புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 டிச., 2013

    ஏற்காடு இடைத்தேர்தல்: 89.24 % வாக்குப்பதிவு

ஏற்காடு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு புதன்கிழமை அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இதில் 89.24 சதவீத வாக்குகள் பதிவாகின. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் காலை 8 மணிக்குத் தொடங்கி,

சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்த 5 மாநிலங்களில், 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று வாக்குக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில்
தமிழ் இன அழிப்பை ஆதாரப்படுத்திய சனல் 4 ஆவணப்படம் சுவிஸில்! கெலும் மக்ரேயை சந்திக்கலாம்
அரசின் போர்க்குற்றம் முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பை ஐநாவிலும், உலக அரங்கிலும் ஆதாரப்படுத்திய channel 4 ஆவணப்படம் சுவிஸில் திரையிடப்படுகின்றது.
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பற்றிய அறிய புதிய இணையத்தளம்!
இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்றம் பற்றிய சகல விபரங்களும் அடங்கிய இணையத்தளம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மாணவர் வீசாவில் மாலைதீவு யுவதிகளை இலங்கைக்கு அழைத்து வந்து விபச்சாரத் தொழில்!
மாணவர் வீசாவில் மாலைதீவு யுவதிகளை இலங்கைக்கு அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.கொழும்பு மற்றும் சனநெரிசல் மிக்க நகரங்களில் மாலைதீவு யுவதிகள் இவ்வாறு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

பிரபல நடிகர்,ஆர்ட் டைரக்டர் சக்திராஜ் மறைந்தார்
தமிழ் திரையுலகின் பிரபல ஆர்ட் டைரக்டரும், நடிகருமான சக்திராஜ் நேற்று உடல்நலக்குறைவால் சென்னையில் காலாமனார். அவருக்கு வயது 58.
மாகாணசபையில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் முடிவுகளை மீறி செயற்பட்டமைக்கு கூட்டமைப்பு ஆட்சேபம்
கிழக்கு மாகாண சபையில் கடந்த இரண்டு நாட்களாக வரவு செலவுத்திட்ட விவாதம் நடந்து வரும் நிலையில் கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மீறி இன்றைய தினம் சபையை நடத்தியமைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்பேசம் தெரிவித்துள்ளது.
நெடுந்தீவு பிரதேசசபை தலைவர் கொலை! சந்தேகநபர்கள் மூவரையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு
நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் தானியல் றெக்சியனை (ரஜீவ்) கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட அவர்கள் நெடுந்தீவு நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போது அவர்களை எதிர்வரும் 17ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் எஸ். மகேந்திரராசா உத்தரவிட்டுள்ளார்.

