம்பிக்கும் போதே அமர்க்களமாய் ஆரம்பித்தது. முதல் ஓவர் முழுதும் சிக்ஸராய் அடிக்கும் பேட்ஸ்மேன் கணக்காய் சுழற்றினார் ஆண்டிபட்டி ச.ம.உ தங்க.தமிழ்செல்வன் .

அரிய "தாய்', பெரிய "தாய்', வலிய "தாய்' என்று ராகம் போட ஆரம்பித்தார். 



         தேவர் பிறந்தநாளில் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த விஜயபாஸ்கருக்கு மந்திரி பதவி கிடைத்துள்ளது. விஜயபாஸ் கரின் பூர்வீகம் புதுக்கோட்டை. அவரது அப்பா அன்றைய அ.தி.மு.கவில் ஆர்.எம்.வீ. கோஷ்டியில் இருந்து சேர்மன் ஆனவர். ஆர்.எம்.வீ. சிபாரிசில் 1996-ல் அண்ணாமலை பல்கலையில் மருத்துவப்படிப் பில் சேர்ந்தார் விஜயபாஸ்கர். ஜெ.வை யாரும் நெருங்கவே பயந்த அச்சமயத்தில் அவரை பல்கலைக்கழகத்திற்கு அழைத்து


           தீபாவளிப் பண்டிகை களை கட்டத் தொடங்கிவிட்டது. எங்கு பார்த்தாலும் பட்டாசுகளின் சத்தம் காதைப் பிளக்கின்றது. ஆனாலும் மக்களிடம் வழக்கமான உற்சாகம் மிஸ்.

சென்னை தி.நகர் பகுதி மிகப்பெரிய வர்த்தக சந்தை. தீபாவளி பண்டிகை என்றாலே ஒவ் வொரு வருடமும் கூட்டம் அதிகரித்து தி.நகரே அல்லோகல்லோலப்படும். ஆனால், இந்த வருடம் கடைசி 4 நாள் தவிர மற்றபடி கூட்டம் கணிசமாக குறைந்துள்ளது. வியாபாரமும் செம டல் என்கிறது வர்த்தக உலகம்.  


முன் எச்சரிக்கை!

இது... பெண்களின் இதயத்துக்கு நெருக்கமான செய்தி என்றாலும் இதய பலகீனமுள்ள ஆண்கள் இதைப் படிக்க வேண்டாம்.

கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர் 

படாஅ முலைமேல் துகில். (7-1087)



             ""ஹலோ தலைவரே... தீபாவளியை ஜெகஜோதியா கொண்டாடுறவர் ஜெயலலிதா. ஆனா, இந்த முறை சொத்துக் குவிப்பு வழக்கு சம்பந்தமான டென்ஷன் அதிகமா இருந்ததாம்.''

""கோர்ட்டுக்கு வரமாட்டேன்னு ஜெ. பிடிவாதமா நின்றதையும், பெங்களூரு ஸ்பெஷல் கோர்ட் நீதிபதி முடிகவுடரோ விடமாட்டேன்னு உறுதியா இருக்காருன்னும் நம்ம நக்கீரனில்தான் விலாவாரியா எழுதியிருந்தாங்களே.''




             யாளு அம்மாளிடம் சாட்சியம் பதிவு செய்ய சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்ற தலைமை நீதிபதி கோபாலனை நியமித்திருந்தது சி.பி.ஐ. கோர்ட். அதன் பேரில் தயாளு அம்மாளிடம் சாட்சியம் பதிவு செய்யும் விசாரணையை 28-ந் தேதி கலைஞரின் கோபாலபுரத்தில் நடத்தி முடித்திருக்கிறார் நீதிபதி கோபாலன்.
உலகின் சக்தி வாய்ந்த நபர்களின் பட்டியல்: பிளாட்டர் இடம்பெற்றார்

