புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 நவ., 2013

பிரித்தானிய பிரதமர் அலுவலகத்தின் ஊடகவியலாளர்கள் பட்டியலின் கீழ் கெலும் மக்ரே இலங்கை வருகிறார்
பிரித்தானிய பிரதமரின் அலுவலகத்தினால் சமர்பிக்கப்பட்ட 30 ஊடகவியலாளர்களின் பெயர் பட்டியலில் சனல் 4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் கெலும் மக்ரே பெயர் இருந்ததன் காரணமாவே இலங்கை அரசாங்கம் அவருக்கு வீசா அனுமதியை வழங்க நேர்ந்ததாக தெரியவருகிறது.
யாழ்.இணுவிலில் கிணற்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்பு
இன்று அதிகாலை நித்திரையில் இருந்து எழுந்து சென்ற இளம் குடும்பப் பெண், காலையில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் முதலாவது கணனி உற்பத்தி தொழிற்சாலை ஜனாதிபதியால் திறந்து வைப்பு
அம்பாந்தோட்டை சூரிய வெவ என்ற இடத்தில் புதிதாக அமைக்கப்பட்ட இலங்கையின் முதலாவது கணனி உற்பத்தி தொழிற்சாலையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை திறந்து வைத்தார்.
ஆசியாவின் தெழில்நுட்ப மத்திய நிலையமாக இலங்கையை மாற்றும் தேசிய திட்டத்தின்கீழ் ”ஈ விஸ்” என்ற பெயரில் இந்த கணனி

சிட்டி பாபு (நடிகர்)


சிட்டி பாபு
பிறப்புஷாஜாத் அதீப்
1964
இறப்பு8 நவம்பர் 2013 (age 49)[1]
சென்னை,தமிழ்நாடு
பணிநடிகர், நகைச்சுவையாளர்
செயல்பட்ட ஆண்டுகள்2003-2013
சிட்டி பாபு (தமிழ்சிட்டி பாபு; இயற்பெயர் ஷாஜாத் அதீப், 1964 - 8 நவம்பர் 2013[2])[3] என்பவர் இந்திய சினிமா நகைச்சுவை நடிகரும், தொலைக்காட்சி அறிவிப்பாளருமாவார். இவர் தமிழகத் திரைப்படத்துறையின் குறிக்கத்தகு பணியாற்றியுள்ளார். சன் தொலைக்காட்சியின் அசத்தப் போவது யாரு?என்னும் நகைச்சுவை நிகழ்சியில் நடுவராகவும் இவர் பணியாற்றினார்.
நகைச்சுவை நடிகர் சிட்டி பாபு காலமானார்
தமிழ் திரையுலகின் நகைச்சுவை நடிகர் சிட்டி பாபு இன்று காலமானார். அவர் இறக்கும் போது 49 வயதாகும்.
நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட நிலையிலேயே அவர் இன்று மருத்துவமனையில் காலமானார்.
ஏற்கனவே சிட்டி பாபுவுக்கு இருதய சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
நகைச்சுவை நடிகர் சிட்டி பாபு, ஒற்றன், தூள், சிவகாசி போன்ற படங்களில் நடித்துள்ளார்.

8 நவ., 2013

ஆறு இராணுவத்தினர் என்னை தினமும் மாறி மாறி கற்பழித்தனர் -நேரடியாகவே  முகம்காட் டி  துணிச்சலாக  வாக்கு மூலம் கொடுக்கும் இந்த சகோதரியின் கண்ணீர் எங் கள் இனத்தின் விடிவுக்கு துணை நிற்கும் 
காமன்வெல்த்! மன்மோகன் சிங் தலைமையில் ஆலோசனை! இலங்கை பயணம் குறித்து முடிவு எடுப்பதில் குழப்பம் நீடிப்பு!
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொள்வது பற்றி முடிவு எடுப்பதில் குழப்பம் நிலவுகிறது. 
டெல்லியில் பிரதமல் இல்லத்தில் அவரது தலைமையில்
போரால் சிதைந்த குடும்பம் - தாயை பிரிந்து 17 ஆண்டுகள் தவித்த பிள்ளைகள் இன்று இணைகிறார்கள்

போரால் சிதைந்த குடும்பம் - தாயை பிரிந்து 17 ஆண்டுகள் தவித்த பிள்ளைகள் இன்று இணைகிறார்கள்

சில நேரங்களில் கதையை காட்டிலும், நிஜ சம்பவங்கள் கண்ணீரை வரவழைத்து விடும். அதுபோல் நடந்த கண்ணீர் சம்பவம் தான் இது. 1990-ம் ஆண்டு இலங்கையில் போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்த நேரம், உயிரைப்பிடித்தபடி குழந்தைகளுடன் பொதுமக்கள் திக்கு தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தனர். 
பொதுநலவாய நாடுகளின் நெருக்கடியாலேயே இலங்கை தனக்கு விசா தர வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருப்பதாக செனல் - 4 ஆவணப்பட இயக்குநர் கெலம் மெக்கரே தெரிவித்தார்.
 
