புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 டிச., 2013

சிங்கக் கொடியை ஏற்றமாட்டேன்: அமைச்சர் ஐங்கரநேசன் மறுப்பு
இலங்கையின் தேசியக் கொடியை புறக்கணிக்கப் போவதாக வடமாகாண அமைச்சர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் இன்று 08.12.2013 ஞாயிற்றுக்கிழமை ஊர்காவற்றுறை தொகுதிக்குட்பட்ட வேலணை, புங்குடுதீவு பகுதிகளுக்கு விஜயம் செய்து தேர்தலில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு தனது நன்றியினைத்தெரிவித்துக்கொண்டதுடன், மக்களின் தேவைகள்,பிரச்சனைகள் தொடர்பாகவும் கலந்துரையாடியுள்ளார். மாகாணசபை உறுப்பினருடன் வலி.தெற்கு பிரதேசசபை தலைவர் தி.பிரகாஷ், வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினர் சி.ஹரிகரன், இலங்கைத்தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட இளைஞரணிச்செயலாளர் ப.தர்சானந் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஐரோப்பிய பயணத்தில் அனந்தி!
சர்வதேச மனித உரிமைச்சங்கத்தின் அழைப்பை ஏற்று அனந்தி சசிதரன் அவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கான பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். அங்கு ஐரோப்பிய நாடுகளின் அதிகாரிகள் மற்றும் மனித உரிமை தொடர்பான குழுக்களைச் சந்தித்துக் கலந்துரையாடிக்கொண்டிருக்கின்றார்....
கொழும்பில் -மேல்மாகாணத்தில்- பலமான அரசியல் சக்தியாக நாங்கள் உங்களுக்கு துணையிருப்போம்!
நாம் வாழும் கொழும்பில் எம் உரிமைக்கு குரல் கொடுப்போம்!
எங்கள் வடக்கு, கிழக்கு, மலையக உறவுக்கு கரங்கொடுப்போம்!
(நமது கட்சியின் மாகாணசபை-மாநகரசபை உறுப்பினர்களுடன் வடக்கு முதல்வரை சந்தித்த போது - 05/12/13)




               மிழ்நாடு முழுவதும் டிச.02-ம் தேதி முதல் அடுத்த மாதம் 26-ம் தேதி வரை "இல்லம் தோறும் தாமரை, உள்ளம் தோறும் மோடி' என்கிற பிரச்சார யாத்திரையை பா.ஜ.க. நடத்து கிறது. பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளரான மோடியின் அருமை பெருமைகளை விளக்கும் இந்த யாத்திரையின் உச்சகட்டமாக நரேந்திர மோடியின் செல்போன் எண்ணை கிராமத்தில் உள்ள விவசாயியிடம் கொடுத்து நேரடியாக மோடியுடன் பேச வைக்கின்றனர்.

           ""ஹலோ தலைவரே... அ.தி.மு.க பொதுக்குழு, தி.மு.க பொதுக் குழுன்னு எம்.பி. தேர்தலுக்கான ஹீட் அதிகமாகிக்கொண்டே இருக்குது.''


         சின்னஞ்சிறுசுகளுக்கே சர்வசாதாரணமாக சர்க்கரை நோய் எனும் காலத்தில், நோய் நொடி எதுவுமின்றி 100 வயதை நெருங்கிவர... உற்சாகமாக நடைபோட்டு வருகிறார்கள், நெல்லை கிராமங்களில்.

8 டிச., 2013

யாழ் ஈபிடிபி தலைமையகத்தில் கைத்துப்பாக்கியா? நாட்டின் ஜனநாயகம்: சபையில் அரியநேத்திரன் காட்டம்
நாட்டின் ஜனநாயகம் இன்று கைத்துப்பாக்கியாகிவிட்டதுடன், யாழில் ஈபிடிபி அரசியற் கட்சி காரியாலயத்தில் கைத்துப்பாக்கி என்பதுடன் யுத்தமில்லாத காலத்தில் 500 பேர் கொலை என்றால் நாட்டில் நடப்பது என்ன என்று சபையில் அரியநேத்திரன் பா.உ காட்டம்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை ஆரம்பமாகியது: அனைத்துலக பிரமுகர்கள் பங்கெடுப்பு
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாம் தவணை காலத்திற்கான முதலாம் அரசவை அமெரிக்கா நியூ ஜெர்சி நகரில் கடந்த 6ம் திகதி கூடியது.
ஆம் ஆத்மியின் சாதனை ஆச்சரியப்படுத்துகிறது: பெரிய கட்சிகளுக்கு எச்சரிக்கை: காங்கிரஸ் கருத்து
முதன் முறையாக டெல்லி சட்டமன்ற தேர்தலில் களம் இறங்கியுள்ள ஆம் ஆத்மி கட்சிக்கு பெரிய வெற்றி கிடைத்துள்ளது. டெல்லி சட்டசபை தேர்தலில் அக்கட்சி இரண்டாம் இடம் பிடித்துள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. 