இந்தாண்டுக்கான உலகின் சக்தி வாய்ந்த நபர்களின் பட்டியலில் பிபா கால்பந்தாட்ட அமைப்பின் அதிபர் பிளாட்டர் இடம்பெற்றுள்ளார்.
லண்டனில் மாபெரும் பேரணிக்கு தயாராகும் பிரித்தானிய தமிழர்கள்
இலங்கையில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டிற்கு பிரிட்டனின் பிரதமர் செல்வதைக் கண்டித்து லண்டனில் மாபெரும் பேரணி ஒன்றை பிரித்தானிய தமிழர் பேரவை ஏற்பாடு செய்துள்ளது.
கல்முனை மேயர் சிராஸ் பதவியிலிருந்து தூக்கப்பட்டார்! ஹக்கீம் அதிரடி நடவடிக்கை
சுழற்சி முறை இணக்கப்பாட்டையும் கட்சியின் தீர்மானத்தையும் மீறியுள்ள கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் இன்று முதல் மேயராக செயற்பட முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் உத்தரவிட்டுள்ளார். 
வேலணை மத்திய கல்லூரி பரிசளிப்பு விழாவில் சிறீதரன் எம்.பி, வடமாகாண முதலமைச்சர் மற்றும் உறுப்பினர்க​ள் பங்கேற்பு
யாழ்ப்பாணம் வேலணை மத்திய கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் மற்றும் மாகாண உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
வேலணை மத்திய கல்லூரியின் கல்லூரி தின விழாவும் பரிசளிப்பு விழாவும் அதிபர் திரு சி. கிருபாகரன் தலைமையில் இன்று காலை நடைபெற்றது.
சம்பந்தன் தொலைபேசியில் முறையீடு! வீடுகள் இடிப்பதை நிறுத்துமாறு ஜனாதிபதி படையினருக்கு உத்தரவு
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் படையினரால் பொதுமக்களின் வீடுகள் இடித்தழிக்கப்படுவதை நிறுத்துமாறு ஜனாதிபதி யாழ்ப்பாண கட்டளை தளபதிக்கு உத்தரவிட்டுள்ளார்
'இலங்கை அரசாங்கத்திற்கான மிகவும் கடுமையான செய்தியுடன் இலங்கை செல்கிறோம்' பிரித்தானியா

இலங்கை அரசாங்கத்திற்கான மிகவும் கடுமையான செய்தியுடன் இலங்கை செல்கிறோம்' பிரித்தானியா

பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்ள கொழும்பு செல்லும் தமது பிரதிநிதிகள் இலங்கை அரசாங்கத்துக்கு ஒரு கடுமையான செய்தியை கொண்டு செல்லப்போவதாக பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
இலங்கையில் வெட்டி எரிக்கப்பட்ட இளம் பெண் .. பட்டப்பகலில் கொடூரம்
தன் காதலை ஏற்க்க மறுத்த பெண்ணின் கழுத்தை வெட்டி விட்டு தன்மேல் தீமூட்டிக் கொண்டு அந்த பெண்ணையும் கட்டி அணைத்து இரண்டு பேரும் நெருப்பில் கருகிப் போனார்கள் ........................................
தவிர்க்க முடியாத காரணத்தினால் எந்த இடத்தில் நடந்த சம்பவம் என்பதை எம்மால் வெளியிட முடியாது .

ஜோசப் பரராஜசிங்கத்தின் மனைவிக்கு சார்பாக கனடா நீதிமன்றம் தீர்ப்பு! நாடு கடத்தப்படும அபாயம் நீங்கியுள்ளது

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் மனைவி “பயங்கரவாத சந்தேகநபர்” என்ற வகுதிக்குள் உள்ளடக்கப்படமாட்டார் என்று கனேடிய நீதிமன்றம் ஒன்று
உயிரோடு பிடிக்கப்பட்டு கொல்லப்பட்ட இசைப்பிரியா - சனல் 4 வெளியிட்ட புதிய போர்க்குற்ற ஆதாரம்

போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்காப் படையினரால் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்ட, தமிழீழத் தேசிய தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளரான, இசைப்பிரியா தொடர்பான புதிய போர்க்குற்ற ஆதாரம் ஒன்றை சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

வவுனியாவில் இன்று பண்டாரவன்னியன் நினைவு தின விழா நடைபெற்றது

இன்று வவுனியாவில் மாவீரன் பண்டாரவன்னியன் நினைவுதின விழா நடைபெற்றது. வவுனியா நகரில் உள்ள பண்டாரவன்னியன் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன் நகரசபை மண்டபத்தில் விழா நடைபெற்றது.  இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள்,

ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பின் ஏற்பாட்டில் அனந்தி அமெரிக்கா செல்கிறார்

வடமாகாணசபை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன் தமது ஏற்பாட்டில் அமெரிக்கா வருகிறார் என ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம், சிங்கள மக்கள் தங்களை மீள்குடியேற்றக் கோரி கொழும்பில் நேற்று ஆர்ப்பாட்டம் செய்த போது பிடித்த படம்.