4 டிச., 2013

சிறீதரன் எம்.பிக்கு எதிராக அம்பாறை நகரசபையில் தீர்மானம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரனுக்கு எதிராக அம்பாறை நகரசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.அண்மையில் மாவீரர் தினம் தொடர்பிலும் பிரபாகரன் தொடர்பிலும் சிறீதரன் நாடாளுமன்றில் உரையாற்றியிருந்தார்.
இலங்கையில் இறுதிக்கட்டப் போரில் இனப்படுகொலை நடந்தது! - இப்போது ப.சிதம்பரம் சொல்கிறார்
காங்கிரஸ் கட்சியின் காலைச்சுற்றிய பாம்பாக ஈழத்தமிழர் விவகாரம் மாற ஆரம்பித்து விட்டது. அதை அந்தக் கட்சியினரும் உணர ஆரம்பித்திருப்பதன் அடையாளம்தான் சென்னையில் ப.சிதம்பரத்தின் சிறப்புப் பேச்சு!
நெடுந்தீவு பிரதேச சபை தலைவரை கொலை செய்ய பணித்தது அவரது மனைவியே! விசாரணையில் அம்பலம பரபரப்பு தகவல்
நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் தானியல் றெக்சியனின் (ரஜீவ்) கொலை தொடர்பில், அவரது மனைவியும் மற்றுமொரு நபரும் இன்று காலை கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
இராணுவத்தில் இணைந்துள்ள தமிழ்ப் பெண்கள் தென் பகுதிக்கு விஜயம்
இலங்கை இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட 45 தமிழ்ப் பெண்கள் தென் பகுதிக்கு சுற்றுலா விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
பிரபாகரனின் வீட்டை அரசு முடிந்தால் சுவீகரித்து காட்டட்டும்!- சிவாஜிலிங்கம் சவால்
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான காணிகள் உட்பட எந்த சொத்துக்களையும் அரசுடமையாக்க இடமளிக்க போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர்
போர்க்குற்ற விசாரணையில் முன்னேற்றம் இல்லாவிட்டால், சர்வதேச நாடுகளின் பொறுமை குறைந்து விடும்!- அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை
போர்க்குற்றங்கள் தொடர்பான உள்ளக விசாரணை நடத்தும்  சர்வதேச நாடுகளின்  வேண்டுகோள்களை இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நிராகரித்து வருகின்ற நிலையில், இலங்கைக்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது
புலி­களின் நாண­யத்தின் மறு­பக்­க­மா­கவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்­ப­டு­கி­றது: சபையில் கெஹ­லிய
தமிழர் தாயகக் கொள்­கையை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இன்னும் கைவி­ட­வில்லை. அது தொடர்ந்­த­வண்­ணமே இருக்­கின்­றது. அந்த வகையில் புலி­களின் நாண­யத்தின் மறு­பக்­க­மா­கவே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு செயற்­பட்­டு­வ­ரு­கின்­றது என்று அமைச் சரவை பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான கெஹ­லிய ரம்புக்வெல நேற்று சபையில் தெரி­வித்தார்.
ஏற்காடு தேர்தல் : 67% வாக்குகள் பதிவு-எமது நிருபரின் கருத்து கணிப்பில்அ .தி.மு.க.வெற்றி பெரும் 

ஏற்காடு தொகுதியில் காலை 8 மணிக்கு தொடங்கிய் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.   பிற்பகல்  02.00 மணி நிலவரப்படி 67% வாக்குகள் பதிவாகியுள்ளன.
சென்னை வந்த ஜெகன்மோகன் ரெட்டி ஜெயலலிதாவை சந்தித்தார்
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான   ஜெகன்மோகன் ரெட்டி, ஒருங்கிணைந்த ஆந்திராவை வலியுறுத்தி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை நேரில் சந்தித்து
ஏடி.எம். மையத்தில் பெண் அதிகாரியை வெட்டியவர் அடையாளம் தெரிந்தது
பெங்களூர் ஏ.டி.எம். மையத்தில் அதிகாரியை மர்ம ஆசாமி அரிவாளால் வெட்டி பணம், செல்போன், கிரெடிட் கார்டுகளை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை

ஈ.பி.டி.பி கட்சியைச்சேர்ந்த நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் தானியேல் றெக்‌ஷியன் (ரஜீப்) படுகொலை வழக்கில், ஈ.பி.டி.பி கட்சியைச்சேர்ந்த வடமாகாணசபை எதிர்க்கட்சித்தலைவர் க.கமலேந்திரன் (கமல்) கொழும்பில் காவல்துறையால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அதேநேரம் தானியல் றெக்சியனுடைய மனைவி மற்றும் வேலணையை சேர்ந்த இளைஞர் ஒருவரும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
G

3 டிச., 2013

திருமண ஆசை காட்டி பள்ளி மாணவியை கடத்திச் சென்று கற்பழித்த வாலிபர் கைது

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே உள்ள ஜங்கமசமுத்திரம் கிராமம்,  செல்வநகர் பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி, பழனி இவரது மகள் செல்வி வயது-12, (இருவர் பெயரும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது)

ad

ad