புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 நவ., 2013

மேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராக முத்தையாக முரளிதரன் தெரிவாவாரா ?அவரது சகோதரர் ஒருவர் சிறைச் செல்வதை தடுப்பதற்காவே முரளி அரசுடன் கைகோர்க்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
எதிர்வரும் மேல் மாகாண சபைத்தேர்தலில் ஆளும் கட்சியின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட வைக்கும் நோக்கத்தில் ஜனாதிபதி தேடிய பிரபலமான நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஒருவர் கிடைத்துள்ளதாக தெரியவருகிறது.
உயிருக்கு பாதுகாப்பு வேண்டும் : மதுரை ஆதீனத்தின் உதவியாளர் வைஷ்ணவி கமிஷனரிடம் புகார்
மதுரை ஆதீனத்தின் தனி உதவியாளர் வைஷ்ணவி. கடந்த ஓராண்டுக்கு முன்பு இவருக்கு திருமணம் நடபெற்றது.  திருமணத்திற்கும் பிறகும் உதவியாளராக நீடித்து வருகிறார்.
சென்னையில் 8வது மாடியில் இருந்து குதித்து பெண் மரணம்சென்னையில் பரபரப்பான மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள கட்டிடத்தில் 8வது மாடியில் இருந்து குதித்த பெண் ஊழியர் ராஜலட்சுமி பலியானார்.     பட்டதாரியான இவர் அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர்.  உடலை கைப்பற்றிய போலீசார் தற்கொலை குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
யாழ்ப்பாணம் சிறையில் இருந்து 15 தமிழக  மீனவர்கள் விடுதலை
புதுக்கோட்டை, ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் கடந்த அக்டோபர் மாதம் 14ம் தேதி இலங்கை கடற்படை யினால் சிறைபிடிக்கப்பட்டனர். சிறைபிடிக்கப்பட்ட 15 மீனவரையும் விடுதலை செய்தது ஊர்க்காவல் நீதிமன்றம்.இதையடுத்து இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் இருந்து  மீனவர்கள் 15 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
சுவிசின் நெடுஞ்சாலை கட்டணம் உயராது -தேர்தலில் வாக்களிப்பு 

இன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் சுவிசின் அதி வேக நெடுஞ்சாலை கட்டணம் வருடத்துக்கு 40 இல் இருந்து 100 பிராங்காக உயர்த்தும் சட்டத்துக்கு மக்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர்.ஐரோப்பாவிலும் சுவிசிலும் ஜெர்மனியிலும் நெடுஞ்சாலைகளுக்கு தூரங்களுக்கான கட்டணம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.இருந்தாலும் சுவிசில் வருடம் ஒன்றுக்கு 40 பிரான்க் அறவிடப்பட்டு வருகிறது 

சுவிட்சர்லாந்தில் சர்வதேச மன்னிப்புச்சபை காண்பித்து வரும் சனல் 4 ஆவணப்படம்

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களுக்கு நீதி கோரி, சர்வதேச மன்னிப்புச் சபை உலகளாவிய ரீதியில் நடாத்திவரும் தொடர் பரப்புரையின் ஒரு அங்கமாக சுவிஸ் நாட்டில் சனல்- 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட
போர்முலா ஒன்று கார் பந்தய சாம்பியனாக இந்த அவருடம் விட்டல் தெரிவாகி உள்ளார் .இந்த வருடம் நடை பெற்ற இருபது சுற்றுக்களில் இவர் பதின்மூன்று சுற்றுக்களில் முதலாம் இடத்து உள்ளார் . இறுதியாக நடந்த ஒன்பது போட்டிளில் தொடர்ந்து முதலாம் இடத்தை  அடைந்ததனால் 2004இல் சூமாக்கர் சாதித்த சாதனையை எட்டி பிடித்துள்ளார் இவரது வாகனமான ரெட் புல் உம வாகன சம்பியனானது .இன்றைய பிரேசில் சாவோ பாலோ சுற்றி வென்றுள்ளார் .
டேவிஸ் கோப்பை: செக் குடியரசு அணி மீண்டும் சாம்பியன்

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில் செக் குடி யரசு அணி 3-2 என்ற புள் ளிக் கணக்கில் செர்பி யாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்தது.
புதிய உலக சாம்பியன் கார்ல்ஸென்
சென்னை, நவ.23-  அய்ந்து முறை உலக செஸ் சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்தை அவரது சொந்த மண்ணிலேயே வீழ்த்தி, புதிய உலக சாம்பியனாகியுள்ளார். நார்வேயின் கார்ல் ஸென்.
பெய்ரூட், நவ. 24- சிரியாவின் மிகப்பெரிய நகரமான அலெப்போ நகருக்கு அருகில் போராளிகள் வசமுள்ள இரண்டு மாவட்டங்களில் அதிபர் ஆசாத்தின் போர் விமானங்கள் நேற்று குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதல் மூன்று முறையாக நடத்தப்பட்டன. இதில் அல் பாப் பகுதிகளில் ஜெட் விமானங்கள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில் பொதுமக்கள் 22 பேர் கொல்லப்பட்டனர் என்று பிரிட்டன் மனித உரிமை அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