அமைச்சரவை கூட்டத்தில் 8 முதலமைச்சர்கள் பங்கேற்பு:

வட மாகாண முதல்வர் வரவில்லை
ஜனாதிபதி தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் பங்கேற்கவில்லை என ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல
 வலி.வடக்கு வீடழிப்பு ஜனாதிபதியுடன் பேச்சு ;உதயனுக்குத் தெரிவித்தார் சம்பந்தன் 
வலி.வடக்கில் இராணுவத்தினரால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் வீடுகள் அழிப்பு நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ஷவுடன் இரண்டொரு தினங்களுக்குள் பேச்சு நடத்தப்படு
பெண்கள் மீதான வன்புணர்வு: இழிவுநிலை மாறவேண்டும்-வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் 
news
ஒரு பெண் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டால் அதை பெரிதாக்கிப் பாதிக்கப்பட்ட பெண்ணை இழிவுபடுத்தும் நிலைமையே இங்கு காணப் படுகின்றது. இந்த நிலை மாற வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். 
 
யாழ்ப்பாணம் மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பெண்கள் விழிப்புணர்வு தொடர்பான குறும்பட மற்றும்  அசையும் படவெளியீட்டு விழா

ஆலய இடிப்பு தொடர்பாக இதொகா ஆளுந்தரப்பிலிருந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - மனோ

தம்புள்ளை என்பது மாத்தளை மாவட்டத்தின் ஒரு பகுதி. மாத்தளை மாவட்ட தமிழ் இந்து மக்கள் நடந்து முடிந்த மாகாணசபை தேர்தலில், இதொகா உறுப்பினர் ஒருவரை வாக்களித்து தெரிவு செய்துள்ளார்கள். ஆகவே இது காரணமாகவும், ஆளும் அரசில் அங்கம் வகிக்கும் பங்கா

விக்கினேஸ்வரனையும் சம்பந்தனையும் குறை கூறுவதற்கு முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புக்கு அருகதையில்லை -அரியநேத்திரன்

முதலமைச்சர் விக்னேஸ்வரனையும் சம்பந்தனையும் நாடகமாடுபவர்கள் என்று கூறுவதற்கு முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புக்கு எவ்வித தகுதியும் கிடையாது. அவ்வமைப்பின் கூற்றுக் கண்டிக்கத்தக்க விடயமாகும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன்

மிஸ் ஆசிய பிசிபிக் அழகிப் போட்டியில் பட்டத்தை வென்ற இந்திய அழகி
 


2013-ம் ஆண்டுக்கான மிஸ் ஆசிய பிசிபிக் அழகிப் போட்டி கொரியாவில் நடந்தது. இதில் 21 வயதான இந்திய அழகி சிருஷ்டி ரானா கலந்து கொண்டு பட்டத்தை வென்றார்.

சனல் போர் வெளியிட்ட புதிய போற்குற்ற ஆதாரம் -அதிர்ச்சி video
கொழும்பு மாநாடு! தமிழர்கள் உணர்வுகளை கருத்திற்கொண்டு தமது முடிவு அமையும்!- இந்திய பிரதமர்
இலங்கையின் பொதுநலவாய மாநாட்டில் தாம பங்கேற்பது குறிதது உரிய நேரத்தில் முடிவெடுக்கப்படும் என்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
அனந்தி சசிதரன் பயணத்தில் மாற்றமில்லை புறப்பட்டார் அமெரிக்கா
இலங்கை தமிழச் சங்கம் மற்றும் பல ஐக்கிய அமெரிக்க தமிழர் அமைப்புக்கள் ஒன்றினைந்து தமிழர் சங்கமம் வருடாந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது இதில் பலர் பங்கு பற்ரும் நிலையில் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனும் பங்குபற்ற அடைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இன் நிலையில் அவர் கலந்து கொள்ள மாட்டார் என வந்த செய்தியில் எந்தவித உண்மைத் தன்மையும் இல்லை என்பதுடன் திட்டமிடப்பட்ட படி நிகழ்வில் பங்குபற்றுவதற்காக அவர் இலங்கையிலிருந்து புறப்பட்டுள்ளதாகவும் இலங்கை தமிழச் சங்கத்தின் தலைவர் உறுதி படுத்தினார்.