மோடி அலையே வெற்றிக்கு காரணம்: வசுந்தரா ராஜே

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தில்லி, சட்டீஸ்கர் உட்பட நான்கு மாநிலங்களில் பாஜக அமோ வெற்றி பெற்றதற்கு மோடியின் அலையே காரணம் என்று ராஜஸ்தான் பாஜக தலைவரும் அங்கு முதல்வராக  பொறுப்பேற்க விருக்கும் வசுந்தரா ராஜே தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றததையடுதது பாஜகவினர் பட்டாசுவெடித்து கொண்டாடிவருகின்றனர்,
ராஜஸ்தானில்(199) பாஜக 128இடங்களில் வெற்றி 31 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 18இடங்களில்வெற்றி பெற்று 7இடங்களில் முன்னிலையில் உள்ளது. மற்ற கட்சிகள் 7இடங்களில் வெற்றி பெற்று 8 இடங்களில் முன்னிலையில் உள்ளன.
தில்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது.முதல்வர் ஷீலா தீட்சத் உள்பட பலர் தோல்வியை சந்தித்துள்ளனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஷகீல் அகமது கூறுகையில், தங்களது கட்சி ஒருபோதும் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு அளிக்காது என்று கூறியுள்ளார்.
சட்டீஸ்கரில் பாஜக 19இடங்களில் வெற்றி 25இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 19 இடங்களில்வெற்றி பெற்று24 இடங்களில் முன்னிலையில் உள்ளது. மற்ற கட்சிகள் 2 இடங்களில் முன்னிலையில் உள்ளன.
டெல்லி: 21 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் ஷீலா தீட்சித்தை தோற்கடித்தார் அரவிந்த் கேஜ்ரிவால்
 


டெல்லி சட்டமன்றத் தேர்தல் கடந்த 4ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே காங்கிரஸ் பின்னடைவை சந்தித்தது. பாஜக, ஆம் அத்மி கட்சி முன்னிலை பெற்றிருந்தது. 
மத்தியப்பிரதேசத்தில் 3வது முறையாக மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது பாஜக!
மத்தியப்பிரதேசத்தில் பாஜக மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது. அக்கட்சியின் தொண்டர்கள் முதல் அமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் வீட்டின் முன்பு திரண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். 
மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் 116 இடங்களை கைப்பற்றினால் பெரும்பான்மை கிடைக்கும் என்ற நிலையில், பாஜக 157 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி 60 இடங்களில் முன்னிலையில் உள்ளது. 2005 மற்றும் 2009 சட்டமன்ற தேர்தல்களில் ஆட்சியை பிடித்த பாஜக தற்போது 2013 சட்டமன்றத் தேர்தலிலும் ஆட்சியை பிடிக்கிறது. 
ஏற்காடு: 78 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி
 


சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்கு கடந்த 4ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எ

ராஜஸ்தானில் ஆட்சியை பிடிக்கிறது பாஜக: முதல் அமைச்சராக பதவியேற்கிறார் வசுந்தரா ராஜே சிந்தியா
ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே பாஜக முன்னிலை வகித்தது.

199 தொகுதிகளில் நடந்த தேர்தல்களில் 109 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. 57 தொகுதிகளில் பாஜக முன்னிலையில் இருந்தது. காங்கிரஸ் கட்சி 10 தொகுதிகளில் வெற்றி பெற்று, 11 தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. இதையடுத்து ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து ஆட்சியை பாஜக பிடிப்பது உறுதியானது.
டெல்லி: 24 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை
டெல்லி சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதில் பாஜக 29 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. ஆம் ஆத்மி கட்சி 24 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி 13 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
மத்தியப்பிரதேசம்: பாஜக 103 தொகுதிகளில் முன்னிலை
மத்தியப்பிரதேச மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பாஜக 103 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி 47 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி 2 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. சுயேட்சை வேட்பாளர் ஒரு தொகுதியில் முன்னிலையில் உள்ளார். 
ராஜஸ்தான்: 119 தொகுதிகளில் பாஜக முன்னிலை
ராஜஸ்தான் மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பாஜக 119 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 21 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி 3 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. சுயேட்சை வேட்பாளர்கள் 6 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர்.

ad

ad