கண்கள் உறங்கிடுமா? - பகுதி 1


கண்கள் உறங்கிடுமா? காதல் கண்கள் உறங்கிடுமா? காதல் கண்கள் மட்டுமா எப்பபோதும் உறங்காது கொட்டக் கொட்ட விழித்திருக்கின்றன? பசியுள்ளவன் கண்களும், பிணியுள்ளவன் கண்களும், துன்பத்தால் துடிப்பவன் கண்களும், தனது குறிக்கோளை அடைய ஏங்குபவனது கண்களும் ஏன் பொறாமையும் வஞ்சகமும் உள்ள கண்கள் கூட உறங்குவதில்லை. 2009 மே மாதம் 18ம் திகதியின் பின் எத்தனை ஆயிரம் தமிழ்ப்பெண்களின் கண்கள் இன்னும் உறங்காது விழித்திருக்கின்றன தெரியுமா? ஏனெனில் அவை யாவும் காதற்கண்களே. தன் நாட்டின் மேலும், தன் மொழியின் மேலும், உற்றார், பெற்றார், உறவுகள், குழந்தைகள் மேலும், மனிதர்கள் மேலும் வைத்த காதலால் எமது கண்கள் உறங்கிடுமா?

24 நவ., 2013

சென்னையில் விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய முதல் அமைச்சர்
சென்னை சாந்தோமில் நடந்த பயங்கர விபத்தில் புதுச்சேரி முதல் அமைச்சர் ரங்கசாமி உயிர் தப்பினார். அடையாறு நோக்கி சென்ற ரங்கசாமியின் கார் மீது மற்றொரு கார் மோதியது. இந்ந்த விபத்தில் ரங்கசாமி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். இந்த விபத்தினால் சாந்தோம் பட்டினப்பாக்கம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னையில் நடைபெற இருந்த குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்திய போலீசார்
சென்னையில் நடைபெற இருந்த குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தி போலீசார், மணக்கோலத்தில் இருந்த மாணவியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். 
பேரறிவாளன் வாக்கு மூலத்தை முழுமையாக பதிவு செய்யவில்லை: முன்னாள் சிபிஐ அதிகாரி
ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அறிவு என்கிற ஏ.ஜி.பேரறிவாளனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பேரறிவாளன் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்றபோது வி.தியாகராஜன் என்கிற ஐ.பி.எஸ். அதிகாரி சி.பி.ஐ. கேரள பிரிவின் எஸ்.பி.யாக இருந்தார்.
குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளனின் வாக்கு மூலத்தை பதிவு செய்யும் பொறுப்பு சி.பி.ஐ. அதிகாரி
ஈழத்தமிழ் அகதிகளுக்கு குடியுரிமையை பெற்றுக்கொடுக்க சகல கட்சிகளும் இணைய வேண்டும்: சுதர்சன நாச்சியப்பன்
தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை பெற்றுக்கொடுக்க தமிழக கட்சிகள் ஒருங்கிணைய வேண்டும் என இந்திய மத்திய இணையமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்தார்.
வடக்கில் இரவு நேரங்களில் வீடுகளுக்கு செல்லும் புலனாய்வாளர்கள்! பெண்கள் அச்சத்தில்: அடைக்கலநாதன் எம்.பி
வடக்கில் தமிழ் மக்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களுக்கு எதிராக அரச படைகளின் புலனாய்வாளர்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைககளை உடனடியாக தடுதது நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற
ஐ.நாவின் விசேட பிரதிநிதி இலங்கை வரவுள்ளார்
ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி ஒருவர் அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் மனித உரிமைகள் சம்பந்தமான ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி கலாநிதி ஷலோக்கா பேயானி இலங்கைக்கு வருகை
தனது தாயின் சமாதியை பார்க்கப் போனதால்தான் ஜெயபாலன் கைதானார்! நோர்வேயிலிருந்து துணைவியார்
தனது தாயின் சமாதியைப் பார்க்கப் போனதால்தான் கவிஞர் ஜெயபாலன் இலங்கையில் கைது செய்யப்பட்டதாக தான் நம்புவதாக அவரது மனைவி வாசுகி கூறியுள்ளார்.
மலேசியாவில் 1000இற்கும் மேற்பட்ட இலங்கையர் கைது
மலேசியாவில் ஆயிரத்துக்கும் அதிகமான இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டினர் தங்குவதற்கு இடம் கொடுப்பவர்களுக்கு புதிய நிபந்தனை

தேசிய தகவல் மையத்தின் அதிகாரியும், வெளிநாட்டினர் இந்தியாவில் குடியேறுதலுக்கான விசா வழங்குதல் பதிவு மற்றும் தொடர்ந்து கண்காணிக்கும் துறை அதிகாரி எஸ்.ஏ.விஜயகுமார் கூறினார்.

ad

ad