31 அக்., 2013

அனந்தி சசிதரனின் அமெரிக்கப் பயணம் இரத்து
வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் இன்று அமெரிக்கா செல்லவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி சேகரிப்பதற்காக இன்று அமெரிக்கா பயணம் மேற்கொள்வதாக கூறியிருந்தேன். எனினும் தவிர்க்க முடியாத காரணத்தினால் அமெரிக்காவிற்கான பயணத்தினை ரத்து செய்துள்ளதாக அனந்தி தெரிவித்துள்ளார்.
நடிகர் சந்தானம் மற்றும் சினிமா தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சவுத்ரி, ஏ.எம்.ரத்னம் வீடுகளிலும், அலுவலகங் களிலும் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். ஒரே நேரத்தில் இந்த சோதனை நடந்தது. 
சந்தானம் வீடு தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.இ.டி. கல்லூரி எதிரில் இருக்கிறது. அங்கு வருமான வரி அதிகாரிகளில் ஒரு குழுவினர் சென்றனர். கேட்டை மூடிக்கொண்டு வீட்டில் அறை அறையாக சென்று சோதனை நடத்தினார்கள்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு யாழ் நகரில் அங்காடி வியாபாரம் களைகட்டியுள்ளது.
யாழ் நகரின் பிரதான வீதிகளில் நடைபாதைக் கடைகளுக்கு பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும் கடந்த வருடத்தைப் போன்று இந்த வருடமும் தென்னிலங்கை வியாபாரிகள் நடைபாதைக்

கல்முனை மாநகர சபை நிதி குழு உறுப்பினர் தெரிவில் மாநகர சபை உறுப்பினர் ஜெயக்குமார் அமோக வெற்றி.

கல்முனை மாநகர சபையின் மாதாந்த அமர்வு நேற்று புதன்கிழமை மேயர் சிராஸ் மீராசாஹிப் தலைமையில் இடம்பெற்றது.

கல்முனை மாநகர சபையின் நிதிக்குழு உறுப்பினர்கள் தெரிவில் ஆளும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கிடையே பலத்த போட்டி நிலவியதால் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

இதில் ஓர் அங்கமாக அடுத்த ஆண்டிற்கான நிதிக் குழு உறுப்பினர்கள் தெரிவு நடைபெற்றது.

மேயர் தவிர நிதிக் குழுவிற்கு ஐந்து பேரை தெரிவு செய்வதற்காக மாநகர சபை உறுப்பினர்களான ஏ.பறக்கதுல்லா, எஸ்.உமரலி, ஏ.எம்.றியாஸ், எஸ்.ஜெயகுமார், ஏ.ஏ.பஸீர், ஏ.எம்.பிர்தௌஸ் மற்றும் எஸ்.சாலித்தீன் ஆகிய ஏழு உறுப்பினர்களின் பெயர் முன்மொழியப்பட்டது.
தமிழ்நாட்டில் உள்ள தமிழ் உணர்வு படைத்த எல்லா
கட்சிகளும் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டிற்கு பிரதமர் செல்லக் கூடாது என்று வலியுறுத்திக் கூறியும் கூட, பத்திரிகைகளில் இன்று
வந்துள்ள செய்தியைப் பார்க்கும்போது பிரதமர் செல்லக் கூடுமென்று யூகிக்கக் கூடிய வகையில் உள்ளது. அப்படி தமிழர்களை வேட்டையாடிய சிங்கள வெறியர்
கள் நடத்துகின்ற காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொண்டால், அதனுடைய விளைவுகளை அவர்கள் சார்ந்துள்ள கட்சியே அனுபவிக்க நேரும்.
இங்கிலாந்தின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேர் இயன் பொத்தம் நாளை நவம்பர் முதலாம் திகதி முதல் இலங்கையில் மேற்கொள்ளவுள்ள உதவு நடைப் பயணத்தில் உலகளாவிய கிரிக்கெட் வீரர்களும் பங்கேற்கவுள்ளனர்.
இந்த நடைப்பயணத்தின் மூலம் வடக்கில் செரிட்டி ஒப் பௌன்டேசன் குட்னஸ் என்ற உதவு அமைப்பு ஒன்று நிறுவப்படவுள்ளது.
யாழ்ப்பாணத்துக்கு வருமாறு மன்மோகன் சிங்கிற்கு வடமாகாண முதலமைச்சர் அழைப்பு
இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் யாழ்ப்பாணத்துக்கு இந்திய பிரதமர் வருகைத்தர வேண்டும என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.
சர்வதேச செஞ்சிலுவைக் குழு கருத்தரங்கில் ஜெகத் டயஸ் கலந்து கொள்ள அனுமதி மறுப்பு!
போர்க்குற்றம் சாட்டப்பட்டுள்ள  இராணுவ அதிகாரிகளில் ஒருவரான, மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள கருத்தரங்கில் கலந்து கொள்ள   சர்வதேச செஞ்சிலுவைக் குழு அனுமதி மறுத்துள்ளது.
இரண்டு மகள்களை துஸ்பிரயோகம் செய்த தந்தைக்கு 120 ஆண்டு சிறை!
இரண்டு மகள்களை துஸ்பிரயோகம் செய்த தந்தைக்கு 120 ஆண்டு கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