இலங்கை போர்க்குற்றங்களில் ஈடுபட்டது தொடர்பாக இந்தியா கவலை கொண்டிருக்கலாம் என்பதை தான் அறிவதாக மேலும் தெரிவித்த மெக்கரே, இந்திய விசாவுக்கு தொடர்ந்தும் முயற்சித்துக் கொண்டிருப்பேன் என்றும் இதன்போது குறிப்பிட்டார்.
பொதுநலவாய மாநாட்டை புறக்கணிக்க வலியுறுத்தி மதுரை விமான நிலையத்தை முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் செந்தில் தலைமையில் சுமார் 30 பேர், நேற்று காலை 10.30 மணியளவில் மதுரை விமான நிலையத்தை நோக்கி புறப்பட்டு வந்தனர். அப்போது, பெருங்குடியில் நின்ற பொலிஸார் அனைவரையும் தடுத்து நிறுத்தினர்.
கொமன்வெல்த் மாநாடு: மன்மோகன்சிங்கின் முடிவு தான் காங்கிரசின் முடிவாம்

கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பது தொடர்பாக, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் எடுக்கும் முடிவே தமது கட்சியினதும் முடிவாக இருக்கும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. புதுடெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் பேச்சாளர் மீம் அப்சல்,
முதலில் யாழ்ப்பாணம், அதையடுத்தே கொமன்வெல்த் – சவுத் புளொக்கின் புதிய சமரசத் திட்டம்.

கொழும்பில் நடக்கவுள்ள கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்பதற்கு, எதிர்ப்புகள் வலுத்து வருகின்ற நிலையில், இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றொரு புதிய சமரசத் திட்டத்தை, பிரதமர் செயலகத்திடம் முன்வைத்துள்ளதாக, சிஎன்என் – ஐபிஎன் தொலைக்காட்சி செய்தி
சுதந்திரமான போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்துவேன் – டேவிட் கமரோன் வாக்குறுதி

சிறிலங்காவில் நிகழ்ந்த போர்க்குற்றங்கள் மற்றும் மனிதஉரிமை மீறல்கள் குறித்து அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கொமன்வெல்த் உச்சி மாநாட்டில், வலியுறுத்தப் போவதாக, பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரோன் உறுதியளித்துள்ளார்.
இந்திய அமைச்சரவையில் பிளவு – முடிவெடுக்கும் அதிகாரம் சோனியாவிடம்

கொழும்பில் நடக்கவுள்ள கொமன்வெல்த் மாநாட்டில், இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், பங்கேற்பது தொடர்பாக, நேற்று நடந்த இந்திய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்பட்டது. எனினும் இதில் எந்த முடிவும் எடுக்கப்படாமல், காங்கிரஸ் தலைமையிடம் முடிவெடுக்கும் அதிகாரத்தை அமைச்சரவை
கொமன்வெல்த் மாநாடு: நேற்றைய கூட்டத்தில் முடிவில்லை! குழப்பத்தில் இந்திய மத்திய அரசு!
கொழும்பில் வரும் 15 முதல் 17-ஆம் தேதிவரை நடைபெறவுள்ள கொமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள்   மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டில் பரவலாக எதிர்ப்புக் குரல் வலுத்துவரும் நிலையில், இந்த விவகாரத்தில் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க முடியாமல் மத்திய அரசு குழப்பத்தில்
                           பிரித்தானிய புங்குடுதீவு நலன்புரிச் சங்கம்
                                            நடத்தும் இந்த ஆண்டின் 
                                                    மாபெரும் விழா 

              Pungudutiv`s Got Talant 

இடம் -Winston Churchill  மண்டபம் 
காலம் -22.12.2013 17.00 P.M

விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன 

DANCE COMPETITION -நடன போட்டிகள் 
Under 12
Over 12

SONG COMPETITION - பாடல் போட்டிகள் 
Under 12
Over 12

பங்குபற்ற விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய தொ.பே .இல.
கௌரி  - 07916 340 633
ரோகிணி- 07904 442 872
ஸ்ரீ - 07528 197 929
வரதன்  - 07402 652 528

PWA-UK Committee & PWA-UK Youth Committee 2013

உலகின் அதிகாரமிக்க தலைவராக ரஷ்ய ஜனாதிபதி நியமிப்பு

பிரித்தானியா செல்ல முயற்சிக்கும் உங்களுக்கு ஓர் இனிப்பான செய்தி!!

டென்னிஸ்: பயஸ் இணை தோல்வி
லண்டன், நவ. 7- ஏ.டி.பி., "வேர்ல்டு டூர் பைனல்ஸ்' டென் னிஸ் தொடரின் லீக் போட்டி யில், இந்தியாவின் லியாண்டர் பயஸ், செக்குடியரசின் ரதக் ஸ்டெபானக் இணை தோல்வி அடைந்தது.



            ட்சிக்கு வந்த மறு வருடம் சட்டமன்றத்தில் "திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதியில் ஒரு கலைக்கல்லூரி தொடங்கப்படும்' என்று ஜெ. அறிவித்தார்.

அறிவித்தபடி போன வருடத்தில் இருந்து வேடசந்தூரில் அரசு மேனிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள பழைய கட்டடமொன்றில் தற்காலிகமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது
அண்மைய கிசு கிசு


பெர்சனல்!

