புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஜன., 2014


தே.மு.தி.க.வுடனும் பேச்சுவார்த்தை நடக்கிறது: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
தமிழக பா.ஜ.க. தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் புதன்கிழமை ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் ம.தி.மு.க.,
நீலகிரியில் மக்களை அச்சுறுத்தி வந்த புலி சுட்டுக்கொல்லப்பட்டது
 
நிலகிரியில் மக்களை அச்சுறுத்தி வந்த புலி வனத்துறையினரால் புதன்கிழமை மாலை சுட்டுக்கொல்லப்பட்டது. குந்தசப்பை என்ற இடத்தில் முதல் தடவை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தப்பிய புலி, இரண்டாவது தடவை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சுட்டுக்கொல்லப்பட்டது. 

22 ஜன., 2014

விஜய் ரசிகர்கள் சிலர் பத்திரிகை அலுவலகத்தின் முன் ஆர்ப்பாட்டம், ஈழ மக்கள் படும்பாடு தெரியாது இப்படியான செயல்களைச் செய்யாதீர்கள் - பொ.ஐங்கரநேசன்
இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து வரும் உதயன் பத்திரிகையில் விஜயைப் பற்றிய தவறான கருத்து வந்ததாக அங்குள்ள விஜய் ரசிகர்கள் சிலர் பத்திரிகை அலுவலகத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதனையடுத்து அங்கு வந்த வடமாகாண விவசாயத்துறை
இலங்கையில் திட்டமிடப்பட்ட இனப்படுகொலை தொடர்பில் மலேசிய பினாங் முதலமைச்சர் பத்திரம் சமர்ப்பிக்கவுள்ளார்
மலேசியாவின் பினாங் மாநில முதலமைச்சர் பி. இராமசாமி, பிரித்தானிய தமிழர் பேரவை இந்த மாத இறுதியில் நடத்தும் மாநாட்டில் இலங்கை தமிழர்களுக்காக பத்திரம் ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளார்.இந்த மாநாட்டின் போது தாம் இலங்கையில் திட்டமிடப்பட்ட இனப்படுகொலை
கூடா நட்பு கேடாய் முடிந்தது : கல்லூரி பேராசிரியை படுகொலை
 ஈரோடு கே.கே.நகரை அடுத்த சுப்பிரமணியம் நகரை சேர்ந்தவர் சரவணன்( வயது-35). மருந்து விற்பனை பிரதிநிதியாக உள்ளார். இவரது மனைவி பெயர் தீபா( வயது-29). எம்.ஈ வரை படித்தவர்.
விளையாட்டு மேம்பாட்டிற்கு ரூ.36 கோடி: ஜெயலலிதா அறிவிப்பு
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,   ‘’விளையாட்டு விடுதிகளில் பயிற்சி பெறும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு சத்தான சமச்சீர் உணவு வகைகள் நாள்தோறும் வழங்குவதற்கு ஏதுவாக தற்பொழுது நாளொன்றுக்கு
ஒரு மாதம் பரோலில் விடுவிக்க கோரி நளினி மனு
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள நளினி, உடல் நலம் பாதித்த தனது தந்தையை அருகில் இருந்து கவனித்து கொள்வதற்காக  ஒரு மாதம் பரோலில் விடுவிக்கவேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில்