30 அக்., 2013

Australia 350/6 (50 ov)
India 351/4 (49.3 ov)
அவசர செய்தி ..காவல் துறையின் அஜாக்கிரதையால் ஒரு மாணவனின் உயிர் போக போகிறது ... 
திருச்சி அருகேயுள்ள கிராமத்த சேர்ந்த மணி என்ற ஏழ்மையான குடும்பத்தை சார்ந்த மாணவர் சென்னையில் நண்பர்களுடன் தங்கி தரமணியில் உள்ள அரசாங்க பாலிடெக்னிகில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார் அவர் வீடு வீடாக பால் பாக்கெட் கொடுக்கும் தொழிலை பகுதி நேரமாக செய்து வந்தார் அதற்கு சம்பளமாக கிடைக்கும் 4000 ரூபாயில் தனது படிப்பு செலவுகளை கவனித்து கொண்டு ஊரில் இரண்டு தங்கைகளையும் படிக்க வைத்து வருகிறார் ..அவர் நேற்று அதிகாலை பால் பாக்கெட்களை எடுத்து செல்லும்போது உரக்க கலக்கத்தில் அதி வேகமாக வந்த போலீஸ் ரோந்து வாகனம் அவர் மீது மோதியதில் ஒரு கால் துண்டாகி விட்டது உயிருக்கு ஆபத்தான நிலையில் உயிர் காக்க நண்பர்களின் உதவியால் தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது முதல் தவணையாக 50 ஆயிரம் செலுத்தபட்டும் இன்று மேலும் இரண்டு லட்சம் கட்டுங்கள் இல்லையேல் சிகிச்சையை நிறுத்துவோம் என மருத்துவமனை நிர்வாகம் கூறி விட்டது அரசாங்க மருத்துவமனைற்கு கூட்டி கொண்டு செல்கிறோம் என கூறியும் மருத்துவமனை நிர்வாகம் பணம் கட்டிவிட்டு அழைத்து செல்லுங்கள் என கூறி வருகின்றனர் ..அவரது பெற்றோர்களோ கல் உடைக்கும் கூலி தொழிலாளிகள் அவர்களால் அவ்வளவு பணம் கட்ட முடியாமல் தவிக்கின்றனர் ..மேற் சிகிச்சையும் நிறுத்தப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார் காவல் துறையும் எந்த உதவியும் செய்யவில்லை ..தமிழக முதல்வரால் மட்டுமே இந்த ஏழை மாணவனின் உயிர் காக்க இயலும் அவரது கவனத்திற்கு கொண்டு செல்லவே இந்த பதிவு ..என்னால் இயன்ற அளவு நிதி [20000] உதவி அளித்து விட்டேன் ..யாராவது முதல்வரின் கவனத்திற்கு செய்தியை எடுத்து சென்று ஏழை மாணவனின் உயிர் காக்க உதவுங்கள் தொடர்பு எண்-7401137366
சிறந்த கால்பந்து வீரர் விருது பட்டியலில் மெஸ்சி,ரொனால்டோ ,நெய்மார் 
சர்வதேச கால்பந்து சம்மேளனம் சார்பில் ஆண்டுதோறும் உலகின் சிறந்த கால்பந்து வீரர் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருது பட்டியலில் நட்சத்திர வீரர்கள் லயோனல் மெஸ்சி (அர்ஜென்டினா), கிறிஸ்டியனோ ரொனால்டோ (போர்ச்சுல்), நெய்மார் (பிரேசில்) உள்பட 23 வீரர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். விருது விவரம் ஜனவரி 13-ந்தேதி அறிவிக்கப்படும்.
6-வது ஒரு நாள் கிரிக்கெட்: பெய்லி- வாட்சன் சதத்தால் ஆஸி. 350 ரன் குவிப்பு
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 6-வது ஒரு நாள் போட்டி இன்று மதியம் நாக்பூரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
முள்ளிவாய்க்கால் துன்பியல் நிகழ்வின்பின் நான்காண்டுகள் - புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒன்றிணைகிறார்களா?/தமிழ் கார்டியன் 