நயன்தாராவின் நம்பிக்கைக்குரியவராக இருந்தார் அவரின் மேக்-அப் மேன் ராஜு. நயனுடன் பிரபுதேவா லிங்க் ஆன பிறகு மேக்-அப்மேனின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டது. மீண்டும் ஸிங்கிள் ஆன நயன் மேக்-அப்மேனை பெர்சனல் மேனேஜராகவும் ஆக்கிக்கொண்டிருக்கிறாராம்.



             ந்திய அரசியல்வாதிகள்மேல் கேளிக்கை வரி விதிக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்று தோன்றுகிறது. ஒவ்வொரு நாளும் அவர்களது சொல்லும் செயலும் எவ்வளவு துயரத்திலும் மக்களை மனம் விட்டு சிரிக்க வைக்கின்றன. எதற்கும் துணிந்துவிட்ட அவர்களது  பேச்சுக்கள் மக்களை முடிவற்ற கேளிக்கைகளுக்குள் ஆட் படுத்திக்கொண்டிருக்கின்றன. போன வாரத்தின் உச்சக்கட்ட காமெடி தேர்தல் சின்னங்கள் தொடர்பானவை. 

           நாடாளுமன்றத் தேர்தலை நோக்கிய காய் நகர்த்தல்கள் விறுவிறுப்பு அடைய... காங்கிரஸ்-வி.சி.க. இடையே லேசாக அல்ல, கடும் உரசல். கடலூர் மாவட்டத்தில், அதுவும் வி.சி.க. தலைவர் திருமாவளவன் எம்.பி.யாக உள்ள சிதம்பரம் தொகுதியில்.

இரு தரப்பினரும் அடுத்தவர் பேனர்களைக் கிழிப்ப தும், கொடிக்கம்பங்களைச் சாய்ப்பதும், மோதிக்கொள் வதும், போலீசில் புகார் கொடுப்பதுமாக இருந்துவரு கிறார்கள். இவ்வளவுக்கும் மையமாக இருப்பது, ஒரே ஒரு நபர்தான். அவர் அனுபவமான அரசியல்வாதியும் அல்ல. 
நிற்க... 



            காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தாதே என்ற கோரிக்கை, கடந்த பல வாரங்களாகவே, தமிழகத்தில் சூட்டைக் கிளப்பிவருகிறது! 

கடந்தவாரத்தில், சென்னையிலும் சேலத்திலும் மத்திய அரசு அலுவலகங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப் பட்டன. இது தொடர்பாக, திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி உள்பட அந்த அமைப்பைச் சேர்ந்த 8 பேரை கைதுசெய்துள்ளது, போலீஸ். 



            ""ஹலோ தலைவரே...  தீபாவளிக்கு பல தலைவர்களும் வாழ்த்துச் சொல்லியிருந்தாலும், திராவிட இயக்க அரசியல் தலைவர்களான கலைஞர், வைகோ போன்றவங்க வாழ்த்துவது வழக்கமில்லை. அப்படிப்பட்ட கலைஞரையே நேரில் சந்திச்சி, தீபாவளி வாழ்த்து சொல்லிட்டு வந்திருக்காரே ப.சிதம்பரம்... கவனிச்சீங்களா?''

""தீபாவளிக்கு தி.மு.க மா.செ.க்களோ அறிவாலயத்தில் உள்ள நிர்வாகிகளோகூட கலைஞருக்கு வாழ்த்து சொல்லமாட்டாங்க. சொந்தக் கட்சிக்காரங்களே சும்மா இருக்கிற நேரத்தில், ப.சி எதற்கு கலைஞரை சந்திச்சி தீபாவளி வாழ்த்து சொன்னாராம், அப்படி என்ன வாழ்த்தாம் அது?''நன்றி நக்கீரன் 

யாழ்ப்பாணம் போனால் உதயன் பத்திரிகை அலுவலத்திற்கும் போவேன் - டேவிட் கமரூன்,
பிரித்தானிய பிரதமர்.பொதுநலவாய மகாநாட்டில் கலந்து கொள்ளும் முடிவில் மாற்றமில்லை. சனல் 4 வெளியிட்ட காணொளியை நான் பார்த்திருக்கின்றேன். அது தொடர்பான சுயாதீன சர்வதேச விசாரணையை நடத்த இலங்கை மகாநாட்டில் வலியுறுத்துவேன் - டேவிட் கமரூன், 
இலங்கை போர்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணையை நடத்த பொதுநலவாய மகாநாட்டில் கோரப்போவதாக பிரித்தானிய பிரதமர் அளித்த உறுதிமொழியை நிறைவேற்றுவார் என நம்பவில்லை - சுரேன் சுரேந்திரன், பேச்சாளர், உலக தமிழர் பேரவை




           தீபாவளிக்கு ஒரு நாள் முன்பாக... கடந்த 31-ந் தேதி கோலிவுட்டில் வருமானவரித் துறையினர் ரெய்டு நடத்தினார்கள். அஜீத்தின் "ஆரம்பம்' படத்தை தயாரித்த ஏ.எம்.ரத்னம், விஜய்யின் "ஜில்லா' படத்தை தயாரித்துவரும் ஆர்.பி.சௌத்ரி, கார்த்தியின் "அழகு ராஜா' படத்தை தயாரித்த ஞானவேல் ராஜா மற்றும் நடிகர் சந்தானம் ஆகியோர் வீடுகளிலும் அலுவலகங்களிலும் ரெய்டு நடந்தது.