21 ஜன., 2014

ஆளும் கட்சியின் முக்கிய அரசியல் குடும்பம், ஐ.தே.கட்சியில் இணையவுள்ளது: திஸ்ஸ அத்தநாயக்க
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அங்கம் வகிக்கும் முக்கிய அரசியல் குடும்பம் ஒன்று ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
பிரபாகரனின் முடிக்கு இருக்கும் பெறுமதி கூட மகிந்தவுக்கு இல்லை: சரத் பொன்சேகா
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடம்பில் இருக்கும் ஒரு முடிக்குகூட பெறுமதியற்றவர் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி மீண்டும் இன்று தோண்டப்பட்டது! மேலும் மனித எச்சங்கள் மீட்பு
மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் உள்ள மனித புதை குழி மீண்டும் இன்று திங்கட்கிழமை மன்னார் நீதிவான் முன்னிலையில் தோண்டப்பட்டுள்ளது.9 வது தடவையாக நேற்று முன்தினம் சனிக்கிழமை மன்னார் நீதிவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில்
தமிழர்களுடைய போராட்டத்தில் சுவிட்சர்லாந்து நாட்டின் பங்களிப்பு அளப்பரியது: மாவை முழக்கம்
தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கும் அகதிகளாக உள்ள எம் மக்களுக்கும் சுவிட்சர்லாந்து நாட்டின் பங்களிப்பு அளப்பரியது என சுவிட்சலாந்து பாசல் செந்தமிழ்ச் சோலை நிகழ்வில் மாவை சேனாதிராஜா எம்.பி தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் - இந்தியாவிற்கும் இடையில் நேரடி விமான சேவை
யாழ்ப்பாணத்திற்கும் இந்தியாவிற்கும் இடையில் நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்பட உள்ளது.யாழ்ப்பாணத்திற்கும் இந்தியாவிற்கும் இடையில் நேரடி விமான சேவைகளை ஆரம்பிப்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாக இந்திய கொன்சோல் அதிகாரி
இராணுவ அதிகாரிகளிடமே எனது கணவரை ஒப்படைத்தேன்!– ஆணைக்குழு முன் அனந்தி சாட்சியம்
போரின் இறுதியில், சீருடையில் இருந்த இராணுவ உயர் அதிகாரிகளிடமே தனது கணவனான விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலனை ஒப்படைத்ததாக வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
ராஜபக்ச கூறுவது பொய்: வடக்கில் ஒரு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படையினர்!- ஆங்கில இணையத்தளம்
வடக்கு மாகாணத்தில் இராணுவ பிரசன்னம் 12 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பகிரங்கமாக பொய்யுரைத்துள்ளதாகவும், வடக்கில் 16 முதல் 19 வரையான படைப் பிரிவுகள் நிலைகொள்ள செய்யப்பட்டுள்ளதாகவும் ஆங்கில இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக வெளியான செய்தி உண்மையில்லை! பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பேட்டி!திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என்று பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
ஆபாச பாடல்களை வெளியிட்டதாக இசையமைப்பாளர் அனிருத் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்
சென்னை ஐகோர்ட்டு வக்கீல் ஜெபதாஸ்பாண்டியன், திங்கள்கிழமை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

20 ஜன., 2014

மு.க. அழகிரி ஹாங்காங் புறப்பட்டார்
திமுக தென் மண்டல அமைப்பு செயலாளர் மு.க.அழகிரி இன்று காலை 3.15 மணி விமானம் மூலம் ஹாங்காங் புறப்பட்டு சென்றார்.   அவருடன் மகன் துரை தயாநிதி மற்றும் கட்சி நிர்வாகிகள் நரசிம்மன் உள்பட 5 பேர் உடன் சென்றனர்.
வீரபாண்டி ராஜா கடிதம்! சேலம் தி.மு.க வில் திடீர் பரபரப்பு!
 

       மறைந்த வீரபாண்டியார் உருவச்சிலை வருகின்ற ஜனவரி 25 ஆம் தேதி அன்று சேலம் மாவட்ட தி.மு.க அலுவலகம் முன் மு.க ஸ்டாலினால் திறக்கப்பட உள்ளது.  இதையொட்டி வீரபாண்டியாரின் மகன் வீரபாண்டி ராஜா தனது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்து ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். (கடிதம் இணைக்கப்பட்டுள்ளது) 
நடிகை வனிதா 3வது திருமணம் 
‘மாணிக்கம்’ என்ற படத்தில் ராஜ்கிரணுக்கு ஜோடியாக நடித்தவர், வனிதா விஜயகுமார். இவர் நடிகர் விஜயகுமார்–மஞ்சுளா தம்பதியின் மூத்த மகள் ஆவர்.இவருக்கும், நடிகர் ஆகாசுக்கும் முதலில் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து
தீவக மக்களது வாழ்வோடு தமிழும் சைவமும் இரண்டறக் கலந்துள்ளது! புங்குடுதீவில் ஆளுநரின் செயலாளர் இளங்கோவன்
யாழ் புங்குடுதீவு  ஸ்ரீ சித்திவிநாயகர் மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா 18.01.2014 காலை 9.00மணியளவில் பாடசாலை மண்டபத்தில் அதிபர் உயர்திரு. கலைநாதன் தலைமையில் நடைபெற்றது.

ad

ad