சிறிலங்காவில் தொடரப்பட்ட இறுதிக்கட்ட யுத்தத்தில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் படைகளால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு யுத்த மீறல்கள் தொடர்பில் பொறுப்பளிக்க வேண்டும் எனக் கோருவதுடன் சிறிலங்கா அரசாங்கம் மீது அழுத்தம் கொடுப்பதே தற்போது புலம்பெயர் தமிழ் சமூகத்தின் முக்கிய திட்டமாக காணப்படுகிறது.
பொதுநலவாய மாநாடு ; தீவிர ஆலோசனையில் மன்மோகன் 
இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பது குறித்து அரசியல் ஆலோசர்களுடன் பிரதமர் மன்மோகன் சிங்  தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.
சுயாட்சி மூல­மான தீர்­வுக்கு இந்­தியா உதவ வேண்டும்

இந்திய அரசுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளும், அதேபோன்று சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளும் இலங்கையினால் நிறைவேற்றப்படவில்லை என்ற கருத்து பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்தாகக் காணப்படுகிறது. இந்தநிலையில் இந்தியா இதுபற்றி கவனம் செலுத்த வேண்டும்.
இளவரசர் சார்ள்ஸின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு லண்டனில் வரவேற்பு நிகழ்வு
பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் மற்றும் அவரது மனைவி கமிலா பாக்கர் ஆகியோரின் இலங்கை மற்றும் இந்திய விஜயத்தை முன்னிட்டு அவர்களுக்கு லண்டனில் வாழ்த்து வரவேற்பு நிகழ்வொன்று ஏற்படு செய்யப்பட்டிருந்தது.
கொமன்வெல்த் மாநாட்டை பகிஸ்கரிக்கக் கோரி சேலத்தில் தீப்பந்தத் தாக்குதல்.B B C 
இலங்கையில் நடைபெறும் கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என வலியுறுத்தி இன்று புதன் அதிகாலை சேலத்தில் வருமான வரித் துறை அலுவலகத்திற்குள் சிலர் தீப்பந்தத்தை வீசி எறிந்தனர்.
முதலமைச்சர் விக்னேஸ்வரன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி
வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என வைத்தியசாலையின் அதிகாரிகள் தெரிவித்தனர்.


வடக்கு மக்களின் வாழ்வாதாரத்திற்கு தென் கொரியா உதவும்: விக்னேஸ்வரனிடம் தென் கொரியத் தூதுவர் உறுதி
இலங்கைக்கான தென் கொரியத் தூதுவர் ஜோன் மூன் சோய் யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்ததுடன் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடினார்.
வலி. வடக்கில் வீடுகள் இடிக்கப்பட்டமை உள்நாட்டு பிரச்சினை! முதலமைச்சருடனான சந்திப்பின் பின் அமெரிக்க தூதுவர்.
வலி. வடக்கு விவகாரம் உள்நாட்டு பிரச்சினை என்பதால் கருத்து கூற முடியாது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்சல் ஜே. சிசன் தெரிவித்தார்.

பாலியல் புகார் கொடுத்ததால் ஆசிரியை உயிரோடு எரிப்பு:குற்றவாளிகள் கைது செய்யப்படுவர் என முதல்வர் உறுதி
ஒடிசா மாநிலம் ராயகாடா மாவட்டம் காசிபூர் அரசு ஆரம்ப பள்ளியில் பணிபுரியும் 27 வயது ஆசிரியையிடம் கல்வித்துறை ஆய்வாளர் தந்தசேனா தவறாக நடந்துள்ளார். 
ஒரே மேடையில் மன்மோகன் சிங், நரேந்திர மோடி பங்கேற்பு
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சர்தார் படேல் அருங்காட்சியம் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. அருங்காட்சியக வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் ஒரே மேடையில் பிரதமர் மன்மோகன் சிங், பாஜக பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல் அமைச்சருமான நரேந்திர மோடியும் பங்கேற்றனர். 
இந்த விழாவில் பேசிய மோடி, படேலை பற்றியும் அவரது கொள்கைகளை
ஜாமீனில் வெளியே வந்த ரவுடி கழுத்தறுத்துக் கொலை: முதல்வர் வீட்டின் அருகே கொலை நடந்ததால் பரபரப்பு
புதுச்சேரியில் முதல் அமைச்சர் ரங்கசாமியின் வீட்டின் அருகில் ரவுடி ஒருவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை: தொப்புள் கொடியுடன் போட்டு விட்டுச் சென்றது யார்?
அருப்புக்கோட்டை சாலியர் மாரியம்மன் கோயில் தெருவில் உள்ள குப்பைத் தொட்டி ஒன்றில் பச்சிளம் பெண் குழந்தை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதிகாலை 5 மணிக்கு யாரோ இந்த குழந்தையை
ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கு நவ.21க்கு ஒத்திவைப்பு: பெங்களூரு சிறப்பு கோர்ட்
பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் 30.10.2013 புதன்கிழமை ஆஜராக வேண்டும் என்று சிறப்பு
10வது முறையாக தமிழக அமைச்சரவை மாற்றம்: புதிய அமைச்சராக விஜயபாஸ்கர் பதவியேற்கிறார்
 