           ராஜபக்சேவின் ராணுவம் தமிழீழத்தில் நடத்திய போர்க் குற்றங்களுக்கான ஆதாரங்களை, "நோ ஃப்யர் ஸோன்' என்கிற தலைப்பில் வெளியிட்டு வருகிறது சேனல் 4.   சிங்கள ராணுவத்தின் கூட்டுக் கற்பழிப்புக்கு ஆளாகி சுட்டுக் கொல்லப் பட்ட இசைப்பிரியாவின் உடல், ஆடைகள் அகற்றப் பட்டும் வெள்ளைத்துணி போர்த்தப்பட்டும் கிடந்த காட்சி ஏற்கனவே வெளி யானபோது தமிழகமும் உலகத் தமிழினமும் அதிர்ந்துபோனது.  "யுத்தத்தில் அவர் கொல்லப் ட்டார்' என்று சொல்லி வீடியோவை மறுத்தது இலங்கை அரசு. 

(அதிர்ச்சிப் படங்கள் & வீடியோ) பிரசவித்த குழந்தையை கொன்று புதைத்த தாய்: வவுனியாவில் தாயின் கொடூரம்
பிறந்தவுடனேயே கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்த ஆண் சிசுவொன்றின் சடலத்தினை வவுனியாவின் கல்மடு, பூம்புகார் கிராமத்தில் பொலிஸார் தோண்டி எடுத்துள்ளனர்.

7 நவ., 2013

சென்னையில் பிரபல ஓட்டலுக்கு சீல் ( படங்கள் )
அ.தி.மு.க. வழக்கறிஞர்களை வெளியேற்றிய புதிய நீதிபதி!
    பெங்களூரு சிறப்பு கோர்ட் நீதிபதியாக வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு ஜான் மைக்கேல் டிகுன்ஹா பதவியேற்றுக்கொண்டார். அவரிடம் நீதிபதி முடிகவுடர் பொறுப்புக்களை ஒப்படைத்தார். 
பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இல்லாத நேரங்களில்
காமன்வெல்த்: இந்தியா பங்கேற்க எதிர்ப்பு: சென்னையில் மாணவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் 3 கல்லூரி மாணவர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

திருவாரூரில் மமகவினர் 500 பேர் கைது
 திருவாரூரில் ரயில் மறியலில் ஈடுபட்ட மனிதநேய மக்கள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி - திருவாரூர் பயணிகள் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட 500 பேர் கைது  செய்யப்பட்டனர். 
ஆனந்த விகடனில் கிட்லர் ராஜபக்ஷ என்ற தலைப்பில்  வந்த  படம் 

யாழில் காதலியோடு உல்லாசமாக இருந்த ஆபாச புகைப்படங்களை முகநூலில் (பேஸ்புக) வெளியிட்ட காதலன் கைது
காதலியோடு உல்லாசமாக இருந்த ஆபாச புகைப்படங்களை முகநூலில் (பேஸ்புக்) வெளியிட்ட காதலனை கைது செய்துள்ளதாக யாழ்.பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி விக்கிரமாராட்சி தெரிவித்துள்ளார்.
யாழில் பாடசாலை மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் கைது
யாழ்.நகரப் பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை சேர்ந்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
லண்டனில் பொறியியலாளராக பணிபுரியும் மகனை பார்க்க விரும்பும் கைதடி முதியோர் இல்ல தாய்
லண்டனில் பொறியியலாளராக பணிபுரியும் தன் மகனை பார்க்க விரும்பும் யாழ்ப்பாணம், கைதடி முதியோர் இல்லத்திலுள்ள தாயொருவர் முதியோர் இல்ல அதிகாரிகள் மற்றும் உறவினர்களிடம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.
பொலிஸ் நிலையங்களில் சித்திரவதை; ஆசிய மனித உரிமை ஆணைக்குழு குற்றச்சாட்டு 
இலங்கையில் உள்ள பொலிஸ் நிலையங்களில்      சித்திரவதைகள் தொடர்வாக ஆசிய மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
 சிறிலங்காவிற்கு தலையிடி; அன்சாரியும் வரமாட்டார்? 
சிறிலங்காவில் நடக்கவுள்ள பொதுநலவாய மாநாட்டைப் புறக்கணிக்க இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் முடிவெடுத்தால், இந்தியக் குழுவுக்கு துணைக் குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரியும் தலைமையேற்றுச் செல்லமாட்டார் என இந்தியன் எக்ஸ்பிரஸ்
 பொதுநலவாய வர்த்தக பேரவை மாநாட்டைப் புறக்கணிக்கிறது பிரித்தானியா 
கொழும்பில் நடக்கவுள்ள பொதுநலவாய  உச்சி மாநாட்டுக்கு பிரித்தானியாவில் இருந்து வர்த்தகப் பிரதிநிதிகள் குழு அனுப்பப்படாது என பிரித்தானிய, நாடாளுமன்றத்துக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை மனித உரிமை மீறல்களுக்கு எதிராக தொடர்ந்தும் கனடா போராடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மனித உரிமை மீறல் நிலைமைகளுக்கு எதிராக கனடா தொடர்ந்தும் போராடும் என அந்தநாட்டு வெளிவிவகார அமைச்சின் பாராளுமன்ற விவகாரச்
பல விமர்சனங்கள் உள்ள நிலையில் பொதுநலவாய நாடுகள் குறித்து சனல் 4இல்: கமலேஷ் சர்மா
பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் கமலேஷ் சர்மா கூட்டத் தொடரின் தன்மையை விளக்கிய போதிலும், இலங்கைக் கூட்டத்தில் தலைவர்கள் கொழும்பு செல்லும் முடிவில் மாற்றமில்லை என சனல் 4 செய்தி மூலம் வெளிப்படுத்தினார்.
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலைச் சம்பவத்தில் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ள முருகன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இவர் இன்று காலை முதல் வேலூர் சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரபல சிரிப்பு நடிகர் சிட்டிபாபு கவலைக்கிடம்!