கடந்த இரண்டு ஆண்டுகளில் 10வது முறையாக தமிழக அமைச்சரவையை மாற்றம் செய்துள்ளார் முதல் அமைச்சர் ஜெயலலிதா,

ஜெ. வழக்கிற்கு புதிய நீதிபதி!
ஜெ. மீதான சொத்து குவிப்பு வழக்கை விசாரித்து வரும் பெங்களூரு சிறப்பு கோர்ட் நீதிபதி முடிகவுடர் மாற்றப்பட்டார். புதிய நீதிபதியாக மைக்கேல் டிக்குன்னா நியமிக்கப்பட்டுள்ளார் என நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 கோத்தாவின் கருத்து நகைப்பிற்குரியது; சுரேஷ் பிரேமச்சந்திரன் 
பொலிஸ் அதிகாரத்தை பாதுகாப்புச் செயலாளர் தனது கையில் வைத்துக்கொண்டு வட மாகாணத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் கடமை முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் பொறுப்பாகும்
பந்து தலையில் தாக்கியதால் தென்னாபிரிக்க உள்ளூர் கிரிக்கெட் வீரர் டெரின் ரண்டால் களத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

தென்னாபிரிக்காவின் ஜோகன்ஸ்பேர்க் நகரில்ல நேற்று முன்தினம் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றிலேயே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
யாழ். ஊடகவியலாளர்கள் ஐவர் உயிர் அச்சுறுத்தல் காரணமாக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு 
யாழ்ப்பாணத்தில் உள்ள உள்ளூர் ஊடகவியலாளர்களில் ஐவர் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.
பேரெழுச்சியுடன் திரண்ட கனடியத் தமிழர்கள்: வரலாறாக படையெடுத்த பாராளுமன்ற உறுப்பினர்கள்

கனடா அரசு கொமன்வெல்த் நாடுகள் மாநாட்டை புறக்கணித்தமைக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக ஒட்டாவா நாடாளுமன்ற முன்றலில் கனடியத் தமிழர்கள் நூற்றுக்கணக்கில் குளிரையும் பொருட்படுத்தாது இன்று பேரெழுச்சியுடன் அணிதிரண்டனர்.


தம்புள்ள பத்திரகாளியம்மன் கோயில் முற்றாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டது! மக்கள் கவலைBBC
மாத்தளை மாவட்டம் தம்புள்ள நகர பிரதேசத்திலுள்ள மகா பத்திரகாளியம்மன் ஆலயம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடிக்கப்பட்டு முற்றாக தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாக அங்கு வாழ் தமிழர்கள் தெரிவிக்கின்றார்கள்.
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் இருந்து இராணுவத்தை வாபஸ் பெற முடியாது: ராஜபக்ச திட்டவட்டம்
இலங்கையில் உச்சகட்ட போர் நடந்து முடிவடைந்த நிலையில் அந்நாட்டின் வடக்கு மாகாணத்தில் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தை வாபஸ் பெற வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு தமிழர் அமைப்புகளும், சர்வதேச மனித உரிமை ஆர்வலர்களும் வற்புறுத்தி வருகின்றனர்.