பிரபல சிரிப்பு நடிகர் சிட்டிபாபு கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சுய நினைவிழந்து கோமாவில் உள்ள அவரை காப்பாற்ற மருத்துவர்கள் போராடி

கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவரின் கடை தீக்கிரை

யாழ். வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் ஆளும் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவரின் வர்த்தக நிலையம் இனம்தெரியாத நபர்களினால் இன்று அதிகாலை தீ மூட்டி எரிக்கப்பட்டுள்ளதாக தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில்

மன்மோகன்சிங்கை அழைப்பது தமிழ் மக்களின் அரசியலை பலவீனப்படுத்தும்: தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை வரவேண்டும் என்று  அழைப்பது தமிழ் மக்களின் அரசியலை பலவீனப்படுத்தும் என தமிழ்த் தேசிய
நாம் உங்களிடம் கையளிப்பது வெறும் கடதாசிகள் அல்ல. 
அவை ஒவ்வொன்றும் பொறுமதிவாய்ந்த எம் பிள்ளைகளின் உயிர்கள். எனவே, இதற்கு தகுந்த பதிலளிக்க வேண்டுமென காணாமற்போனோரின் பெற்றோர் கண்ணீர் மல்க மன்றாட்டமாக கேட்டுக்கொண்டனர்.
காமன்வெல்த்: பிரதமர் கலந்து கொண்டால் தமிழகம், புதுவையைச் சேர்ந்த 40 எம்.பிக்களும் பதவி விலக வலியுறுத்தல்
காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொண்டால், தமிழகம், புதுவையைச் சேர்ந்த 40 எம்.பி.க்களும் பதவி விலக வேண்டும் என புதுச்சேரி இலக்கியப் பொழில் இலக்கிய மன்றம் வலியுறுத்தி உள்ளது.
அம்மன்றத்தின் நிறுவனர் பெ.பராங்குசம்
காமன்வெல்த் மாநாடு: தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து பிரதமர் முடிவு எடுப்பார்: ஜி.கே.வாசன் பேட்டி
தமிழக மக்களின் உணர்வுகளை மனதில் கொண்டு காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்வது குறித்து பிரதமர் மன்மோகன் சிங் நல்ல முடிவு எடுப்பார் என மத்திய கப்பல்போக்குவரத்துத்துறை
மத்திய அமைச்சரவைக் கூட்டம்: காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பது குறித்து இறுதி முடிவு?
இலங்கையில் வரும் 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை, காமன்வெல்த் நாடுகள் மாநாடு நடைபெறுகிறது. இந்தியா இம்மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும்
மத்திய அமைச்சரவைக் கூட்டம்: காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பது குறித்து இறுதி முடிவு?
இலங்கையில் வரும் 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை, காமன்வெல்த் நாடுகள் மாநாடு நடைபெறுகிறது. இந்தியா இம்மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும்
பிரித்தானியாவில் தீபாவளி பண்டிகை! தமிழ் முறைப்படி சேலை அணிந்து வந்த பிரதமரின் மனைவி
வட மேற்கு லண்டனிலுள்ள சுவாமி நாராயணன் ஆலயத்தில் திங்கட்கிழமை தீபாவளி பண்டிகையையொட்டி இடம்பெற்ற நிகழ்வில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் தனது பாரியார் சமந்தா சகிதம் கலந்து கொண்டார்.

6 நவ., 2013

வவுனியா நகரசபையின் உள்ளூராட்சி வார நிகழ்வும் தேசிய வாசிப்பு மாதமும் நேற்று வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

வவுனியா நகரசபைச் செயலாளர் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோதரராரலிங்கம், வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம், வடமாகாணசபை

மத்திய அரசு பாரிய சதி முயற்சி: முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இன்று அவசரமாகத் திறப்பு! படங்களுடன்


உலகத் தமிழர் பேரமைப்பு அறக்கட்டளையின் சார்பில் தஞ்சாவூர் விளார் சாலையில் அமைக்கப்பட்டிருக்கும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இன்று திறந்து வைக்கப்பட்டது. காலை பத்தரை மணியளவில் மொழிப் போர் மறவர் திரு. ம. நடராசன் அவர்கள் தலைமையில்

வடமாகாணசபை த.தே.கூட்டமைப்பு உறுப்பினர்கள் – தீவக மக்கள் சந்திப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர்களான விந்தன் கனகரட்னமும் அரியகுட்டி பரஞ்சோதியும் யாழ். தீவுப்பகுதிக்குச் சென்று அங்குள்ள மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.
கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை! இலத்திரனியல் முறையில் வாகனங்களுக்கான கட்டணம் அறவீடு
கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்களுக்கான கட்டணங்களை இலத்திரனியல் முறையில் அறவிடும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பிரபாகரன் சிறந்த தலைமைத்துவ குணாதிசயங்களை கொண்டவர்: கோத்தபாய புகழ்ச்சி
விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் ஜே.வி.பியின் ஸ்தாப தலைவர் ரோஹன விஜேவீர ஆகியோர் சிறந்த தலைமைத்துவ குணாதிசயங்களை கொண்டவர்கள் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இசைப்பிரியா வீடியோ! இராணுவச் சிப்பாய் ஒருவரே தந்தார்! சனல்4 கெலும் மக்ரே அதிர்ச்சித் தகவல்
இசைப்பிரியா இலங்கை இராணுவத்தினரால் உயிருடன் பிடித்துச் செல்லப்படுகின்ற வீடியோ இலங்கை இராணுவ சிப்பாய் ஒருவரே தனக்குத் தந்தார் என அதன் தயாரிப்பாளரான சனல் 4 இயக்குநர் கெலும் மக்ரே அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
அவசரமாக திறக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்
 

மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம்: ரயில் பெட்டிக்குள் சென்று பார்வையிட்டார் ஜெயலலிதா
 

சென்னை நகரில் போக்குவரத்து வசதியை விரைவுபடுத்துவதற்காக மெட்ரோ ரெயில் திட்டம் ரூ. 14 ஆயிரத்து 600 கோடி செலவில் செயல் படுத்தப்பட்டு வருகிறது. 
முதல் கட்டமாக அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் கோயம்பேடு
யாழில் முத­லா­வது புற்­றரை மைதானம் அமைக்கும் பணிகள் யாழ்ப்­பாணம் சென்.பற்றிக்ஸ் கல்­லூரி மைதா­னத்தில் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.
கடந்த சில மாதங்­க­ளுக்கு முன்னர் யாழ்ப்­பாணம் வருகை தந்த இலங்கை தெரிவுக் குழுவின் தலைவர் சனத் ஜெய­சூ­ரிய, யாழில் முத­லா­வது புற்­றரை துடுப்­பாட்ட மைதானம் சென்.பற்றிக்ஸ் கல்­லூரி மைதா­னத்தில் அமைக்­கப்­படும் என தெரி­வித்­தி­ருந்தார்.
முரளி ஹார்­மனி கிண்ண இரு­பது–20 கிரிக்கெட் சுற்றுத் தொடரின் இறு­திப்­போட்­டியில் இன்று கொழும்பு சென்.பீற்றர்ஸ் கல்­லூரி அணியும் – கண்டி புனித திரித்துவக் (ரினிட்றி ) கல்­லூரி அணியும் பலப்­ப­ரீட்சை நடத்­த­வுள்­ளன.
கிளி­நொச்சி மத்­திய கல்­லூரி மைதா­னத்தில் பி.ப. 1.30 ஆரம்­ப­மாகும் இப்­போ ட்­டியில் நடப்­பாண்­டுக்­கான கிண்­ணத்தை கைப்­பற்­றப்­போகும் அணி எது என்­பது பெரும் எதிர்­பார்ப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.
 
நடப்­பாண்­டுக்­கான முரளி ஹார்­மனி கிண்ண இரு­பது-20 கிரிக்கெட் சுற்­றுப்­போட்டி கடந்த முதலாம் திகதி ஆரம்­ப­மா­னது. வட­மா­கா­ணத்தின் 5 இடங்­களில் நடை­பெற்று வரும் இச்­சுற்­றுப்­போட்­டியில் அகில இலங்கை ரீதி­யாக கள­மி­றங்­கிய 12 அணி­களும் 3 பிரி­வு­க­ளாக பிரிக்­கப்­பட்டு முதல் கட்ட

30 கிலோ ஹெரோயினுடன் லைபீரிய நாட்டுப் பிரஜை கைது

30 கிலோ கிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருளை கடத்த முற்பட்ட லைபீரிய நாட்டுப் பிரஜையொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஜெயேந்திரர், விஜயேந்திரர் புதுவை கோர்ட்டில் ஆஜர்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு புதுவை முதன்மை குற்றவியல் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணையில் வக்கீல் வாதங்கள் முடிந்து தீர்ப்பு கூறும் இறுதி கட்டத்துக்கு வந்துள்ளது.
காமன்வெல்த்தில் இந்தியா பங்கேற்பதை கண்டித்து பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ’’காமன்வெல்த் மாநாட்டில் இந்திய அரசு பங்கேற்க வேண்டும் என்று முடிவு செய்யப் பட்டதை கண்டித்தும்,
சிவகாசியில் தொழிலதிபர்களை சந்தித்து ஆதரவு  திரட்டிய வைகோ?
 மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் மதிமுக பொது செயாலளர் வைகோ போட்டியிடுவர் என அக்கட்சியினர் கூறிவருகிறார்கள். 
கொளத்தூர் மணி தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது
சேலம் காந்தி சாலையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகம் கடந்த மாதம் 30-ஆம் தேதி தாக்கப் பட்டது. ஒரு கும்பல் சாக்குப் பைகளை தீயிட்டு கொளுத்தி வீசியதில் அலுவலக நுழைவு வாயிலில் உள்ள விளக்குகள்
அஜீத் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார்
சரத்குமார் மகள்