29 அக்., 2013

மனைவிகளின் பிரிவை தாங்க முடியாத இலங்கை தமிழ் அகதி ஒருவர் இந்தியாவில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தமிழக பொலிஸார் தெரிவித்தனர்.
தற்கொலை செய்து கொண்டவர் இரண்டு பெண்களை மண முடித்திருந்தவர் என்றும் பொலிஸார் கூறினர்.
கரூர் மாவட்டம் குளித்தலை இரும்பூதிப்பட்டியில் இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்த
தமிழர்களின் பின்னால் நிற்பது இந்தியாவின் கடமை - சல்மான் குர்ஷித்

வடக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களின் பின்னாலேயே இந்தியா நிற்க வேண்டும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். 
புலிகளுக்கு ஆயுதம் வாங்க முயன்ற கனேடியத் தமிழர் சுரேசுக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை

விடுதலைப் புலிகளுக்கு ஆயுத தளபாடங்களை வாங்க உதவியதாக, குற்றம்சாட்டப்பட்ட கனேடியத் தமிழரான சுரேஸ் சிறீஸ்கந்தராஜாவுக்கு அமெரிக்க நீதிமன்றம் இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது. 
கனேடிய புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் நடாத்திய பூவரசம் பொழுது 2013 கடந்த( 26.10.2013) சனியன்று வெகு சிறப்பாக நிகழ்வுற்றது (113 படங்கள்)

கட்டுவனில் இரவிரவாக அரங்கேறும் காட்சி நல்லிணக்கத்துக்கு கறுப்புப் புள்ளி குத்தவா?
நீங்கள் எதனைச் சொன்னாலும், நாம் முன்வைத்த காலைப் பின்வைக்கும் பிரகிருதிகள் அல்லர். கொழும்பு அரசு சொன்னதைச் செய்வோம். இதனை உங்கள் மனதில், நெஞ்சில் பதித்துக்கொள்ளுங்கள்
இராணுவத்தின் அட்டகாசத்தால் நாட்டில் நல்லிணக்கம் ஏற்படவாய்ப்பில்லை;என்கிறார் சரா எம்.பி 
இராணுவத்தினர் தொடர்ந்தும் அடாவடியில் ஈடுபட்டு வருவது நாட்டில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கு வாய்ப்பாக அமையாது என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  ஈ.சரவணபவன்  தெரிவித்தார்.
10 வருடங்களாக பாடாமல் இருந்த எஸ்.ஜானகி பாடுகிறார்
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளவர் பாடகி எஸ்.ஜானகி. 17 மொழிகளில் பாடிய ஒரேயொரு பாடகி


சாப்பாட்டிற்கு போடுவது வாழை இலை - சாப்பிட்ட பிறகு போடுவது வெற்றிலை : சிற்றுந்து இலை சர்ச்சைக்கு அரசின் அடேங்கப்பா விளக்கம்
 


சென்னை மாநகரத்தில் இயக்கப்பட்டுள்ள சிற்றுந்துகளில் உள்ள இலைகள் பசுமையின் அடையாளமே தவிர அதிமுக அரசின் கட்சி சின்னம் அல்ல என்று தமிழக அரசு பதில் அளித்துள்ளது.
திமுக முன்னாள் அமைச்சர் செங்குட்டுவன் அதிமுகவில் இணைந்தார்
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதாவை இன்று தி.மு.க. முன்னாள் அமைச்சர் புலவர் செங்குட்டுவன்; அந்தமான் மாநில ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர்
சென்னை செண்ட்ரல் ஆஸ்பத்திரியில் அம்மா உணவகத்தில்5 ரூபாய்க்கு 3 சப்பாத்தி 2 ரூபாய்க்கு டீ 
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அம்மா உணவகம் விரைவில் திறக்கப்படுகிறது.   6000 சதுர அடியில் அனைத்து வசதிகளுடன் இந்த உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு காலையில்
பாத்திமாபாபு, நிர்மலாபெரிசாமி அதிமுகவில் இணைந்தனர்

 


அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதாவை இன்று நிகழ்ச்சி தொகுப்பாளரும், செய்தி வாசிப்பாளருமான பாத்திமா பாபு, நிர்மலா பெரியசாமி ஆகியோர் சந்தித்து தங்களைக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

ஸ்டெர்லைட் வழக்கு : வைகோ மேல்முறையீடு-  சுப்ரீம் கோர்ட் முடிவு

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தொடர்ந்து போராடி வருகிறார். அவர் தொடுத்த ரிட் மனு மீது, விசாரணை நடத்திய சென்னை ஐகோர்ட், 2010 செப்டம்பர் 28-ல்

ad

ad