 
சிம்புவுடன் ‘போடா போடி’, விஷாலுடன் ‘மதகஜராஜா’ ஆகிய படங்களில் நடித்துள்ளவர் நடிகை வரலட்சுமி. இவர் நடிகர் சரத்குமாரின் மகள். இவர் விஷாலுடன் நடித்த ‘மதகஜராஜா’ படம் பல்வேறு பிரச்சினைகளால் வெளிவர முடியாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

சரண் அடைந்த புலிகள் அனைவரும் சுட்டுக் கொல்லப் பட்டுவிட்டார்கள்-இலங்கை ராணுவ அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி சனல்-4தொலைக்காட்சி செய்தி! ** மு.வே.யோகேஸ்வரன்

சென்ற 2009 மே மாதம் முள்ளி வாய்க்காலில் சரண் அடைந்த விடுதலைப் புலிகள் அனைவரும் சுட்டுக் கொல்லப் பட்டுவிட்டார்கள்..என்று ஒரு சிங்கள ராணுவ அதிகாரியை மேற்கோள் காட்டி சனல் -4

5 நவ., 2013

நம்பிச் சென்றேன் இறுதியில் இப்படிச் செய்துவிட்டார்கள்: கிளிநொச்சி இளம் தாய் 

ஒருவர் எனது வீட்டுக்கு வந்து, எனது ஐந்து வயதுக்குட்பட்ட பெண்பிள்ளையின் நிறை பார்க்க வேண்டும் எனவே கிளினிக் கொப்பியுடன் நாளை ஆசுப்பத்திரிக்கு வருமாறு கூறினார்.
மன்மோகன் சிங், கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கக் கூடாது! ஏழு பேர் யானை மலை மீது ஏறி போராட்டம்
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், இலங்கையில் நடைபெறும் கொமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ஏழு பேர், மதுரையில் உள்ள  யானை மலை மீது ஏறி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க தடை கேட்ட வழக்கு தள்ளிவைப்பு
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது என்பதை வலியுறுத்தி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பணிபெண் இறந்த நிலையில் கண்டுபிடிப்பு; எம்.பி. மனைவியிடம் போலீசார் விசாரணை
புதுடெல்லியில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. தனன்ஜெய் சிங் வீட்டில் வேலை செய்து வந்த பெண் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். பணிப்பெண்ணின் உடலில், தலை, மார்பு, வயிறு
நடிகை - காங். எம்.பி. விவகாரத்தில் மர்மம் உள்ளது
என்கிறார் மாஜி முதல்வர்

 நடிகை ஸ்வேதாமேனன்,  பீதாம்பர குரூப் எம்.பி. மீதுகொடுத்த புகார் விஸ்வரூபம் எடுக்க கொல்லம் மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரே காரணம். இவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினருடன் சேர்ந்து நடத்திய போராட்டங்கள் காரணமாக
90 ஆயிரம் விதவைத் தமிழச்சிகளின் நிலையை எண்ணியாவது காமன்வெல்த்தை புறக்கணிக்க வேண்டும்: கி.வீரமணி

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் எல்லையற்றவை; சர்வதேசச் சட்டங்களாலும், மனிதநேய அடிப்படையிலும், இராஜபக்சே  தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளியாவார்.
ராஜபக்சேயின் தந்திரம்
இது போன்ற இரக்கமற்ற இனப்படுகொலை,
கனடா நாட்டின் ஈழத்தமிழர்கள் அதிகம் வசிக்கும் மார்க்கம் நகரில் உள்ள தெருவுக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.



இந்திய சினிமாவின் 100வது ஆண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் கனடாவின் பிரதான நகரங்களுள் ஒன்றான டொரண்டோவின் மர்கம் நகரில் சர்வதேச இந்திய திரைப்பட விழா நடைபெற்று வருகிறது.

உள்ளூர் நேரப்படி நேற்று (திங்கட்கிழமை) மாலை 3 மணியளவில் தொடங்கிய இவ்விழாவில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் தமிழ், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் சாதனைகளை போற்றி புகழாரம் சூட்டப்பட்டது.

பின்னர், மர்கம் பகுதியில் உள்ள பிரதான தெரு ஒன்றுக்கு ஏ.ஆர்.ரஹ்மான்(அல்லாஹ் - ரக்ஹா ரஹ்மான்) தெரு என பெயர் சூட்டப்பட்டது.

அந்த பெருமைக்குரிய பெயர் பலகையுடன் அடக்கமே உருவாக இசைப்புயல் 'போஸ்' தரும் காட்சியை படத்தில் காணலாம்.

கனடா நாட்டின் ஈழத்தமிழர்கள் அதிகம் வசிக்கும் மார்க்கம் நகரில் உள்ள தெருவுக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்திய சினிமாவின் 100வது ஆண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் கனடாவின் பிரதான நகரங்களுள் ஒன்றான டொரண்டோவின் மர்கம் நகரில் சர்வதேச இந்திய திரைப்பட விழா நடைபெற்று வருகிறது.
பேஸ்புக் சமூக வலைத்தளம் தொடர்பில் பல முறைப்பாடுகள்
2013 ஆம் ஆண்டில் முடிவடைந்த காலப் பகுதியில் இணைத்தளம் மற்றும் அது சம்பந்தமான ஆயிரத்து 100 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணனி தொடர்பான அவசர பதில் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
குருதியை உறைய வைக்கும் கடும் குளிரில் பரமேஸ்வரன் பட்டினிப் போர்
தமிழினப் படுகொலையாளி மகிந்த ராஜபக்சவின் தலைமையில் சிங்கள தேசத்தில் நடைபெறுவதற்கு ஏற்பாடாகியுள்ள பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க வேண்டாம் என்று பிரித்தானியப் பிரதமரை வலியுறுத்தி அவரது வாசத்தலம் முன்பாக குருதியை உறைய வைக்கும் கடும் குளிரில்
பொன்காந்தன் மற்றும் வேழமாலிகிதன் இன்று திடீர் விடுதலை
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் செயலாளரான பொன்னம்பலம் லட்சுமிகாந்தன் (பொன்காந்தன்) மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரான அருணாசலம் வேழமாலிகிதன் ஆகியவர்கள் குற்றங்கள் நிருபிக்கப் படாத நிலையில்
ஈழ ஆதரவு போல அதிமுக ரெட்டை வேடம் போடுகிறது :
வைகோ ஆவேசம் 

 நள்ளிரவில் கைது செய்யப்பட்ட கொளத்தூர் மணியை சேலம் சிறையில் கொட்டும் மழையில் சந்தித்தார் வைகோ.

நீண்ட நேரத்திற்கு பின் திரும்பியவர் வெளியில் இருந்த செய்தியாளர்களிடம், “எதேச்சதிகார நடவடிக்கை இது. கொளத்தூர்

இளையராஜா - எம்.எஸ்.வி. தொடங்கிவைக்க சென்னையில்
 சினிமா தொழிலாளர்கள் ஊர்வலம்

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன (பெப்சி) தலைவர் அமீர் சென்னையில் இன்று நிருபர்க ளுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்,  ’’கடந்த சில மாதங்களாகவே தமிழகத்தின்

யாழ்.சென்.பற்றிக்ஸுக்கு விஜயம் செய்த கிரிக்கெட் வீரர் சங்ககார 

இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட வீரர் குமார் சங்­கக்­கார நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை யாழ். சென் பற்றிக்ஸ் கல்­லூ­ரிக்கு விஜயம் மேற்­கொண்டார்.

11 வயது சிறுமியை துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய பிக்கு கைது

சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய நிக்கவெரட்டிய சேனாநாயக்கபுர விகராதிபதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒரே தேசம் ஒரே நாடு எனக்கூறுவோர் திட்டமிட்ட வகையில் எப்படி தமிழர்களின் நிலங்களை அபகரிக்க முடியும் - அரியநேந்திரன்

வலிகாமம் வடக்கு மக்களின் பூர்வீக நிலங்களில் உள்ள வீடுகளை அழித்தொழிக்கும் செயற்பாடுகளில் இலங்கை இராணுவம் மிகுந்த அக்கறை காட்டி வருவது இந்நாட்டில் எவ்வாறான ஆட்சி முறை நீடிக்கின்றது என்பதனை சர்வதேசத்திற்கு கோடிட்டுக்காட்டுகின்றது என தமிழ் தேசிய

பா.உ.சிறிதரனின் கிளிநொச்சி அலுவலகத்தில் இராணுவ புலனாய்வாளர்கள் மிரட்டல்!
காவல்துறை உடை அணிந்த ஒருவர் அடங்கலாக ஒன்பது பேர் கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக் காரியாலயத்திற்கருகில் இன்று இரவு 10:00 மணியளவில் குவிந்துள்ளனர்.
war-crime434வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கென்றே சிறிலங்கா படையினரின் ஒரு பிரிவினர் தனியாக களமிறக்கப்பட்டிருந்தனர் என்று யாழ்.குடாநாட்டு தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது.

இன்று 1 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சனல்-4 தொலைக்காட்சி வெளியிட்ட போர்க்குற்ற காணொளி மூலமாக இது அம்பலத்திற்கு வந்துள்ளது என்றும் மேற்படி பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.
paraniகடந்த நான்கு வருடங்களாக தமிழ் இன அழிப்பின முதன்மை குற்றவாளிகளாக ஐநாவை குறிப்பிட்டு பேசியும் எழுதியும் அதை ஒரு செயற்பொறிமுறையாக மாற்ற முயன்றும் வரும் ஒரு உளவியலாளர் குழுவின் சார்பாக பெண்ணிய உளவியலாளரும் அரசியற்செயற்பாட்டாளருமான பரணிகிருஸ்ணரஜனியுடன் நாம் நடத்திய பிரத்தியேக நேர்காணல் இது.

ad

ad